மாவு ஆட்டும் மாநில அரசுகள் என்றவுடன் என்ன இது புதிய கதையாக இருக்கிறதே என்று நினைக்கலாம் ஆனால் சில உண்மைகள் யாருக்கும் தெறியாமல்தான் போய்விடுகிறது. இப்போதெல்லாம் அரசியல் என்பதே வேலை பளுமிகுந்த ஒன்றாகிவிட்டது இடயரது ஓய்வற்ற வேலை என்ன பங்கு போடும் வேலைதான். யாருக்கு போக வேண்டிய பணத்தை பங்கு போடுகிறார்கள் என்று பாருங்கள்.
மாவோயிஸ்ட்டுகள் எனப்படுபவர்கள் யார் அவர்கள் என்ன செய்கிறார்கள். இவர்களும் மனிதர்கள்தான் இவர்களுக்கும் சாதாரன மனிதர்களுக்கு உள்ள அனைத்து குணங்களும் உள்ளன ஆனால் வசிப்பிடம் காடுகளும் குக்கிராமங்களும்தான். இவர்களுக்கு படிப்பறிவு இல்லை அதாவது அளிக்கப்படவில்லை இவர்கள் ஒருவர் இருவர் அல்ல ஒரு மாநிலத்தின் 70 % பகுதிகளில் வசிப்பவர்கள். இவர்களின் வாழ்க்கை அதிக பட்ச்சமாக விலங்குகலுடனும் காடுகளுடனும் கழிந்து விடுகிறது. இவர்களுக்கு சாலை வசதி போகுவரத்துவசதி குடி நீர் மருத்துவம் எந்த அடிப்படை வசதிகளுமே கிடைப்பதில்லை. ஆனால் இவர்கள் வாழும் பூமியோ இரும்பும் அலுமினியமும் நிலக்கரியும் நிறைந்த இடங்கள் இந்த கனிம வளத்தினை அனுபவிப்பதற்க்காக அவர்கள் வசிப்பிடங்களில் இருந்து பெரிய பணமுதலை களாலும், அரசாலும் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிக்க வழியும் இல்லை என்ன செய்வார்கள். ஏ.சி காரில் பகாட்டாக செல்லும் மனிதர்கள் இவர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் போது எந்த வசதியையும் அனுபவித்திராத இந்த மக்கள் நாம் இந்த நிலையில் இருப்பதர்க்கு இவர்கள்தான் காரணம் என்று என்னுகிறார்கள் உண்மையும் அதுதான். இப்போது அவர்களுக்கு புதையல் கிடைத்திருக்கிறது விடுவார்களா பணக்காரர்களை அப்படியே அமுக்கி பிடித்து விடுகிறார்கள்.
பிடித்தவனை வைத்து எவ்வளவு பணம் பெறமுடியுமோ அவ்வளவும் பெற்றுவிடுகிறார்கள் இன்னும் சிலர் இந்த பகட்டு மனிதர்களின் நிலையை சகிக்காது கொன்றும் விடுகிறார்கள். நமது தமிழ் நாட்டில் வசிக்கும் குக்கிராம மக்கள் பெறும் வசதியில் 10ல் ஒரு பங்கு கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை.
அரசு அலுவலர்கள் கிராமங்களுக்கு செல்லாமலே சம்பலம் பெற்றுகொண்டு நகரத்திலே வாழ்கிறார்கள் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் திட்டங்களை வெறும் காகிதத்திலே நிறைவேற்றி பில் போட்டு பணமும் பெற்றுவிடுகிறார்கள். காவல் துறையும் இந்த மக்கள் மீது அடக்கு முறையை கையால்கிறார்கள் இவர்கள் யாரையும் மனிதர்களாகவே மதிப்பதில்லை. அடித்தவர்களை திருப்பி அடிக்க பழிவாங்க காவல் நிலையத்தை சூரையாடுகிறார்கள் தனியாக செல்லும் அரசு அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் தாக்குகிறார்கள். நகரங்களுக்கு மட்டும் தேவைக்கு அதிகமான வசதிகளை செய்து கொண்டு கிராமங்களை புரக்கனித்து விடுகிறார்கள்.
மத்திய அரசு கிராம வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் நிதியை கூட திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இவர்களின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்படுகிறது இடஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் கூட நிரப்ப படாமல் காலியாகவே வைக்கப்படுகின்றன. நகரங்களில் இவர்கள் குடியேற மருக்கப்படுகிறார்கள் தனியார்னிறுவங்களிலும் இவர்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. இவர்களால் ஓட்டல் ஏன் பான் கடைகூட வைத்து நடத்தமுடியாது இவர்கள் செய்யும் உணவையும் இவர்கள் கடையில் விற்க்கும் பான் கூட வாங்குவதில்லை நகரமக்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கு வாக்குரிமை கூட சரியாக கிடைப்பதில்லை சில இடங்களில் வாக்குசாவடியே அமைக்கப்படுவதில்லை. மத்திய அரசு வழங்கும் 100 நாள் வேலைத்திட்டம் கூட இங்கு நடப்பதில்லை நடப்பது வெறும் அலுவலகங்களில் மட்டுமே. தனக்கு தேவையானவற்றை தட்டிகேட்க்கும் போது இவர்களை ஒரே அடியாக புரக்கனிக்க அரசு குத்திய முத்திரைதான் மாவோயிஸ்ட்.
உதாரணத்திற்க்கு ஒரிசாவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி
Govt loosing on mine profits: Odisha
samrudha odisha, new political party,has asked the state government to seek amendments to acts on mining. so that orissa is able get least 50 percent of profits from its minerrals as cess. In memorandum, the party asked chief minister naveen patnayak to hilight the state demand when the meets the prime minister manmohan singh on december 19 in new delhi to discus the amendments to the acts.
party chief jatish chandra mohanty said, "About 20 leaseholders of mines in orissa have made a hopping profit of about Rs 24,500 crores during the 2006-2007and paid Rs 900 crores to the state. Out of this 20,18 or from other states. the profit is seventimes the state's plan budget the same year. it is totaly unjust and unfair and under thes circumstances how does Orissa benefit out its huge mineral resources, which is about the 25% of the country?" mohanty alleged that lion's share of the profit was being siphoned away the government officials.
the party's memorandam stated," If mine owners share a minimum of 50 percent profit with the state, Orissa will get an additional revenue of Rs 12,259 crore every year from iron ore, coal,bauxite,manganise and chromite. with this mony, the government can eradicate poverty from the state with in a year.
மேல இருக்கிற மேட்டர படிச்சிங்களா இது 15-12-2007 ல் தி டைம்ஸ் ஆப் இந்திய பத்திரிகையில் 3 ஆம் பக்கத்தில் வெளியான செய்தி.
ஆனால் இன்னும் இந்த மாநிலத்தில் மின் வசதி பெறாத கிராமங்கள் 30 சதவீதம். மின் வசதியே இப்படி என்றால் மற்றவை எல்லாம் எப்படி என்று நினைத்துப்பாருங்கள். இங்கு மின்சாரத்துறை தனியார் மயம் ஆக்கப்பட்டுள்ளது இவர்களின் குறிக்கோள் லாபம் மட்டுமே புதிதாக பிக்ஸ்டு அசட் எதையும் நிறுவ இந்த தனியார் மின் துறை விரும்புவதில்லை இருப்பதையும் சரியாக பராமரிப்பதில்லை கிராமங்களுக்கு புதிதாக மின் வசதி ஏற்ப்படுத்தி அதர்க்காக முதலீடும் செய்து அவர்களுக்கு கொடுக்கும் குறைந்த டாரிப்பினால் லாபம் ஈட்ட வழியே இல்லை. இந்த தனியார் மின் நிறுவனம் நட்டம் ஈட்டினால் மாநில அரசு எந்த உதவியும் அளிக்காது இது தான் தனியார்மயமான பொது நிறுவனங்களின் நிலை.
" என்ன வளம் இல்லை இந்த ஒரு ஸ்டேட்டில்
ஏன் 30% மக்கள் வாழ்க்கை பெரு இருட்டில்"
ஆசியாவிலேயே மிகப்பெரிய சாலை ஹோலி சிட்டி பூரியில் உள்ள கிராண்ட் ரோடு 100 மீட்டர் அகலம். என்ன இவ்வளவு பெரிய ரோட்டில் எவ்வளவு வாகங்கள் செல்லும் என்று நினைக்கிறீர்களா ஒரே ஒரு வாகனம் தான் உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் தேரில் செல்வார் இது தான் இவர்கள் மாநிலத்திலேயே பெரிய முன்னேற்றம்.
just test
ReplyDelete