மக்களின் மன நிலை பத்தியெல்லாம் 9 பக்கம் கிழிச்சாச்சு அடுத்து எதை கிழிக்கறதுனு யோசிச்சிகிட்டு இருக்கும் போது தான் சரி வட இந்திய
மாநிலங்கள் எப்படி இருக்கு அங்க இருக்கும் மக்களும் அரசும் எப்படி இருக்குனு கொஞ்சம் கிழிக்கலாமுனு நெனைக்கிறேன். இந்த ஆசிய
கண்டத்திலே ரொம்ப உழைப்புனா என்னானு தெறிஞ்சி அதிகமா உழைக்கிறவங்க யாருன்னா நம்ம வட இந்திய மக்கள் அவங்க மட்டும் தனியா இருந்திருந்தா இந்தியா எப்போ வல்லரசாகி இருக்கும்.
எல்லாரும் எப்போதும் கடுமையா உழைத்துக்கொண்டே இருப்பார்கள் அடுத்தவனை எதற்க்கும் எதிர்பார்க்கமாட்டார்கள் அவ்வளவு கடுமையானா உழைப்பாளிகள். இவர்களின் திறமைக்கும் சிந்திக்கும் ஆற்றலுக்கும் இனையானவர்கள் உலகில் எங்கும் இருக்க மாட்டார்கள் அத்தனை சிந்தனை வளம். எந்த வித கனிம வளங்களும் இல்லாத ஜார்கண்ட் ஒரிசா பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் அரசின் கடுமையான உழைப்பின் காரனமாக காற்று ஆகாயம் இதிலெல்லாம் இரும்பு அலுமினியம் நிலக்கரி எல்லாம் இருக்கிறது என்று அயராது உழைத்து கண்டுபிடித்து உள்ளார்கள்.
வட மாநில மக்கள் எல்லாம் நூறு சதம் கல்வியில் முன்னேறியவர்கள் இவர்களின் கல்வியின் தரம் மிகவும் உயர்ந்தது டிகிரி வாங்காத யாருமே இல்லை. சிந்திப்பதில் கூட சாக்ரெட்டீஸ்சை மிஞ்சியவர்கள் மாநிலத்தின் அனைத்து கிராமம் குக்கிராமம் என்று எல்லா தர இடங்களிலும் அமெரிக்காவின் சிக்காகோ நகரை மின்சும் திட்டமிட்ட அதி நவீன வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்புகள். காடு மலை மேடு என்று எங்கு இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் அவர்களின் தேவைக்கு மீறி பத்து மடங்கு அதிகமாக மாநில அரசால் மின் வினியோகம் செய்யப்படுகிறது. பயன் படுத்திய மின்சாரம் போக மீதம் இருப்பதை வீட்டிலேயே ஒரு டாங்க்கு கட்டி சேமித்து வைத்துக்கொள்கிறார்கள்.
அம்மாநில அரசுகளோ நகர் மாநகர் பகுதிகளை தவிர்த்து கிராமங்களுக்கே எப்போதும் அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. ரோடு எல்லாம் எப்படி இருக்குது தெறியுமா நம்ம வடிவேலு சொல்லறமாதிரி அப்படியே வழு வழுனு முகம் தெறியும் அப்படியே முகம் பார்த்து பொட்டுவச்சி அதுல
ஒரு கவலம் சோத்தபோட்டு கொழச்சி அடிக்கலாம் அப்படி இருக்கும். நம்ம ஊருமாதிரி நடுரோட்டுல மரத்த அப்படியே விட்டு மேல லேசா தார்பூசிட்டு போற வேலையெல்லாம் அங்க கிடையாது ரோடு போடரத்து எப்படினு இங்கவந்துதான் உலகத்தில இருக்கற எல்லாரும் கத்துக்கிட்டு போறாங்க நம்மலும் இவர்கலை வழிகாட்டியா எடுத்து ரோடு போட்டா சாலைவிபத்தே நடக்காது.
பொதுமக்கள் மீது இவர்களுக்கு எவ்வளவு அக்கரை ரோடில் நடந்து மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் நிழலிலே போக மரத்தினை சாலையின் நடுவே விட்டு சாலை அமைத்த்ரிஉப்பார்கள் அவ்வளவு விழிப்பும் தெளிவும் உள்ள மக்கள். சுத்தம் சுகாதாரம் எல்லாவற்றையும் உலக சுகாதாரமையமே அங்கு வந்து தான் கற்றுகொள்ளவேண்டும் அந்த அளவுக்கு சுத்தமா அக்மார்க் முத்திரை போடப்பட்ட அவ்வளவு தரமான உணவு பொருட்க்களை தயாரித்து
கடைகளில் கொடுப்பர். யாருக்கும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது பான் பராக், சபல்,சிகரெட், பான் பீடா, குடி அப்படி என்றால் என்னவென்றே தெறியாது அவர்களுக்கு இந்த அலவுக்கு கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாத மக்களை உலகிலே எங்கும் கானத இயலாது.
அன்புமனி திரைப்படத்துல சிகரெட் பிடிக்ககூடாதுனு தமிழ் நாட்ல சொன்னது கூட இவங்க சிகரெட்டா அப்படினா என்னானு கேட்டாங்க. சாப்பாடுனா இவ்வளவு சுத்தமான சாப்பாடு எந்த ஐ எஸ் ஓ வாலும் குறையே சொல்லமுடியாத அளவுக்கு சுத்தமான சாப்பாட்டதான்
சாப்பிடுவாங்க. எல்லா ஓட்டலும் அந்த அளவு சுத்தம் பராமரிக்கப்படுகிறது. இங்க இருக்கர டாக்ட்டரெல்லாம் நம்ம ஊரு டாக்ட்டர் மாதிரி
பப்ளிக்கா குடிக்க தம்மடிக்க மாட்டாங்க குடிப்பழக்கம் இருக்கற ஒரு டாக்ட்டர இங்க கண்டுபிடிக்கரது முடியாத காரியம் ஏன்னா இங்க யாரும்
குடிக்கரதே இல்லையே. "கானா பீனா ஹோகய" அப்படின்னு தான் கேப்பாங்க இதுக்கு என்ன அர்த்தமுன்னா குளிச்சிட்டு சாப்பிட்டாச்சா இதான் மீனிங்.
அதுவும் இவங்க எல்லாரும் 100 % சுத்த மான இங்கிலீஷ் பேசுவாங்க அந்த இங்கிலீஷ் கேக்கவே அவ்வளவு அருமையா இருக்கும் அவங்க இந்தி நல்லா படிக்கிறதினால தான் இங்லீஷ் அவ்வளவு அழகா பேசாறாங்க. உயர்ந்தவன் தாழ்ந்தவன் வேறு மதத்துக்காரன் என்ற எந்த பேதமும் பார்க்க மாட்டாங்க எல்லாருக்கும் சம உரிமை நம்ம மக்கள் இவங்களை பார்த்தாலே போதும் பெரியார் எல்லாம் தேவையில்லை.
ரெக்கமண்டேசன் அப்படினா என்னனு தெறியாது எல்லாருக்கும் பாரபட்ச்சம் இல்லாம தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் எதுவா இருந்தாலும் வேலை கொடுப்பாங்க உழைக்கிறவனுக்கு ரொம்ப மதிப்புகொடுப்பாங்க உடனே பிரமோஷன் தான். சாப்பாட்டுக்கு எங்கேயும் பஞ்சம் இல்லை வெளியூர்காரன் எந்த ஊருக்கு போனாலும் நல்ல சாப்பாடு எல்லா இடத்திலையும் கிடைக்கும். யாரையும் யாரும் அடிக்கமாட்டாங்க 24 மனி நேரமும் எங்கவேனும்னாலும் போகலாம் நம்மலோட பாதுகாப்புக்கு 100% கேயரண்டி எல்லா மக்களும் நல்ல உதவி மனப்பான்மை உள்ளவங்க பக்கத்து ஊருக்கு போறவன் திருடன் மாதிரி இருந்தாலே போதும் உடனே அவன புடிச்சி போலீஸ்ல குடுத்துடுவாங்க.
அவன் பக்கத்து ஊருக்குதான திருடபோறான் பக்கத்துவீட்டுலதான திருடாரான் நமக்கென்ன வந்தது அப்படி எல்லாம் யாரும் நினைக்கவே மாட்டாங்க மேலும் இங்கவேற திருடங்களே இல்ல ஏன்னா இது ராமராஜ்ஜியம் நடந்த இடம் அதுனால இப்பவும் ராமராஜ்ஜியம் தான் நடக்குது. அதுவும் இந்த பக்கம் இருக்கர போலீஸ் மாதிரி சுத்தமான கை வேர என்கயுமே பாக்கமுடியாது இவங்களதாண்டி ஒரு கடத்தல் காரன்கூட போகமுடியாது. அந்த அளவு கடமை கன்னியம் கட்டுபாடு உள்ளவங்க. இந்த ஊர் கிராமங்களுக்கு யாராவது வெளியூர்காரங்க போன அவங்கள ரொம்ப அன்பா உபசரிப்பாங்க இங்க இருக்கிற அரசியல்வாதிகள் செய்தவேலை கான்ராக்ட் இதுக்கெல்லாம் கூட காசே வாங்கமாட்டாங்க மக்கள் நலத்துல ரொம்ப அக்கரையானவங்க.
இவங்க மட்டும் இல்லனா இன்னும் இந்தியா இருக்கர எடமே தெறிந்திருக்காது. இங்க சாமியார்களே கிடையாது ஆனா பாருங்க இங்க இருகர சாமியாரெல்லாம் மக்களை ரொம்ப புத்திசாலியாவும் அறிவாலியாவும் மாத்திக்கிட்டு வாராங்க எல்லா சாமியாரும் சயின்ஸ் கிளாஸ் எடுக்கிராங்க அந்த அளவுக்கு நல்ல வடமாநிலங்கள் இருக்கு நம்மளுக்குதான் தெறிய மாட்டேங்குது.
why?? mudiva enna solla varreenganu therinjikalaama?
ReplyDeleteTamilselvan
தமிழ் செல்வன் வருகைக்கு நன்றி இதை படிச்சி தலைகீழா புரிந்து கொள்ளவேண்டும். இவர்களைக்காட்டிலும் நாம் எவ்வளவோ உயர்வாக இருக்கிறோம் என்று கூறுகிறேன். நாம் அவர்களை விடுத்து தனியாக முன்னேற்றம் அடைய ஏதாவது வழி இருக்கிறதா. நம் உழைப்பு அனைத்தும் இவர்களால் வீனடிக்கப்படுகிறது.
ReplyDelete