ஆம் ஆத்மி கட்சியினால் நேரடியான பாதிப்பு எந்த கட்சிக்கு நேற்றைய தினம் அனைத்து இந்தி செய்தி தொலைக்காட்சிகளில் டில்லி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை பற்றிய விவதங்கள்தான் வந்து கொண்டிருந்தன.
இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் வகைப்படுத்தி வைக்காத அனைத்து பாமர மக்களுக்கான அடிப்படை தேவைகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி இவைகளை முதலில் தீர்க்கவேண்டும் என்று முதல்வர் அர்விந்த் பேசினார்.
அவர் பேசி முடிப்பதற்க்குள் பா ஜ க வினர் ஒரே கூச்சல்.
காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு பால்வார்கிறது பிறகு கான்கிரஸ் மீதே பாய போகிறது என்று பாஜக வினர் அங்கலாய்க்கிறார்கள். பல மாநிலங்ககளில் மாநிலகட்சிகளுக்கு கான்கிரஸ் ஆதரவு அளித்தது ஆனால் அங்கெல்லாம் கான்கிரஸ் அழிந்துவிட்டதாக பாஜகாவினர் மேற்கோள் காட்டுகிறார்கள். ஆடு நனைவதை பற்றி ஓனாய் ஏன் வருந்தவேண்டும்.
இந்த முறை கான்கிரஸ் மத்தியில் ஆட்சியை பிடிக்க எள்ளலவும் சாத்தியம் இல்லை என்பது காங்கிரஸ் தலைமைக்கு நன்றாகவே தெறியும். மத்தியில் கான்கிரஸ் எதிர்ப்பை மொடி அலையாக மாற்ற நினைத்த பாஜக விற்க்கு மத்தியில் ஆட்சிஅமைக்கும் கனவு நனவாக இருக்கும் சூழல் நிலவியபோது எதிர்பாராதவிதமாக விழுந்த இடிதான் ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில வாக்கு வளர்சி.
பாஜகவின் கனவு தகரும் தருவாயில் உள்ளது ஒவ்வொரு நாளும் ஆம் ஆத்மியின் புகழும் நாடுகடந்து வந்து குவியும் நிதியுதவிகளும் பாஜகவினை தோல்வியின் விளிம்பை நோக்கிய நகர்வை உணர்கிறார்கள். இந்த ஒரு முறை மட்டுமே பாஜகவிற்க்கு வாய்ப்பு உள்ளது இது தகர்ந்தால் அடுத்த வாய்ப்பு எப்போது வரும் என்று கணிப்பது மிக கடினம்.
சரிந்து விட்ட இந்திய பொருளாதாரத்தை யார்வந்தாலும் உடனே தூக்கி நிறுத்திவிடமுடியாது ஆனால் மாற்று சிந்தனைகள் மூலம் மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்கமுடியும். அதர்க்கான வழிமுறைகளை ஆம் ஆத்மியால் ஏற்ப்படுத்தி தர முடியும். ஏனெனில் அவர்கள் பிரச்சினையின் மூலத்தில் இருந்து ஆராய்கிறார்கள்.
வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் தோல்வியடைவதை பற்றி காங்கிரஸ் எள்ளலவும் கவலைப்படவில்லை இப்போதைய நிலையில் அதிக குழப்பத்தில் இருப்பது பாஜக மட்டுமே.
உங்கள் கருத்து சரியென்றே தோன்றுகிறது.
ReplyDeleteஉண்மை
ReplyDelete