Tuesday, April 30, 2013

பா ம க வும் அதன் மீதான குற்றச்சாட்டுகளும்.

      பா ம கா வன்னியர்களின் சாதிக்கட்சி என்று அனைவரும் சொல்வதில் எந்த அளவுக்கு அந்த கட்சியை பற்றி தெறிந்து வைத்துள்ளார்கள் என்பதை ஐயமின்றி அறிந்துகொள்ள முடிகிறது. அந்த கட்சி ஓட்டுக்காகவும் ஆட்சியை பிடித்து பணம் சம்பாதித்துக்கொள்ளவும் சாதி வெறியை தூண்டுவதாக சொல்கிறார்கள் அப்படி எனில் எந்த அடிப்படையில் தி மு க வும் அ தி மு க வும் அந்த கட்சியுடன் கூட்டனி வைத்துக்கொண்டன?.

       அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நாங்கள் சுதந்திரத்திற்க்காக போராடினோம் என்று சொல்லியா கட்சி ஆரம்பித்தார். அவர் சார்ந்த சாதி மக்களை  கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்று போராடினார் இடஒதுக்கீட்டை பெற்றார் அதனை அடுத்து அடுத்தவர்களிடம் போராடி குண்டடிப்பட்டு மால்வதைவிடுத்து கேட்கும் இடத்தில் இருப்பதைவிட கொடுக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்று கட்சியை ஆரம்பித்தார்.

      பா ம க வினர் குடித்துவிட்டு மானாட்டிற்கு சென்றார்கள் என்றும்   ராமதாசுக்கு என்ன யோகியதை இருக்கிறது பூரனமது விளக்கைப்பற்றி பெசுவதற்கு என்று கேட்கிறார் முதல்வர். தன் கட்சிக்காரன் குடித்துவிட்டு மாநாட்டிற்கு வந்ததால் அது ஒன்றே ராமதாசுக்கு பூரண மதுவிளக்கை கோறும் யோக்கியதையை பெற்றுத்தந்துவிட்டட்து.  ராமதாசா குடித்துவிட்டு வந்தார் அவரை சார்ந்த இன மக்கள்தானே குடித்துவிட்டு வந்தனர் தன்னை சார்ந்த தன் இன சாதிமக்கள் குடித்து சீரழிந்துவிடுகிறார்களே என்றுதானே அவர் பூரண மதுவிலக்கை கோருகிறார். ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் யாராவது குடிகாரன் இருந்தால் தன் குடும்பத்தை விட்டா விரட்டிவிடுகிறார்கள் அவரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கத்தானே முயற்ச்சி செய்வார்கள் ராமதாசும் அதைத்தான் செய்கிறார்.

    ஒவ்வொரு பெற்றோரும் தன் மகன் அல்லது மகள் படித்து டாக்ட்டராகவோ, எஞ்சினியராகவோ சமூகத்தில் நல்ல அந்தஸ்துள்ளவராகவோ ஆகவேண்டும் என்று என்னுகிறார்கள் அல்லவா அதையேதான் ராமதாசும் தன் மக்களோ அல்லது மகனோ முதல்வராகவேண்டும் என்று நினைக்கிறார் இது நியாயமான ஆசைதானே இதில் என்ன தவறு இருக்கிறது.

      ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் கருணானிதி குடும்பத்தை போல வியாபார ரீதியில் நாட்டையே கொள்ளையடித்திருக்கலாம் குடும்பத்தொலைக்காட்சிகள் மூலம் நாட்டையே சீரழித்திருக்கலாம் அப்படி செய்தாரா?  ராமதாஸ் கலப்புத்திருமணத்தையா எதிர்க்கிறார் படிக்கும் மாணவிகளை சீரழிப்பதைதானே கண்டிக்கிறார் திருமா வளவன் தலித் இளைஞர்களால் இழுத்து செல்லப்பட்ட பணக்காரவீட்டுப் பெண்களை திரும்ப ஒப்படைக்க பேரம் பேசி பணம் வாங்கவில்லை என்று யாராவது மனதை தொட்டு சொல்லமுடியுமா?.

     ராமதாஸ் தமிழனாக தமிழன் வாழ போராடுகிறார் வன்னியனாக வன்னியன் வாழ போராடுகிறார் இதில் என்ன தவறு. பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாவதில்இருந்து காத்துக்கொள்ள வழி தேடுகிறார்கள். ராமதாஸ் மீது சாதி துவேசத்தை தூண்டுவதாக கூறும் எந்த ஒரு தலைவராவது திராணியிருந்தால் படிக்கின்ற பெண்களை யாரும் இழுத்துக்கோண்டு ஓடாதீர்கள் பொருத்திருந்து வேலைவெட்டி கெடைச்சதுக்கப்புறம் காதல் கத்தரிக்காய் எல்லாம் பண்ணுங்கள்னு சொல்லட்டுமே. இதை சொல்ல எந்த தலைவருக்கும் துப்பில்லை.

   பா ம க வை அழிக்கவேண்டும் என்ற வக்கிர எண்ணம்தான் அனைத்து தலைவர்கள் மனதிலும் குடிகொண்டுள்ளது. மரக்காணத்தில் பேருந்து எறிவதை காட்டும் தொலைக்காட்சி சேனல்கள் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மானாட்டை ஒரு நொடிகூட செய்திகளில் காட்டபடவில்லை இதிலிருந்தே தெள்ளத்தெளிவாக தெறிகிறதல்லவா அனைத்து ஊடகங்களும் பா ம க   வை இருட்டடிப்பு செய்கின்றன என்று.  

12 comments:

 1. பாஸ் நீங்க சொல்ற கருத்தும் நியாயமாக தான் உள்ளது. நீங்கள் சொல்லும் கருத்தின் படி நடந்தால் நாம் அவரை பாராட்ட தான் வேண்டும். ஆனால் பத்திரிகை செய்திகள் வேறு மாறி கருத்து வெளி இருகின்றனர். மக்கள் டி வி வழங்கும் நிகழ்சிகளையும் மற்ற டி வி வழங்கும் நிகழ்சிகளையும் பார்க்கும் பொழுது யார் மக்களுக்கு பயன்படும் வகையில் நடகின்றர்கள் என்று புரிகிறது

  ReplyDelete
 2. எலலா ஜாதிய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் தலித் சார்பான சாதிக் கட்சிகளும் தேவையற்றவையே, ஆனால் அவற்றை நாம் எப்போதும் தேவையில்லை என சொல்வோம் எனில், ஆதிக்கச் சாதிக் கட்சிகள் இல்லாமல் போகும் போது தான், Vulnerable Group என்பதால், அவர்களை எதிர்க்க போகும் போது ஆதிக்கச் சாதிக் கட்சிகளுக்கு வலு சேர்ப்பதாய் அமைந்து, மீண்டும் நாம் அங்கு பிழை பட நேரிடும். இப்பதிவை எழுத முன்னரே நாம் பல முறை சிந்தித்தேன். ஏனெனில் சாதியம் என்பது மிகவும் Sensitive ஆன விடயம் ஆகும். கொஞ்சம் பிழைத்தாலும் பல்லாயிரம் பேருக்கு தவறான தகவல்கள் போய், அது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். சாதிக் கட்சிகளை தடை செய்யும் போது, தலித் சாதியக் கட்சிளையும் தடை செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும்... !

  ReplyDelete
 3. எலலா ஜாதிய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் தலித் சார்பான சாதிக் கட்சிகளும் தேவையற்றவையே, ஆனால் அவற்றை நாம் எப்போதும் தேவையில்லை என சொல்வோம் எனில், ஆதிக்கச் சாதிக் கட்சிகள் இல்லாமல் போகும் போது தான், Vulnerable Group என்பதால், அவர்களை எதிர்க்க போகும் போது ஆதிக்கச் சாதிக் கட்சிகளுக்கு வலு சேர்ப்பதாய் அமைந்து, மீண்டும் நாம் அங்கு பிழை பட நேரிடும். இப்பதிவை எழுத முன்னரே நாம் பல முறை சிந்தித்தேன். ஏனெனில் சாதியம் என்பது மிகவும் Sensitive ஆன விடயம் ஆகும். கொஞ்சம் பிழைத்தாலும் பல்லாயிரம் பேருக்கு தவறான தகவல்கள் போய், அது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். சாதிக் கட்சிகளை தடை செய்யும் போது, தலித் சாதியக் கட்சிளையும் தடை செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும்
  thanks to
  http://www.kodangi.com/2013/04/Attack-not-spontaneous-anti-dalit-violence-tamil-nadu-pmk-vanniyar.html?showComment=1367265198836#c6265792587979031523

  ReplyDelete
  Replies
  1. சாதிக்கு சங்கம் அமைக்க அரசு பதிவு வழங்கும்போது சாதி கட்சியை எதன் அடிப்படையில் தடை செய்யமுடியும்?.

   Delete
 4. தருமபுரியில் அவர்களே நாலு குச்சிகளைக் கொழுத்திவிட்டு, கோடிக்கணக்கில் இழப்பீடு என்று படித்துக் கொண்ட்ரார்கள் என்று சொல்லும் அளவுக்கு வக்கிரம் கொண்டால் ,குச்சுக் கொழுத்திகள் தப்பிவிடலாம் என்று நினைக்ககூடாது.

  ReplyDelete
  Replies
  1. அப்படி என்றால் உங்கள் கருத்து என்ன? இருக்கிற வன்னியர்கள் எல்லாத்தையும் என்கவுண்டரில் போட்டுவிடலாம?

   Delete
 5. // ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் கருணானிதி குடும்பத்தை போல வியாபார ரீதியில் நாட்டையே கொள்ளையடித்திருக்கலாம் குடும்பத்தொலைக்காட்சிகள் மூலம் நாட்டையே சீரழித்திருக்கலாம் அப்படி செய்தாரா? //

  அதற்குத்தானே முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.

  ReplyDelete
 6. Yes, Your right.
  மரக்காணத்தில் பேருந்து எறிவதை காட்டும் தொலைக்காட்சி சேனல்கள் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மானாட்டை ஒரு நொடிகூட செய்திகளில் காட்டபடவில்லை இதிலிருந்தே தெள்ளத்தெளிவாக தெறிகிறதல்லவா அனைத்து ஊடகங்களும் பா ம க வை இருட்டடிப்பு செய்கின்றன.

  ReplyDelete
 7. //அடுத்தவர்களிடம் போராடி குண்டடிப்பட்டு மால்வதைவிடுத்து கேட்கும் இடத்தில் இருப்பதைவிட கொடுக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்று கட்சியை ஆரம்பித்தார்//

  வன்னியன் ஆள வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் வன்னியர்களிடம் மட்டும்தான் ஓட்டு கேட்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அவங்க வன்னியர் மட்டும் ஆளனும்னு சொல்லலீங்க, வன்னியரும் ஆள வேண்டும்னுதான் சொல்றாங்க. எந்த கட்சியிலும் இல்லாத கொள்கை பா.ம.க வுல இருக்கு. சுழற்சி முறையிலான முதல்வர் பதவி. அனைத்து தமிழ் சாதியினரும் முதல்வர் ஆக வேண்டும் என சுழற்ச்சி முறையில் முதல்வர் பதவி அளிக்க பா.ம.க வில் கோட்பாடு இருக்கிறது.
   - இதை நான் சொல்லல பா.ம.க வின் முக்கிய பொறுப்புல இருக்கிறவங்க சொன்னதுதான்.

   Delete
 8. சாதிக்கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும். கல்வியில் முன்னேறிவரும் தமிழகத்தில் சாதிகட்சிகள் இருப்பது ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் அவமானம்.

  ReplyDelete
 9. Thanks  ராமதாஸ் தமிழனாக தமிழன் வாழ போராடுகிறார் வன்னியனாக வன்னியன் வாழ போராடுகிறார்

  ReplyDelete