Wednesday, January 16, 2013

நம்ம நாட்டோட பொருளாதாரம் ஏன் ஆட்டம் கானுகிறது தெறியுமா?

       நம்ம நாட்டோட பொருளாதாரம் ஏன் ஆட்டம் கானுகிறது முதலில் நம்முடைய பணத்தின் குறியீட்டைப் பாருங்கள் அந்த குறியீட்டை வடிவமைத்தவர்கள் செய்த தவறுதான் நம் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் காண்பதர்க்கு  காரணம். குறைந்தபட்ச்சம் குறியீட்டின் காலுக்கு கொஞ்சம் ஆதாரமாவது கொடுத்திருக்கலாம்.  பாவம்  நம்ம ஆளுங்க எதையெல்லாம் வச்சு  முட்டு  கொடுக்கிறாங்க பாருங்க .

       அது தெறியாம   யார்யாரெல்லாம் ஆட்டம் போடுறாங்க பாருங்க இதுல டாலர் வீழ்ச்சி பெட்ரோலியம் கேஸ் மானியங்க்கள்வேற ஒறே சுமை.

இப்படி இருந்தா நல்லா வலுவாஇருக்கும்.Monday, January 7, 2013

மக்களின் பணத்தில் கொழுத்த இவர்கள் வரி செலுத்த மறுக்கும் கலை சேவை..


     இவர்களெல்லாம் ஒரு வேலை சாப்பாட்டுக்கே சிரமப்படுகிறார்களாம்.
வரியை போட்டு அரசு இவர்களை மேலும் வரியவர்களாக்குகிறதாம்.
"விவேக் சொல்கிறார் எங்களுக்கெல்லாம் வேறு வேலை தெறியாது  நாங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எங்கள் வாழ்க்கையே போய்விடும் சினிமா அழிந்துவிடும்."  நீங்கள் ஏற்கனவே மக்களை அழித்துவிட்டீர்கள் இனி சினிமா அழிந்தால் என்ன ஒழிந்தால்தான் என்ன.

சினிமா காரர்களுக்கு வரி விலக்கு அளித்தால் உழைத்து மாத ஊதியம் வாங்கும் அனைவரும் வாருங்கள் போராடுவோம் நாம் உடல் வருத்தி சம்பாதிக்கும் பணத்தை ஏன் வருமானவரியாக செலுத்தவேண்டும்.Friday, January 4, 2013

கடவுள் இல்லை என்றாலும் இருக்க வேண்டும்

           கடவுள் ஏன் இல்லாமல் போகவேண்டும் எத்தனையோ இல்லாதவைகள் இருக்கும்போது கடவுளும் ஒரு பக்கம் இருக்கட்டுமே.கடவுள் இல்லையாம் இதை பெரிதாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார்கள்.  கடவுள் இல்லை என்பது அவரை உருவாக்கியவனுக்கே தெறியும். இல்லாத கடவுளை ஏன் உருவாக்கினார்கள்? அவர்களுக்கு கடவுள் தேவைபட்டது உருவாக்கினார்கள் அதில் என்ன தவறு இருக்கிறது.

      கடவுளை உருவாக்கியவர்கள் மோசடி காரர்களாம் அப்படி என்றால் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் யோக்கியர்களா? கடவுளை காப்பாற்றுபவன் தன்னை பசியாற்றிக்கொள்ள தட்சனை வாங்குகிறான். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாம் கல்லுடைத்துதான் கஞ்சி குடிக்கிறார்களா?. கடவுளின் பெயரால் மக்களுக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஊட்டப்படுகிறது. கடவுள் இல்லை என்பவர்கள் மக்களுக்கு ஒரு வாய் சோறுகூட ஊட்டமாட்டார்கள், முடிந்தால் நாங்கள் எச்சில்கூட பார்ப்பதில்லை என்று கூறி உங்கள் வாயில் உள்ளதைகூட பிடுங்கிக்கொள்வார்கள்.

      கடவுள் இல்லை தப்பு செய்யாதீர்கள், கடவுள் இல்லை குடிக்காதீர்கள், கடவுள் இல்லை குடியை கெடுக்காதீர்கள்,  கடவுள் இல்லை தானம் செய்யுங்கள் என்று கூறுவார்களா?. இந்தப் போலி பகுத்தறிவு கூட்டம் சட்டத்தின் சந்து பொந்துகளில் உள்ள ஓட்டைகளை தேடிக்கொண்டிருக்கிறது தப்பு செய்துவிட்டால் தப்பித்துக்கொள்வதற்கு. இன்றுவரை பெரியார் உயிருடன் இருந்திருந்தால் தன்னலவாதிகளைக் கண்டு தலையிலே அடித்து கொண்டிருப்பார்.

     ஒரு சில இடங்களில் உண்மையை மறைத்து இல்லாத ஒன்றை உருவாக்கவேண்டிய தேவை ஏற்ப்படுகிறது ரகசியம் காக்கப்பட வேண்டி இருக்கிறது. இன்றைய தேவை எல்லாம் ஒழுங்கீனங்களை ஒடுக்கி ஒழுக்கத்தை ஓங்கி ஒலிக்கச்செய்வதே. கடவுள் இல்லை கண் இல்லாத பெண்களை கற்பழிக்கலாம் சாட்சி இருக்காது என்ற மன நிலையில் மக்களை உருவாக்கியிருக்கிறது இன்றைய பகுத்தறிவு .

     என்னை பொருத்தவரை கடவுள் இருக்கிறார் இல்லை என்ற விதண்டாவாதம் தேவையில்லை. எனக்கு கடவுள் வேண்டும் . சரியான அனுகுமுறையில் கடவுளை காப்பாற்றினால் அறிவு அன்பு அரவனைப்பு என அனைத்தையும்  அடுத்தடுத்த தலைமுறைகளையும் காப்பாற்றலாம். கவிதைக்கு பொய் எவ்வாறு அழகாய் இருக்கிறதோ அதே போன்றுதான் காவியம் மற்றும் வேதங்களில் வெற்றிடத்தை நிரப்பி இருப்பார்கள் அதை புரிந்துகொண்டு நாம்தான் சரியாக கையாளவேண்டும்.

தங்கத்தின் முதலீடு அதிகரிப்பதன் பாதிப்புகளை உணர்ந்துள்ள மத்திய நிதியமைச்சருக்கு நன்றி!

தங்கத்தின் முதலீடு அதிகரிப்பதன் விளைவுகளையும் அதன் பாதிப்புகளையும்

உணர்ந்துள்ள மத்திய நிதியமைச்சருக்கு நன்றி!

நமது பதிவின் கருத்திற்கு இணங்க இன்றைய தேவையைக்கு ஏற்ப கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அன்னிய செலவாணி கையிருப்பை அதிகரிக்கவேண்டும்.

இதற்கான நவம்பரில் இட்ட இது தொடர்பான பதிவினை கான இங்கே சொடுக்கவும்.  

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குற்றம் செய்ய வாய்பளிக்கவேண்டும்.

        தினந்தோறும் பெண்கள் அணுபவிக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் அதைப்பற்றி எழுதும் பதிவுகளுக்கும் பஞ்சமே இல்லை ஆனால் இதுவரை யாருக்கும் ஒரு தெளிவான முடிவும் கிடைக்கவில்லை.


படம்:- நன்றி நெய்தல் வலைத்தளம்.

      ஆளாலுக்கு காமெடி செய்வதும் வசைபாடுவதையும் கண்டுவந்தோம். மரண தண்டனை , ரசாயன காயடிப்பு, உறுப்பை துண்டிப்பது என தண்டனைகளை பரிந்துரைப்பவர்கள் ஒரு புறம் இரும்பு ஜட்டி அனிவிப்பது கடல் கொல்லையர் உடை அனிவது பர்தா அனிவது என பல காமெடிகள் ஒருபுறம்.இதற்கிடையில் பல்வேறு நாட்டு மற்றும் காட்டு சமூக மக்களின்    வாழ்க்கையை ஒப்பிடுவது ஒரு புறம்.

      ஒரு வருக்கு தண்டனை கொடுப்பதாலோ அல்லது பெண்களை முழுதுமாக போர்த்தி மூடிவிடுவதாலோ எதையும் தடுத்துவிடமுடியாது. அனைத்து வயது பெண்களும் அணைத்து வாழ்க்கை தரங்களில் மதங்களில் உள்ள பெண்களும் இந்த கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.அதே போல் குற்றவாளிகளும் அணைத்து வயது மதம் தகுதி தரத்திலும் எங்கும் நிறைந்துள்ளனர். அதில் சிலர் குற்றம் செய்தவர் பலர் வாய்ப்பு கிடைக்காத்தால் எதிர்  நோக்கியிருக்கும் எதிர்கால குற்றவாளிகள்.

    இப்போது நாம் எதிர்கால குற்றவாளிகளை எப்படி இணம்காண்பது    எதிர்கால குற்றங்களை எப்படி தடுப்பது என்றே யோசிக்கவேண்டும். குற்றவாளிகளை குற்றம் செய்வதற்கு முன்னரே குற்றவாலிகளை இணம் கண்டு அவர்களுக்கு சிறைதண்டனை அளிக்கவேண்டும். அதாவது குற்றவாளிகளை பொறி வைத்து பிடிக்கவேண்டும்.

     இதில் என்னுடைய மனதில் உதித்த ஒரு நல்ல வழிமுறையை நான் பகிர்ந்துகொள்கிறேன். இது சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது எனினும் இதுவே சிறந்த வழியாகும் இதன்மூலம் 80% குற்றங்களை கண்டிப்பாக குறைத்துவிடமுடியும்.

   அரசு ஒரு ஆய்வுக்குழுவை நியமிக்கவேண்டும் அந்த ஆய்வுக்குழுவானது சிறையில் உள்ள பாலியல் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிகளிடம் ஆய்வினை மேற்கொள்ளவேண்டும். இந்த ஆய்வாணது வயது, குற்றம், கல்வி, உறவு முறை என பல வகைகளில் வகைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யவேண்டும். ஆய்வுகளின் முடிவில் வகைப்பாட்டு அடிப்படையில் குற்றம் செய்வதற்கான காரணிகளையும் வகைப்படுத்தவேண்டும். 

    இப்போது அந்த ஆய்வுக்குழுவுக்கு எந்தெந்த சூழலில் வாய்ப்பு கிடைக்கும்போது யார் யார் எல்லாம் குற்றம் செய்யக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் என அறிந்துகொள்ளமுடியும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயற்குழுக்கள் அதாவது பொறிவைத்து பிடிக்கும் குழுக்களை அமைக்கவேண்டும்.

   பொறி வைத்து பிடிக்கும் குழுவில் பொறிகளாக குடும்ப சுழல் காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தலாம் அது அவர்களுக்கு ஒரு மறு வாழ்வாகவும் அமையலாம். அடுத்து ஏற்கணவே பாதிக்கப்பட்ட பெண்கள் அடுத்து யாரும் பாதிக்கப்படாமல் காக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் உடையவர்கள், தன்னார்வ தொண்டர்களையும் பயன் படுத்தலாம்.

   குற்றவாளிகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி பொறியில் சிக்குவதை முழுதும் கானொலி பதியவேண்டும் சிக்கியவர்களை கற்பழிக்க முயன்ற குற்றத்தின் பேரில் கைது செய்யலாம். ஆதாரமாக கானொலியை பயன்படுத்தலாம். மேலும் வீடு மற்றும் அலுவலகங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கான அறிகுறிகள் இருப்பதை உணர்வார்களாயின் அவர்களும் காவல் துறையின் உதவியை நாடி தானே பொறியாக இருந்து பாதுகாப்புடன் வாய்ப்பினை ஏற்படுத்தி குற்றவாளியை கையும் கலவுமாக பிடிக்கலாம்.

   குறுகிய காலத்தில் குற்றம் செய்ய நினைப்பவர்கள் எல்லாம் சரியா பொறியா எனத்தெறியாமல் குழம்பி பயந்து வாய்ப்பு கிடைத்தாலும் குற்றம் செய்யமாட்டார்கள். யார் யார் எல்லாம் எந்தெந்த குற்றங்களை செய்ய வாய்ப்புள்ளவர்கள் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Tuesday, January 1, 2013

பூவாய் மலரட்டும் புத்தாண்டு

                                                    "குற்றம் கண்டு சாடுவோம்
                                                    சுற்றம் நலம் பேனுவோம்."


அனைத்து சகோதரர்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

   சென்ற ஆண்டு எப்படி சென்றாலும் அதற்கும் ஒரு நன்றி!புன்னகை சிந்துவோம் பூக்களில் நம் முகத்தை காணுவோம்
அன்பை  வெளிப்படுதுவோம் அதில் ஆனந்தம் காணுவோம்
பண்பை பரிசளியுப்போம் பன்மடங்காய் பெற்றிடுவோம்
எதிரியையும் நேசிப்போம் அவனும் நம்மை நேசிக்க ஒரு வாய்ப்பளிப்போம்.
சக மனிதர்களுக்கும் மதிப்பளிப்போம் சகோதரம் பேணுவோம்.
ஒவ்வொரு விடியலும் நமக்கே.. பூவாய் மலரட்டும் புத்தாண்டு.