Monday, February 25, 2013

விலங்கும் மனித விலங்கும்

           ஒரு குழந்தை பிறந்தவுடன் அது மனிதனாவது இல்லை வெறும் மனித விலங்குதான். தொடர்ச்சியான கற்றலினாலும் கற்றதில் இருந்து சிறந்த பண்புகளை கடைபிடித்தலாலுமே இந்த சமூகத்தில் மனித நிலையை நெறுங்கமுடியும். ஆங்காங்கே வாழ்ந்த மனித விலங்கு குழுக்கள் தங்களின் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளவே அந்த குழுக்களுக்குள் அவர்களால் முடிந்தமட்டும் ஒரு சில விதிகளையும் நெறிமுறைகளையும்
 வகுத்துக் கொண்டனர், பின் வந்த சந்ததியினர் அதனையே தொடர்ந்து பின்பற்றியும் வந்தனர். இவைகள் அனைத்தும் காலஞ்செல்ல செல்ல பல குழுக்கள் ஒன்றினைவதனாலும் ஒன்றினை ஒன்று ஆக்ரமிப்பதனாலும் ஏற்கனவே உள்ளவற்றின்மேல் திருப்த்தியின்மையினாலும் தொடர்ந்த மாறுதலுக்குள்ளாகிக் கொண்டே வந்திருக்கின்றன. 

http://karmajello.com/postcont/2012/03/monkey-human-similar-brain.jpg

          இன்றைய மனிதர்கள் என்று சொல்லப்படும் நாம், இந்த உலம் முழுவதும் மனிதர்களுக்கே உரித்தானதாக கருத ஆரம்பித்துவிட்டோம். ஆனால் உண்மையில் சொல்லவேண்டுமானால் இந்த உலகில் தொன்றியுள்ள
அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த பூமி உரிமையானதே. ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும் பிறந்த மனிதர்கள் அவர்களின் முன்னோர்களின் தொடர்ந்த பயன்பாட்டின் காரணமாக பின் வந்த அரசியல் அமைப்புகள் மூலம் இந்த நிலப்பகுதி இன்னாருடையது என்று மனிதர்களுக்குள் பிரித்து பயன்படுத்துவதாயிற்று. பின்னர் அந்த நிலத்தை தன் இஷ்ட்டப்படி பயன்படுத்த அதே நிலத்தில் பிறந்து வளர்ந்த பல உயிரினங்களை  (ஜீவராசிகளை ) கொன்றும் விரட்டியும் ஒழித்தாகிவிட்டது.

      ஒரு மனிதன் இப்போது தன்னுடைய நிலம் என்று மனிதனால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புகள் மூலம் காகிதங்களில்  அவனுக்கு உரிமையை வழங்கிவிட்டது.  தான் நினைத்தால் அந்த நிலத்தை அடுத்தவருக்கு விற்கலாம் வாங்கியவர் புல் பூண்டு முதர்கொண்டு அனைத்தையும் அழித்து சுற்று சுவர் இட்டு ஆக்ரமித்துக்கொள்ளலாம். இந்த
எல்லைகளை குறிப்பது அந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுத்தவரை அனுமதிக்காதது இவை எல்லாம் சிங்கம் மற்றும் சில ஆளுமை மிக்க விலங்கினங்களால் கையாளப்படும் குணமே ஆகும்.

    எந்த விலங்குகளும் நிலத்தை பட்டா செய்து விற்றுவிடுவதில்லை இந்த மனிதன் மட்டுமே தன் சுயனலத்திற்காக தான் விரும்பிய படி நிலத்தினை வாழிடங்களை வீணடித்தும் விற்றும் விடுகிறான். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளலாரின் சிந்தனைகளை இன்றைய சமூகம்
அறவே நிராகரித்துவிட்டது அப்படியெனில்  இன்றைய சமூகம் மனித தன்மையுடன் இல்லை விலங்குகளின் தன்மையை விட
 கேவலமான ஒரு தன்மையை பெற்றிருக்கிறது என்பதனை நிரூபிக்கிறது. சிந்தனைகளில் சற்றே மேம்பட்ட இனம் மனித இனம் என்பதால் அனைத்து
ஜீவராசிகளையும் ஏமாற்றிவிட்டது அழித்தொழித்டுவிட்டது இங்கு மனிதனுக்கான மேம்பட்ட பண்புகள் எதுவுமே கானப்படுவதில்லை.

 
    இந்த மனித இனம் மற்ற ஜீவராசிகளை வஞ்சித்து அழித்தொழிப்பது நியாம் எனில் மனித இனத்தில் அறிவில் கற்றலில் மேம்பட்ட குழுக்கள் வளிமை மிக்கவர்கள் எளியவர்களை அறியாதவர்களை பிரித்து அவர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறுவதில் என்ன தவறு இருக்கிறது. கோபம் பொறாமை அபகரிக்கும் குணம் மட்டற்ற இனசேர்க்கை வேட்க்கை போன்ற விலங்கின் குணம் நிறைந்திருக்கும் மனிதர்களை ஆங்காங்கே கூக்குரலிடுதல்மூலம் மட்டும் ஓரிரு குணங்களை மட்டும் அவரவர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் எப்படி முடியும். முழு மனித தன்மையுடன் மாறினால் மட்டுமே அனைவரும் மேம்பட்ட ஒழுக்கங்களை கடைபிடித்தலாலும் மனிதனாகமுடியும்.

      ஒரு பக்கம் தொலைக்காட்ச்சிகளில் சிட்டுக்குருவி லேகியம் விற்கிறான் இன்னொருபக்கம் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் காம களியாட்டம். காமத்தில் குறைந்தால் நீ மனிதனே இல்லைனு நடுராத்திரியில் வந்து நாளுபேர்  பயமுறுத்தறான். ஒரு பக்கம் கற்பழித்துவிட்டான் கையபுடுச்சி இழுத்துட்டானு கத்தறாங்க. மனிதனாக வேண்டுமெனில்  தன்னுள் இருக்கும் மிருகத்தன்மையை ஒழித்து மனிதத்தன்மையை மேம்படுத்துங்கள். மனிதன் மாதிரி பிறந்ததினால் மட்டும் மனிதனாகிவிடமுடியாது மனிதனாக வாழ்ந்துகாட்டவேண்டும்.

         பெரியார் உறித்தது வெங்காயம் வள்ளலார் உரித்தது வாழைப்பழம். எது வேண்டும் என்று  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.      

Tuesday, February 5, 2013

எங்கே சென்றார்கள் கொடை வள்ளல்கள்?

 வள்ளல் காஞ்சி பச்சையப்ப முதலியார், வள்ளல் டாக்டர். ஆர்.எம் அழகப்பச் செட்டியார். வள்ளல் பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர் என பல வள்ளல்கள் ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளி கல்லூரிகளை கட்டி கொடுத்தவர்கள் நிலங்களை வழங்கியவர்கள் என இருந்தார்கள். ஆனால் இன்று யாரும் அப்படி இல்லை ஒரு வேலை அப்படி செய்ய நினைப்பவர்களுக்கு பிழைக்கத்தெறியாதவன் என்ற பட்டம் தான் மிஞ்சும்.

  ஏன் இந்த அவல நிலை? இன்று மக்களிடம் வள்ளல் தன்மை வளராததற்கு என்ன காரணம்?  தன்னிடம் உள்ள சொத்துக்கள் தனக்கு போதும் என்ற நிலை வரும்போது தான் ஒருவனுக்கு இந்த சமூகத்திற்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்னம் வரும். ஆனால் இன்றைய நிலமையோ முற்றிலும் வேறானது ஒருவர் எந்த அளவுக்கு பணம் சொத்துக்கள் வைத்திருந்தாலும் அது வருக்கும் அவரது குடும்பத்திற்கும் போதுவது இல்லை.

   சுமார் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான அருணாச்சலம் என்ற திரைப்படத்தில் நமது ரஜினிகாந்த் அவர்கள் ஒரு மாதத்தில் 30 கோடி ரூபாவை செலவழிக்க படாத பாடு படுவார் இன்று அந்த 30 கோடி ரூபாயை யாரிடம் கொடுத்தாலும் ஒரே நாளில் செலவு செய்துவிட முடியும். நமது நாட்டில்  நுகர்வுக்கான வழிகளின்மூலம் மக்களின் பணத்தை ஒரு சில புள்ளிகளில் குவிக்க கலாச்சாரமும் நாட்டின் பொருளாதார கொள்கைகளும் அந்த அளவுக்கு இருக்கின்றன. ஒவவொரு படியிலும் உள்ள மக்களின் செலுவுத்திறனுக்கு ஏற்றவாறு மக்களிடம் இருந்து பணத்தை உறிஞ்சுவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் இன்று உள்ளன.

   அனைவரும் வசதியாக வாழ நினைக்கலாம் தவரில்லை ஆனால் பகட்டாக வாழக்கூடாது. பகட்டுக்கும் வசதிக்கும் சிறிய வித்தியாசம்தான் அதிகமானோருக்கு அது தெறிவதும் இல்லை. ஒரு சட்டையின் விலை 300 ரூபாய் என்றால் ஒரு வாரம் பயன் படுத்த 7 சட்டைகளை வாங்கிக்கொள்வது வசதி இதில் எந்த தவரும் இல்லை அதே பருத்தி சட்டையை ஓட்டோ, லூயி பிளிப்ஸ் என்ற பிராண்டுகளின் பெயரில் 3000 ரூபாய்க்கு வாங்குவதும் ஒவ்வொரு சட்டையின் நிறத்திற்க்கு ஏற்ப்ப காலணிகள் பெல்ட்கள் வாட்ச்கள் என வாங்குவது பகட்டு.

    இந்த பகட்டு காரர்கள் நான் 3000 ரூபாய் கொடுத்து சட்டை வாங்கினேன் பெல்ட் வாங்கினேன் 10000 ரூபாய் கொடுத்து ஷீ வாங்கினேன் என்று அடுத்தவரிடம் கூறி பெருமை அடித்துக்கொள்வார்கள். நீங்கள் கார், டீவி , ஏசி, மெத்தை என எதுவானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் வசதியாக இருங்கள் தப்பில்லை ஆனால் 5 லட்சத்தில் கார் வாங்கினால் அது வசதி 50 லட்சத்தில் கார் வாங்கினால் அது பகட்டு என்பதை தெறிந்து கொள்ளுங்கள்.

  50 ரூபாய்க்கு சாப்பிடும் உணவை 1000 ரூபாய் கொடுத்து ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டாலும் அது தொண்டை குழிக்கு கீழ் சென்றால் அதற்கு பெயர் வேறாக இருக்கும் ஸ்டார் ஓட்டலில் தின்றவன் மலம் மட்டும் என்ன நறுமணமா வீசும். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பகட்டிற்க்காக  நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் உணவுக்குகூட வழியின்றி கஷ்ட்டபடும் எவனோ ஒரு ஏழையின் பையில் இருந்து நீங்கள் திருடியதாகவே அர்த்தம்.

  வசதியாக வாழுங்கள் வள்ளாக மாறுங்கள்
 வாழ்த்தட்டும் உங்களை வருங்கால தலைமுறை.

 

Sunday, February 3, 2013

நமது தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து நம்மை நாமே காத்துக்கொள்வோம்.

  மின் உற்பத்தியில் பெரும் பணக்காரர்கள்தான் முதலீடு செய்யமுடியும் என்று இல்லை நாமும் செய்யலாம். நமக்குதேவையான மின்சாரத்தை நாடு நமக்களிக்காதபோது நாம் நாட்டிற்க்கே மின்சாரம் அளிப்போம்.  

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான 
நன்னயம் செய்து விடல்,

   என்ற குறளுக்கு ஏற்ப நடந்து காட்டி அரசினை வெட்க்கப்பட செய்வோம்.

  எங்களின் நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது நெருக்கடியை சமாளிக்க பிளாட் போடுவதர்க்காக வாங்கிவைத்திருந்த 300 ஏக்கர் நிலத்தினை விற்க்க முடிவு செய்தனர். மின் திட்டங்களில் முதலீடு செய்ய பெரு முதலாலிகள் முன்வராத காரணத்தினால் புதிய சோலார் மற்றும் விண்ட்மில் திட்ங்களை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எமது நிறுவன குழுவின் நீண்ட    ( ஒரு வார) விவதத்திற்க்கு பின் ஒரு முடிவினை எட்டினர் அதுதான் சிறுமுதலீட்டாளர்களை நேரடியாக முதலீடு செய்யவைப்பது. அதுதான் எங்களுடைய சோலாரிசம் திட்டம்.  

      குஜராத் மானிலத்தில் விற்பதாக இருந்த நிலத்தினை 680 பிளாட்களாக பிரித்து விற்பனை செய்வது. பிறகு வாங்கியவரிடம் இருந்து 25 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை லீசுக்கு எடுப்பது.  லீசுக்கான பணத்தை மாதாந்திர வருவாயாக உங்கள் முதலீட்டில் ஒரு சதவீதம் வட்டியாக வழங்குவது என தீர்மானித்து திட்டம் தயாரனது அரசிடம் ஒப்புதலும் பெறப்பட்டது. பிப்ரவரி 1 ஆம் தேதி துவங்கிய விற்ப்பனை இரண்டே நாட்களில் 104 பிளாட்கள் புக்செய்யப்பட்டு எதிர் பார்த்ததை விட திட்டம் வெற்றியுடன் செயல்படுகிறது. 

விவரம் கான இங்கே சுட்டுங்கள்.

இந்த திட்டத்தினை விரைவில் தமிழகத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் காரர்களால் வீணடிக்கப்பட்ட விளை நிலங்களில் மின்சாரத்தையாவது விளைவிப்போம்.