ஒரு குழந்தை பிறந்தவுடன் அது மனிதனாவது இல்லை வெறும் மனித விலங்குதான். தொடர்ச்சியான கற்றலினாலும் கற்றதில் இருந்து சிறந்த பண்புகளை கடைபிடித்தலாலுமே இந்த சமூகத்தில் மனித நிலையை நெறுங்கமுடியும். ஆங்காங்கே வாழ்ந்த மனித விலங்கு குழுக்கள் தங்களின் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளவே அந்த குழுக்களுக்குள் அவர்களால் முடிந்தமட்டும் ஒரு சில விதிகளையும் நெறிமுறைகளையும்
வகுத்துக் கொண்டனர், பின் வந்த சந்ததியினர் அதனையே தொடர்ந்து பின்பற்றியும் வந்தனர். இவைகள் அனைத்தும் காலஞ்செல்ல செல்ல பல குழுக்கள் ஒன்றினைவதனாலும் ஒன்றினை ஒன்று ஆக்ரமிப்பதனாலும் ஏற்கனவே உள்ளவற்றின்மேல் திருப்த்தியின்மையினாலும் தொடர்ந்த மாறுதலுக்குள்ளாகிக் கொண்டே வந்திருக்கின்றன.
இன்றைய மனிதர்கள் என்று சொல்லப்படும் நாம், இந்த உலம் முழுவதும் மனிதர்களுக்கே உரித்தானதாக கருத ஆரம்பித்துவிட்டோம். ஆனால் உண்மையில் சொல்லவேண்டுமானால் இந்த உலகில் தொன்றியுள்ள
அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த பூமி உரிமையானதே. ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும் பிறந்த மனிதர்கள் அவர்களின் முன்னோர்களின் தொடர்ந்த பயன்பாட்டின் காரணமாக பின் வந்த அரசியல் அமைப்புகள் மூலம் இந்த நிலப்பகுதி இன்னாருடையது என்று மனிதர்களுக்குள் பிரித்து பயன்படுத்துவதாயிற்று. பின்னர் அந்த நிலத்தை தன் இஷ்ட்டப்படி பயன்படுத்த அதே நிலத்தில் பிறந்து வளர்ந்த பல உயிரினங்களை (ஜீவராசிகளை ) கொன்றும் விரட்டியும் ஒழித்தாகிவிட்டது.
ஒரு மனிதன் இப்போது தன்னுடைய நிலம் என்று மனிதனால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புகள் மூலம் காகிதங்களில் அவனுக்கு உரிமையை வழங்கிவிட்டது. தான் நினைத்தால் அந்த நிலத்தை அடுத்தவருக்கு விற்கலாம் வாங்கியவர் புல் பூண்டு முதர்கொண்டு அனைத்தையும் அழித்து சுற்று சுவர் இட்டு ஆக்ரமித்துக்கொள்ளலாம். இந்த
எல்லைகளை குறிப்பது அந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுத்தவரை அனுமதிக்காதது இவை எல்லாம் சிங்கம் மற்றும் சில ஆளுமை மிக்க விலங்கினங்களால் கையாளப்படும் குணமே ஆகும்.
எந்த விலங்குகளும் நிலத்தை பட்டா செய்து விற்றுவிடுவதில்லை இந்த மனிதன் மட்டுமே தன் சுயனலத்திற்காக தான் விரும்பிய படி நிலத்தினை வாழிடங்களை வீணடித்தும் விற்றும் விடுகிறான். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளலாரின் சிந்தனைகளை இன்றைய சமூகம்
அறவே நிராகரித்துவிட்டது அப்படியெனில் இன்றைய சமூகம் மனித தன்மையுடன் இல்லை விலங்குகளின் தன்மையை விட
கேவலமான ஒரு தன்மையை பெற்றிருக்கிறது என்பதனை நிரூபிக்கிறது. சிந்தனைகளில் சற்றே மேம்பட்ட இனம் மனித இனம் என்பதால் அனைத்து
ஜீவராசிகளையும் ஏமாற்றிவிட்டது அழித்தொழித்டுவிட்டது இங்கு மனிதனுக்கான மேம்பட்ட பண்புகள் எதுவுமே கானப்படுவதில்லை.
இந்த மனித இனம் மற்ற ஜீவராசிகளை வஞ்சித்து அழித்தொழிப்பது நியாம் எனில் மனித இனத்தில் அறிவில் கற்றலில் மேம்பட்ட குழுக்கள் வளிமை மிக்கவர்கள் எளியவர்களை அறியாதவர்களை பிரித்து அவர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறுவதில் என்ன தவறு இருக்கிறது. கோபம் பொறாமை அபகரிக்கும் குணம் மட்டற்ற இனசேர்க்கை வேட்க்கை போன்ற விலங்கின் குணம் நிறைந்திருக்கும் மனிதர்களை ஆங்காங்கே கூக்குரலிடுதல்மூலம் மட்டும் ஓரிரு குணங்களை மட்டும் அவரவர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் எப்படி முடியும். முழு மனித தன்மையுடன் மாறினால் மட்டுமே அனைவரும் மேம்பட்ட ஒழுக்கங்களை கடைபிடித்தலாலும் மனிதனாகமுடியும்.
ஒரு பக்கம் தொலைக்காட்ச்சிகளில் சிட்டுக்குருவி லேகியம் விற்கிறான் இன்னொருபக்கம் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் காம களியாட்டம். காமத்தில் குறைந்தால் நீ மனிதனே இல்லைனு நடுராத்திரியில் வந்து நாளுபேர் பயமுறுத்தறான். ஒரு பக்கம் கற்பழித்துவிட்டான் கையபுடுச்சி இழுத்துட்டானு கத்தறாங்க. மனிதனாக வேண்டுமெனில் தன்னுள் இருக்கும் மிருகத்தன்மையை ஒழித்து மனிதத்தன்மையை மேம்படுத்துங்கள். மனிதன் மாதிரி பிறந்ததினால் மட்டும் மனிதனாகிவிடமுடியாது மனிதனாக வாழ்ந்துகாட்டவேண்டும்.
பெரியார் உறித்தது வெங்காயம் வள்ளலார் உரித்தது வாழைப்பழம். எது வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.