"திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது"
இது எப்படி சரியான கூற்றாய் இருக்கமுடியும். அனைவருக்கும் நன்கு பரிட்சயமான ஒருவர் அல்லது மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற ஒருவர் எதைக் கூறினாலும் நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். நாம் சற்று சிந்தித்தாகவேண்டும் திருடன் எப்போது திருந்துவது திருடு எப்போது ஒழிவது மக்களுக்காக கருத்து சொல்கிறேன் என்று தீர்வைக்கூறாமல் குழப்பிவிடுகிறார்கள். ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் முடிவு என்று ஒன்று இருக்கும் பிரச்சனை என்றால் நிச்சயம் அதர்க்கான தீர்வு ஒன்று இருந்தே தீரும்.
நாம் இப்போதாவது இதர்க்கான ஒரு தீர்வைக்கான முயல்வோம் எனக்குத்தெரிந்த ஒர்தீர்வு வாய்ப்புக்கள் இல்லாமல் செய்வதுஒன்றே சரியான தீர்வாக இருக்கமுடியும். திருடன் திருடுவதர்க்கான வாய்ப்புகளில் முதல் வாய்ப்பாக இருப்பது நம்மிடம் இருப்பதை அனைவருக்கும் தெரியும்படி வைத்திருப்பது அல்லது விளம்பரப்படுத்துவது. அடுத்து அவன் திருடிய பொருளை விற்க்கும் சந்தையை தடை செய்யவேண்டும் உதாரணத்திற்கு அடகு கடைகள் திருட்டு பொருட்களுக்கு எந்தவித அடையாளச்சான்றும் இல்லாமல் வாங்கிக்கொள்வது. வருவாயைத்தெரிவிக்காமல் செலவு செய்யும் வாய்ப்புகளை இல்லாமல் செய்யவேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களை அடுத்தவருக்கு தேவை இருக்கும் போது பதுக்கி வைத்திருப்பது.
சாதாரண மக்களுக்கும் வருவாய்க்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவேண்டும் அவர்களுக்கான வழிகாட்டுதலையும் கொடுக்கவேண்டும். அனைவரும் விலைகுறைவாக கிடைக்கிறது என்று திருட்டுப்பொருட்களையோ அல்லது வரிஏய்ப்பு செய்தோ வாங்காதீர்கள் அவை சுற்றிவளைத்து நம்மையே பாதிக்கும் நமது உடமைகள் களவுபோகவும் ஏதோ ஒருவகையில் நாமே காரணமாகிவிடுவோம். பகட்டாக இருப்பதை தவிர்க்கவேண்டும் அது அடுத்தவர்கண்ணை உறுத்தும் அதைப்பெற இயலாதவர்கள் மாற்றுவழியாக திருட நினைப்பர். அனைத்துப் பொருட்களையும் சரியான பாதுகாப்பை உருதிசெய்யவேண்டும் அடுத்தவர் இல்லாமையை நம் வல்லமையினால் எள்ளி நகைக்கப்பதும் பணத்தின் அளவுகளால் மக்களை மதிப்பிடுவதும் மதிப்பளிப்பதும் இதர்க்காண காரணங்களாக இருக்கும்.
No comments:
Post a Comment