Tuesday, January 22, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 4

சொத்து பணம் சேர்க்கை

நம் இந்தியாவில் தான் சொத்தும் பணமும் சேர்ப்பதில் இத்தனை ஆர்வம் இன்றுமட்டுமே இவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இன்றுவிட்டால் அடுத்து சம்பாதிக்க வாய்ப்பே வராதென்றும் இவர் பரம்பாரையிலே இவருக்கு மட்டும்தான் சம்பாதிக்கும் அக்கறை இருப்பது போலவும் அடுத்து வரும் சந்ததியினருக்கு சம்பாதிப்பது என்பதும் சொத்து என்பதும் என்னவென்றே தெரியாததுபோலவும் நினைத்துக்கொள்கிறார்கள். இப்படிப் பட்டவர்கள் என்ன செய்கிறார்கள் அடுத்தவனுடைய சொத்துக்களை அபகரித்தால் தான் நமக்கு சொத்து கிடைக்கும் அதற்கு அடுத்தவரையும் அடுத்தவர் சந்ததிகளையும் அழித்தால் சொத்தும் பணமும் வரும் என்றால் உடனே தன் சந்ததியை காப்பாற்ற அடுத்தவர்களையும் அடுத்தவர்களின் சந்ததி அழிப்பு வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.

பணம் எதர்க்கு சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் நமக்கு கீழ் நிறைய பேர் நாம் அள்ளி இரைக்கும் சொற்ப பணத்திற்கு அலைந்துகொண்டு வேலை செய்ய சொல்மேல் ஓட ஆட்கள் இருக்கவேண்டும் என்றும். நாம் ஏதும் உழைக்கவோ வேலைசெய்யவோ கூடாது என்றும் நினைக்கிறார்கள் நாமும் நமது குடும்பமும் சந்ததிகளும் ஈரேழு பரம்பரைக்கும் உட்கார்ந்தே சாப்பிடும் அளவுக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் ஒரே நாளில் செலவழிக்கும் வகையில் விடுதிகளும் சூதாட்ட களங்களும் லட்சகணக்கில் பணம்கொடுத்து சல்லாபம் செய்ய நடிகைகளும் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் ஈடுகட்டவேண்டும் என்றால் கணக்கில் அடங்கா பணம் சேர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக எண்ணுகிறார்கள். என்ன தான் பணத்தை பையிலே வைத்திருந்தாலும் நடுக்காட்டில் சிக்கிக்கொண்டால் பணத்தையா திண்ணமுடியும் இதை யாரும் யோசிப்பதில்லை அடுத்த மனிதன் பற்றியோ நிலைமை பற்றியோ யாரும் சிந்திப்பதே இல்லை வாழ்க்கை முழுவதும் பணம் பணம் என்றே ஒடிக்கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் சொத்து குவிப்பு தமிழகத்தின் பல இடங்களில் மின்னல் வேகத்தில் நடைபெற்றது மென்பொருள் பொறியாளர்கள் சிலர் சொத்துக்களை வாங்கவே திடீர் என்று ஒரு மாயை உருவானது இத்துடன் சொத்துக்களை வாங்கவே முடியாது மென்பொருள் துறையில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது இவர்களே சொத்துக்களை வளைத்துப்போட்டுவிடுவார்கள் என்று மக்கள் நினைத்துக்கொண்டார்கள். விளைவு உடனே யார் யார் எவ்வளவு பணத்தை முடக்கிவைத்திருந்தார்களோ அனைவரும் பணத்தினை நிலத்தின்மேல் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது தற்போதைய பங்குச்சந்தை இருபதாயிரம் புள்ளியைதொட ஓடியதே அது போல நிலத்தின் விலைமதிப்பு அவ்வளவு வேகமாக உயர்ந்தது எங்குபார்த்தாலும் நிலச்சந்தை தரகர்கள்தான் கோடிக்கணக்கில் பணம் பார்த்தனர்.

இந்த நேரத்தில் வயிற்றுவலிக்காரன் மட்டும் நிலங்களை விற்றான் மற்றவர்கள் விலை இன்னும் ஏறும் இன்னும் ஏறும் என்று வைத்திருந்தார்கள். இப்போது நிலம் வாங்கும் நபர்கள் எல்லாம் அதிக விலைகொடுத்து வாங்கி. இருந்த பணம் எல்லாம் தீர்ந்துவிட்டது. இப்போது நிலைமையோ வேறாகிவிட்டது விளை நிலங்களை வாங்கியவனும் விவசாயம் பார்ப்பதில்லை விவசாயம் பார்க்க நினைப்பவணும் நிலம் வாங்கமுடியாத அளவு விலை ஏறிவிட்டது ஓராண்டுக்கு முன் 500 ரூபாய் சென்ட் இருந்த நிலம் இன்று 10000 ரூபாவரை சென்றுவிட்டது 20 மடங்கு விலைஏற்றம். இனிமேல் அவசரத்துக்கு நிலம் விற்கவேண்டுமானாலும் வாங்க ஆளில்லை ஏறிய விலையை குறைத்து விற்க்கவும் யாருக்கும் மனம் இல்லை விவசாயம் செய்ய விருப்பம் இல்லாதவனும் நிலத்தினை விற்கப்போவது இல்லை.

அடுத்து இப்போது ஒரு பூகம்பம் வெடிக்க இருக்கிறது இப்போது சராசரி விலையாக சென்ட் 500 ரூபாய் அதிக பட்ச்சமாக விளை நிலங்களுக்கு அரசு நிர்னயித்துள்ளது ஆனால் இப்போதிய விளை நிலங்களின் மதிப்பு வேறாக இருக்கிறது சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக அரசு சில பணமுதலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தி தரப்போகிறது அரசு நிர்ணயிக்கும் விலையில். யாரும் குறைந்தவிலைக்கு நிலங்களை கொடுக்க தயாராக இருக்கப்போவதில்லை. நிலத்தை வாங்கியவர்களும் குறைந்த மதிப்பீட்டில் பதிவு செய்து இருக்கிறார்கள். அரசியல் வாதிகளும் அரசும் வாக்கு கொடுத்தால் மாறாதவர்கள்போல் ஒரே நிலையில் நிற்ப்பார்கள். அடுத்து கொடுத்தவாக்கை காப்பாற்ற அரசு தன் பலத்தை விவசாயிகள்மீது பிரயோகப்படுத்தும் பிறகு வேறென்ன அடுத்த நந்திகிராம், சிங்கூர் பிரச்சினை தமிழகத்திலும் நடக்கும். கம்யூனிஸ்ட்டுகளே இவ்வளவு செய்யும் போது நாங்கள் என்ன சலைத்தவர்களா என்று அப்போது இருக்கும் அரசு எதுவாக இருந்தாலும் பிடிவாதமாக நிற்கப்போகிறது.

சொத்திலும் பணத்திலும் இவ்வளவு பிரச்சினைகளும் உணர்ச்சிகளும் உண்டு இவர்களின் மனநிலை எப்படி என்று குறுகியகாலத்திலேயே தெரிய வரும் அப்போது பார்க்கலாம்.

No comments:

Post a Comment