Wednesday, December 19, 2007

(Audults only) அவன் எதிர்பார்க்காத தருனங்கள்

ஒரு நாள் பூவிழவன் தூங்கிகொண்டிருந்த போது அவன் எதிர்பாராத தருனத்தில் அது நடந்தது. அன்றுதான் அவன் அவனது அனைத்து கிடப்பில் கிடந்த வேலைகள் அனைத்தையும் பெருத்த சிரமத்துடன் செய்துமுடித்தான். அவன் வேலைகள் செய்து முடித்த அயர்ச்சியில் அவன் மிகவும் சோர்வுடன் இருக்கவே குளியலறைக்கு சென்று லேசான வெது வெதுப்பான சுடு நீரில் குளித்துவிட்டு வந்தான். பிறகு இரவு உடைகளை உடுத்திக் கொண்டு தன் படுக்கை அறைக்கு சென்று மின் விசிறியை போட்டு விட்டு படுக்க ஆயத்தமானான். மின் விசிறியில் இருந்து லேசாக காற்று மெல்லிய அலையாய் வீசியது நல்ல களைப்பில் இருக்கவே அவன் படுத்த சிறிது நேரத்தில் தூங்கிவிட்டிருந்தான். அந்த இரவு வேளையில் வாசலின் ஓரங்களில் உள்ள பூச்செடிகள் நிலவொளியில் தென்றலுடன் சேர்ந்து மெல்லிய நடனம் ஆடிக்கொண்டிருந்தது.

கார்க்குழலி உறக்கம் இன்றி விழித்திருந்தாள் அவள் வீட்டில் இருந்து யாருக்கும் தெறியாமல் பூவிழவன் வீட்டிற்க்கு வந்தாள். அவன் வீட்டில் நுழைந்ததும் மெல்ல மெல்ல பூனை நடை போட்டு பூவிழவனின் படுக்கை அறைக்குள் நுழைந்தாள். அங்கு பூவிழவன் நன்கு தூங்கிக்கொண்டு இருக்கிறான் அவனைப்பார்த்ததும் இவள் மனதில் ஓர் எண்ணம் எப்படியும் தான் வந்த காரியத்தை சாதித்து விடுவதென்று. இப்போதுதான் வந்து படுத்து உறங்கிக்கொண்டு இருக்கிறான் எனவே சிறிது நேரம் கழித்து நமது வேலையை ஆரம்பித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு அறைக்கதவை மூடிவிட்டு கூடத்துக்கு வந்துவிட்டாள். ஒரு நாற்க்காலியில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்ச்சி பெட்டியை உசுப்பினாள் அது தேர்தல் நேரம் ஆகையால் ஒரு புதிய கட்சியின் தேர்தல் அறிக்கைகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

அந்த புதிய கட்சியில் கொள்கை பரப்பு செயலர் அறிக்கைகளை படித்துக்கொண்டிருக்கிறார்.

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிச்சை காரர்கள், அனாதைகள், ஏழைகள் என்று யாருமே இருக்கமாட்டார்கள்.
2. லஞ்சமும் ஊழலும் முற்றிலும் ஒழிக்கப்படும்.
3. மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்
4. சிறைகள் வெறுமையாகவே இருக்கும்
5. குற்றம் முற்றிலும் ஒழிந்திருக்கும் யாரும் குற்றம் செய்யும் வாய்ப்பின்றி இருக்கும்
6. நீதி மன்றங்கள் நிற்க ஆளின்றி இருக்கும்
7. குறைந்த பட்ச்சம் இலநிலைப்பட்டம் பெறாதவர்கள் ஒருவர்கூட இருக்கமாட்டார்
8. பசி எப்படி இருக்கும் என்று மறந்திருப்பர்.
9. திருடு கொலை கொள்ளை எல்லாம் ஒரு பழைய தமிழ் சொல்லாக இருக்கும்.
10. சாலைகள் நெறிசல் இன்றியும் பழுது இன்றியும் பராமரிக்கப்படும்.
11. தெருக்களும் சாலைகளும் மண் தூசியின்றி சுத்தமாக பராமரிக்கப்படும்.
12. அனைத்து கடைகளிலும் பயன் பாட்டிற்க்கு உகந்த தரமான பொருட்களே கிடைக்கும்
13. குடினீர் முற்றிலும் சுத்தம் செய்து வழங்கப்படும்.
14. உணவு விடுதிகள் நியாயமான விலையில் சுத்தமான உணவுகள் சுத்தமான சூழலில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.
15. சுகாதாரம் நன்றாக பராமரிக்கப்படுவதால் பிரசவத்திற்க்கு தவிற வேறு எதற்க்கும் மருத்துவமணைக்கு வரமாட்டார்கள்.
16. அனைத்து மக்களுக்கும் வருடாந்திர சோதனைகள் செய்து உடலில் உருவாகும் ஊட்டச்சத்து குறைகள் சமன் படுத்தப்படும்.
17. அனைத்து வாகனங்களும் மாதாந்திர சோதனை செயவதின் மூலமும் சிறப்பான சாலை அமைப்பாலும் விபத்தே ஏற்ப்படாதிருக்கும்.
18. யாரும் யாரையும் எதையும் ஏமாற்ற முடியாத அமைப்பு ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கும்.
19. அனைவருக்கும் அமெரிக்க குடிமகனைக்காட்டிலும் ஒரு படி மேலான வசதி வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கும்.
20. 24 மனி நேரமும் உதவி மையம் தயாராக இருக்கும் யாரும் எப்போதும் தொலைபேசி மூலமும் இனையம் மூலமும் உதவி கோரலாம்.
21. நாடு முழுவதும் மாசற்ற வாழ் நிலை சூழ்னிலையாக மாற்றப்பட்டிருக்கும்.
22. அனைத்து மாநகரங்களும் அதிவேக மாநில அரசு இரயிலினால் இனைக்கப்பட்டிருக்கும்.
23. அனைவரின் உரிமைகளும் பாது காக்கப்பட்டிருக்கும்.
24. வேலை வாய்ப்பின்றி யாருமே இருக்க மாட்டார்கள்.
25. அனைத்து வாகனங்களும் நவீன மயமாக்கப்பட்டு ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு விபத்தேதும் நடக்காமல் சாட்டிலைட் மூலம்
கண்கானிக்கப்படும்.
26. அனைத்து விடுதிகளும் நட்ச்சத்திர அந்தஸ்த்து பெற்ற ஓட்டல்களுக்கு இனையாக சுகாதாரம் பராமரிக்கப்பட்டிருக்கும்.
27. உலகில் உள்ள அனைத்து நவீன தயாரிப்புகளின் தொழிர்ச்சாலைகளும் அரசினாலேயே நிறுவப்பட்டிருக்கும்.
28. ஆராய்ச்சி ஆர்வமுள்ள அனைவருக்கும் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டு ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டிருக்கும்.
29. வெளி மாநிலங்களில் உள்ளோர் இங்கு குடியேறவோ வேலை செய்யவோ இயலாதவாறு அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டிருக்கும்.
30. மது வகைகள் மற்றும் புகையிலை தயாரிப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கும்.
31. மக்களின் பணத்திற்க்கும் உழைப்பிற்க்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்படும். 32. அடகு கடைகள் தனியார் வட்டித்தொழில் முழுவது மாக ஒழிக்கப்பட்டிருக்கும்.
33. அனைவருக்கும் குறைந்தபட்ச்ச எல்லையில் கடன் அட்டைகள் வட்டியின்றி அரசினால் வழங்கப்படும்.
34. அனைத்து நகரங்கள் பேரூர்களில் 24 மனி நேரமும் உணவு முதல் அத்தனை அத்தியாவசியப்பொருட்களும் கிடைக்க செய்யப்பட்டிருக்கும்.
35. அனைத்து துறைகளிலும் முன்னேற அனைவருக்கும் தேவையான பயிற்ச்சிகள் அரசினாலேயே அளிக்கப்படும்.
36. உலகிலேயே மிகச்சிறந்த பாடதிட்டம் மானவர்களுக்கு வழங்கப்படும்.
37. அனைத்து அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் நவீன உள்கட்டமைப்புடன் மாற்றப்பட்டு தூய்மையாக பராகரிக்கப்படும்.
38. அனைத்து அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் ஆன் லைன் மற்றும் செயற்க்கை கோள் மூலம் இனைக்கப்படும்.
39. எல்லா பாடங்களும் எளிதில் அனைத்து மானவர்களும் புரிந்துகொள்ளும் அளவிற்க்கு பாடதிட்டம் இருக்கும்.
40. பாடதிட்டங்கள் வீடியோ காட்ச்சிகளாக விளக்கங்களுடனும் கதை தொகுப்புகளுடன் நேரடி ஒளிபரப்பாக திரையிட்டு காட்டப்படும்.
41. ஆசிரியர்கள் மானவர்களுக்கு ஏற்ப்படும் சந்தேகங்களை தீர்ப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும்.
42. காலத்தை வீனடிக்கும் தேவயற்ற அலுவலக வழிமுறைகள் அனைத்தும் மாற்றப்படும்.
43. அனைத்து திட்டங்களும் ஒப்பந்ததாரார் இன்றி அரசினாலேயே துரிதமாக செய்யப்படும்.
44. அனைத்து பணிகளுமே போர்க்கால அடிப்படை பணிகள் போலவே நடத்தப்படும்.
45. ஒரு நாளைக்கு 6 மனி நேரம் மட்டுமே பணி செய்யும் நேரமாக மாற்றப்படும்.
46. யாருக்கும் அதிக பணி சுமை மற்றும் கடினமான வேலைகள் செய்ய நேரிடாமல் வேலை அமைப்பு இருக்கும்.
47. அனைத்து பணியாளர்களும் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளின்படியே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
48. அனை வருக்கும் சராசரி ஆயுட்க்காலம் 90 ஆண்டுகளாக மாற்ற முயற்சி செய்யப்படும்.
49. ஒருவரின் வீட்டுக்கு வேறொருவர் வேலைக்காரார் களாக இருக்கமாட்டார்கள்.
50. அனைவரின் மகிழ்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் முழு உத்திரவாதம் அளிக்கப்படும்.
etc.......

எமது கட்ச்சியில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் அனைவரும் நல்ல அனுபம் மிக்க கல்வி மற்றும் அனுபவ முதிர்ச்சி பெற்றவர்கள் தேர்தலுக்காக காசு பணம் ஏதும் விரையம் இன்றி போடியிடுகிறார்கள். எனவே உங்கள் நன்மை கருதி எங்களுக்கு வாக்களிக்க விருப்பமாயின் வாக்களியுங்கள் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். என்று சொல்லி அவர் தன் உரையை முடித்துக்கொண்டார். கார்குழலி நாற்க்காலியை விட்டு எழுந்து அறைக்கதவை திறந்தாள்.
(தொடரும்.....)

5 comments:

  1. 1)
    //
    நல்ல கலைப்பில் இருக்கவே
    //
    களைப்பில்
    2)
    //
    அந்த இரவுவேலையில் வாசலின் ஓரங்களில் உள்ள பூச்செடிகள் நிலவொளியில்
    //
    இரவு வேளையில்

    3)
    //
    அவனைப்பார்த்ததும் இவள் மனதில் ஓர் என்னம் எப்படியும்
    //
    எண்ணம்

    4)
    //
    தேர்தல் நேரம் ஆகையாள்
    //
    ஆகையால்

    5)
    //
    நீதி மன்றங்கள் நிர்க்க
    //
    நிற்க

    6)
    //
    பனி சுமை
    //
    பணிச் சுமை

    7)//பனியாளர்// பணியாளர்

    8)//90 ஆண்டுகளாக மாற்ற முயர்ச்சி செய்யப்படும்.// முயற்சி

    9)//எனவே உங்கள் நன்மை// நண்மை

    10)//மின் விசிரியில்//
    மின் விசிறியில்

    ReplyDelete
  2. பிழை கண்டுபிடிப்பவன் அவர்களுக்கு நன்றி தங்கள் உதவியால் 10 பதங்களுக்கு சரியான எழுத்துக்களை அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
  3. கண்டுபிடித்ததில் 9 தான் சரி....

    "நன்மை" தான் சரி... "நண்மை" தவறு....

    மன்னிக்கவும்....
    :))

    ReplyDelete
  4. பிழையாக எழுதியவனிடத்தில் பிழையை திருத்திய நீங்கள் மன்னிப்பு கோரத்தேவையில்லை.
    மீண்டும் பிழையை சுட்டியத்ற்க்கு நன்றி.

    ReplyDelete