பாராட்டு புகழ்ச்சி மீதான மனநிலை
எல்லா மக்களுமே தன்னை யாவரும் பாராட்டவேண்டும் புகழவேண்டும் என்றே நினைக்கிறார்கள், இது சிறுவயதிலிருந்தே அனைவருக்கும் மனதில் ஊரிப்போய்விட்ட ஒரு மனப்பான்மையாகும். தான் எதையாவது செய்யும்போது ஒருவர் பாராட்டினால் அந்த செயலை அவன் மருபடியும் செய்து மீண்டும் பாராட்டை பெறவேண்டும் என்பதர்க்காக ஒருபடி மேலே போய் அதே வேலையை மேலும் நன்றாக செய்கிறான். பாராட்டுதல் என்பது ஒரு நல்ல விஷயம் தான் ஆனால் அந்த பாராட்டு யாரிடம் இருந்து கிடைக்கிறது எந்த செயலுக்காக கிடைக்கிறது எந்த சூழ்நிலையில் கிடைகிறது எப்படி கிடைக்கிறது என்பதை பொருத்து அது நன்மையா அல்லது தீமையா என்று தீர்மானிக்கவேண்டும்.
புகழ்ச்சி இது தான் அனைவருக்கும் மலிவாக கிடைக்ககூடிய ஒன்று. ஒருவர் தன்னை பற்றி புகழும் போது தன்னையே மறந்துவிடுகிறார்கள் இந்த புகழ்ச்சிதான் மிகவும் ஆபத்தான ஒன்று. புகழ்ச்சிக்கு அடிமையாவது மது சூதுக்கு அடிமையாவதைவிட மோசமான ஒன்று,தன்னை மயக்கபோதையின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடுகிறது.
ஒருவன் ஒரு பனியை சிறப்பாக செய்கிறான் என்றால் அவனை அப்போதே பாராட்ட வேண்டும் அத்துடன் விட்டு அடுத்தமுறை அவன் வேறொரு பனியை சிறப்பாகச் செய்யும்போது பாராட்டவேண்டும். அப்படி செய்வோமானால் அவனுடைய திறமை வேலையின் வெளிப்பாடு அதிகரிக்கும் வேலையின் மீதும் செயலின்மீதும் கவனம் ஈர்க்கும் மீண்டும் மீண்டும் தமது முதலாளியிடமோ அல்லது மேலாளரிடமோ பாராட்டை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தமது பனியை சிறப்பாக செய்வான். அதே நபரை பாராட்டகூடாத நேரம் ஒன்று உண்டு என்னவெனில் சகதொழிலாலர்கள் முன்னிலையில் அனைவரையும் கூட்டிவைத்து ஒருவனை மட்டும் பாராட்டக்கூடாது விழாக்கலில் ஒருவனை அல்லது ஒருசிலரை மட்டும் பாராட்டக்கூடாது. அப்படி செய்வோமானால் சக தொழிளாளர் பனியாளர் மானவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டப்பட்டவன் மீதும் பாராட்டியவன் மீதும் ஒரு காழ்ப்புணர்ச்சி ஏற்படும் அதனால் வேலைத்திறன் குறையும் பிரச்சினைகள் சிக்கல்கல் என முளைத்துக்கொள்ளும்.
எதிர்மறை செயலை செய்தவனையும் கொடுஞ்செயல் தீயசெயல் செய்தவனையும் அவன் திறமையையும் தீரச்செயலையும் போற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவன் இல்லாத இடங்களில் கூட பாராட்டக்கூடாது. அது தான் மிகக் கொடுமையான எதிர்வினைகளை உண்டுபன்னும் அந்த செயலை காதில் கேட்டால் செய்தவன் தான் தப்புசெய்திருப்பதைகூட நல்லது செய்ததாக நினைத்துக்கொள்வான் அவன் செயலை கண்டித்து இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று வேறொருவர் அறிவுறுத்தினால் தமது பாராட்டு புகழ் வீரதீர செயல் கண்டு பொறாமை படுவதாக எண்ணிக்கொள்வான். அவன் இல்லாத நேரத்தில் கூறினாலும் அதை அருகில் இருந்து கேட்க்கும் வேறு ஒரு நபர் தாமும் இது போல ஏன் செய்யக்கூடாது அப்படி செய்தால் மக்களும் நம்மை பாராட்டுவார்களே என்ற எதிர்மறை எண்ணம் உருவாகிவிடும் இது தான் தீவிரவாதமும் ரவுடியிசமும் தலைதூக்க காரனமாக இருக்கிறது.
படிக்கும் குழந்தைகளை அவ்வப்போது பாராட்டுங்கள் அப்போது தான் படிப்பின்மீது அவர்களுக்கு ஆர்வமும் ஆதரவும் தோன்றும் ஆனால் அனைத்து மானவர்கள் முன்னிலையிலும் பாராட்டாதீர்கள். அது மற்ற மானவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்திவிடும். குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களையும் முன்பை விட ஒரு மதிப்பென் கூடுதலாக எடுத்தாலும் ஏதாவது ஒன்றை நன்றாக செய்தாலும் உடனே அந்த குழந்தை மற்றும் மாணவர்களே அப்போதே பாராட்டுங்கள். ஒரு போதும் ஒருவனை ஒப்பிட்டு அடுத்தவனை பாராட்டவோ அல்லது இழுக்கு செய்ய (இகழவோ) கூடாது அது அந்த குழந்தை அல்லது மானவனின் மனதில் ஒர் எதிர்மறை என்னத்தையும் வெறுப்பையும் உருவாக்கிவிடும். எந்த குழந்தையும் திட்டுவதாலோ அடிப்பதாலோ நன்றாக படிக்கவைக்க அல்லது திருத்தவோ முடியாது. முறையான சரியான இடத்தில் சரியான தருனத்தில் பாராட்டி சாதிக்கமுடியும்.
ஒருவனை பணக்காரன் என்பதாலும் அவன் பதவியில் இருக்கிறான் என்பதாலும் எந்த காரணமும் இன்றிபுகழ்வது என்பது ஒரு வேடிக்கையான் வினோதமான விஷயம். ஆனால் புகழ்பவன் இவனிடம் இருந்து ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்துதான் புகழ்கிறான் இதனை யாரும் முதலில் அறிந்திருப்பதில்லை அவன் எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லை எனில் பின்னால் நின்று ஏசுவான். புகழ்ச்சிக்கு அடிமையானவன் தம்மை எப்போதும் யாராவது புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பான் அதனால் புகழ்ந்தவன் இகழ்ந்தால் இவனுக்கு மனம் உறுத்தலாகிவிடும். புகழ்ந்தவனை திருப்தி படுத்த அவனிடம் இருந்து மீண்டும் புகழ்ச்சி பெற அவன் எதிர் பார்த்து வந்த தேவையை பூர்த்தி செய்தே ஆகவேண்டிய கட்டாயம் பணமாக இருக்கலாம் பதவியை பயன் படுத்திக் குறுக்குவழி சட்டத்திற்க்கு புறம்பாக ஏதாவது ஒன்றை செய்ய நேர்கிறது. இதனால் அவன் பணத்துக்கும் பதவிக்கும் கேடுவிளைகிறது.
புகழ்ந்து புகழ்ந்து அவனை புகழ் மயக்கத்தின் உச்சிக்கே கொண்டுசென்று சொத்துக்களையும் பணத்தையும் அபகரிக்கவும் செய்வார்கள். எனவே புகழ் என்பது ஒரு மோசமான கொடி செயல் அதர்க்கு ஒருபோதும் யாரும் அடிமையாகாதீர்கள்.
இவைகளே பாராட்டு புகழ்ச்சிப் பற்றிய மக்களின் பொதுவான மன நிலையாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment