Tuesday, April 30, 2013

பா ம க வும் அதன் மீதான குற்றச்சாட்டுகளும்.

      பா ம கா வன்னியர்களின் சாதிக்கட்சி என்று அனைவரும் சொல்வதில் எந்த அளவுக்கு அந்த கட்சியை பற்றி தெறிந்து வைத்துள்ளார்கள் என்பதை ஐயமின்றி அறிந்துகொள்ள முடிகிறது. அந்த கட்சி ஓட்டுக்காகவும் ஆட்சியை பிடித்து பணம் சம்பாதித்துக்கொள்ளவும் சாதி வெறியை தூண்டுவதாக சொல்கிறார்கள் அப்படி எனில் எந்த அடிப்படையில் தி மு க வும் அ தி மு க வும் அந்த கட்சியுடன் கூட்டனி வைத்துக்கொண்டன?.

       அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நாங்கள் சுதந்திரத்திற்க்காக போராடினோம் என்று சொல்லியா கட்சி ஆரம்பித்தார். அவர் சார்ந்த சாதி மக்களை  கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்று போராடினார் இடஒதுக்கீட்டை பெற்றார் அதனை அடுத்து அடுத்தவர்களிடம் போராடி குண்டடிப்பட்டு மால்வதைவிடுத்து கேட்கும் இடத்தில் இருப்பதைவிட கொடுக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்று கட்சியை ஆரம்பித்தார்.

      பா ம க வினர் குடித்துவிட்டு மானாட்டிற்கு சென்றார்கள் என்றும்   ராமதாசுக்கு என்ன யோகியதை இருக்கிறது பூரனமது விளக்கைப்பற்றி பெசுவதற்கு என்று கேட்கிறார் முதல்வர். தன் கட்சிக்காரன் குடித்துவிட்டு மாநாட்டிற்கு வந்ததால் அது ஒன்றே ராமதாசுக்கு பூரண மதுவிளக்கை கோறும் யோக்கியதையை பெற்றுத்தந்துவிட்டட்து.  ராமதாசா குடித்துவிட்டு வந்தார் அவரை சார்ந்த இன மக்கள்தானே குடித்துவிட்டு வந்தனர் தன்னை சார்ந்த தன் இன சாதிமக்கள் குடித்து சீரழிந்துவிடுகிறார்களே என்றுதானே அவர் பூரண மதுவிலக்கை கோருகிறார். ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் யாராவது குடிகாரன் இருந்தால் தன் குடும்பத்தை விட்டா விரட்டிவிடுகிறார்கள் அவரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கத்தானே முயற்ச்சி செய்வார்கள் ராமதாசும் அதைத்தான் செய்கிறார்.

    ஒவ்வொரு பெற்றோரும் தன் மகன் அல்லது மகள் படித்து டாக்ட்டராகவோ, எஞ்சினியராகவோ சமூகத்தில் நல்ல அந்தஸ்துள்ளவராகவோ ஆகவேண்டும் என்று என்னுகிறார்கள் அல்லவா அதையேதான் ராமதாசும் தன் மக்களோ அல்லது மகனோ முதல்வராகவேண்டும் என்று நினைக்கிறார் இது நியாயமான ஆசைதானே இதில் என்ன தவறு இருக்கிறது.

      ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் கருணானிதி குடும்பத்தை போல வியாபார ரீதியில் நாட்டையே கொள்ளையடித்திருக்கலாம் குடும்பத்தொலைக்காட்சிகள் மூலம் நாட்டையே சீரழித்திருக்கலாம் அப்படி செய்தாரா?  ராமதாஸ் கலப்புத்திருமணத்தையா எதிர்க்கிறார் படிக்கும் மாணவிகளை சீரழிப்பதைதானே கண்டிக்கிறார் திருமா வளவன் தலித் இளைஞர்களால் இழுத்து செல்லப்பட்ட பணக்காரவீட்டுப் பெண்களை திரும்ப ஒப்படைக்க பேரம் பேசி பணம் வாங்கவில்லை என்று யாராவது மனதை தொட்டு சொல்லமுடியுமா?.

     ராமதாஸ் தமிழனாக தமிழன் வாழ போராடுகிறார் வன்னியனாக வன்னியன் வாழ போராடுகிறார் இதில் என்ன தவறு. பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாவதில்இருந்து காத்துக்கொள்ள வழி தேடுகிறார்கள். ராமதாஸ் மீது சாதி துவேசத்தை தூண்டுவதாக கூறும் எந்த ஒரு தலைவராவது திராணியிருந்தால் படிக்கின்ற பெண்களை யாரும் இழுத்துக்கோண்டு ஓடாதீர்கள் பொருத்திருந்து வேலைவெட்டி கெடைச்சதுக்கப்புறம் காதல் கத்தரிக்காய் எல்லாம் பண்ணுங்கள்னு சொல்லட்டுமே. இதை சொல்ல எந்த தலைவருக்கும் துப்பில்லை.

   பா ம க வை அழிக்கவேண்டும் என்ற வக்கிர எண்ணம்தான் அனைத்து தலைவர்கள் மனதிலும் குடிகொண்டுள்ளது. மரக்காணத்தில் பேருந்து எறிவதை காட்டும் தொலைக்காட்சி சேனல்கள் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மானாட்டை ஒரு நொடிகூட செய்திகளில் காட்டபடவில்லை இதிலிருந்தே தெள்ளத்தெளிவாக தெறிகிறதல்லவா அனைத்து ஊடகங்களும் பா ம க   வை இருட்டடிப்பு செய்கின்றன என்று.  

Friday, April 19, 2013

கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாது

அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா தவறாக வழி நடத்தினார் என்று கூறியுள்ளதாக வெளியாகும் செய்திகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஒரு பிரதமரை ஓர் அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்பதை எப்படி நம்ப முடியும் என்றும் கருணாநிதி வினவியிருக்கிறார்.  செய்தியாளர்களிடம் புதுடில்லியில் தனியே பேசுகையில், தனது பிரச்சினை குறித்து 100 பக்க விளக்க அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்குழுவிடம் கையளிக்க இருப்பதாகவும் தனது அறிக்கை தான் குற்றமற்றவன் என்பதையும், பிரதமரை ஆலோசித்த பிறகே அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து முடிவுகளையும் தான் எடுத்ததையும் உறுதி செய்யும் என்றும் ராசா கூறியுள்ளார்.

இதனிடையே, கூட்டு விசாரணைக் குழுவின் அறிக்கை ஊடகங்களுக்கு கசியவிட்டிருப்பது நாடாளுமன்றத்தின் உரிமைகளை அவமதிப்பதாகும் என பாஜக கூறியிருக்கிறது. ஆனால், மத்திய அரசோ கூட்டுக்குழுவின் அறிக்கை முடிவு செய்யப்படவே இல்லை என்கிறது.

மத்திய அமைச்சர் கபில் சிபல், நாடாளுமன்ற கூட்டுக் குழு விரைவில் கூடி தனது அறிக்கையினை இறுதி செய்தபின் நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும், அதற்குள் அவசரப்பட்டு எவரும் எக்கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

  கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதாவது என்பதனை நமது கூட்டுக்கொள்ளையர்கள் தெளிவாக நிரூபித்திருக்கிறார்கள்.  கொள்ளையடித்தது இப்போது அவர்களாலேயே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனி மொத்தம் எத்தநை கொள்ளையர்கள் எனபதுமட்டுமே உறுதி செய்யப்படவேண்டும். அடுத்து அதையும் அவர்களே தன் வாயால் பட்டியலிட்டுவிடுவார்கள் . அடுத்து நமது ரோபோ நான் ரோபோமட்டும்தான் ப்ரோகிராம் செய்தது எல்லாம் புன்னியவதி என்று சொல்லும்.

டையு விற்கு போர்த்துகீசியர்களால் கிளையுள்ள பணைமரங்களை கொண்டுவந்ததற்கான காரணம்.   போர்த்துகீசியர்கள் மிகவும் ரசனயுள்ளவர்கள் அதிக அளவு கள்ளை உற்பத்தி செய்யவும், தனித்தனியாக சிறு சிறு குவளைகளில் கள்ளெடுக்கவும், கள்ளெடுப்பவர்கள் எளிதாக மரம் ஏறவும் வசதியாக வெளி நாட்டில் இருந்து இந்த பணைமரங்க்களை டையு பகுதியில் கொண்டுவந்து வளர்த்தனர். . டையும் மற்றும் அதன் அருகில் உள்ள உன்னா என்ற குஜராத் நகரத்திலும் மட்டூமே மிக அதிக எண்ணிக்கையில் எங்கு பார்த்தாலும் கிளையுள்ள பணைமரங்கள் கிளைக்க வைக்கப்பட்டுள்ளது.

Saturday, April 13, 2013

சூப்பரா இருந்ததை சுட்டது.

TNEB Makes the village scientists
Platform mobile shops at china 

அனைத்தும் எனது பேஸ்புக்கில் இருந்து சுட்டவை

Friday, April 12, 2013

கைப்பேசி நிறுவனங்கள் சோலார் பேனல்களை பயன்படுத்துவது மிகச் சிறந்த பயனளிக்கும்.

  சாதாரண மக்களின் பயன்பாட்டைவிட கைப்பேசி நிறுவனங்கள் சோலார் பேனல்களில் உற்ப்பத்தியாகும் மின்சாரத்தை 100% பயன்படுத்தமுடியும் ஏனெனில் அந்த நிறுவனங்க்களிடம் ஏற்க்கனவே அதற்க்கான உள் கட்டமைப்பு உள்ளது. 48V Battery, sufficient space availability, guarded  boundary area, O&M technicians and all the loads are working with 48 V DC system ( Base transceiver station, micro wave communication link, Optical Fiber communication links and aviation lamps).  
கைப்பேசி நிறுவனங்கள் சோலர் பேனல்களை பயன்படுத்துவதற்க்கான அனைத்து உள்கட்டமைப்புகளையும் பெற்றிருப்பதாலும் தொடர்ந்து சீரான லோடுடன் இருப்பதாலும் மிகச்சிறப்பாக செயல்படுத்தமுடியும். 
கைபேசி நிறுவனங்கள் சோலார் பேனல்களை பயன்படுத்துவதால் விளையும் நன்மைகள்.
For company.

1. Save the electric bill expense.
2. Save the diesel filling fuel expense.
3. Unwanted complaints from neighbors due to noise interference.
4. Least maintenance cost for hole the site.
5. Reduce the shelter temperature ( it eliminates SMPS Power plant, PIU transformers & Diesel Generator).

For Society.
1. No noise pollution.
2. Vocational power consumption from Electricity board due to this public get additional power .
3. No diesel consumption due to this reduce the country's fuel consumption & fuel import expense.
4. No Air pollution.   
   
  

Thursday, April 11, 2013

சோலார் பேனல் பராமரிப்பு

              சோலார் பேனல் களை பராமரிப்பது என்பது அதன் முழுத்திறனுடன் செயல்பட வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

     சோலார் பேனல் அதனை சுத்தம் செய்யும் வகயில் பொருத்துவது முக்கியமானது அதில் சிலர் செய்யக்கூடாத வேலைகளையும் செய்துவைப்பர். அவை பேனலின் மேற்பரப்பில் ஸ்டிக்கர்களை ஒட்டுதல், டேப் துண்டுகளை ஒட்டுதல், பெயிண்ட் துளிகளை சொட்டுதல், துணிகளை வைத்தல் என்பனவாகும். முக்கியமாக ஆயுத பூஜைக்கு பேனலுக்கு நடுவில் பொட்டுவைக்க கூடாது. இவ்வாறு செய்வதினால் தொடர் இணைப்பில் உள்ள பேனல்களில் மறைக்கப்பட்ட இடங்களில் டையோடாக செயல்படவேண்டிய செல்கள் இன்சுலேட்டராக மாறிவிடும்.

       சோலார் அரேயில் இடையில் மின்னோட்டம் தடைபடுவதால் அதன் மின் சுற்றானது பூர்த்தியாகமல் போய்விடும் அவ்வாறு மின்சுற்று பூர்த்தியாகவில்லை எனில் நமக்கு மின்சாரம் கிடைக்காது. சில நேரங்களில் குறைந்த மின்னோட்டம் பாயும் இவ்வாறு இருந்தால் செல்களுக்கிடையில் உயர்மின்னழுத்தம் உருவாகி அந்த அரே (தொடர்) முழுவதும் செயலிழந்துவிடும் பின்னர் இதனை சரி செய்யமுடியாது.  எனவே இதுமாதிரியான செயல்பாடுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

       இயற்க்கையாக வரும் இடர்பாடுகள் சில உண்டு அவை பறவைகளின் எச்சம், காற்றில் அடித்துவரப்படும் தூசிபடிதல், உப்புக்காற்றில் இருந்துவரும் உப்புபடிதல், அருகில் உள்ள கட்டிடங்கள், பதாகைகள்,மரங்களில் இருந்து விழும் நிழல். தினமும் ஒருமுறை நோட்டமிடவேண்டும் ஏதாவது பறவைகளின் எச்சம் இருந்தால் உடனே தண்னீரால் கழுவிவிடவேண்டும் அதாவது தண்னீரை மேற்ப்பரப்பில் இருந்து தெளிக்கவேண்டும் பேனலை கழட்டி தண்னீருக்குள் மூழ்கவைக்கக்கூடாது.

      தூசி அதிகம் படியும் இடங்களில் வாரத்திற்க்கு ஒருமுறையும் சாதாரண இடங்களில் ஒரு மாதத்திற்க்கு ஒருமுறையும் சோப்பு நீரினால் கழுவவேண்டும் பிறகு நல்ல நீரினால் கழுவவேண்டும். கண்டிப்பாக காலை 8 மனிமுதல் மாலை 5 மனிவரை கட்டிடம், மரம், பதாகை போன்றவற்றின் நிழல் எந்த ஒரு பகுதியிலும் விழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.      ஏதாவது ஒரு காரணத்திற்க்காக தொடர் இணைப்பில் உள்ள பேனல்களின் இணைப்பை விடுவிக்க நேர்ந்தால் மிகவும் கவனமாக கையாளவேண்டும் சோலார் பேனல் சார்ட் சர்க்யூட்டைக்காட்டிலும் சர்க்யூட் பிளாக்கினால்தான் அதிக சேதம் அடையும். எனவே தொடர் இணைப்பில் ஒரு பேனலின் நேர்மின்முனை+ அடுத்த பேனலின் எதிர் மின் முனையுடன்(-) இனைக்கவேண்டும். எந்த இடத்தில் பக்கவாட்டு இணைப்பு அதாவது பேரலல் கணெக்சன் கொடுக்கப்படுகிறதோ அங்குமட்டுமே நேர்மின் முனைகளை எல்லாம் ஒன்றாகவும் எதிர்மின் முனைகளை எல்லாம் ஒன்றாகவும் இணைக்கவேண்டும்.
    கற்க்கள், அடிக்கடி ஏதாவது பொருட்க்கள் விழும் இடங்களின் பேனல்களை பொருத்தக்கூடாது மேலும் 45 டிகிரிக்குமேல் வெப்பம் உள்ள இடங்களிலும் சோலார் பேனல்களை பொருத்தக்கூடாது. பேனல்களை நில நடுக்கோட்டின் திசையை நோக்கி சிறிது சாய்வாக பொருத்தவேண்டும்.

Tuesday, April 9, 2013

சோலார் பேனல்களை பயன்படுத்த சில முக்கிய குறிப்புகள் ( டிப்ஸ்)

    இன்று நம்ம ஊர்களில் மின்வெட்டு சமாளிக்க முடியாத்தாய் இருக்கிறது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள சோலார் பேனல்கள் பெரும் உதவியாய் இருக்கும், ஆனால் அதை பயன்படுத்தும்போது முதலீடு அதிகமாக தேவைப்படுகிறது அதனால் முதலீட்டை திரும்பபெரும் காலம் என்பதை கணக்கிடமுடியாதவாறு அதிக அளவில் விலை இருப்பதால் நான் சில யோசனைகளை முன்வைக்கிறேன்.

    இப்போது சோலார் சிஸ்டம் என்றாலே பேட்டரி இன்வெர்டர் என்று கூடுதல் உபகரணங்கள் சேர்த்தே பரிந்துரைக்கப்படுகின்றன.    இந்த கூடுதல் உபகரணங்களை தவிர்த்து எப்படி எல்லாம் சோலார் பேனல்களை பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

        முதலில் விவசாய பம்புசெட்களை பார்ப்போம். ஏற்கணவே விவசாயம் இலாபம் குறைந்த தொழிலாக இருக்கும்போது அவர்களின் கடன் சுமையை இந்த சோலார் இன்வெர்ட்டர் பேட்டரிகள் அதிகமாக்கிவிடுகின்றன. இருக்கும் பம்புசெட் களை அப்படியே தனியாக மின்சாரவாரிய இணைப்பில் இருந்து மாறுதல் செய்யாதீர்கள். சோலார் பம்புசெட்களுக்காக டி.சி மோட்டார்களை பயனபடுத்துங்கள் அதுவும் பகல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும்.

          டிசி மோட்டாரை நேரடியாக பயன்படுத்துவதன்மூலம் இன்வெர்ட்டர் பேட்டரி போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள் அரசு மானியத்திற்க்கு ஆசைப்பட்டு அதிக கடன்சுமைகளை சுமக்காதீர்கள். அடுத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து அமெரிக்க தயாரிப்புகளை வாங்குவதைவிட பத்தாயிரம் கொடுத்து சீனதயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள், சோலர் பேனல் பழுதானால் அதனை வாரண்டியில் மாற்ற செலவு செய்யும் போக்குவரத்துச் செலவு காத்திருப்பு  அகியவற்றைவிட ஒரு சீன தயாரிப்பு பேனல் பழுதானால் உடனே புதிய பேனல் ஒன்றை வாங்கி பொருத்திவிடுவது இலாபகரமானதாக இருக்கும்.

       இந்த இன்வெர்ட்டர் தயாரிப்பு நிருவனங்கள் AMI அது இதுவென்று மக்களை கொள்ளையடித்துக்கொண்டு இருப்பார்கள் எனவே கூடியமட்டும் இன்வெர்டர் இல்லாமல் டிசி சாதனங்களை உபயோகியுங்கள். உதாரணத்திற்க்கு நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பல டிசியில் தான் இயங்குகின்றன. RO watter purifire 36 V Dc பம்பில்தான் இயங்குகிறது ,  LCD , LED TV 12 V DC ,      Laptop 19 V DC, DTH  12 V DC  என அதிக பயன்பாட்டில் உள்ள பொருட்கள் DC ல் தான்இயங்குகின்றன. முடிந்தவரை மின் விளக்குகள் மின்விசிறிகள் போன்றவற்றையௌம் டிசி யிலே பயன்படுத்துங்கள் இது உங்களுடைய ROI ஐ விரைவில் மீட்டுகொடுத்துவிடும்.

Friday, April 5, 2013

மகாத்மா காந்தியின் திருமணம் காதல் திருமனமாக இருப்பதற்க்கான வாய்புகள் 100%
           கடந்த செவ்வாய்க்கிழமை கீர்த்தி மந்திர் சென்றிருந்தேன் அப்போது சிலவற்றை நன்றாக கவனித்தேன். மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் அவர்களின் வீடு மகாத்மாவின் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அவரது படிக்கும் அறையின் அருகில் இருந்து பார்த்தால் கஸ்தூரிபாய் அவர்களின் வீடு முழதும் நன்றாக தெரிகிறது மேலும் மகாத்மாவின் வீட்டில் இருந்து கஸ்தூரிபாய் வீட்டிற்கு வழியும் உள்ளது.

      எனக்கென்னவோ வரலாற்றில் பிழை இருப்பதாக தோன்றுகிறது சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்று சொன்னால் நன்றாய் இருக்காது என்று என்னி பழியை அவரது தாயார்மேல் போட்டுவிட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது.