அரசாங்க வேலை பற்றிய வெளிப்பாடு
மக்கள் அரசாங்க உத்தியோகம் கிடைக்கவேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள் எதற்காக அவர்களுக்கு அரசாங்க வேலை தேவை. முதலில் நிரந்தரமான வேலை அடுத்து பென்ஷன் குறைந்த வேலைப்பளு தேவையான அளவுக்கு மேல் விடுப்புகள். நமது மக்களிடத்தில் ஒரு சொல் வழக்கு இருக்கிறது " கழுதை மேய்த்தாலும் கவர்ன்மென்ட் கழுதை மேய்க்கவேண்டும் " வேண்டுமானால் ஒரு சோதனை செய்து பார்க்கலாம் அரசாங்கம் ஒரு 100 கழுதை வாங்கி விட்டு ஆளெடுப்பு நடத்திப் எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்க்கலாம். கட்டாயம் நிறைய பேர் போட்டி போட்டுக்கொண்டே வருவார்கள் என்றே நினைக்கிறேன் இதர்க்கும் லஞ்சம் போட்டி போடலாம். இவ்வளவு நன்மைகள் உத்திரவாதத்துடன் கிடைக்கிறது என்றால் தனக்கு வேலையின் மீது எவ்வளவு அக்கரை இருக்கவேண்டும் ஆனால் இல்லை காரணம் ஒன்றுமே செய்யாத ஆசாமிகள்.
அரசு உத்தியோகம் கிடைத்தவுடன் அவன் யாருக்கு பனிசெய்ய வேண்டும் அவனுக்கு முதலாளி யார்? இங்கு தான் அந்த முரன் ஆரம்பமாகிறது. அரசாங்க வேலை செய்பவனுக்கு சம்பளம்(பணம்) கொடுப்பது யார்? அரசாங்கம். அப்படியானால் அரசாங்கத்திற்க்கு பணம் கொடுப்பது யார்? மக்கள். அப்படி யானால் அரசு உத்தியோகம் பார்ப்பவனுக்கு முதலாலி யார்? மக்கள் தானே. அப்படியானால் யார் யாருக்கு மரியாதை அளிக்கவேண்டும் கட்டுப்படவேண்டும்? அரசு ஊழியன் மக்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் மக்கள் சொல்வதை கேட்க்கவேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன நிலைமையே தலை கீழ் முதலாளி பனிபுரியும் பனியாளனுக்கு கீழ்ப்படியவேண்டுமாம் இது எப்பேர் பட்டமுரன்பாடு இது தானே இன்றைய நிகழ்வாக இருக்கிறது. இந்த பதிவு என்ன சுற்றிவளைத்துப்போகிறது என்று பார்க்கிரீர்களா இந்த இடத்தில் நேருக்கு நேர் பார்த்தால் எதுவும் தெறியாது ஏதோஒன்று கண்ணை மறைக்கும் எனவே தான் மேலே இத்தனை வினாக்கள் விடைகள்.
இப்போது நம் மக்கள் யாவரும் அரசு வேலைகிடைத்தால் அது ஒரு வேலை என்றெல்லாம் நினைப்பதில்லை வேலை என்று அரசாங்கம் பெயர் வைத்திருப்பதால் தான் வேலை என்றாவது கூறுகிறார்கள். அது என்னவோ கடவுள் கொடுத்த வரமாக நினைக்கிறார்கள் மாதா மாதம் வங்கி கணக்கை துரந்து பணம் கொட்டுகிற வரம். அரசாங்கம் என்பதும் ஒரு கடவுள் போலவே நினைக்கிறார்கள். வித விதமாக பிரார்த்தனை செய்தால் வரம் கூட்டிகொடுக்கப்படுகிறது இல்லை இல்லை வரம் கூடுதல் பலம் பெருகிறது அந்த விதவிதமான் பிரார்த்தனைகள் தான் போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் இவையெல்லாம். கடவுள் வரம் பெற்றவர்கள் ஆகையாள் இவர்களெல்லாம் ஒரு மினி கடவுளர்களாகிவிட்டதாக என்னிக் கொள்கிறார்கள்.
பொதுமக்கள் வழியில் பார்த்தால் உடனே அவருக்கு வணங்கவேண்டும் (வணக்கம் சொல்லவேண்டும்) டீ கடையிலும் டிபன் கடையிலும் பார்த்தால் உடனே அபிசேகம் ஆரதனை செய்யவேண்டும் ( அதாவது அவற்றை எல்லாம் வாங்கி கொடுக்கவேண்டும்). அலுவலகத்தில் பார்த்தால் காணிக்கை வழங்கவேண்டும் (லஞ்சம் கொடுக்கவேண்டும்). இப்படி எல்லாம் செய்தால்தான் பொதுமக்களான பக்த்தர்களுக்கு அவர்களுடைய வேலை நடைபெற ( வேண்டுதல் நிறைவேற) ஆசி வழங்கப்படும். இன்றைய அரசாங்க உத்தியோகத்தின் நிலை இப்படிதானே உள்ளது இவையெல்லாம் எப்படி வந்தது 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து யார் அரசு பனிகளில் இருந்தார்களோ அவர்களால் தான் இந்த நிலைமை இருந்து வந்திருக்கிறது. இப்போது யார் காரணம் என்று புரிந்திருக்கும்.
No comments:
Post a Comment