Saturday, November 24, 2012

தங்கத்தின் தாகமும் அதன் தாக்கத்தின் ஏக்கமும்

    தங்கம்  இந்த  பெயரை கேட்டாலே நம் அனைவரையும் ஒரு  நொடி தவிக்க வைக்கிறது.
நாளுக்கு நாள் விலை ஏற்றம்  நாமும் கடன் பட்டாவது ஒரு கிலோ  தங்கம் நாலுவருஷத்துக்கு முன்னரே வாங்கி வைத்திருந்தாள் அதில் பாதியை விற்று இன்று அதன் கடனையும் அடைதிருக்கலாமே என மனதின் எண்ண ஓட்டம் சிந்தனையை திருப்பிவிடுகிறது.

    தங்கத்தினால் சமுதாயத்தில் பாதிப்புகள் மற்றும் ஏக்கங்கள் தான் எத்தனை எத்தனை சொல்லிமாலாது  மகளின் திருமணத்தை நடத்த போராடும் பெற்றோர்கள், மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியாத கணவர்கள், மருமகளின் சீர்வரிசை கேட்கும்  மாமியார்கள் அன்னியசெலவானி பாதிப்பில் திண்டாடும் நாடு, திருடர்களின் பயத்தல்  தெருவில் நடமாட முடியாத பெண்கள்,பதுக்கிவைத்து பணம் கொழிக்கும் பண முதலைகள், முதலீடுகள் திசைமாறி செல்வதால் பாதிக்கும் நிறுவனங்கள். என அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இன்று தங்கம் என்பது நமது சமுதாயத்தின் செல்வசெழிப்பின்  ஒரு தர அளவுகோலாக இருக்கிறது. தனது செல்வ செழிப்பை வெளிக்காட்டும் பகட்டுக்காரர்களினால் அடுத்தவர்களின் நெஞ்சில் நஞ்சு விதைக்கப்படுகிறது. அரசு சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாக குறைந்தபட்ச்சம் 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்றோ தங்கத்தின் விலை நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய விலையைவிட மூன்று மடங்காக  உயர்ந்துவிட்டது. பங்குச்சந்தையில் நிறுவனங்கள் மீது முதலீடு செய்யப்பட்ட பணம் பாதியாகிப்போனது.

  இப்போது தான் அரசு அதன்  பாதிப்பை உணரத்தொடங்கியிருக்கிறது, தங்கம்  வாங்க வங்கிகள் கடன் தரக்கூடது என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் மட்டும் 3 லட்சம் கோடி அளவுக்கு தங்கம் வெளி நாடுகளில் இருந்து முறையாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, முறைகேடாக எவ்வளவோ யாருக்குத்தெறியும்.  தினமனியில் வெளியான பத்திரிகை செய்தி இதோ. 


//தங்கம் வாங்க கடன் தர வேண்டாம்: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

First Published : 20 November 2012 12:43 AM IST
தங்கம் வாங்குவதற்கு வங்கிகள் கடன் அளிக்க வேண்டாம் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்க நகை, தங்க பிஸ்கெட் அல்லது தங்கம் சார்ந்த பங்கு பத்திரங்கள் (இடிஎப்) வாங்குவதற்கு கடன் வழங்கக் கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. இவ்விதம் கடன் அளிப்பதால் தங்கம் மீது ஊக வணிகத்துக்கு வழி வகுப்பதாக ஆர்பிஐ சுட்டிக்காட்டியுள்ளது. தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கு  தங்கம் வாங்குவதற்கோ அல்லது அவர்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு அடிப்படையிலோ கடன் வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் நியாயமான ஜூவல்லர்களுக்கு மூலதன கடன் வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. சமீபகாலமாக தங்க இறக்குமதி அதிகரித்துள்ளதால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தகைய உத்தரவை ஆர்பிஐ பிறப்பித்துள்ளது. 2011-12ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1,067 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 6000 கோடி டாலராகும். நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் தங்க இறக்குமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகரித்து ரூ. 71,912 கோடியாக (1,300 கோடி டாலராகும்) உயர்ந்தது.//   

      வெளி நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் ஏற்றுமதியால் நாட்டிற்கு வரும் பணத்தைவிட நமது மக்கள் தங்கம் வாங்கசெலவிடப்படும் தொகை அதிகம். நமது மக்கள் மற்றும் நாடு நலம் பெறவேண்டுமெனில் தங்கத்தின் பயன்பாட்டை கண்டிப்பாக தங்கத்தை முறைப்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் அரசின் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் அரசால் முட்டாள்களாக்கப்படுகிறார்கள் என்றுதான் கருதவேண்டும்.

   எந்தமாதிரியான தீர்வுகள் மூலம் எப்படி தங்கத்தை  கட்டுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

1. நபர் ஒருவருக்கான தங்கத்தின் பயன்பாட்டு அளவை நிர்ணயிக்கவேண்டும்( 100 கிராம் அல்லது 150 கிராம் என )
2. நிர்னயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தங்கம் கையிருப்பு வைக்கின்றவர்களுக்கு கூடுதல் தங்கத்திற்கு மட்டும் அந்த நிதியாண்டின் விலை விதியாசத்தை வரியாக விதிக்கவேண்டும்.
3. ஒவ்வொரு நகையின்மீதும் நிரந்தர கணக்கு எண் (பான்) பொறிக்கப்படவேண்டும். தங்கம் என்பது ஏழைகளின் கைகளில் இருந்து கொள்ளை போகமலும் பணமுதலைகளின் பதுக்கல்களிருந்து  காக்கவும் இது பயனுள்ளதாய் இருக்கும். இப்படி (பான்) பொறிக்கப்படாத தங்க நகைகளை திருட்டு பொருளாகவே கருதவேண்டும்.
4.பொது மக்களிடம் இருக்கும் மொத்த பயன்பாட்டுத்தங்கத்தை கணகிட்டு அதன்மூலமும் அரசு தனது நாணயத்தின் மதிப்பை உயர்த்திக்கொள்ளலாம்.

இப்படி செய்தால் விலையேற்றம் குறையும் திருடு, லஞ்சம், பதுக்கல், வரதட்ச்சனை,கொலை மற்றும் கொள்ளை போன்றவற்றில் இருந்து மக்களை காக்கலாம்