Showing posts with label Gold loan. Show all posts
Showing posts with label Gold loan. Show all posts

Monday, December 31, 2012

தங்க நகை கடனாளிகளே விழித்துக் கொள்ளுங்கள்.

           தங்க  நகை கடனாளிகளே விழித்துக்கொள்ளுங்கள் ஏற்கனவே எனக்கிருந்த இந்த சந்தேகம் இப்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது. மூன்று நிமிடத்தில் கடன் கொடுக்கிறார்கள் என்று ஆசைப்பட்டு முழுவதையும் இழந்துவிடாதீர்கள்.

       தனியார்களினால் நடத்தப்படும் நிறுவனங்கள் உங்கள் தேவைகளுக்கான பொது நோக்கமுள்ள சேவைகளை செய்வதற்கு அல்ல.உங்களின் தேவைகளைப்பயன் படுத்தி ஆசையைகாட்டி நாடுமுழுவதும் வலைவிரித்துள்ளனர் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

     தினந்தோறும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துகொண்டே போகையில் அந்த நிறுவனங்கள் உங்கள் தங்கத்தை ஒரே நாளில் மூடிவிட்டு கொள்ளையடிக்கலாம்.இது ஒன்றும் வங்கி அல்ல திவாலானால் வேறொரு பொது துறை வங்கியுடன் இனைத்து மக்களை மீட்பதற்கு இது  போன்ற அடகு நிறுவனங்கள் மூடப்பட்டால் அரசு ஒரு ரூபாய்கூட கொடுக்காது.

   இன்று GP Gold loan என்ற 40 கிளைகள் உள்ள நிறுவனம் அறிவிப்பின்றி மூடப்பட்டது. நாளை MP MF என இதன் பட்டியல் நீண்டுகொண்டே போகலாம்.   அண்ணாமலை படத்தில் ஒருபாட்டில் உயர்வதுபோல் இதன் சிலந்திகூடு மிக விரைவாக கட்டப்பட்டுள்ளது உண்மையான வளர்சி ஒருபோதும் இந்த அளவுக்கு சாத்தியம் இல்லை. சிந்தித்துப்பாருங்கள் சிரமம் பார்க்காமல் வங்கிகளை நாடுங்கள்.