Thursday, January 31, 2008

கடவுள் அற்புதமானவர்.

கடவுள் மிகமேன்மையான ஆற்றலையும் அறிவையும் பண்புகளையும் பெற்றிருக்கிறார். ஆனால் அவர் மனிதர்களின் குணங்களைப் பெற்றிருக்கவில்லை மிகவும் அற்புதமான குணங்களைப் பெற்றிருக்கிறார் அவர் யாரிடம் இருந்தும் எதையும் எதிர்ப்பார்ப்பது இல்லை அனைத்துமே அவருடையது. அற்பர்களாகிய மனிதர்கள்தான் ஒவ்வொருவரும் தன்குணத்தையே கடவுளின் குணமாக கருதுகின்றனர். கடவுளின் எண்ணங்களும் குறிக்கோள்களும் உயர்ந்தவை ஆதலினால் அவரின் செயல்கள் உயர்ந்தவற்றை நோக்கியே சிறப்பித்துக்கொண்டிருக்கின்றன. கடவுள் மனிதனின் வடிவமும் அல்ல அவருக்கு இந்த சாதாரண அற்பவடிவில் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.

அண்ட சராசரங்களுக்கும் அதிபதியான கடவுள் இந்த சின்னஞ்சிறிய கோளமான பூமியின் மீதுமட்டும் கவனம் செலுத்தவும் இந்த அற்பர்களை ஆளுமைசெய்யவும் கடவுள் ஒன்றும் அவ்வளவு கீழ்த்தரமானவர் அல்ல. மனிதர்களின் மொழி கடவுளுக்கு புரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை மற்ற விலங்கினங்களின் மொழி எப்படி நமக்கு விளங்காமல் போகிறதோ நாம் அதன்மீது கவனம் செலுத்தாமல் அலட்சியம் செய்கிறோமோ அப்படியே மனிதர்களையும் கடவுள் அனைத்து நிகழ்வுகளையும் கண்கானிக்கவேண்டிய அவசியம் இல்லை. சுதந்திரம் அற்று கட்டிவைத்திருக்கும் மாட்டைப்பார்த்து நமக்கு அதன் சுதந்திரத்தைப் பற்றிய எண்ணமே இல்லாதபோது நம்முடைய ஒவ்வொரு சிறுதேவைகளையும் இன்பங்களையும் கடவுள்தான் தீர்மானிக்கிறார் என்று நினைப்பது எவ்வளவு பெறிய முட்டாள்தனம்.

கடவுள் சோதிக்கிறாராம் ஒரே அலுவலகத்தில் வேலைபார்க்கும் கடைநிலை ஊழியர்களைக்கூட மனிதர்களாகப் பார்க்கமுடியாத மேலாளர்கள் இருக்கும்போது அற்பத்தனமான உங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து அவரது அரிவை வளர்த்துக்கொள்ள அவறென்ன அரிவற்றவரா என்ன எல்லாம் தெறிந்தவர் அனைத்தையும் அறிந்தவர். மனிதன்தான் கடவுளுக்கு தன்னைப்போலவே உருவம் கற்பித்துக்கொண்டு தன்னைபோல் குணங்களை அவருக்கும் இருப்பதாக பாவித்துக்கொண்டு அவரைப்புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறான் போற்றிபுகழ்ந்துகொண்டிருக்கிறான். அவரை ஒரு ஒரு உருவத்தினுள் அடைத்துப் பார்க்கமுடியாத அரூபமானவர் அவர் ஒன்றும் மனிதரைப்போல் தற்புகழ்ச்சிகாரரும் அல்ல. பக்தர்கள் என்றுகூறிக்கொண்டு இவர்கள் செய்யும் நேர்த்திக்கடன் என்ற செயலைக்கண்டால் பூமியில் இவ்வளவு பைத்தியக்காரர்களா என்று நினைத்துக்கொள்வார்.

கடவுள் அனைத்தையும் நொடிப்பொழுதில் சாதிக்கும் ஆற்றல் மிக்கவர் அப்படி இருக்கும்போது அவதாரங்களை எடுத்து இந்த அற்பர்களுக்கு எதையும் கற்பிக்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. பசு ஈன்ற கன்று அரைமனி நேரத்தில் எப்படி தானாகத்தேடி பசிக்கு பால் குடிப்பதர்க்கான அறிவைக் கன்றுக்குப் புகட்டினாரோ அப்படியே அவசியத்தேவைகளை மனிதர்களுக்கும் இயற்கையிலேயே புகுத்திவிட்டு தானியக்கம் அடையச்செய்துவிட்டு அவர் அடுத்தவேலையை கவனிக்கச் சென்றுவிட்டார். தன்னைவிட கீழானவன் என்னதான் புகழ்ந்தாலும் அந்த புகழ்ச்சி ஏற்புடையதாகாது ஒருவேலை கடவுள் மனிதர்களை கவனித்துக்கொண்டே இருந்தாலும் மனிதர்களின் நச்சரிப்பினால் அவருக்கு எரிச்சல்தான் வரும்.

நம் மக்கள் கடவுளிடம் பிச்சைக்கேட்டு கடவுளுக்கே பிச்சைபோடுகிறார்கள். கடவுளுக்கு யாரும் எதுவும் கொடுக்கத்தேவை இல்லை அனைத்துமே அவருடையதுதான் நாம் யார் அவருக்கே பிச்சை போட. நமக்குத்தேவையான அனைத்தையும் கடவுள் உலகம்முழுவதிலும் வாரி இறைத்துச்சென்றுள்ளார் நாம் அவர் இறைத்ததைத்தான் தேடவேண்டிமோ ஒழிய இறைத்தவனை( இறைவனை ) தேடுகிறோம்.

"இறைந்துகிடப்பதைத்தேடுங்கள் இறைவனைத்தேடாதீர்கள்".

2 comments:

  1. நல்ல கருத்துக் கலை சமுதாயத்ர்க்கு சொல்லும் நீங்கள் கிறிஸ்து நேசன் போன்ற போலி பெயரில் எழுதும் பார்ப்பன குடுமிகளின் வாதத்தை ஏற்று மறு மொழி இட்டது உண்மையிலேயே வருந்த தக்கது. இனி எனும் சிந்தித்து செயல் படுங்கள். இஸ்லாம் நிச்சமாக உலகில் எண்ட ஒரு மதமும் வழங்கிடாத பெண்ணுரிமையை கொடுக்கிறது. இதை பகுத்தறிவு உள்ள உங்களைப் போன்ற நல்ல பதிவர்கள் ஆராய்ந்து உண்மையை அறிந்து இனி வரும் காலங்களில் குற்றச்சாட்டு சொல்வது நன்று.

    உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சூப்பர்..கலக்கலாக எழுதி இருகிங்க. கடவுள் என்று இருந்தால் ஆத்திகர்கள் சொல்லும் எந்த கட்டமைப்பிலும் அது அடங்காது என்று அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete