நமது மக்களின் சாதிபேதங்கங்கள்
ஒவ்வொருவனும் தன் சாதி தன் மதம் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என நினைக்கிறான். புராணங்களிலோ வேறு எதிலோ கூறப்பட்டுள்ள ஒரு சாதகமான கருத்தை வைத்துக்கொண்டும் தனக்கு கீழாக உள்ளஜாதிகளை மனதில்கொண்டும் தன் ஜாதியை உயர்வு பாராட்டுகிறான். தன்னுடைய ஜாதிக்காரர்கள் அனைவரும் தனக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். தனக்கு நிகரான பதவியோ அல்லது தனக்கு மேலான பதவியோ தனக்கு கீழுள்ள சாதிக்காரன் மதத்துக்காரன் வரும் போது ஏனோ அவன் மனம் ஏற்க்க மறுக்கிறது.
அவனை அந்த பதவியை அடையவிடமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன இருகிறதோ அனைத்தையும் பயன்படுத்துகிறான். அதே சமயத்தில் தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரன் தகுதி குறைவாக இருப்பினும் அவனுக்கு கிடைக்க முயற்ச்சிக்கிறான். தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரனிடத்தில் பாராட்டு அல்லது முகஸ்துதியை விரும்புகிறான் அடுத்து தனக்கு நிகரான அதற்க்கு கீழ் உள்ள ஜாதிக்காரன் உயர்வதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் அவர்கள் மீது பழி சுமத்த ஏதாவது காரணம் தேடுகிறான். இது தான் ஜாதி வெறியாக பகையாக அவன் மனதில் தோன்றுகிறது.
தன் அருகில் உள்ள மக்களைப்பற்றி
தன் அருகில் உள்ளோர் எப்போதும் தன்னைவிட குறைவான சம்பலம் குறைவான வசதிவாய்ப்பு குறைவான பதவிகளையே வகிக்கவேண்டும் என்று நினைக்கிறான். தனக்கு கீழ் பனிபுரியும் ஒருவன் தனக்கு நிகரான பத்விக்கு வரும்போது அல்லது தனக்கு மேல் உள்ள பதவிக்கு போகும் போது அவன் அதை ஆட்சேபிக்கிறது. தகுதியும் திறமையும் இருப்பினும்கூட தன்னைவிட குறைந்த வயதுக்காரனின் கீழ் பனிபுரிய இவன் மனம் மருக்கிறது. தன் அருகில் உள்ளோர் தன்னைப்பற்றி பெருமை படவேண்டும் என்று நினைக்கிறான் தேவையே இல்லாத சம்பந்தம் இல்லாத வற்றை எல்லாம் உன்மையுடன் பொய்யும் சேர்த்து தற்ப்பெருமை படுகிறான். தான் அறிவாளி என்பதைவிட தனக்கு அருகில் இருப்பவன் முட்டாளாக இருக்கவேண்டும் என்றே நினைக்கிறான்.
நாம் பிறற்மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் நமக்குகீழ் ஏவள் வேலை செய்ய ஆட்க்கள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். ஒரு பிச்சை காரன் கோடீஸ்வரன் ஆனாலும் அடுத்தபிச்சை காரர்கள் பிச்சை காரர்களாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். தாழ்ந்தவன் உயர்ந்தவனாக அங்கீகரிக்கப்பட்டாலும் தனக்கு கீழ் தாழ்ந்தவர்கள் வேண்டும் என்றே நினைக்கிறான். பணக்காரன் மேன்மேலும் பணம் சேர்க்கவேண்டும் சொற்றுக்கே வழி இல்லாத எழையாக இருப்பினும் ஏழை ஏழையாகவே வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறான். எப்போதும் தன்னைப்பற்றி ஒருவன் புகழ்ந்துகொண்டே இருந்தால் அவனுக்கு இவன் அடிமையாகிவிடுகிறான் தன்னை புகழ்பவன் கூறும் எதையும் பொய்யாக இருப்பினும் நம்புகிறான் அதை மெய்யாக்க விரும்புகிறான்.
அடுத்தவனுக்கு கிடைக்கும் எதுவும் தன்னைவிட அதிகமாக அவனுக்கு கிடைக்கும் பட்ச்சத்தில் அவன் மனம் சஞ்சலப்படுகிறது உதாரணத்திற்க்கு ஒருவன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான் 1000 ரூபாய் சம்பலம் வாங்குகிறான் என்றுவைத்துக்கொள்ளுங்கள் தனக்கு 2000 ரூபாய் இன்க்ரிமென்ட் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறான் ஆனால் அந்னிறுவனம் 5000 ரூபாய் தருகிறது அப்போது அவன் மனம் மகிழ்ச்சி அடைகிறது. தன்னுடன் பனியாற்றும் சக பனியாளனை விசாரிக்கிறான் அப்போது அவனுக்கு 5500 ரூபாய் இன்க்ரிமென்ட் கொடுத்து இருப்பதாக சொல்கிறான் இப்போது 5000 ரூபாயில் வந்த சந்தோசம் மகிழ்ச்சி 500 ரூபாயில் தொலைந்து போய்விடுகிறது. ஒரு வேலை அடுத்தவனுக்கு 2000தான் இன்க்ரிமென்ட் என்றால் அதைப்பற்றி அவன் சட்டை செய்வதே இல்லை தனக்கு கிடைத்ததை வைத்து லேசாக மகிழ்ந்துகொள்வான்.
மூட நம்பிக்கை மீதான வெளிப்பாடு
ஆசைதான் ஒருவனை மூட நம்பிக்கைக்கு ஆட்ப்படுத்தும் முதல் காரணி ஒருவனை சாதாரணமாக போய் இதை செய் அதை செய் என்றால் செய்யமாட்டான். இப்படி செய்தால் உனக்கு இது கிடைக்கும் அது கிடைகும் என்று சொல்லும் போது குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கிறது அல்லது சிரமப்படாமல் வேலை செய்யாமல் ஏதாவது கிடைக்கும் என்றால் அதை என்ன ஏதுவென்று கூட யோசிப்பது இல்லை இவன் அடுத்தவனையும் நம்பவைக்க முயற்ச்சிப்பான். இப்படித்தான் இவன் எல்லாரிடமும் ஏமாறுவதும் ஏமாந்த பின் மற்றவனை ஏமாற்ற முயல்வதும். இவன் எப்போதுமே ஒரு பாதுகாப்பிற்குள்ளே இருக்கவேண்டும் என நினைக்கிறான் எதிர்காலத்திற்க்கான நிரந்தர பாதுகாப்பைத் தேடுகிறான் இதற்க்கெல்லாம் உறுதி வழங்குவதாக கடவுளை நம்புகிறான். இவன் கடவுளையும் தன்னைப்போன்ற குணம் படைத்தவனாகவே கருதுகிறான் இவன் மற்றவர்களிடத்தில் என்ன எதிர்ப்பார்க்கிறானோ அதை கடவுளுக்கு செய்கிறான். உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்தால் இவன் செய்வதையெல்லாம் பார்த்து கை கொட்டி சிரிப்பார். கடவுளுக்கு முன் இவன் கோமாளியாக இருக்க ஆசைப்படுகிறான்.
தற்பெருமை படோடாபம் பற்றிய வெளிப்பாடு
தன் வீடுதான் ஊரிலேயே பெரிய வீடாக இருக்கவேண்டும் வெளியே பார்ப்பதற்கு அடுத்தவர் பொறாமைப்படுகிற அளவுக்கு இருக்கவேண்டும். என்னுடைய மகிழ்வுந்துதான் சிறந்த மாதிரியாக உயர்வான தயாரிப்பாக இருக்கவேண்டும் அடுத்தவரிடம் இதைப்போல் இருக்கக்கூடாது. கிலோ கணக்கில் நகை அணிந்து செல்ல வேண்டும் பார்ப்போர் எல்லாம் இன்னார் மனைவி இன்னார் மகள் இவ்வளவு நகை அணிந்து செல்கிறாள் என்று வியக்கவேண்டும். நம்ம குழந்தைமட்டும் எப்போதும் முதல் தரவரிசை மதிப்பெண் எடுக்கவேண்டும் பக்கத்து வீட்டுக்காரனிடம் என்குழந்தை முதல் தரவரிசை மதிப்பெண் பெற்றுள்ளது என்று சொல்லிக்கொள்ளவேண்டும்(எல்லா குழந்தையும் முதல் தரவரிசை மதிப்பெண் எடுக்கவேண்டுமானால் ஒரு வகுப்புக்கு ஒரு குழந்தைதான் படிக்கமுடியும்) தினமும் புதுப்புது ஆடை அணிய வேண்டும் பார்ப்பவர் என்ன இது புது உடையா என்று கேட்கணும். ஒரு பழமொழியே உண்டு குடிக்கிறது பழைய கஞ்சியாம் வீட்டுத்தோட்டத்தில வாழைஇலையில் விளக்கெண்ணை தடவி போடுவானாம். தனக்காக யாரும் வாழ்வதே இல்லை அடுத்தவங்க நம்மைப்பார்த்து ஏங்கனும் வீங்கனும் ஆச்சரியப்படனும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.
மக்களுக்குள் ஒப்பீடு செய்தல் நம்ம ஆளுங்ககிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் எதற்கெடுத்தாலும் அடுத்தவனை ஒப்பிட்டு பார்க்கிறது அவன் இவ்வளவு சம்பளம் வாங்குறானே, இவன் மனைவி இவ்வளவு அழகாக இருக்காளே, இவனுக்கு இத்தனை வீடு இருக்கே அவனுக்கு அதுக்குள்ள வேலை கிடைத்துவிட்டதே அவனுக்கு இவ்வளவு லாபம் வருதே இப்படி எல்லாம் ஒப்பிட்டு பார்ப்பதே வேலையாக போய்விட்டது அதுவும் ஒரு வேலைய செய்ய மட்டும் அவன் செய்யவில்லை நான் ஏன் செய்யவேண்டும் அவன் விடுப்பு எடுத்து வீட்டிலே மகிழ்ச்சியாக இருக்கிறான் நான் மட்டும் வேலை பார்க்க வேண்டுமா. ஏதோ நிதி வசூல்னு வச்சிக்கோங்க அடுத்தவன் ஏழை 10 ரூபா கொடுக்கிறான் இவன் கிட்ட பணம் இருந்தாலும் அவன் 10 ரூபாதான் கொடுத்தான் நான் ஏன் அதிகம் தரவேண்டும் என்று யோசிப்பான். எதற்கெடுத்தாலும் இப்படியே ஒப்பிட்டு பார்ப்பது எவனாவது அவனுக்கு 10 அப்பா இருக்கிறார்கள் எனக்கு 11 அப்பாவாவது இருக்கனும்னு ஒப்பீடு செய்து பார்ப்பானா
மக்களின் மனதில் அரசியல்
இதில் என்ன ஒரு பெரிய சங்கதி என்றால் ஒரு கட்சியை தன் சாதியைப்போலவே சேர்த்து பிடித்து வைத்திருக்கிறார்கள் அதில் என்ன நிறை என்ன குறை போன ஆட்சி எப்படி செய்தார்கள் என்று எதையும் பார்ப்பதில்லை. போராட்டம்னு சொன்ன உடனே தெருவில் இறங்கி கூச்சலிடவேண்டியது அந்த கட்சி தலைவர் எதை சொன்னாலும் அந்த கட்சியில் இருப்பவர்கள் யோசிப்பதே கிடையாது உடனே நம்பிடவேண்டியது. அடுத்து ஒரு சிலர் இருக்கிறார்கள் வெற்றிபெறுகிற கட்சிக்கு ஓட்டு போடுகிறவர்கள் இவர்களை நினைப்பது தான் சரி என்று வேறு நினைத்துக்கொண்டு ஒரு கட்சிகூட்டத்தையும் விடுவதில்லை ஏதோ திருவிழாவைப் போல் கொண்டாடுகிறார்கள். சிந்திப்பதா அந்த வார்த்ததைக்கு அர்த்தமே தெரியாது இவர்களுக்கு ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் எல்லோரும் செய்கிறார்கள் அதுதான் இப்படி என்று சொல்வார்கள். ஒரு எம்.பி.பி.எஸ் படிக்கிறவன் கூட அவர்களை எல்லாம் முதலில் கேளு அப்புறமா என்னை வந்து கேள் என்று இப்படிதான் பேசுகிறார்கள்.
No comments:
Post a Comment