Monday, December 31, 2012

தங்க நகை கடனாளிகளே விழித்துக் கொள்ளுங்கள்.

           தங்க  நகை கடனாளிகளே விழித்துக்கொள்ளுங்கள் ஏற்கனவே எனக்கிருந்த இந்த சந்தேகம் இப்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது. மூன்று நிமிடத்தில் கடன் கொடுக்கிறார்கள் என்று ஆசைப்பட்டு முழுவதையும் இழந்துவிடாதீர்கள்.

       தனியார்களினால் நடத்தப்படும் நிறுவனங்கள் உங்கள் தேவைகளுக்கான பொது நோக்கமுள்ள சேவைகளை செய்வதற்கு அல்ல.உங்களின் தேவைகளைப்பயன் படுத்தி ஆசையைகாட்டி நாடுமுழுவதும் வலைவிரித்துள்ளனர் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

     தினந்தோறும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துகொண்டே போகையில் அந்த நிறுவனங்கள் உங்கள் தங்கத்தை ஒரே நாளில் மூடிவிட்டு கொள்ளையடிக்கலாம்.இது ஒன்றும் வங்கி அல்ல திவாலானால் வேறொரு பொது துறை வங்கியுடன் இனைத்து மக்களை மீட்பதற்கு இது  போன்ற அடகு நிறுவனங்கள் மூடப்பட்டால் அரசு ஒரு ரூபாய்கூட கொடுக்காது.

   இன்று GP Gold loan என்ற 40 கிளைகள் உள்ள நிறுவனம் அறிவிப்பின்றி மூடப்பட்டது. நாளை MP MF என இதன் பட்டியல் நீண்டுகொண்டே போகலாம்.   அண்ணாமலை படத்தில் ஒருபாட்டில் உயர்வதுபோல் இதன் சிலந்திகூடு மிக விரைவாக கட்டப்பட்டுள்ளது உண்மையான வளர்சி ஒருபோதும் இந்த அளவுக்கு சாத்தியம் இல்லை. சிந்தித்துப்பாருங்கள் சிரமம் பார்க்காமல் வங்கிகளை நாடுங்கள்.

Saturday, December 29, 2012

பெண்கள் சுதந்திரம் என்பது போலியான வார்த்தை

  இது இன்றைய சூழலில் ஒருபோதும் மனிதர்களுக்கு பொருந்தாது அது விலங்குகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு வார்த்தையாகும்.  சுதந்திர பறவை என்று சொல்வது சரியான சொல் அதே அதனை மனிதனுக்கு பொருத்தி பார்க்கமுடியாது.

  1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது ஆனால் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை. இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி சுதந்திரம் பெற்றார்கள் இப்போது சுதந்திரம் "பெற்றுவிட்டது" "பெற்றுவிட்டனர்" அல்ல.

   சுதந்திரம் பெறுவதற்க்காக போராடினீர்கள் சரி, சுதந்திரம் பெற்றபின் ஏன் நாள் தோறும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அப்படி என்றால் நீங்கள் சுதந்ரம் பெறவில்லை என்றுதானே அர்த்தம்.ஒரு இந்தியனாகிய உண்ணால் இந்தியாவின் அனுமதி இன்றி நாட்டைவிட்டு வெளியேறக்கூட முடியாது அப்போ எங்கிருந்து கிடைத்துவிட்டது உங்களுக்கு சுதந்திரம்.

    பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் போது பிரித்தானியர்கள் இன்று இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருக்கும்போது நீ இந்தியன் அவ்வளவே.இதில் பெண்களுக்கான சுதந்திரம் என்று ஒன்று எங்கிருந்து வந்துவிட்டது.

   சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்ற ஒன்று கட்டுப்பாடு என்று ஒன்று எப்போது இல்லாமல் போகிறதோ அன்று பாதுகாப்பு என்று ஒன்று இல்லாமல்தான் போகும்.ஒரு பறவைக்கு சுதந்திரம் இருக்கிறது ஆனால் பாதுகாப்பு இல்லை. அந்த பறவை எந்த விலங்குகளாளும் வேறு பலம் வாய்ந்த பறவைகளாளும் கொல்லப்படும் வாய்ப்பு இருக்கிறது.

  ஒன்றிற்கு பாதுகாப்பை வழங்குவது யார் அதன் உரிமையாளர்மட்டுமே. யார் ஒருவர் உணக்கு பாதுகாப்பு அளிக்கிறாறோ அவர் உங்களின் மீது உரிமையானவர் ஆகிறார், நீங்கள் வேறொருவருக்கு உரிமையானவர் ஆகும்போது அங்கே உங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போகிறது.

  இப்போது ஒருவருக்கு பாதுகாப்பு வேண்டுமா இல்லை சுதந்திரம் வேண்டுமா?. சுதந்திரமானவர்கள் தன் பாதுகாப்பை தானே ஏற்ப்படுத்திக்கொல்லவேண்டும். இந்தியாகூட பிரிட்டனிடம் இருந்து விடுதலைதான் பெற்றிருக்கிறது ஆனால் சுதந்திரமாக இல்லை ஐ நா வின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

    சுதந்திர இந்தியாவென்பது கூட பொய் அரசியல் தலைவர்கள் ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகளிடம் அடகு வைத்துள்ளார்கள்.

Wednesday, December 26, 2012

தமிழக முதல்வர் தமிழக முன்னேற்றம் குறித்து நரேந்திரமோடியிடம் ஆலோசனை

   http://i2.ytimg.com/vi/e0-MCZ6L_1w/mqdefault.jpg
   இன்று அகமதாபாத் வந்துள்ள நமது  தமிழக முதல்வர் தமிழக முன்னேற்றம் குறித்து நரேந்திரமோடியிடம் ஆலோசனை பெற்று அதை நமது மானிலத்திற்கு ஏற்றவாறு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

http://asset.starnews.in/d82c551446b1846b7a727b64027549a0_full.jpg

    ஜெயலலிதா இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் ஆமதாபாத் புறப்பட்டு சென்றார். அங்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். விழா முடிந்ததும் தனிவிமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை 4 மணியளவில் சென்னை திரும்புகிறார்.

இன்று நான்காவது முறையாக முதல்வராக பதவி ஏற்க்கிறார் நரேந்திரமோடி நேரலையில் காண்க

பதவி ஏற்ப்பு விழாவை நேரலையில் இனையம்மூலம் கான இங்கே சொடுக்கவும்

சென்ற ஆட்சியின் காலத்தில் தான் செய்த சாதனைகளால் வென்ற மோடி இன்று மீண்டும் பதவி ஏற்க்கிறார்.

சாதனைகள்

1. அமரிக்காவில் 12  நகரங்களில் வாழும் இன்தியர்களுடன் வீடியோ கான்பரஸ்மூலம் குஜராத்தின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளைப்பெற்றார் அது 20 மே 2012 அன்று நேரலையாக ஒளிபரப்பானது. இதில் விவசாயம் தொழில்துறை மற்றும் சேவைத்துறை குறித்து விவாதிக்கப்பட்டது.

2. 2001 ஆம் ஆண்டு ரூ 6700 கோடி நிதி பற்றாகுறையாக இருந்த மாநிலம் இன்று 10 ஆண்டுகளில் உபரி வருவாய் மிக்க மாநிலமாக உருவெடுத்துள்ளது. இத்தனைக்கும் மக்கள் மீது எந்த கூடுதல் வரிச்சுமையும் தினிக்கப்படவில்லை இந்த கால கட்டத்தில் புயல் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டபோதிலும் சாதிதுள்ளது.

3. இந்தியாவின் விவசாய வளர்ச்சி 3%மாக உள்ளபோது குஜராத்தின் விவசாய வளர்ச்சி 11% மாக உயர்ந்துள்ளது, மேலும் இங்கு வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. 14700 கோடியாக இருந்த விவசாயத்தின் மூலமான வருமானம் 98000 கோடியாக உயர்ந்துள்ளது இவை அனைத்தும் நேரடியாக விவசாயிகளை சென்றடைகின்றது.

4. 2001 ஆம் ஆண்டில் 108 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த விளை நிலம் கடலோர தரிசு நிலமேம்பாட்டின் மூலம் 145 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.  பத்து ஆண்டுகளில் 68% பால் உற்பத்தி அதிகரித்துள்ளது, 23 லட்சம் பேல்களாக இருந்த பருத்தி உற்பத்தி 1 கோடி 23 லட்சம் பேல்களாக உயர்த்தப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பம் மூலம் உருளைகிழங்கு பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

5. அமரிக்க நிறுவனங்கள் 15000 கோடியை குஜராத்தில் முதலீடு செய்துள்ளன மேலும் 2013 ம் ஆண்டில் 60 நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.

6. அனைத்து கிராமங்களும் 24X7 தடையற்ற மின்சாரம் பெருகிறது. சூரத் அகமதாபாத் ராஜ்கோட் பரோடா போன்ற பெரு நகரங்கள் அனைத்தும் குழாய்மூலம் கேஸ் (Gujarat Gas )இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

7.சுற்றுலா வளர்சியில் 16%த்தை எட்டியுள்ளது கிர் காடு மேம்படுத்தப்பட்டுள்ளது.

8. சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின் மூலம் 98% பிரசவம் தாய் சேய் நலத்துடன் பிரசவிக்கப்படுகிறது.

9. 2001 ஆம் ஆண்டு 56 லட்சம் வீடுகள் உள்ள குஜராத்தில் 46 லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை இப்போது கழிப்பறை கட்டுவதற்கு அரசின் நிதியுதவி மூலம் 44 லட்சம் வீடுகள் கழிப்பறை வசதியுள்ள வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. மீதமும் விரைவில் மாற்றப்பட்டு விடும்.

10. 2001 ஆம் ஆண்டு அரசின் மருத்துவ கல்லூரிகளில் வெறும் 500 இடங்கள் மட்டுமே இருந்தது இன்று 6000 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் 8000 இடங்கள் இன்று 42000 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

11. குஜராத்தில் மட்டும் 600 மெகாவாட் சூரி ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது (சரன்கா சோலார் பூங்கா நம்ம பங்கு அதுல 150 மெகாவாட் சிவில் மற்றும் சோலார் பிரேம் கட்டுமானம் KP Energy ). குஜராத்தை தவிர்த்து இந்தியா முழுவதும் 120 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை மூலம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

12. 2012. சுவாமி விவேகானந்தாவின் 150 வது பிறந்த நாளில் " யுவ சக்தி வருடம் " என்ற பெயரில் ஒரே வாரத்தில் 65000 இளைஞர்களுக்கு   பனிவாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்ப சொல்லுங்க உங்க ஓட்டு யாருக்கு?

Thursday, December 13, 2012

குஜராத் மக்கள் நரேந்திர பாய் மோடியை ஏன் நேசிக்கிறார்கள்?

A supporter Narendra Modi wears his mask during a campaign rally in Gujarat's Pavagadh town

Next
 
பாரதி கண்ட சமுதாயம் குஜராத்தில் தழைக்கிறது.


Sonil Dedhia in Ahmedabad

Political analyst Viduyt Thakar tells Rediff.com's Sonil Dedhia the importance of the 2012 Gujarat assembly elections, why Chief Minister Narendra Modi is so popular and why he thinks that this is the last chance for Congress to come back to power in Gujarat.
Why do you think Narendra Modi is so popular among the people of Gujarat?
The youth of Gujarat love Narendra Modi. Out of the 37.8 million Gujarati voters 20.4 million are below the age of 40. A little over 1.2 million voters are between the ages of 18 and 19. Modi is tremendously popular amongst the youth because he represents them.
Shankarsinh Vaghela who represents Congress and Keshubhai Patel who represents Gujarat Parivartan Party are both outdated. Both these leaders are marginalised. I teach journalism and I have many students who are in the age group of 18 to 25 who have never even heard of Keshubhai Patel.
The second point is that Narendra Modi is very famous amongst the women of Gujarat. The reason is that during the last 11 years there have been so many melas and other cultural programs that Modi has oragnised for women. Women can freely move around in any part of the state even after midnight. This shows the measures taken by him for the safety of women. There is a saying in politics, "jaise log hote hai waisi sarkar milti hai (A government is similar to its people)". I feel there are good people staying in Gujarat and they have got a good leader and a good government.
The third reason in that he is an amazing orator. He charms his audience with his speeches. He can make a direct rapport with people across any sections.
Modi's development agenda has impressed a large section of the audience in Gujarat. Everybody has started realising that if development happens, directly or indirectly, every section of the society is benefited.
After the Godhra riots in 2002 the state has been completely peaceful. There is not even a single day in the last 10 years when Gujarat has seen a bandh or curfew. Narendra Modi has not only developed the state but has proved to be a good administrator as well.

தனிமையில் இருக்கும்போது தமிழ் எனக்கு பிடித்திருக்கிறது ஆனால் தமிழனை எனக்கு பிடிக்கவில்லை

        தனிமையில் இருக்கும்போது தமிழ் எனக்கு பிடித்திருக்கிறது. தமிழ் நாட்டில் இருக்கும்போது தாய் மண் எனக்கு பிடித்திருக்கிறது. தனிமையில் தமிழையும் தாய்த்தமிழகத்தில் தாய்மண்ணையும் நான் நேசிக்கிறேன். ஆனால் தமிழனை எனக்கு பிடிக்கவில்லை அவன் தன்னலம் என்னைத் தடுக்கிறது.

      தமிழகத்தை தவிர்த்து வேறு இடங்களில் ஒரு தமிழனை பார்த்தால் அவன் (தமிழன்) தமிழனிடம் தமிழில் பேசுவதில்லை. எங்கே தமிழில் பேசினால் உதவி என்று கேட்டு உபத்திரமாய் வந்துவிடுவானோ என்ற சுய நலம்தான் காரணம். தமிழனின் சுய நலத்தைவிட அதிசுய நலவாதி இந்தியாவில் எந்த மொழிக்காரனும் இருக்கமாட்டான்.

   குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு சாப்பாட்டு கடைவீதியில் தள்ளு வண்டியில் தோசை சுட்டு விற்க்கும் தமிழன் தன் மனைவியிடம் தமிழில் பேசுகிறான் அவன் கடையில் தோசை சாப்பிட்ட நான் எவ்வளவு ஆனது என்று தமிழில் கேட்டேன் அவன் பஞ்சித்தர் ருபியா என்று குஜராத்தியில் சொல்கிறான்.  நீங்கள் சொல்வது புரியவைல்லை என்று சொல்கிறேன் மீண்டும் ( 75/- ) பஞ்ச்சித்தர் ருப்பியா தான்.

    இன்று குஜராத்தில் தேர்தல் நேற்று மதியம் ஒரு இரும்பு பட்டரைக்கு நான் பனி நிமிர்த்தமாக ஒரு எனிமோமீட்டர் பொருத்தும் ஸ்டான்டினை மறுவடிவாக்கம் செய்ய சென்றிருந்தேன். சோதனை கம்பம் ஏறும் ஒரு தொழிலாலியும் என் உடன் வந்திருந்தார் அங்கு நான் கொண்டுவந்த ஸ்டான்டினை பட்டரைத்தொழிலாலிகள் மறு வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த தொழிளலர்களிடம் தேர்தலைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன் அப்போது உங்களுக்கு வாக்களிக்க கட்சியினர் எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்று கேட்டேன். எங்களுக்குத்தெறியாது நாங்கள் எல்லாம் வாக்களிக்க பணம் பெறுவதில்லை என்று கூறினார்கள்.

        நான் சொன்னேன் எங்கள் ஊரில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுப்பர்கள் என்றேன் அப்போது ஒரு தொழிலாளி என்னைப்பார்த்து நீங்கள் ஓட்டுப்போடுவதற்க்கு பணம் பெறுவது உங்களுக்கு தவறாக தெறியவில்லையா என்றான். தினம் 250 ரூபாய் கூலியாக பெறும் ஏழைத்தொழிலாளியின் வார்த்தையை,   தமிழக வாக்காளர்கள் அனைவரையும் செறுப்பால் அடித்ததுபோல் நான் உணர்ந்தேன்.

       எங்கோ ஒரு சில பிளக்ஸ் பேனர்கள் தவிர தள்ளுவண்டியில் ஒலி பெருக்கி வைத்து ஒருவர் தள்ளிகொண்டு போகிரார் அவ்வளவுதான் தேர்தலுக்கான எந்த அறிகுறியும் எனக்குத் தென்படவில்லை. தேர்தல் நேரத்தில் கட்ச்சி கோஷ்ட்டிகளாக மக்கள் பிரிந்திருக்கவில்லை அனைவரும் சிந்திக்கிறார்கள் முடிவெடுக்கிறார்கள் நாளை வாக்களிப்பார்கள். நாம் சோற்றில் உப்பு போடுவதில்லை சாம்பாரில்தான் போடுகிறோம் அவர்கள் ரொட்டியில் உப்புபோட்டு தின்கிறார்கள். இலவசங்களுக்கு ஆசைப்பட்டு இருளில் தவிக்கும் என் இனிய தமிழ் மக்களே ஒளிரட்டும் குஜராத் மீண்டும் விளக்கேற்றி வைப்பார் திருவாளர் நரேந்திரபாய் மோடி மண்னைக் கவ்வுவர் மதச்சாயம் பூசும் குஜராத் காங்கிரஸ் கேடி.Thursday, December 6, 2012

விஷம் என்று தெரிந்தும் அதை யாராவது குடிப்பார்களா ?

   தமிழகத்தில் தீண்டாமை தலைவிரித்தாடுவாதாக ஒரே கூச்சல். எனக்கு ஒரு சந்தேகம் அந்த வார்த்தையை அணைவரும் இன்று  தவராக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த காம வெறியர்கள் அடுத்தவன் வீட்டு பெண்கள் மேல் கையை வைக்கவேண்டும் அதை தடுத்தால் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது என்பது.

    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் இருந்து வருகிறது என்கிறீர்களே மனிதன் தோன்றியபோது ஒட்டுத்துணி இல்லாமல் இருந்தான் இப்ப மட்டும் எதுக்கு உடம்பை மறைக்க துணி போட்டுக்கொள்கிறார்கள் மானம் கெட்டவர்களாக இருந்தால் துணியில்லாமல் திரியலாமே.

    எதிர்பாரமல் மனதில் ஏற்படுகின்ற உணர்ச்சியாம் சினிமாவில் கவர்ச்சி நடிகையை பார்க்கும்போதுகூட அவனுக்கு காம உணர்ச்சி ஏற்படும் அதுக்கு அந்த நடிகைவீட்டுகதவை தட்டுவானா?

    ஒவ்வொரு நாளும் ஜீ தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்குத் தெறியும் காதல் என்ன பன்னுதுனு  ஒரு 10 வயது பிள்ளை இருக்கும் தா(பே)ய் க்கு கூட காதல் வருகிறது விவாகரத்து வாங்கிட்டு  நடுத்தெருவுல நிக்கறது.

    குறிப்பா தலித்துக்கள் தங்கள் பெண்களை திருமணம் செய்துகொல்வதை எந்த சாதியினரும் விரும்புவதில்லை ஏன்  தெறியுமா? எங்கள் வீட்டுப் பெண்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் அதர்க்கு பதிலாக அந்த கணவனை ரத்தம் சிந்த வைத்துவிடுவார்கள் இதே தலித் இனத்தில் உள்ள ஒருவனை எதுவும் கேட்க்கமுடியாது மீறிகேட்டால் அவன் மீது என் சாதிபெயரை சொல்லிஅழைத்தான் என்று வழக்கு தொடர்ந்து விடுவார்கள்.

   அழகாக இருக்கிற அடுத்த சாதிப் பெண்களை கட்டிக்கொல்லவேண்டும் தப்பு பண்ணும்போது தட்டிகேட்டால்  சாதிப்பேரை சொல்லி திட்டினானு சொல்லி தகப்பணையும் 15 நாள் விசாரனையின்றி காவலில் வைப்பது.

     அடுத்தவன் வீட்டில் பணம் திருடுவதும் தாய் தந்தைக்குத் தெறியாமல்  அவர்களின் பெண்களை கூட்டிக்கொண்டு ஓடுவதும் ஒரே குற்றமே.

Wednesday, December 5, 2012

பதில்:- செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா? இதுதாண்டா ஜாதி

// பெண்களிடம் வரதட்சிணை வாங்கி அவர்களை சுரண்டித் தின்கிற ஜாதிக்கரான், தன் ஜாதிக்காரனா? தலித்தா?//  

தலித்துகள் யாரும் வரதட்சனை வாங்குவதே இல்லையா?

//செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா? தன் ஜாதி பெண்களை சுரண்டித் தின்னுப்புட்டு… அப்புறம் என்ன ஜாதி பெருமை வெங்காயம் வேண்டிக்கிடக்கு?// 

உங்களுடைய காதல் வெறும் செக்ஸ் மட்டும்தான் என்று கீழ்த்தரமாக நிரூபித்து இருக்கிறீர்கள்.

//இதில் கொஞ்சம் குறைந்தாலோ, பிறகு பண்டிகை, குழந்தை பிறப்பு போன்ற நாட்களில் சீர் செய்ய முடியாமல் போனாலோ அடி, உதை, குத்து என்று தன் ஜாதி பெண்களிடம் செயல்பட்டு தாங்கள் வீரபரம்பரை என்பதை நிரூபிக்கிறார்கள் எல்லா ஜாதிக்காரனும்.//
   
     பண்டிகை குழந்தை பிறப்பு இவைகளுக்கு சீர் செய்யும்போதுதான் உறவு களின் பாசம் பரிமாரிக்கொள்ளப்படும். கணவன் அடித்ததால் சகோதரியின் கண்ணில் வரும் ஒரு சொட்டு கண்ணீருக்குகூட சகோதரர்களிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

     இதே ஒரு தலித்துக்கு வேறு  சாதிக்காரன் பெண்கொடுத்து அவன் செய்யும் அக்கிரமத்தை தட்டிக்கேட்டால் கேட்ப்பவர்மீது PCR வழக்கு தொடுப்பார்கள் அப்போது அந்த அபலையில் குறலுக்கு ஆறுதல்கூட கூற முடியாது.

//உனக்கு தில் இருந்தா, இனி எவனாவது நம்ம ஜாதி, மத பெண்கிட்ட வரதட்சிணை வாங்குன அவனை சும்மா விட மாட்டோம். இதுக்கு முன்னால வாங்கிய வரதட்சிணையையும் திருப்பிக் கொடு என்று சொல்லு.
முடியுமா? முதலில் உன்னால வாங்கமா இருக்க முடியுமா? டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் எவ்வளவு கொட்டி அழுதிருப்பாங்க..//

  தன் மகளின் நிலையான வாழ் நாள் முழுதுமான பொருளாதார பாதுகாப்பிற்க்காக பெற்றோர்கள் கொடுக்கும் விலையும் சகோதரர்களின் சொத்திற்கு இனையாக சொத்துரிமை பங்கீடாக கொடுக்கப்படும் பொருள்.

 //பார்ப்பனப் பெண்களிலிருந்து வன்னியர் பெண்கள் வரை தன் ஜாதி ஆண்களின் கொடுமைகளிலிருந்து ஓரளவுக்கு பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் வாழ்கிறார்கள் என்றால் அது அண்ணல் அம்பேத்கரால்தான்.//

  ஒவ்வொரு தலித் குடியிருப்புக்கும் மாலை 6 மனிக்குமேல் சென்று வீடியோ எடுத்து வரவும் எத்தனை பேர் குடித்துவிட்டு மனைவியை நடு ரோட்டில் போட்டு அடிக்கிறார்கள் என்று தெறியும்.
  பாவம் அம்பேத்காரால் உங்கள் வீட்டு பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு தரமுடியவில்லை.

//
‘சொத்துக்கு ஆசைப்பட்டு, நம்ம வீட்டு பெண்களை காதல் கல்யாணம் செய்கிறார்கள்’, என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.
பெண்களுக்கு எந்த ஜாதி இந்து சரிபாதியா சொத்துக் கொடுக்குறான்? எல்லா சொத்தையும் மகன்களுக்குத்தானே எழுதி கொடுக்குறான்.
தன் பெண்களுக்கு செலவு செய்து திருமணம் செய்கிறான். சீர் செய்கிறான் அவ்வளவுதான். சொத்துல பங்கு கேட்டால் கூட கொடுப்பதில்லை.//

  கல்யாணம் செய்து தனித்தனி ஊர்களில் கணவன் மனைவியை பிரித்து வைப்பதா? அப்படி கொடுத்தா அந்த சொத்தை யார் பராமரிப்பது?

//
பெண்ணை பெற்றவர்களுக்கு காதல் திருமணம் ஒரு வரப்பிரசாதம்.
வறுமையில் இருக்கிற ஒரு ஜாதி இந்து, தன் ஜாதிக்குள்ளேயே தன் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், மிகக் குறைந்தது 3 லட்சமாவது உடனடியாக தேவை.
மாறாக, அந்தப் பெண் தலித் இளைஞரையோ, வேறு ஜாதிக்காரரையோ காதல் திருமணம் செய்து கொண்டால், அந்த செலவு மிச்சம்.//

   காதல் திருமணம் என்றால் என்ன? யாருக்கும் தெறியாமல் பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிவிடுவதா?
  அப்ப ஜாதி இந்து தவிர மற்றவர்களெல்லாம் திருமணம் செய்வதில்லை அப்படியே மணதுக்கு பிடித்த பெண்கள் கண்ணில் பட்டவுடன் அவளுடன் சேர்ந்து குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிடுவார்களா?
 
 
 // ஆனால், மாப்பிள்ளை தலித்தாக இருந்தால், தன் பொருளாதார லாபத்தை விடவும், இந்தத் திருமணம் தனக்கு மிகப் பெரிய அவமானமாக கருதுவதான் ஜாதி இயங்கும் தன்மை.//

     எந்த பெற்றோரும் தன்னைவிட தன் குழந்தையைத்தான் அதிகமாக நேசிப்பர் தான் வெயிலில் காய்ந்தாலும் தன் குழந்தை நிழலில் உறங்கவேண்டும் என்று துடிப்பதுதான் தாயுள்ளம். குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு மட்டுமே அது புரியும், கழிப்பவர்களுக்கு கழிவை சும்மா அகற்றப்படுவதால் நமக்குதான் லாபம் என்ற என்னம் வரும்.

Tuesday, December 4, 2012

பெற்றோர்களின் முதலீடுகளை முடமாக்கும் நஞ்சு முற்கள்

          இன்றைய சமூக சூழலில் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளை வளர்ப்பதற்காக தம் வாழ்வையே முதலீடு செய்கிறார்கள். தம் வாழ் நாளில் 20 வருடங்களுக்குமேல் தம் குழந்தை செல்வங்களுக்காக தனது தூக்கம் நிம்மதி ஓய்வு என அனைத்தையும் தொலைத்திருப்பார்கள் இவை எல்லாம் எதற்க்காக?

          தமது ரத்தம் தமது உயிரின் ஒரு பகுதியாகிய தன் குழந்தை செல்வங்களின் எதிர்காலதிற்காகவும் தனது கடைசி காலங்களில் தான் வளர்த்த மரத்தின் நிழலில் இலைப்பாறவும் தானே ! அதுவே சூறைக்காற்றால் அடித்து செல்லப்பட்டால் அலலது அந்த மரத்தின் நிழலில் முழுதுமாக  நஞ்சு முற்கள் முலைத்துவிட்டால் என்ன செய்வது.

        தன்னுடைய எதிர்கால கனவுகள் எல்லாம் கண்ணாடி கோட்டையாய் கண்முன்னே இடிந்து நொறுங்கும்போது அவர்களின் மனம் என்ன பாடுபடும். அதை ஒருமுறையேனும் தன் வாழ்வில் அனுபவிக்க நேர்ந்தால் அவர்களுக்கு மட்டுமே புரியும் அதன் வலி எவ்வளவு ஆழமானதென்று.

       இளைஞர்களை தவரான பாதைக்கு இட்டுச்செல்கிறார்கள் காமத்தை விற்று பணம் சம்பாதிக்கும் திரை துறையினர். வேலை வெட்டி இல்லாதவனும், ரவுடிகளும், தெரு பொறுக்கிகளும், அழகிய கல்லூரி படிக்கும் பென்களையும் மேல் சாதி பெண்களையும் நடுத்தர மற்றும் வசதியான வீட்டுப்பெண்களையும் துரத்தி துரத்தி காதல் செய்வதாக படம் எடுக்கிறார்கள். சமூகத்தை சீரழிக்கும் இவர்கள் எவரும் காதல் இல்லாமல் படம் எடுக்க முடிவதில்லை பெண்களை பெற்றெடுத்த தகப்பன்களை எல்லாம் வில்லனாக சித்தரிக்கிறர்கள். எந்த சோமாரியாவது காதலினால் வழ்க்கை வீனாய் போன பெண்கள் பிள்ளைகளின்மேல் அவர்கள் நினைத்த எதிர்காலம் திசைமாறிப்போனதல் பெற்றோர்கள் படு வேதனை, இவர்களின் காதல் திருமணத்திற்க்குபின் வாழ் நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை படம் எடுத்திருகிறார்களா?.     


         போதை பொருட்கள் உடலை சீரழிக்கிறது, வாழ்க்கையை திட்டமிடாத கவர்ச்சியினால் வரும் காமகாதல் வாழ்க்கையையே சீரழித்துவிடுகிறது.. திருமணம் ஆகும் நாள்வரை பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் இழந்த அனைத்திற்கும் விலையாக என்னகொடுகிறார்கள், சோரூட்டி வளர்த்த பிள்ளைகள் சோற்றுக்கு கஷ்ட்டப்படும் பெற்றோர்களும் இருக்கிறார்கள் ஊட்டி வளர்த்தபிள்ளை உணவின்றி கஷ்ட்டப்படுவதையும் பார்கிறார்கள்.
      
       மகன் அல்ல மகள் அல்ல இவர்கள் மக்கட்செல்வம் எங்கள் செல்வத்தை கொள்ளையடிக்க முயலாதீர்கள். விதைத்த விதை விருட்சமாகி பழம் தரும் நேரத்தில் வேருடன் பிடுங்கி எங்கள் வாயினில் மண்ணை போடாதீர்கள் விட்டுவையுங்கள் நிழலில் அமர்ந்து கனியுண்டு இளைபாறும் நேரமிது.
   

இன்றைய தி.க வின் நவீன கொல் கைகள்

1. இலைஞர்களை எல்லாம் படிக்காமல் பெண்களின்பின் சுற்ற வைப்பது.

2. சீருடை அனிந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களை கருப்பு சட்டை அனிவித்து காதலிக்க கடற்கரைக்கு செல்லவைப்பது.

3. பெற்று வளர்த்து எல் கே ஜி அட்மிசனுக்கு ஒரு வாரம் வரிசையில் நின்று தன் வருவாயின் பெரும்பகுதியை படிப்பிற்க்காக செலவிட்டு கடைசியில் வேலைவெட்டி இல்லத ஒருவன் தன் மகளை காதலித்து கல்யாணம் செய்துகொல்வான் என்று பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைப்பது.

4. பெண்களுக்கு பெரியார் பெற்று தந்த சுதந்திரத்தை பெற்றோர்கள் மூலமே  பள்ளி கல்லூரி மற்றும் பனிக்கு அனுப்பாமல் மீண்டும் அடிமையாக்குவது.

5. பெரியார் பொருளாதாரத்தில் முன்னேற்ற நினைத்த இளைஞர்களை ரோடு ரோடாக பெண்களின்  பின்னால் பொருக்கவைப்பது.

6. சாதியை ஒழிக்கிறேன் என்ற பெயரில் இவர்களே சாதிகளின் பெயர்களை சொல்லி திட்டிக்கொண்டு திரிவது. சாதிக் கலவரங்களை உருவாக்குவது.

  மேற்கண்ட இவைகள் தான் இன்றைய இவர்களின் பகுத்தறிவு. இதையெல்லாம் செய்து விட்டால் தமிழர்கள் உலகத்திலேயே பொருளாதாரம் மற்றும் அறிவு வளர்ச்சியின் உச்சகட்டத்தை எட்டிவிடுவார்கள்.

Saturday, November 24, 2012

தங்கத்தின் தாகமும் அதன் தாக்கத்தின் ஏக்கமும்

    தங்கம்  இந்த  பெயரை கேட்டாலே நம் அனைவரையும் ஒரு  நொடி தவிக்க வைக்கிறது.
நாளுக்கு நாள் விலை ஏற்றம்  நாமும் கடன் பட்டாவது ஒரு கிலோ  தங்கம் நாலுவருஷத்துக்கு முன்னரே வாங்கி வைத்திருந்தாள் அதில் பாதியை விற்று இன்று அதன் கடனையும் அடைதிருக்கலாமே என மனதின் எண்ண ஓட்டம் சிந்தனையை திருப்பிவிடுகிறது.

    தங்கத்தினால் சமுதாயத்தில் பாதிப்புகள் மற்றும் ஏக்கங்கள் தான் எத்தனை எத்தனை சொல்லிமாலாது  மகளின் திருமணத்தை நடத்த போராடும் பெற்றோர்கள், மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியாத கணவர்கள், மருமகளின் சீர்வரிசை கேட்கும்  மாமியார்கள் அன்னியசெலவானி பாதிப்பில் திண்டாடும் நாடு, திருடர்களின் பயத்தல்  தெருவில் நடமாட முடியாத பெண்கள்,பதுக்கிவைத்து பணம் கொழிக்கும் பண முதலைகள், முதலீடுகள் திசைமாறி செல்வதால் பாதிக்கும் நிறுவனங்கள். என அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இன்று தங்கம் என்பது நமது சமுதாயத்தின் செல்வசெழிப்பின்  ஒரு தர அளவுகோலாக இருக்கிறது. தனது செல்வ செழிப்பை வெளிக்காட்டும் பகட்டுக்காரர்களினால் அடுத்தவர்களின் நெஞ்சில் நஞ்சு விதைக்கப்படுகிறது. அரசு சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாக குறைந்தபட்ச்சம் 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்றோ தங்கத்தின் விலை நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய விலையைவிட மூன்று மடங்காக  உயர்ந்துவிட்டது. பங்குச்சந்தையில் நிறுவனங்கள் மீது முதலீடு செய்யப்பட்ட பணம் பாதியாகிப்போனது.

  இப்போது தான் அரசு அதன்  பாதிப்பை உணரத்தொடங்கியிருக்கிறது, தங்கம்  வாங்க வங்கிகள் கடன் தரக்கூடது என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் மட்டும் 3 லட்சம் கோடி அளவுக்கு தங்கம் வெளி நாடுகளில் இருந்து முறையாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, முறைகேடாக எவ்வளவோ யாருக்குத்தெறியும்.  தினமனியில் வெளியான பத்திரிகை செய்தி இதோ. 


//தங்கம் வாங்க கடன் தர வேண்டாம்: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

First Published : 20 November 2012 12:43 AM IST
தங்கம் வாங்குவதற்கு வங்கிகள் கடன் அளிக்க வேண்டாம் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்க நகை, தங்க பிஸ்கெட் அல்லது தங்கம் சார்ந்த பங்கு பத்திரங்கள் (இடிஎப்) வாங்குவதற்கு கடன் வழங்கக் கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. இவ்விதம் கடன் அளிப்பதால் தங்கம் மீது ஊக வணிகத்துக்கு வழி வகுப்பதாக ஆர்பிஐ சுட்டிக்காட்டியுள்ளது. தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கு  தங்கம் வாங்குவதற்கோ அல்லது அவர்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு அடிப்படையிலோ கடன் வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் நியாயமான ஜூவல்லர்களுக்கு மூலதன கடன் வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. சமீபகாலமாக தங்க இறக்குமதி அதிகரித்துள்ளதால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தகைய உத்தரவை ஆர்பிஐ பிறப்பித்துள்ளது. 2011-12ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 1,067 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 6000 கோடி டாலராகும். நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் தங்க இறக்குமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகரித்து ரூ. 71,912 கோடியாக (1,300 கோடி டாலராகும்) உயர்ந்தது.//   

      வெளி நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் ஏற்றுமதியால் நாட்டிற்கு வரும் பணத்தைவிட நமது மக்கள் தங்கம் வாங்கசெலவிடப்படும் தொகை அதிகம். நமது மக்கள் மற்றும் நாடு நலம் பெறவேண்டுமெனில் தங்கத்தின் பயன்பாட்டை கண்டிப்பாக தங்கத்தை முறைப்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் அரசின் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் அரசால் முட்டாள்களாக்கப்படுகிறார்கள் என்றுதான் கருதவேண்டும்.

   எந்தமாதிரியான தீர்வுகள் மூலம் எப்படி தங்கத்தை  கட்டுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

1. நபர் ஒருவருக்கான தங்கத்தின் பயன்பாட்டு அளவை நிர்ணயிக்கவேண்டும்( 100 கிராம் அல்லது 150 கிராம் என )
2. நிர்னயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தங்கம் கையிருப்பு வைக்கின்றவர்களுக்கு கூடுதல் தங்கத்திற்கு மட்டும் அந்த நிதியாண்டின் விலை விதியாசத்தை வரியாக விதிக்கவேண்டும்.
3. ஒவ்வொரு நகையின்மீதும் நிரந்தர கணக்கு எண் (பான்) பொறிக்கப்படவேண்டும். தங்கம் என்பது ஏழைகளின் கைகளில் இருந்து கொள்ளை போகமலும் பணமுதலைகளின் பதுக்கல்களிருந்து  காக்கவும் இது பயனுள்ளதாய் இருக்கும். இப்படி (பான்) பொறிக்கப்படாத தங்க நகைகளை திருட்டு பொருளாகவே கருதவேண்டும்.
4.பொது மக்களிடம் இருக்கும் மொத்த பயன்பாட்டுத்தங்கத்தை கணகிட்டு அதன்மூலமும் அரசு தனது நாணயத்தின் மதிப்பை உயர்த்திக்கொள்ளலாம்.

இப்படி செய்தால் விலையேற்றம் குறையும் திருடு, லஞ்சம், பதுக்கல், வரதட்ச்சனை,கொலை மற்றும் கொள்ளை போன்றவற்றில் இருந்து மக்களை காக்கலாம் 

Tuesday, October 2, 2012

ஈமு கோழிகளும் இலிச்சவாய் மக்களும்

         நீண்ட நாட்களாக நான் இதை பற்றி எழுதவேண்டும் என்று நினைதிருந்தேன் இன்றுதான் அதற்கான நேரம் கிடைத்தது.

     மக்கள் ஏமாறுவது அவர்கள் தலைவிதி அவர்களை ஏமற்றுபவன் புத்திசாலி, ஏமாற்றுகாரன் வருவதை நாங்கள் பார்கிறோம் அவர்களுக்கு அனுமதியையும் நாங்களே அளிப்போம், ஏனென்றால் அதர்க்கான கட்டணத்தை அவர்கள் கொடுக்கிறார்கள் அதை அனுமதிப்பது அலுவலர்களின் கடமை கொள்ளையடிக்கும் ஏஜன்ஸி என்று ஒன்று துவங்கினாலும் அதற்க்கும் அனுமதி கிடைக்கும். 

     
      எந்த ஒரு புதிய தொழில் அல்லது புதுவகையன நிருவணங்களை துவக்கினாலும் அதைபற்றி ஆராயவேண்டியது அரசின் கடமை இல்லை இலட்சக்கணக்கான காவலர்கள் பனியாற்றுவது மக்களின் பாதுகாப்பிற்காக அல்ல மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்காக மட்டுமே 


       ஒரு பாஸ்போர்ட் அளிக்கும் அரசிற்கு அந்த ஒற்றைகுடிமகனுக்கு காவல் துறை விசாரனை தேவபடுகிறது. அவன் வெளி நாடு சென்று அங்கு ஏதாவது தவறு செய்துவிட்டால் இந்தியாவின் மானம் போய்விடும். நமது நாட்டிற்குள் யார் யாறைவேண்டுமானாலும் ஏமாற்றலாம் அது வெளினாட்டுகாரனாக இருந்தாலும் சரி.  எம்மக்கள் அதிக சதவிகிதத்தில் ஏமாளிகளக இருக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம். அப்போதுதான் நாங்கள் அரசியல் செய்யமுடியும் இப்படி இருந்தால்தான் எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

       ஊடகங்கள் எனப்படும் பத்திரிகை தொலைகாட்சி வானொலி எல்லாம் பத்திரிக்கை சுத்தந்திரம் ஊடகங்களுக்கான சுதந்திரம் என்றெல்லாம் கூப்பாடு போடுவார்கள் அவர்கள் ஒருபோதும் மக்களின் நலன்களைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை கவலைபடவேடியதும் இல்லை. ஒரு ஏமாற்றுகார நிறுவனத்தினை ஒரு நளைக்கு நூறு முறை விளம்பரப் படுத்துவார்கள், அதே நிறுவணத்தின் குட்டு வெளிப்படும்போது அதே ஊடகத்தில் முக்கிய செய்தியாக வரும்  இந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை விளம்பரப் படுதியதர்க்காக  அந்த ஊடகத்தின்மீது குற்றம் பதியப்படுகிறதா இல்லை அந்த ஊடககங்கள் ஒரு மன்னிப்பாவது கேட்டிருகிறதா.

      மக்களாகிய நாங்கள் எங்களை இந்த ஏமாற்றுகாரர்களிடம் இருந்து பாதுகாத்துகொள்ள இயலவில்லை அப்படி முடிந்திருந்தால் அதற்கான விழிபுணர்வு எங்களுக்கு ஏற்ப்பட விட்டிருந்தால் நாங்களும் புத்திசலிகளாக இருந்திருப்போம் இந்த ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் கோமாளிகளாக மாற்றியிருப்போம்.

    மானத்தை விற்கிறவன் விபச்சாரி ஏமாற்று நிறுவனங்களுக்கான விளம்பர நடிகர்களும் அந்த நிறுவணஙள் குட்டு வெளிப்படும்போது-- (விபச்சாரவிடுதிக்கு ரெய்டுபோனாத்தான் தெறியும் யார் யார் விபச்சாரினு). 

Thursday, June 14, 2012

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
கலைஞர் உரை:
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.
மு.வ உரை:
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

 பெரியார் உரைஎழுதி இருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும்

புராணங்களில் வரும் தேவர்கள் கயவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.