இப்போது English,French,Spanish போன்ற மொழிகளுக்கு உள்ளது போல் spelling and grammar வசதியை தமிழுக்கும் ஏற்படுத்தினால் என்ன. நாம் தட்டச்சிடும் போது ஏற்படும் பிழைகள் மற்றும் வார்த்தை அமைப்புகள் போன்றவற்றினை சரியாக மேம்படுத்த ஒரு நல்ல வசதியை ஏற்படுத்தலாம். மேலும் இது தட்டச்சு இட்ட பின் நாம் சரிபார்க்க செலவிடப்படும் நேரத்தையும் குறைத்துவிடும். குறிப்பாக ஒத்த ஒலியுடைய எழுத்துக்களை ர,ற ல,ள ண,ன போன்றவற்றை அடையாளம் கான அகராதியும் உடன் இனைந்திருந்தால் நமது எழுத்துக்களில் 100 சதவீதம் பிழையை குறைத்துவிடமுடியுமல்லவா.
ஒரு மொழி வளர்ச்சியடைய வேண்டுமானால் அதனைப் பயன்படுத்தும் அனைவருக்கும் அனைத்துப் பயன் பாட்டிற்கும் எளிமையாக இருக்கவேண்டும். நாம் பயன்படுத்தும் கணினியில் தட்டச்சிடும் போது keyboard ல் அதிகமாக shift key யின் பயன் பாடு இருக்கிறது இது ஒரு சில நேரங்களில் சரியான அழுத்தம் கிடைக்காத போது அதன் பயன் கிட்டாமல் போய்விடுகிறது. நாம் shift key யை அழுத்த சுண்டு விரலையே பயன்படுத்துகிறோம் இது அனைத்து விரல்களை காட்டிலும் நீளம் குறைவு அதன் வலிமையும் குறைவு. இப்படி ஏற்ப்படும் குறைகளை போக்க நிச்சயமாக ஒரு தீர்வினைக் கண்டாக வேண்டும்.
ஓசை செல்லாவும் அவருடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார் பயன்பாடற்ற எழுத்துக்களான ஙொ,ஙோ,ஙௌ போன்ற எழுத்துக்கள் பற்றி பதிவர்கள் சந்திப்பில் தெறிவித்ததாக கூறியிருந்தார். அதனுடன் தமிழுக்கு spelling and grammar அகராதியுடன் அமைப்பது பற்றியும் விவாதிக்கலாம் என்று எனக்கு தோன்றியது.
தமிழில் கூட்டுச் சொல் இருக்கிறது, அதற்கு பெயர் சொற்புணர்ச்சி என்று சொல்லுவார்கள்.
ReplyDeleteசொல் அடிப்படையில் சொல் அகராதி வைக்க முடியும், கூட்டுச் சொல்லாக எழுதும் போது தவறு என்று காட்டும் உதாரணத்திற்கு
பல்பொடி > இதை பற்பொடி என்றும் எழுதுவார்கள்
பால் ஆடை > பாலாடை
மேல் ஆடை > மேலாடை
கல் குவியல் > கற்குவியல்
இதுபோன்று புணர்சி விதிகளையும் சேர்த்து செய்யலாம் அதிக கவனம் தேவைப்படும்
கருத்து இயல்பு > கருத்தியல்பு என்று எழுதுவோம், இதையெல்லாம் சொல் அகராதியில் சேர்ப்பது பெரும் சுமையான வேலை
நண்பர்களே !! தமிழுக்கு Spelling & Grammar அகராதியுடன் அவசியம் செய்ய வேண்டும்.
ReplyDeleteஎவ்வளவு சொல்லிருந்தாலும் கூட்டு அகராதியில சேத்திரலாம். ஆனா, இலக்கண பிழையை அடையாளப்படுத்திறது எண்டிறதுதான்?????
ReplyDelete