கற்றல் திறன் என்பது மாணவர்களின் புறச்சூழல் மற்றும் அவர்கள் படிப்பதற்கான பள்ளி அமைந்திருக்கும் தூரம் அந்த மாணவனின் பொருளாதார நிலை கற்பிக்கும் ஆசிரியர் அந்த பகுதி மக்களின் பேச்சுவழக்கு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. வசதி வாய்ப்புகள் நிறைந்த ஒரு நகர்ப்புற மாணவனுக்கு படிப்பதைத்தவிர வேறு வேலை இருக்கமுடியாது மேலும் அவனுக்குத்தேவையான அனைத்தும் எந்த பொருளாதாரச்சிக்கலும் இல்லாமல் உடனே கிடைக்கும் வாய்ப்புகள். மேலும் அவனுக்கு பள்ளியில் ஆசிரியர் பாடம் எடுப்பது புரியாத நிலையில் அவனுக்கு தனிவகுப்புகள் அனுப்பும் பொருளாதாரம் மற்றும் அவனுடைய வீடு அதற்கு அருகில் அமைந்திருப்பது ஆசிரியர் நகர்ப்புரத்தை சேர்ந்தவராக இருப்பது போன்ற கூடுதல் அணுகூலங்கள் இருக்கும்.
அதே ஒரு கிராமப்புற மாணவனுக்கு அவன் வீட்டில் இருந்து பள்ளிக்கு வர சரியான நேரத்தில் பேருந்து வசதியின்ன்மை, நெடுந்தொலைவு, மாணவர்களின் பொருளாதார வருமை, தன் உணவுக்கே தான் வேலைசெய்து அந்தவருவாயில் உண்டு படிக்கவேண்டிய நிலைமை, வீடுகளில் மின்வசதி இல்லாமை, தனக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்திசெய்ய யாரும் இல்லாமை சரியான நேரத்தில் நோட்டுப் புத்தகங்கள் வாங்கக்கூட வசதியின்னை போன்ற அனுகூலம் அற்ற சுழல். ஒரு நர்ப்புற மாணவன், ஒரு கிராமப்புறமாணவன், ஒரு உயர்சாதி மாணவன் என்ற மூவருக்குமான வளரும் சூழல் வெவ்வேறாய் இருக்கின்றன அனுபவங்களும் அப்படியேதான் இருக்கின்றன. கற்பிக்கும் ஆசிரியர் கிராமப்புர மனிதராக இருந்தால் அவருடைய கற்பிக்கும் திறனால் கிராமப்புறமணவர்களே அதிகம் பயன் பெறுவர் எப்படி எனில் அவர் கூறும் எடுத்துக்காட்டுகள் (மேற்கோள்கள்) கிராமப்புறமாணவனுக்கு புரியும் விதமாக இருக்கும், அதே போல்தான் நகர்ப்புற ஆசிரியர் கற்பிக்கும் திறனால் பயனடைவது நகர்புற மாணவர்களே. உயர் சாதி ஆசிரியரிடம் கற்றல் உயர்சாதிமாணவனுக்கு எளிதாக இருக்கும்.
அடித்தட்டு வர்கத்தில் வசிக்கும் மாணவர்களின் கல்வி அறிவினை வளரவிடாமல் அவனை மட்டம் தட்டுவதிலேயே அரசியல்வாதிகளும் உயர்சாதி வர்கமும் ஒரே குறியாய் இருக்கின்றன. படிக்கமுடியாதவனுக்குத்தான் படிப்பதற்காக உதவித்தொகைத் தேவைப்படுகிறது. நன்றாகப் படிப்பவனுக்குத்தான் உதவித்தொகை என்றால் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.