Saturday, December 29, 2012

பெண்கள் சுதந்திரம் என்பது போலியான வார்த்தை

  இது இன்றைய சூழலில் ஒருபோதும் மனிதர்களுக்கு பொருந்தாது அது விலங்குகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு வார்த்தையாகும்.  சுதந்திர பறவை என்று சொல்வது சரியான சொல் அதே அதனை மனிதனுக்கு பொருத்தி பார்க்கமுடியாது.

  1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது ஆனால் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை. இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி சுதந்திரம் பெற்றார்கள் இப்போது சுதந்திரம் "பெற்றுவிட்டது" "பெற்றுவிட்டனர்" அல்ல.

   சுதந்திரம் பெறுவதற்க்காக போராடினீர்கள் சரி, சுதந்திரம் பெற்றபின் ஏன் நாள் தோறும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அப்படி என்றால் நீங்கள் சுதந்ரம் பெறவில்லை என்றுதானே அர்த்தம்.ஒரு இந்தியனாகிய உண்ணால் இந்தியாவின் அனுமதி இன்றி நாட்டைவிட்டு வெளியேறக்கூட முடியாது அப்போ எங்கிருந்து கிடைத்துவிட்டது உங்களுக்கு சுதந்திரம்.

    பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் போது பிரித்தானியர்கள் இன்று இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருக்கும்போது நீ இந்தியன் அவ்வளவே.இதில் பெண்களுக்கான சுதந்திரம் என்று ஒன்று எங்கிருந்து வந்துவிட்டது.

   சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்ற ஒன்று கட்டுப்பாடு என்று ஒன்று எப்போது இல்லாமல் போகிறதோ அன்று பாதுகாப்பு என்று ஒன்று இல்லாமல்தான் போகும்.ஒரு பறவைக்கு சுதந்திரம் இருக்கிறது ஆனால் பாதுகாப்பு இல்லை. அந்த பறவை எந்த விலங்குகளாளும் வேறு பலம் வாய்ந்த பறவைகளாளும் கொல்லப்படும் வாய்ப்பு இருக்கிறது.

  ஒன்றிற்கு பாதுகாப்பை வழங்குவது யார் அதன் உரிமையாளர்மட்டுமே. யார் ஒருவர் உணக்கு பாதுகாப்பு அளிக்கிறாறோ அவர் உங்களின் மீது உரிமையானவர் ஆகிறார், நீங்கள் வேறொருவருக்கு உரிமையானவர் ஆகும்போது அங்கே உங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போகிறது.

  இப்போது ஒருவருக்கு பாதுகாப்பு வேண்டுமா இல்லை சுதந்திரம் வேண்டுமா?. சுதந்திரமானவர்கள் தன் பாதுகாப்பை தானே ஏற்ப்படுத்திக்கொல்லவேண்டும். இந்தியாகூட பிரிட்டனிடம் இருந்து விடுதலைதான் பெற்றிருக்கிறது ஆனால் சுதந்திரமாக இல்லை ஐ நா வின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

    சுதந்திர இந்தியாவென்பது கூட பொய் அரசியல் தலைவர்கள் ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகளிடம் அடகு வைத்துள்ளார்கள்.

1 comment:

  1. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

    நன்மக்களே!
    வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
    நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
    இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

    பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
    மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
    காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
    இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
    மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
    புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

    மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
    நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
    இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
    வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
    காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
    மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

    -இந்தியன் குரல்

    ReplyDelete