ஒவ்வொரு நாளும் பா ம க வின் தலைவர்கள் மீது பழைய சம்பவங்களை எல்லாம் புதிய புதிய வழக்காக சேர்த்துவருவது, மேலும் பினை பெற்ற வழக்குகளை மேல்முறையீடு செய்து பினை ஆணையை ரத்து செய்யக்கோறுவது, என்பதெல்லாம் தமிழக அரசு தன்னைத்தானே கேளிக்குறியதாக ஆக்கிக்கொள்கிறது.
பழைய வழக்குகளில் தற்ப்போது அவசர அவசரமாக பிடியாணை வாங்குவது, தலைமறைவு குற்றவாளி என்றும் சின்னத்தனமாக நடந்துகொள்வதன்மூலம் பொது மக்களுக்கு அரசின்மேல் சில வித்தியாசமான கேள்விகள் எழுகிறது
1. 9 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒரு வழக்கை கையில் எடுத்து சிறையில் இருப்பவருக்கு பிடியானை கோறுவது என்பது இத்தனை நாட்க்கள் காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?
2. ஒரு அரசியல்வாதி ஊர் ஊராக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் அவரை இரண்டு ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று வழக்கு சேர்க்கப்படுகிறது அப்படி என்றால் இந்த தமிழக காவல்துறை குருடாக இருந்ததா?
இப்படி தாந்தோன்றித்தனமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து குருட்டுத்தனமாக பா ம க வின் மீது வீசப்படும் ஒவ்வொரு கல்லும் பா ம க வின் அஸ்த்திவாரத்தை பலப்படுத்துகிறது மேலும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கலகலத்துப்போக செய்கிறது.