Sunday, January 12, 2014

கொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.

ஊருக்குள்ள எல்லாரும் என்ன பேசிக்கிடறாங்கனா. "

   நம் நாடு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மூன்று முக்கிய கட்சிகளின் போட்டியை எதிர் நோக்கியுள்ளது. அது கொலை கொள்ளை கொள்கை இந்த மூன்றுதான்.

  இதில் யார் ஓட்டு யாருக்கு என்று பார்ப்போம்.


1. கொலை காரர்கள் என்று சொல்லப்படுபவர்களை பிடிக்கின்றவர்கள் கொலைகார கட்சிக்கு வாக்களிப்பார்கள். 
2. கொலைகாரார்களை முற்றிலும் பிடிக்காதவர்கள் அவர்கள் வரவே கூடாது என்று நினைப்பவர்கள் கொள்ளைக்கார கட்சிக்கு மட்டும் தான் வாக்களிப்பார்கள்.
3. கொள்ளைகார கட்சியை முற்றிலும் பிடிக்காதவர்கள் மற்றும் கொள்கைகாரர்களை பிடித்தவர்கள் கொள்கைகார கட்சிக்கு வாக்களிப்பார்கள்.

   இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்பிடித்தவர்களின் வாக்குகளை மட்டுமே பெறக்கூடிய கட்சி கொலைகார கட்சி. யாருக்குமே பிடிக்காமல் ஆனால் அடுத்திருப்பவர்களை பிடிக்காததினால் மட்டுமே வாக்குகளை பெறக்கூடிய பிடிக்காதவர்களை தேடி தேடி பிடிக்கின்ற ஒரே கட்சி அது கொள்ளைகார கட்சிதான். 

    இங்க பாருங்க இந்தியாவில யாருக்குமே இந்த கட்சிய பிடிக்கிறதில்லை ஆனாலும் ஆச்சிய வச்சி ஆட்சியை பிடிச்சிடுவாங்க. இப்ப புரியுதா உங்களுக்கு யார் ஓட்டு யாருக்குனு.

   "இப்படி எல்லாம் நான் சொல்லவில்லை ஊருல எல்லாம் பேசிக்கிறாங்க."

    இதுக்கு மேலயும் யாருக்காவது புரியலைனா பின்னூட்டம் போட்டு புரிஞ்சுக்கோங்க.

No comments:

Post a Comment