Sunday, January 12, 2014

கொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.

ஊருக்குள்ள எல்லாரும் என்ன பேசிக்கிடறாங்கனா. "

   நம் நாடு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மூன்று முக்கிய கட்சிகளின் போட்டியை எதிர் நோக்கியுள்ளது. அது கொலை கொள்ளை கொள்கை இந்த மூன்றுதான்.

  இதில் யார் ஓட்டு யாருக்கு என்று பார்ப்போம்.


1. கொலை காரர்கள் என்று சொல்லப்படுபவர்களை பிடிக்கின்றவர்கள் கொலைகார கட்சிக்கு வாக்களிப்பார்கள். 
2. கொலைகாரார்களை முற்றிலும் பிடிக்காதவர்கள் அவர்கள் வரவே கூடாது என்று நினைப்பவர்கள் கொள்ளைக்கார கட்சிக்கு மட்டும் தான் வாக்களிப்பார்கள்.
3. கொள்ளைகார கட்சியை முற்றிலும் பிடிக்காதவர்கள் மற்றும் கொள்கைகாரர்களை பிடித்தவர்கள் கொள்கைகார கட்சிக்கு வாக்களிப்பார்கள்.

   இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்பிடித்தவர்களின் வாக்குகளை மட்டுமே பெறக்கூடிய கட்சி கொலைகார கட்சி. யாருக்குமே பிடிக்காமல் ஆனால் அடுத்திருப்பவர்களை பிடிக்காததினால் மட்டுமே வாக்குகளை பெறக்கூடிய பிடிக்காதவர்களை தேடி தேடி பிடிக்கின்ற ஒரே கட்சி அது கொள்ளைகார கட்சிதான். 

    இங்க பாருங்க இந்தியாவில யாருக்குமே இந்த கட்சிய பிடிக்கிறதில்லை ஆனாலும் ஆச்சிய வச்சி ஆட்சியை பிடிச்சிடுவாங்க. இப்ப புரியுதா உங்களுக்கு யார் ஓட்டு யாருக்குனு.

   "இப்படி எல்லாம் நான் சொல்லவில்லை ஊருல எல்லாம் பேசிக்கிறாங்க."

    இதுக்கு மேலயும் யாருக்காவது புரியலைனா பின்னூட்டம் போட்டு புரிஞ்சுக்கோங்க.

Friday, January 3, 2014

ஆம் ஆத்மி கட்சியினால் நேரடியான பாதிப்பு எந்த கட்சிக்கு



    ஆம் ஆத்மி கட்சியினால் நேரடியான பாதிப்பு எந்த கட்சிக்கு நேற்றைய தினம் அனைத்து இந்தி செய்தி தொலைக்காட்சிகளில் டில்லி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை பற்றிய விவதங்கள்தான் வந்து கொண்டிருந்தன.

    இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் வகைப்படுத்தி வைக்காத அனைத்து பாமர மக்களுக்கான அடிப்படை தேவைகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி இவைகளை முதலில் தீர்க்கவேண்டும் என்று முதல்வர் அர்விந்த் பேசினார்.
அவர் பேசி முடிப்பதற்க்குள் பா ஜ க வினர் ஒரே கூச்சல்.

   காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு பால்வார்கிறது பிறகு கான்கிரஸ் மீதே பாய போகிறது என்று பாஜக வினர் அங்கலாய்க்கிறார்கள்.  பல மாநிலங்ககளில் மாநிலகட்சிகளுக்கு கான்கிரஸ் ஆதரவு அளித்தது ஆனால் அங்கெல்லாம் கான்கிரஸ் அழிந்துவிட்டதாக  பாஜகாவினர் மேற்கோள் காட்டுகிறார்கள். ஆடு நனைவதை பற்றி ஓனாய் ஏன் வருந்தவேண்டும்.

    இந்த முறை கான்கிரஸ் மத்தியில் ஆட்சியை பிடிக்க எள்ளலவும் சாத்தியம் இல்லை என்பது காங்கிரஸ் தலைமைக்கு நன்றாகவே தெறியும். மத்தியில் கான்கிரஸ் எதிர்ப்பை மொடி அலையாக மாற்ற நினைத்த பாஜக விற்க்கு  மத்தியில் ஆட்சிஅமைக்கும் கனவு நனவாக இருக்கும் சூழல் நிலவியபோது எதிர்பாராதவிதமாக விழுந்த இடிதான் ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில வாக்கு வளர்சி.

    பாஜகவின் கனவு தகரும் தருவாயில் உள்ளது ஒவ்வொரு நாளும் ஆம் ஆத்மியின் புகழும்  நாடுகடந்து வந்து குவியும்  நிதியுதவிகளும்   பாஜகவினை தோல்வியின் விளிம்பை நோக்கிய நகர்வை உணர்கிறார்கள்.   இந்த ஒரு முறை மட்டுமே பாஜகவிற்க்கு வாய்ப்பு உள்ளது இது தகர்ந்தால் அடுத்த வாய்ப்பு எப்போது வரும் என்று கணிப்பது மிக கடினம்.

   சரிந்து விட்ட இந்திய பொருளாதாரத்தை யார்வந்தாலும் உடனே தூக்கி நிறுத்திவிடமுடியாது ஆனால் மாற்று சிந்தனைகள் மூலம் மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்கமுடியும். அதர்க்கான வழிமுறைகளை ஆம் ஆத்மியால் ஏற்ப்படுத்தி தர முடியும். ஏனெனில் அவர்கள் பிரச்சினையின் மூலத்தில் இருந்து ஆராய்கிறார்கள்.

   வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் தோல்வியடைவதை பற்றி காங்கிரஸ் எள்ளலவும் கவலைப்படவில்லை இப்போதைய நிலையில் அதிக குழப்பத்தில் இருப்பது பாஜக மட்டுமே.

    



Thursday, December 19, 2013

இந்தியாவில் கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டம்

    இந்தியர்கள் ஏன் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கான கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்தக்கோரி போராடக்கூடாது. அப்படி செய்தாலே இந்தியாவில் வருமை ஒழிந்துவிடுமே.  ஒருமணி நேர ஊதியத்தில் குறந்தபட்சம் ஒருவேலை உணவுக்கு போதியாளவு இருக்கவேண்டும். ஊதியம் குறித்த நேரத்தில் தவறாமல் வழங்கப்படவேண்டும். ஊதிய ஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து ஒரு வார காலத்திற்க்குல் அரசு ஊதியத்தினை பெற்றுத்தரவேண்டும்.

Saturday, December 14, 2013

முகனூலில் பார்த்த மாங்காய் பதிவு.


இந்த பதிவ படிச்சி பாருங்க இவங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.




"தமிழக அரசு செய்யுமா...? எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்ப்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகிறது. அதனால் யாருக்கு என்ன பயன்? நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக மாறி வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் PLOT ஆக மாறி வருகிறது இதனால் கூடிய விரைவில் நம் நாடு உணவு பொருட்களுக்காக மற்ற நாடுகளிடம் கை ஏந்தும் நிலை வரலாம்.

அதனால் நமது அரசு ஏன் விவசாயத்தை நடத்த கூடாது?

• ஒவ்வொரு மாவட்டதையும் அதன் தரம் வாரியாக பிரித்து அதற்கென ஒரு துறை அமைத்து அதனை விவசாய துறை அமைச்சகதிடம் ஒப்படைக்க வேண்டும்.

• இதில் விவசாயம் படித்த பட்டதாரிகளை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.

• விவசாய வேலை ஆட்களை அரசு வேலை போல நியமனம் செய்ய வேண்டும்.

• இதனை ஒரு பொது துறை நிறுவனம் போல செயல்படுத்த வேண்டும்.

• ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய ஆராய்ச்சி மையம் செயல் படுத்தவேண்டும். இதன் மூலம் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி விவசாய்திற்கு பயன்படுத்த வேண்டும்.

• இயற்கை வேளாண்மையும் செயல்படுத்த வேண்டும். இவை நடந்தால்?

• நம் நாடு உணவு உற்பத்தியில் முதலிடம் பெறும்

• உணவு ஏற்றுமதி அதிகரிக்கும்

• விவசாயம் அழியாமல் பாதுகாக்க முடியும்

• நாட்டில் பண வீக்கம் அரசின் கட்டுபாட்டில் இருக்கும்

• வேலை இல்ல திண்டாட்டம் ஒழியும்.

இன்னும் பல…………………………………….. ஏன் அரசாங்கம் சாராயம் விற்கும் போது விவசாயம் செய்ய முடியாதா??

- ஷங்கர் சிவசைலம்
தமிழக அரசு செய்யுமா...? எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்ப்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகிறது. அதனால் யாருக்கு என்ன பயன்? நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக மாறி வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் PLOT ஆக மாறி வருகிறது இதனால் கூடிய விரைவில் நம் நாடு உணவு பொருட்களுக்காக மற்ற நாடுகளிடம் கை ஏந்தும் நிலை வரலாம். 

அதனால் நமது அரசு ஏன் விவசாயத்தை நடத்த கூடாது? 

• ஒவ்வொரு மாவட்டதையும் அதன் தரம் வாரியாக பிரித்து அதற்கென ஒரு துறை அமைத்து அதனை விவசாய துறை அமைச்சகதிடம் ஒப்படைக்க வேண்டும். 

• இதில் விவசாயம் படித்த பட்டதாரிகளை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.

• விவசாய வேலை ஆட்களை அரசு வேலை போல நியமனம் செய்ய வேண்டும். 

• இதனை ஒரு பொது துறை நிறுவனம் போல செயல்படுத்த வேண்டும்.

• ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய ஆராய்ச்சி மையம் செயல் படுத்தவேண்டும். இதன் மூலம் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி விவசாய்திற்கு பயன்படுத்த வேண்டும். 

• இயற்கை வேளாண்மையும் செயல்படுத்த வேண்டும். இவை நடந்தால்? 

• நம் நாடு உணவு உற்பத்தியில் முதலிடம் பெறும் 

• உணவு ஏற்றுமதி அதிகரிக்கும் 

• விவசாயம் அழியாமல் பாதுகாக்க முடியும் 

• நாட்டில் பண வீக்கம் அரசின் கட்டுபாட்டில் இருக்கும் 

• வேலை இல்ல திண்டாட்டம் ஒழியும்.

இன்னும் பல…………………………………….. ஏன் அரசாங்கம் சாராயம் விற்கும் போது விவசாயம் செய்ய முடியாதா??

- ஷங்கர் சிவசைலம்
 கமெண்ட் போட்டவங்க எல்லாரையும் நெனைக்கும்போது அப்படியே புல்லரிக்குது.  2020 ல இந்தியா வல்லராசா ஆயிடும்டோய்!