Sunday, June 29, 2008

பெரிய சாதனைகளையும் அரிய கண்டுபிடிப்புகளையும் தரவேண்டுமானால் தனித்த ஒரு துறையில் இருந்து சாதிக்க இயலுமா?


இதோ உதாரணத்திற்கு கலீலியோ கலிலி (பெப்ரவரி 15, 1564 - ஜனவரி 8, 1642), அறிவியற் புரட்சியோடு நெருக்கமான தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும் மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். "இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும், அறிவியலின் தந்தை என்ற வகையிலும், இவர் "நவீன வானியலின் தந்தை" எனக் குறிப்பிடப்படுகின்றார். (கெப்ளர் இப் பட்டத்துக்குக் கூடிய தகுதியுடயவர் என்றும் கருதப்படுகிறது.) இவருடைய பரிசோதனைகள், அறிவியல் சார்ந்த வழிமுறைகளை நிலைநிறுத்திய பேக்கனின் எழுத்துக்களுக்குத் துணையாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. பீசா நகரில் பிறந்த கலீலியோ கெப்ளரின் சமகாலத்தவராவார். கலீலியோவின் வேலைகள், குறிப்பாக அரிஸ்டாட்டிலின் வேலைகளிலிருந்து, குறிப்பிடத்தக்க திருப்பமாகும்

கணிய அளவுப் பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளை கணித முறையில் பகுப்பாய்வு செய்வதையும் தொடக்கிவைத்தவர் என்றவகையில், அறிவியற் புரட்சியின் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு. அக்காலத்து மேற்கத்தைய சிந்தனையில், இத்தகைய வழிமுறை மரபு கிடையாது. இவருக்கு நேரடியாக முந்திய காலத்தவரான, பெரும் பரிசோதனையாளர், வில்லியம் கில்பர்ட் கணிய அளவு அணுகுமுறைகளைப் பயன்படுத்தவில்லை.
இவருடைய சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் இவர் வாட்டிக்கான் சிட்டியால் தண்டிக்கபட்டார்(கத்தோலிக்க மத குரு மாடத்தால் அடித்தே துண்புருத்தப்பட்டார்)

இப்படி பல துறைகளில் ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே சாதனைகளை செய்யும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். எனவே அனைவரும் அனைத்தை தெரிந்து கொள்ள கற்றுக்கொள்ள அடிப்படைத்தேவைகளை புரிந்துகொள்ளவேண்டும்.

4 comments:

  1. //இப்படி பல துறைகளில் ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே சாதனைகளை செய்யும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். எனவே அனைவரும் அனைத்தை தெரிந்து கொள்ள கற்றுக்கொள்ள அடிப்படைத்தேவைகளை புரிந்துகொள்ளவேண்டும்.
    //


    சரியே!!

    சும்மா timepass பன்ற bloggers

    இடையே ஒரு நல்ல முயற்சி.!!!

    ReplyDelete
  2. ஒரு வழிப்போக்கன் said...
    //சும்மா timepass பன்ற bloggers

    இடையே ஒரு நல்ல முயற்சி.!!!//

    ஐயா நன்றி நமக்கெல்லாம் டைம் பாஸ் பன்றதுக்கு டைமே இல்லைங்க ஏதோ இருக்கிற வேலைக்கு நடுவுல கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி இதெல்லாம் எழுதியாகனும். வழியே வந்து ஒரு எட்டு பாத்துட்டு போனதுக்கு நன்றி

    ReplyDelete
  3. இந்தியாவின் புனரமைப்புக்காக நான் தீட்டிய திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000 எனது பதிவு மீதான தங்கள் மறுமொழிக்கு நன்றி

    ReplyDelete
  4. மிக நல்ல பதிவு

    ReplyDelete