Tuesday, October 2, 2012

ஈமு கோழிகளும் இலிச்சவாய் மக்களும்

         நீண்ட நாட்களாக நான் இதை பற்றி எழுதவேண்டும் என்று நினைதிருந்தேன் இன்றுதான் அதற்கான நேரம் கிடைத்தது.

     மக்கள் ஏமாறுவது அவர்கள் தலைவிதி அவர்களை ஏமற்றுபவன் புத்திசாலி, ஏமாற்றுகாரன் வருவதை நாங்கள் பார்கிறோம் அவர்களுக்கு அனுமதியையும் நாங்களே அளிப்போம், ஏனென்றால் அதர்க்கான கட்டணத்தை அவர்கள் கொடுக்கிறார்கள் அதை அனுமதிப்பது அலுவலர்களின் கடமை கொள்ளையடிக்கும் ஏஜன்ஸி என்று ஒன்று துவங்கினாலும் அதற்க்கும் அனுமதி கிடைக்கும். 

     
      எந்த ஒரு புதிய தொழில் அல்லது புதுவகையன நிருவணங்களை துவக்கினாலும் அதைபற்றி ஆராயவேண்டியது அரசின் கடமை இல்லை இலட்சக்கணக்கான காவலர்கள் பனியாற்றுவது மக்களின் பாதுகாப்பிற்காக அல்ல மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்காக மட்டுமே 


       ஒரு பாஸ்போர்ட் அளிக்கும் அரசிற்கு அந்த ஒற்றைகுடிமகனுக்கு காவல் துறை விசாரனை தேவபடுகிறது. அவன் வெளி நாடு சென்று அங்கு ஏதாவது தவறு செய்துவிட்டால் இந்தியாவின் மானம் போய்விடும். நமது நாட்டிற்குள் யார் யாறைவேண்டுமானாலும் ஏமாற்றலாம் அது வெளினாட்டுகாரனாக இருந்தாலும் சரி.  எம்மக்கள் அதிக சதவிகிதத்தில் ஏமாளிகளக இருக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம். அப்போதுதான் நாங்கள் அரசியல் செய்யமுடியும் இப்படி இருந்தால்தான் எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

       ஊடகங்கள் எனப்படும் பத்திரிகை தொலைகாட்சி வானொலி எல்லாம் பத்திரிக்கை சுத்தந்திரம் ஊடகங்களுக்கான சுதந்திரம் என்றெல்லாம் கூப்பாடு போடுவார்கள் அவர்கள் ஒருபோதும் மக்களின் நலன்களைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை கவலைபடவேடியதும் இல்லை. ஒரு ஏமாற்றுகார நிறுவனத்தினை ஒரு நளைக்கு நூறு முறை விளம்பரப் படுத்துவார்கள், அதே நிறுவணத்தின் குட்டு வெளிப்படும்போது அதே ஊடகத்தில் முக்கிய செய்தியாக வரும்  இந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை விளம்பரப் படுதியதர்க்காக  அந்த ஊடகத்தின்மீது குற்றம் பதியப்படுகிறதா இல்லை அந்த ஊடககங்கள் ஒரு மன்னிப்பாவது கேட்டிருகிறதா.

      மக்களாகிய நாங்கள் எங்களை இந்த ஏமாற்றுகாரர்களிடம் இருந்து பாதுகாத்துகொள்ள இயலவில்லை அப்படி முடிந்திருந்தால் அதற்கான விழிபுணர்வு எங்களுக்கு ஏற்ப்பட விட்டிருந்தால் நாங்களும் புத்திசலிகளாக இருந்திருப்போம் இந்த ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் கோமாளிகளாக மாற்றியிருப்போம்.

    மானத்தை விற்கிறவன் விபச்சாரி ஏமாற்று நிறுவனங்களுக்கான விளம்பர நடிகர்களும் அந்த நிறுவணஙள் குட்டு வெளிப்படும்போது-- (விபச்சாரவிடுதிக்கு ரெய்டுபோனாத்தான் தெறியும் யார் யார் விபச்சாரினு).