Sunday, December 2, 2007

புரட்ச்சி செய்ய வந்திருக்கும் ஒரு தமிழன் இவனும் ஒருவன்

என்னைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து வைக்கத்தான் வேண்டும் அப்போதுதான் சிலர் திரும்பியாவது அல்லது ஒரு பொருட்டாகவாவது பார்ப்பார்கள். வைரம் ஒன்று வழியிலே கிடந்தாலும் வைரம் என்றாலே என்ன என்று தெரியாத ஒருவன் அதை கண்டும் கானாமலும் தான் செல்வான் சிறிது மின்னினால் கண்ணாடி துண்டு என்று நினைத்துப்போவான். அதற்க்குத்தான் எனக்கும் ஒரு விளம்பரம் அதாவது அறிமுகம் தேவைப்படுகிறது அப்போது தான் புரட்ச்சிதமிழன் எழுதுவது இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து சிலர் சட்டையாவது செய்வார்கள். என்ன செய்வது நாடே விளம்பரப்பிரியம் ஆகிவிட்டது ஒரு பொருளைப் பற்றி ஐம்பதுமுறை சொன்னால் இது தான் நல்லது இதுதான் உண்மை என்று நம்பிவிடுகிறோம். ஒரு பொருளை வாங்க நினைக்கும் போது எந்த பிராண்டின் பெயரை அதிகமாக கேட்டிருக்கிறோமோ பார்த்திருக்கிறோமோ அது தான் நமக்கு விறைவில் ஞாபகம் வருகிறது.

ஒன்றைப்பற்றி சிலகாலம் யாரும் சட்டைசெய்யவில்லை என்றால் அனைவரும் அதை மறந்தே விடுகிறோம் சில ஆண்டுகளுக்கு முன்பு குட்டி சாமியார் என்று ஒரு சிறுவனை மீடியா பரபரப்பாக சித்தரித்தது இப்போது அந்த சிறுவன் என்ன ஆனான் அவன் பெயர் என்ன என்பது கூட எனக்கு மறந்துபோய்விட்டது. இதர்க்குத்தான் தெறிந்த விஷயமாக இருந்தாலும் பலர் அறிந்த விஷயமாக இருந்தாலும் திரும்பத்திரும்ப மீடியாவிலோ பொதுமேடைகளிலோ அலசினால் தான் அதை ஒரு மூலையில் ஞாபகம் வைத்துக்கொல்வார்கள் அதைப்பற்றி சிந்திப்பது அடுத்தவிஷயம். ஏதோ இந்த இனையம் எனக்குகிடைத்த ஒரு மீடியா பொக்கிஷம் இந்த ஏழையால் (மீடியா ஏழை) இதில் என்னைப்பற்றியும் கொஞ்சம் விளம்பரம் செய்ய வேண்டி இருக்கிறது.

நான் சிறுவயது முதலே சில பல அந்தஸ்த்துகளில் சில வசதிகளுடனும் சில வசதிகள் இன்றியும் படித்தும் வளர்ந்தும் வந்திருக்கிறேன். பல நேரம் பசியும் கண்டிருக்கிறேன் சில நேரம் புளியாப்பமும் கண்டிருக்கிறேன் பணம் இருந்தும் பசி இருந்திருக்கிறது பணம் இன்றியும் புளியாப்பம் இருந்திருக்கிறது. இதர்க்கு பணம் ஒரு காரணியே அல்ல நாம் இருக்கும் இடமும் சூழலும்தான் காரணம் ஒருவனை அரிசி குடோனிலே பூட்டிவைத்தாலும் அவன் பசியுடன் தான் இருப்பான் எப்படி சமைப்பது என்று தெறியாதவரை.

மாதம் 3 ஆயிரம் வீட்டிலிருந்து வாங்கி செலவு செய்துவிட்டு 2 ஆயிரம் சம்பலத்துக்கு வேலைதேடியும் அலைந்திருக்கிறேன் இன்ட்டர்வியூக்கு போன பின் இன்ட்டர்வியூ செய்பரை ஏளனம் செய்து அவமதிதும் இருக்கிறேன். கடினமான வேலைகள் முதல் ஆபத்தான வேலைகள் வரை செய்திருக்கிறேன் சில முறை விபத்திலிருந்தும் மீண்டிருக்கிறேன். சில ஆண்டு ஒரு துறையில் பனி புரிந்து பின்னர் புதிதாக வேறு துறையை தேர்ந்தெடுத்தேன் அது தான் இந்த டெலிகாம் துறை இருப்பதிலே இந்த துறைதான் ரெக்கமண்டேஷன் இல்லாமல் உள்ளே நுழைவதும் ரெக்கமெண்டேஷன் இல்லாமல் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்க்கு மாறுவதும் மிகக் கடினம்.

ஆனால் இந்த துறையில் எனக்கு கிடைத்த ஒரே அனுகூலம் இந்தியாவிலுல்ல சில மாநிலங்களில் பட்டி தொட்டி காடு மலை சிற்றூர் பேரூர் நகர் மாநகர் என எல்லா இடங்களிலும் நக்சலைட்டுகள் மாவோயிஸ்ட்டுகள் ஆதிவாசிகள் உல்பா நகரவாசிகள் கிராமவாசிகள் காட்டுவாசிகள் என அனேக மக்கள்வசிக்குமிடங்களில் எல்லாம் சென்று அவர்கள் வாழ்க்கை முறைகளையும் சமூகத்தில் அவர்கள் அடைந்திருக்கும் வசதி வாய்ப்புகள் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு அரசியல் அரசியல் வாதிகளின் தாக்கம் அவர்களுடைய குறிக்கோள் அவர்களுடைய அனுகுமுறைகளையும் சமூகம் அவர் அவர்களுக்கு அளித்திருக்கும் அந்தஸ்த்தையும் பார்த்திருக்கிறேன்.

ஆகையால் தமிழர்களே"எம்மக்களே உம் நிலைகண்டு வெகுண்டெழுந்த புரட்ச்சித்தமிழன் நான்" உறங்கும் மக்களையும் (பசி,போதை,பணம்,ஜாதி,அதிகார,மாயை) மயக்கத்தில் இருக்கும் தமிழ் மக்களையாது விழிக்க தெளியவைக்க முயற்ச்சிக்கும் சராசரி மக்களினும் ஒரு படி மேலே போய் முயர்ச்சிக்கும் ஒரு புரட்ச்சித்தமிழன். இதையெல்லாம் செய்ய என்ன அறுகதை உனக்கு என்று நீங்கள் கேட்க்கலாம் என்னைவிட அதிக அருகதையுள்ள யாரும் இதை செய்ய முன் வரவில்லை சிலகாலம் பார்த்தபின்புதான் நான் வந்திருக்கிறேன். அதுவும் தமிழ் மட்டுமே ஓரளவுக்கு நன்றாக தெறியும் என்றகாரனத்தால் தமிழனையாவது எழுப்பிவிடுவோம். முதலில் கதவை திறப்போம் விளக்கேற்றுவோம் தண்ணீர் தெளிப்போம் வெண்ணீர்தெளிப்போம் அப்படியும் எழவில்லை என்றால் ஓங்கி எத்துவோம் அப்படியும் பயனில்லை எனில் செத்துவிட்டான் என்று நினைத்து ஒரு கண்ணீர் துளி விட்டுவிடுவோம்.

16 comments:

  1. வாங்க

    வெல்கம்

    கலக்குங்க!!

    ReplyDelete
  2. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சம்பளம் வாங்காமல் இரண்டு வருடங்கள் வேலை செய்ய ஒத்துக் கொண்டதற்கு நன்றி.....

    எங்களைப் போன்ற நடுத்தர குடும்பங்களில் உள்ளவர்களால் செய்ய முடியாதடஹி நீங்கள் செய்ய சம்மதித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.

    என்று பணியில் சேர்கிறீர்கள் என்று கூற முடியுமா

    ReplyDelete
  3. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சம்பளம் வாங்காமல் இரண்டு வருடங்கள் வேலை செய்ய ஒத்துக் கொண்டதற்கு நன்றி.....

    எங்களைப் போன்ற நடுத்தர குடும்பங்களில் உள்ளவர்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்ய சம்மதித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.

    என்று பணியில் சேர்கிறீர்கள் என்று கூற முடியுமா

    ReplyDelete
  4. ஐய்யா நான் மருத்துவத்துறையைச்சார்ந்தவன் இல்லை நான் டெலிகாம் துறையை சார்ந்தவன் எனக்கு ஆரம்ப சுகாதாரதுறையில் என்ன வேலை இருக்கப்போகிறது நான் வேலை செய்ய நழுவுகிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம். காடு மலை நக்சல் மாவோயிஸ்ட் நிறைந்த இடங்களில் பணிபுரிந்த எனக்கு எங்கும் வேலைபார்க்கசம்மதமே எல்லையில் எல்லைபாதுகாப்பில் கம்யுனிகேசனில் வேலை பார்க்ககூட அது பாகிஸ்த்தான் பார்டராக இருந்தாலும் தயார். என்னுடைய சி.வி வேண்டுமா எனக்கு mail ID யை mail பன்னுங்க puratchithamizan@gmail.com

    December 4, 2007 8:10 PM

    ReplyDelete
  5. //ஐய்யா நான் மருத்துவத்துறையைச் சார்ந்தவன் இல்லை நான் டெலிகாம் துறையை சார்ந்தவன் //
    I know that.

    //எனக்கு ஆரம்ப சுகாதாரதுறையில் என்ன வேலை இருக்கப்போகிறது //
    THe following jobs in a PHC require only 10th Standard

    1. Cook.
    2. Waterman.
    3. Watchman.
    4. Sanitory Worker.
    5. Hospital Worker.

    Hope you have passed 10th Standard

    in addition, we are planning to computerise the functioning of hospitals.

    For that networking has to be done. So you may even have a good job for you. And we get your services FREE of COST for 2 years... And that is great.

    //நான் வேலை செய்ய நழுவுகிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம்.//
    No... I am very happy that you have agreed to work for the government free of charge for two years...

    You should know that there are vacancies in a lot of posts in Government.

    // காடு மலை நக்சல் மாவோயிஸ்ட் நிறைந்த இடங்களில் பணிபுரிந்த எனக்கு எங்கும் வேலைபார்க்கசம்மதமே //
    I agree, but what impressed me was your offer to work.

    //எல்லையில் எல்லைபாதுகாப்பில் கம்யுனிகேசனில் வேலை பார்க்ககூட அது பாகிஸ்த்தான் பார்டராக இருந்தாலும் தயார்.//
    No we require your services in tamil Nadu

    //என்னுடைய சி.வி வேண்டுமா எனக்கு mail ID யை mail பன்னுங்க puratchithamizan@gmail.com//

    No need. It is your offer to work FREE that is important for us.

    ReplyDelete
  6. By the way, we need some more help from you [No charges will be paid :) :)] based on your CV
    ------
    We are planning to computerise the hospitals
    ------
    What will be the approximate cost of networking 20 computers

    Assume that they are all located in ground floor at various places in a hospital at different rooms

    Approximate Ground Area is 10000 sq. feet (this is to give you an idea regarding the length of cables)

    ReplyDelete
  7. கண்டிப்பாக நீங்கள் கேட்க்கும் அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயார் எனக்குத்தேவை complet floor plane what arethe work place which are the location you need to locate computers which arethe free places onthe phase what type of claimate system to be used about sealing and floor types required send me the details. igive complete solution and project plans and project estimate cost data all the things give free

    ReplyDelete
  8. Thanks a lot for your offer.
    Will try to send the site plan (scan and send) by Mail
    Will mail all the other details.

    ReplyDelete
  9. புரட்சித்தமிழன் ,

    வாங்க ...வாங்க ...வைரமா இல்லைனாலும் பரவாயில்லை இங்கே அனைவருக்கும் இடம் உண்டு! உங்கள் பின்னூட்டங்கள் மட்டும் தான் பார்த்தேன், இப்போ தான் பதிவுக்குள்ளும் வருகிறேன்.

    மருத்துவர்கள் பற்றிய பதிவில இருந்து, காலை சுத்திய பாம்பு போல புருனோ உங்களை சுத்தியே வராரே என்னா மேட்டர் :-))

    மேலும் ஒரு சின்ன கருத்து,
    உங்கள் பதிவை சின்ன சின்ன பத்தியாக பிரித்து போடுங்கள்... ஒரே அடியா மேலே இருந்து கீழ வரைக்கும் அடிச்சு தள்ளி இருக்கிங்க!(இப்படிலாம் பெரிய பேராவா எழுதினா உங்களை பின்னவினத்துவாதி ஆக்கிடுவாங்க)

    ReplyDelete
  10. வாங்க புரட்சித் தமிழன்.

    தாராளமா புரட்சி செய்ங்க.. ஆனா, பு-ர-ட்-சி செய்ங்க, பு-ர-ட்-ச்-சி செய்யாதீங்க :-)

    ReplyDelete
  11. வாங்க வாங்க புரட்ச்சி தமிழன்.

    ReplyDelete
  12. வாங்க வவ்வால் தங்கள் வருகைக்கு நன்றி புருனோ பத்திய மேட்டர் இன்னும் முடிய வில்லை உங்கள் கருத்துக்கள் சரியானது அப்படியே செய்கிறேன்
    பினாத்தலாரின் கருத்துக்கும் நன்றி அப்படியே ஆகட்டும்

    ReplyDelete
  13. வினையூக்கி அவர்கலின் வருகைக்கு நன்றி

    ReplyDelete