Wednesday, December 26, 2007

தமிழுக்கு spelling and grammar அகராதியுடன் செய்தால் என்ன?

இப்போது English,French,Spanish போன்ற மொழிகளுக்கு உள்ளது போல் spelling and grammar வசதியை தமிழுக்கும் ஏற்படுத்தினால் என்ன. நாம் தட்டச்சிடும் போது ஏற்படும் பிழைகள் மற்றும் வார்த்தை அமைப்புகள் போன்றவற்றினை சரியாக மேம்படுத்த ஒரு நல்ல வசதியை ஏற்படுத்தலாம். மேலும் இது தட்டச்சு இட்ட பின் நாம் சரிபார்க்க செலவிடப்படும் நேரத்தையும் குறைத்துவிடும். குறிப்பாக ஒத்த ஒலியுடைய எழுத்துக்களை ர,ற ல,ள ண,ன போன்றவற்றை அடையாளம் கான அகராதியும் உடன் இனைந்திருந்தால் நமது எழுத்துக்களில் 100 சதவீதம் பிழையை குறைத்துவிடமுடியுமல்லவா.


ஒரு மொழி வளர்ச்சியடைய வேண்டுமானால் அதனைப் பயன்படுத்தும் அனைவருக்கும் அனைத்துப் பயன் பாட்டிற்கும் எளிமையாக இருக்கவேண்டும். நாம் பயன்படுத்தும் கணினியில் தட்டச்சிடும் போது keyboard ல் அதிகமாக shift key யின் பயன் பாடு இருக்கிறது இது ஒரு சில நேரங்களில் சரியான அழுத்தம் கிடைக்காத போது அதன் பயன் கிட்டாமல் போய்விடுகிறது. நாம் shift key யை அழுத்த சுண்டு விரலையே பயன்படுத்துகிறோம் இது அனைத்து விரல்களை காட்டிலும் நீளம் குறைவு அதன் வலிமையும் குறைவு. இப்படி ஏற்ப்படும் குறைகளை போக்க நிச்சயமாக ஒரு தீர்வினைக் கண்டாக வேண்டும்.

ஓசை செல்லாவும் அவருடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார் பயன்பாடற்ற எழுத்துக்களான ஙொ,ஙோ,ஙௌ போன்ற எழுத்துக்கள் பற்றி பதிவர்கள் சந்திப்பில் தெறிவித்ததாக கூறியிருந்தார். அதனுடன் தமிழுக்கு spelling and grammar அகராதியுடன் அமைப்பது பற்றியும் விவாதிக்கலாம் என்று எனக்கு தோன்றியது.

Monday, December 24, 2007

சிறை பெண்கள்

பெண்களே உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிகொள்ளுங்கள் தாங்களே சிறைக்குள் சென்று அடைந்துகொள்ளாதீர்கள் சுதந்திரப் பறவைகளாக தனித்து பறக்க கற்றுக்கொள்ளுங்கள். நான் பெண்ணீயம் பேசவோ ஆணீயம் பேசவோ இங்கு பதிவெழுதவில்லை மனிதனேயம் பேச விரும்புகிறேன். பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று புலம்கிறீர்கள் ஆண்கள் ஏதாவது சொன்னால் பெண் சுதந்திரத்தை பற்றிய கவலை எல்லாம் பெண்களுக்குத்தான் இருக்கும் என்றும். அப்படி பெண்ணீயம் பேசும் ஆண்கள் எல்லாம் தீவிர வாதிகள் போலியாக பேசுகிறார்கள் அவர்கள் யோக்கியதை எல்லாம் வெளி வேஷம் என்றெல்லாம் சொல்லிவிடுவார்கள்.

எனக்கு ஒரு கேள்வி எழுகிறது அதற்கான விடை எனக்கு இதுவரைத் தெறியவில்லை இந்தியா சுதந்திரம் பெறும் போது ஆண்களுக்கு மட்டும் என்று கேட்டு தனியாக சுதந்திரம் வாங்கிக்கொண்டார்களோ என்னவோ தெறியவில்லை. நான் சுதந்திரம் வாங்கும்போது பிறக்கவில்லை அதனால் எனக்கு சரியாக தெரியவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் "எப்பொருள் யார்யார்வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு" என்று வள்ளுவரே கூறி இருக்கிறார்.

பெண்கள் எதையெல்லாம் சுதந்திரமாகக் கருதுகிறார்கள் யார் யாரிடம் இருந்து என்ன என்ன சுதந்திரம் வேண்டும் என்ன என்ன உரிமை வேண்டும் என்று ஒரு பட்டியல் இட்டுக்கூறினால் நாமும் அதை கொடுக்க அல்லது வாங்கி கொடுக்க முயற்சிக்கலாம். எதுக்கு இப்படி தொண்டை வலிக்க பெண்ணுரிமை பெண் சுதந்திரம் என்று கத்திக்கொண்டு இருக்கவேண்டும். தப்பா நினைக்காதிங்க இவன் யாரு இதெல்லாம் கேக்க வந்துட்டான் என்று குறைந்த பட்சம் எனக்கு வரும் என் மனைவிக்காவது அந்த சுதந்திரத்தை என்னால் வழங்க முடியுமா என்று பாக்கலாம்.

எதுக்கு இவங்க எப்போதும் சுதந்திரம் சுதந்திரம் என்று போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். பேசாமல் அவங்கக் கேக்குறத மொத்தமா கொடுத்துட்டா இந்த ஒரு பிரச்சினை ஒழிந்துவிடும். அடுத்து நம்ம செய்யவேண்டிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வேலைகள் எவ்வளவோ இருக்கு அத போய் பாக்கலாம். இவங்களுக்காக எவ்வளவோ கொடுத்துட்டோம் ஆப்டரால் செலவே இல்லாத சுதந்திரம் இத கொடுக்க மாட்டோமா.


தனி கூடு ஒன்று வேண்டும் பெண் குருவிக்கு அது
விரும்பினால் அணுமதி வேண்டும் ஆண் குருவிக்கு!
பொருள் ஈட்ட வேண்டும் பெண் குருவிக்கு அதை
காத்திடவும் பலம் வேண்டும் பெண் குருவிக்கு!

-புரட்சி தமிழன்.

கிருஷ்ண லோகம்.

இது நான் எழுதும் கதை அதை எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன் அதை கேக்க முகத்தை மறைத்துக்கொண்டு வரும் எந்த அனானிக்கும் அருகதை இல்லை.

அஸ்த்தினா புரத்தில் திரெளபதி வழக்கம் போல் ஒரு நாள் நந்தவனத்திற்கு பூப்பறிக்க சென்றபோது நந்தவனத்துக்கு அருகே வசிஷ்ட்டர் தவம் செய்து கொண்டு இருந்தார். அதை கண்ட திரெளபதி வசிஷ்ட்டர் மிகுந்த சிறத்தையுடன் தவன் செய்து கொண்டிருகிறார் எனவே அவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாள். பிறகு தவத்தில் உள்ள வசிஷ்ட்டருக்குத் தேவையான பணிவிடைகளை செய்தார். இதைக்கண்ட வசிஷ்ட்டர் திரெளபதியிடம் உணக்கு ஏதாவது கொடுக்கவேண்டுமே என்று நினைத்து ஒரு அரை டஜன் வரம் கொடுத்தார்.

வரத்தைப் பெற்றுக்கொண்ட திரெளபதிக்கு வசிஷ்ட்டர் கொடுத்த வரங்கள் எப்படி இருக்கும் என்று சோதித்து பார்க்க நினைத்தாள். ஒரு நாள் பாத் டப்பில் குளிக்கும்போது திடீர் என ஞாபகம் வர ஒரு வரத்தை தன் தோள்பையில் இருந்து எடுத்து சோதிக்க தயாரானாள். அப்படியே பாத்டப்பின் மேல் அமர்ந்து இன்கேண்டசன்ட் லேம்ப்பை நோக்கி ஒரு வரத்தினை ஏவினாள் அந்த வரத்தினால் கவரப்பட்ட இன்கேண்டசன்ட் லேம்ப் ரோபோவாக உருமாரி கீழே இறங்கி வந்தது. ரோபோவை கண்ட திரெளபதி அதன் அருகில் ஓடிவந்து எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த ரோபோ என்று கட்டி தழுவி ஒரு முத்தம் இட்டாள்.

முத்ததில் தில் மயங்கிய ரோபோ திரெளபதியை பியார்கர ஆரம்பித்தது பியாரின் முன் விளைவாக திரெளபதி ஒரு பச்சீ லியா. சிறிது நேரத்தில் ரோபோவானது இன்கேண்டசன்ட் லேம்பினுள் சென்று மறைந்துவிட்டது. இந்த முதிர்ந்த வயதில் கணவன் இறந்த பின்பு ஒரு பச்சீயுடன் சென்றால் துனியா என்ன சொல்லும் என்று நினைத்து அந்த பச்சியை யு.டி.ஐ லீடர்இகிவ்டி குரோத் மியுச்சுவல் பண்டில் டெபாசிட் செய்து விட்டாள். ஒரு 5 ஆண்டுகள் கழித்து உடல் நிலை மிகவும் மேஷமாக இருக்கவே டெபாசிட்டை லெளட்டினாள் அப்போது பச்சீயுடன் சேர்ந்து ஒரு சோட்டா பச்சீயும் வளர்ந்திருந்தது.

திரெளபதி அந்த இரண்டையும் எடுத்து பஜ்ஜி பாக்ஸில் போட்டு வீட்டுக்கு கொண்டுவந்தாள். வீட்டில் கேந்த் கேளிக் கொண்டிருந்த திரெளபதியின் பேரன் இரண்யன் புட்டியை பார்த்ததும் ஓடிவந்து தோள்பையை பிடுங்கினான். வேக வேகமாக அந்த பையினுள் என்ன இருக்கிறது என்று பார்த்த இரண்யன் பஜ்ஜி பாக்ஸை எடுத்து திறந்து பார்த்தான். அவன் பார்த்தவேகத்தில் டர் ஆகிவிட்டான் பஜ்ஜி பாக்ஸில் இருந்து இரண்டு பச்சீ வருகிறது. பிறகு திரெளபதி தான் பீய வைத்திருந்த சராப் எடுத்து அவன் மூவில் தெளித்தாள் ஹராம்ச எழுந்த அவன் கோபம் கொப்பளிக்க புட்டியை ஓங்கி அறைந்தான்.
கோபம் கொண்ட திரெளபதி கடல் கடந்து போக தீர்மானித்து புரப்படலானாள் இரண்யனுக்கு தெறியாமல் அந்த பச்சீகள் ஒரு தவாவை திரெளபதியிடம் கொடுத்துவிட்டார்கள்.

ஒரு நாள் பொருத்திருந்த இரண்யன் அந்த பச்சீகளை அடித்து விரட்டினான் வெளியே போன அந்த பச்சீகள் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். வழக்கு முடிவதர்க்குள் இருவரும் படா ஆத்மீ ஆகிவிட்டார்கள் பெரிய பச்சீயின் பெயர் கிருஷ்ண சின்ன பச்சீயின் பெயர் ராம. வழக்கின் முடிவில் ராமகிருஷ்ணர்களின் பக்கம் வழக்கு வெற்றி பெற்றது கனூன் படி கோட்டை அவர்களுக்கும் பாதி கிடைத்தது.
ராமகிருஷ்ணர்கள் வெற்றி பெற்ற குஷியில் வேகமாக தெளடுத்தி கோட்டைக்கு சென்றார்கள் கோட்டைக்கு சென்றதும் அங்கு ஒரே ஜாக்டா உவா. இரண்யன் கூறினான் உங்களோட கோட்டையை ஆதா கட் பண்ணி எடுத்துகிட்டு போ என்று கூறினான். கோட்டையை பாதி கட்பண்ணி எடுத்துக்குனு போக முடியாது என்று அந்த பாதியை இரண்யனுக்கே விற்றுவிட்டு விதேஷ் புரப்பட்டார்கள். ஏற்கணவே கடல் கடந்து சென்ற திரெளபதி விதேஷ்ல் புட்டிக்கு யாரும் வேலை தராததால் எலாஸ்டிக் சர்ஜரி செய்து சோட்டா லடுக்கி ஆகியிருந்தாள்.

விதேஷ் வந்த ராமகிருஷ்ண அங்கு ஒரு வேலை தேட ஆரம்பித்தனர் சில நாட்கள் கழித்து கம்சன் அண்டு கம்பெனியில் ஒரு காண்ட்ராக்ட் வேலை கிடைத்தது. அதே கம்பெனியின் அலுவகலத்தில் திரெளபதியும் வேலை செய்து கொண்டிருந்தாள் சிறிது நாட்களில் ராமகிருஷ்ணர்களுடன் திரெளபதி மற்றும் அவள் தோழி சீத்தாவுடன் நட்பு உண்டானது. அதுவே போக போக பியார் ஆக மாறியது சீத்தா கிருஷ்னவுடனும் திரெளபதி ராமவுடனும் பியாரினார்கள். அப்போது ஒரு நாள் கம்பெனி எம்.டி கம்சன் அவர் நன்பர் ராவணணுடன் கம்பெனியை பார்வையிட வந்தனர். அங்கு சீத்தாவின் அழகை கண்டு அலுவலகத்திலேயே அவளுடைய துப்பட்டாவை கம்சன் உருவ ஆரம்பித்தான் இதை கண்ட ராம பிரின்ட்டர் கேட்ரேஜ்ஜில் இருந்த டேப்பை துப்பட்டாவில் முடிந்து விட்டான்.கம்சன் உருவ உருவ டேப் வந்து கொண்டே இருந்தது அதர்க்குள் மருமுனையும் முடிச்சு போட்டு விட்டதால் முடிவே இல்லாமல் வந்து கொண்டே இருந்தது. உருவி உருவி டயர்டு ஆகி மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். அங்கு வந்த ராவணண் கம்சனை கொண்டுபோய் மருத்துவமணையில் சேர்த்தான். இதை கேள்வி பட்ட ராவணண் கோபமுற்று திரெளபதியை லிப்ப்டில் வைத்து மொட்டை மாடிக்கு கொண்டு சென்று விட்டான். திரெளபதியை லெளட்ட போலீஸ் படையோடு இன்னொரு மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து ஜல்லி கல்லினை கொடு அடித்து திரெளபதியை லெளட்டினார்கள்.

இவர்கள் அடித்த ஜல்லி கல் திரெளபதி மீதும் பட்டதால் மண்டையில் அடிபட்டு கூன் வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த திரெளபதி ராமகிருஷ்ண இருவரையும் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுவிட்டாள். சிறிது நேரம் கழித்து கீழே வந்து பார்த்தாள் இருவரும் மர்கயா. என்ன செய்வது அவசரப்பட்டு தவறு செய்துவிட்டோமே என்று என்னி வருத்தப்பட்டாள் அப்போது உடன் இருந்த போலீஸ் அவளை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியாது அந்த வழக்கில் திரெளபதிக்கு எதிராக ராவணண் கொலையை நேரில் பார்த்ததாக சாட்சிகூறவே அவளுக்கு நீதிபதி கனூன் படி பாஃர்ஸி வழங்கினார். பின்னர் சீத்தாவும் ராவணணும் ஷாதிகர்தியா திருமண பரிசாக அவர்களுக்கு அந்த கம்பெனியையே கம்சன் பரிசாக அளித்தான்.

பொருள் விளக்கம்.

இன்கேண்டசன்ட்லேம்ப்- விளக்கு (பல்பு)
தில்- மனம்
பியார்கர்- காதல் செய்
பச்சீ- குழந்தை
லியா- பெற்றுக்கொள்
துனியா- உலகம்
மேஷம்- மாடு
லெளட்டு- திருப்பி
சோட்டா- சிறிய
பஜ்ஜி- ஒருவகை உணவு
கேந்த்- பந்து
கேள்- விளையாடு
புட்டி- கிழவி
டர்- பயம்
பீய்- குடி
சராப்- சாராயம்
ஹராம்சே- மெதுவாக
தவா- மருந்து
கனூன் - சட்டம்
குஷி- மகிழ்ச்சி
தெளடோ- ஓடு
ஜாக்டா- சண்டை
உவா- ஆனாது
ஆதா- பாதி(அரை)
விதேஷ்- வெளி நாடு
லடுக்கி- பெண்
கூன் - ரத்தம்
மர்கயா- செத்துவிட்டார்
பாஃர்ஸி- தூக்கு தண்டனை
ஷாதி- திருமணம்
கர்தியா- செய்துகொள்ளுதல்.

Saturday, December 22, 2007

நான் எழுதும் தமிழில் இருக்கும் சில பிழைகளுக்கு காரணம் இவை தான்.

நான் தமிழ் தெரியாது என்று கூறும் மற்ற சிலரைப்போல் சிறுவயதில் இருந்தே ஆங்கில மீடியம் எல்லாம் படிக்கவில்லை. நான் தமிழ் வழியில் தான் 12 ஆம் வகுப்புவரை படித்தேன். பிறகு எப்படி உனக்கு மட்டும் தமிழில் இத்தனை எழுத்துப்பிழைகள் மற்றும் உன் எழுத்துக்கள் இத்தனை இலக்கணப் பிழையாக இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நான் சிறுவயது முதலே மற்றவர்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமாகவே வளர்ந்தவன் (அப்படித்தான் நான் நினைத்து கொண்டிருகிறேன்). எப்போதும் எதிலும் சற்று சிந்திப்பது என்பது எனது பழக்கமாகவே ஆகிவிட்டது . எதைப்பார்த்தாலும் இது எப்படி இயங்குகிறது எப்படி செயல் படுகிறது என்பதின் அடிப்படையை தெறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் அதை ஆராய்ந்து விடுவது எனது பழக்கமாகிவிட்டது எதனையும் முடியாது என்று நான் ஒதுக்கியதும் இல்லை.


நான் எந்த வேலையை எடுத்துச் செய்தாலும் அதில் நிச்சயம் தரம் இருக்கும் மேலும் எடுத்தவேலையை முடிக்காமல் விட்டதும் இல்லை தெரியாத வேலையையும் சிறப்பாக செய்திருக்கிறேன். ஆனால் நான் தற்போது எழுதும் தமிழ் எழுத்துக்கள்தான் தலையிலே என்னை தட்டி வைத்திருக்கிறது அதைப் படிப்பவர்களும் என்னைக் குட்டி(திட்டி) வார்த்தைகளால் அறைந்தும் இருக்கிறார்கள். இதற்காக நான் வெட்கப்படவோ இல்லை வருத்தப்படவோ இல்லை மாறாக நான் அவர்களை என் எழுத்தின் தரத்தை உயர்த்தவந்த தர கட்டுபாட்டாளர்களாகத்தான் கருதுகிறேன்.


எனக்கு சிறுவயது முதலே மொழி பாட திட்டத்தின் மீது இருந்த அதிருப்தி வெறுப்பு இதுதான் என்னை இந்த நிலைக்கு தள்ளியது. எனக்கு அப்போது தோன்றிய எண்ணம் எல்லாம் மொழிப்பாடங்கள் ஆக்க பூர்வமாக நமக்கு எதையும் கற்றுத்தருவதில்லை என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது தான் காரணம். தமிழ் மொழிப்பாடத்தை எடுத்துக்கொண்டால் செய்யுள் பகுதிகளும் உப்புக்கு உதவாத உரைநடைகளும்தாம் புத்தகத்தை நிரப்பி இருந்தது. அந்த சிறுவயதில் எனது அறிவுக்கு எட்டாத கவிதைகள் காதல் காவியங்கள் அந்த காவியங்களை சிறுவயதாக இருக்கும் மாணவர்களிடத்தில் இது வயதிற்கு ஏற்றதல்ல எனக்கருதி ஆசிரியர்கள் சரியாக விளக்காமல் விட்டதும். மேலும் அதனை அப்படியே மனப்பாடம் செய்து தாளில் பதிவிறக்கவே செய்ய வைத்தார்கள்.


ஒருவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலை எனக்கு எப்போதுமே இல்லை ஆகையால் எனக்கு இந்த மனப்பாடம் செய்வது எல்லாம் பிடிக்காமல் போனது. நான் பிறந்ததோ இந்து சமூகத்தில் என் வீட்டிலும் அக்கம் பக்கத்து வீட்டிலும் சாமி கும்பிடுவார்கள் இந்து கடவுள்களைப் பற்றின கதைகளையும் கூறுவார்கள். நம்து தமிழ் பாட புத்தகத்திலோ செய்யுள் பகுதியில் இந்து முஸ்லீம் கிரிஸ்த்து என இட ஒதுக்கீடு வழங்கி வைத்திருப்பார்கள். எந்த ஒரு தமிழ் ஆசிரியரும் இந்த மூன்றையுமே சரியாக விளக்கவும் மாட்டார். மேலும் எனக்குக் கணக்கு பாடம் நடத்தும் ஆசிரியை ஒருவர் இருந்தார் அவர் கிறிஸ்த்து மதத்தைச் சார்ந்தவர் ஆகையால் வகுப்பில் பாடம் நடத்துவதைத் தவிர்த்து மத போதனையில் இறங்கிவிடுவார். இந்து மத கடவுள்களைப் பேய் என்றும் சாத்தான் என்றும் கூறுவார்.

எனக்குச் சிறுவயதிலேயே மற்றொரு பழக்கம் உண்டு யார் எதை சொன்னாலும் உடனே அதை வேறு யாராவது ஒருவரிடத்தில் சொல்லிவிட வேண்டும் இல்லை எனில் என் மண்டை வெடித்துவிடும். அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன் நமது வீட்டில் பிள்ளையாரையும் முருகனையும் கும்பிடுகிறார்கள் நமது ஆசிரியை அந்த கடவுள்களை பேய் பிசாசு சாத்தான் என்று கூறுகிறார். அப்படி என்றால் நம்வீட்டில் எல்லாம் பேயையும் பிசாசையும் கும்பிட்டுக்கொண்டு இருக்கிறார்களா என நினைத்துக்கொள்வேன். இனிமேல் நம் வீட்டில் யாரும் பேய் பிசாசு போன்றவற்றை எல்லாம் கும்பிடக்கூடது என்று வகுப்பில் ஆசிரியை சொன்ன ஏசு நாதர் பற்றிய கதைகளை வீட்டில் சொல்வேன். இதை கேட்ட என் வீட்டில் உள்ளவர்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த ஆசிரியை மீது தலமை ஆசிரியரிடம் புகார் கூறினார்கள்.

இந்தப் பிரச்சினைகளைச் சந்தித்த எனக்கு இவ்வளவு சிக்கல் நிறைந்த இந்தப் பாடதிட்டமும் சேர்ந்து மண்டையைக் குடையவே சிக்கலே வேண்டம் என்று அந்தப் புத்தகத்தைத் தொடுவதே இல்லை. ஆங்கிலப் பாடமும் அப்படிதான் இது சற்று வேறுபட்டது இதிலும் என் அறிவுக்கு உகந்த விஷயம் எதுவும் தென்படவில்லை. மேலும் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடுவரை அனைவரும் சொல்லும் சுதந்திரக்கதைகள் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தித் துன்புருத்தி வந்தார்கள். மகாத்மா காந்தி, திருப்பூர் குமரன் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் போராடி அடிபட்டு செத்து ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றார்கள் என்று சொல்லவே. நம்மை அடிமை படுத்திய ஆங்கிலேயனின் மொழியான ஆங்கில புத்தகத்தை நாம் ஏன் படிக்கவேண்டும் என்று அதையும் தொடுவதில்லை.

இந்தக் குழப்பமான பாடத்தையும் நம்மை அடிமைப்படுத்தியவனின் பாடத்தையும் படிக்காமல் தேர்வு எழுதுவது எப்படி தேர்வில் தோல்வியுற்றால் வீட்டிலோ தோலை உரித்துவிடுவார்கள். பிறகு வேறேன்ன செய்ய முடியும் என் அருகில் அமரும் மாணவனின் விடைத்தாளை அப்படியே ஜெராக்ஸ் செய்வது தான் தேர்வு என்று ஆகிவிட்டது. அருகில் தேர்வில் அமரும் அந்த மாணவனுக்குத் தேர்வு காலங்களில் பால் கோவாவுக்கும் பஞ்சு மிட்டாய்க்கும் பஞ்சம் வந்ததே இல்லை. பிறகு பள்ளிப் படிப்பு முடிந்து பொறியியல் கல்வி படிக்கும் போது சரியான தமிழ் மொழியில் புத்தகங்கள் இல்லாததால் நான் ஆங்கிலத்திலேயே படிக்க நேர்ந்தது.

இப்போது நான் மதில் மேல் நிற்கும் பூனையாக நிற்க்கிறேன் எந்த பக்கமும் குதிப்பதற்காக அல்ல எந்தப்பக்கம் என்ன நடக்கிறது என்று பார்த்துகொண்டே இருக்கத்தான் அடுத்து ஏறினால் மாடிமீது மட்டும்தான் கீழே குதிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இது தான் நான் சரியாக தமிழ் பிழையின்றி எழுத முடியாமல் போனதுக்கு காரணம். இப்போதும் கூட நினைத்துக்கொள்வேன் என்னைப்போல் எத்தனை நபர்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்று. நான் பள்ளிப் படிப்புகளை எல்லாம் முடித்து பத்து ஆண்டு களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம் பாடதிட்டம் அப்படியே இருப்பது நான் தமிழ் பதிவில் கைவைத்த போதுதான் எனக்கு மனது வலிக்கின்றது.

இன்னும் இப்படியே எத்தனை நாளைக்குத்தான் நமது பாடதிட்டங்கள் உப்புக்கு உதவாத மொழிப்பாடங்களாக இருப்பது. எது எது எந்த வயதில் கற்பித்தால் புரியுமோ அதை அதை அந்த வயதில் தான் கற்பிக்க வேண்டும். நீலி தன் தலைவனை கானாத துயரத்தினை அண்ணப்பறவையிடம் கூறினாள் என்றால் ஒரு 11 வயது சிறுவனுக்கு என்ன புரியும். நீலி ஏன் தலைவனை கானவேண்டும் அப்ப தலைவன் என்றால் யாரு அண்ணப்பறவையிடம் சொன்னால் அது போய் சொல்லுமா இப்படி எல்லாம் சிந்திக்க மாட்டானா. பாடதிட்டம் தயாரிப்பவர்கள் அந்தத வயது பருவத்திற்கே சென்று புரிந்து தயாரிக்க வேண்டாமா. ஏன் தேவை அற்ற குப்பைகளை எல்லாம் போட்டு புத்தகத்தை நிரப்ப வேண்டும் எது வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேவையோ அதை மட்டும் கொடுத்தால் போதாதா.

பின் குறிப்பு:-

நான் தமிழ் மொழியை நன்றாக எழுத கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் மொழி என்பது என் தனிப்பட்ட சொத்தும் அல்ல அது என்னையும் என்னை சார்ந்த சமூகத்தையும் சார்ந்தது. இது ஆரம்ப காலம் முதல் அப்படியே இருந்திருக்க முடியாது பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும். தமிழ் என் தாய் மொழியாகவும் நான் நன்றாக சிந்திக்க பேசத்தெரிந்த மொழியாகவும் இருப்பதினால் நான் சார்ந்த சமூகத்தை முன்னேற்ற முயற்சிக்க என் சிந்தனைகளை வெளிப்படுத்த அவசியமாகத் தமிழ் இலக்கணத்துடன் எழுதக் கற்றுக்கொண்டே தீர வேண்டும் (என்னுடைய பெற்றோர் வைத்த பெயர் ராமஜெயம் இது என்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்துவதாலும் இதன் பொருள் எனக்கு பிடிக்காத தாலும் வேறு பெயர் மாற்றிக்கொண்டேன் பேச முடியாத பெண்ணுக்குத் தேன்மொழி என்று பெயர் இருப்பதில்லையா அப்படித்தான் நான் என் புனை பெயரையாவது புரட்சி தமிழன் என்று வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன் அப்போது தான் என் பெயரைப் பார்த்தாவது சிலர் சினமுற்று திட்டியாவது திருத்த உதவி புரிவர் என்று தான்) நண்பர்களே தயவு செய்து என் பதிவுகளைப் படிக்கும்போது ஏதாவது பிழை இருப்பின் பின்னூட்டம் இடுங்கள் எழுதக் கற்றுக்கொள்கிறேன் என் மனம் புண்படும் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.வாசித்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday, December 19, 2007

(Audults only) அவன் எதிர்பார்க்காத தருனங்கள்

ஒரு நாள் பூவிழவன் தூங்கிகொண்டிருந்த போது அவன் எதிர்பாராத தருனத்தில் அது நடந்தது. அன்றுதான் அவன் அவனது அனைத்து கிடப்பில் கிடந்த வேலைகள் அனைத்தையும் பெருத்த சிரமத்துடன் செய்துமுடித்தான். அவன் வேலைகள் செய்து முடித்த அயர்ச்சியில் அவன் மிகவும் சோர்வுடன் இருக்கவே குளியலறைக்கு சென்று லேசான வெது வெதுப்பான சுடு நீரில் குளித்துவிட்டு வந்தான். பிறகு இரவு உடைகளை உடுத்திக் கொண்டு தன் படுக்கை அறைக்கு சென்று மின் விசிறியை போட்டு விட்டு படுக்க ஆயத்தமானான். மின் விசிறியில் இருந்து லேசாக காற்று மெல்லிய அலையாய் வீசியது நல்ல களைப்பில் இருக்கவே அவன் படுத்த சிறிது நேரத்தில் தூங்கிவிட்டிருந்தான். அந்த இரவு வேளையில் வாசலின் ஓரங்களில் உள்ள பூச்செடிகள் நிலவொளியில் தென்றலுடன் சேர்ந்து மெல்லிய நடனம் ஆடிக்கொண்டிருந்தது.

கார்க்குழலி உறக்கம் இன்றி விழித்திருந்தாள் அவள் வீட்டில் இருந்து யாருக்கும் தெறியாமல் பூவிழவன் வீட்டிற்க்கு வந்தாள். அவன் வீட்டில் நுழைந்ததும் மெல்ல மெல்ல பூனை நடை போட்டு பூவிழவனின் படுக்கை அறைக்குள் நுழைந்தாள். அங்கு பூவிழவன் நன்கு தூங்கிக்கொண்டு இருக்கிறான் அவனைப்பார்த்ததும் இவள் மனதில் ஓர் எண்ணம் எப்படியும் தான் வந்த காரியத்தை சாதித்து விடுவதென்று. இப்போதுதான் வந்து படுத்து உறங்கிக்கொண்டு இருக்கிறான் எனவே சிறிது நேரம் கழித்து நமது வேலையை ஆரம்பித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு அறைக்கதவை மூடிவிட்டு கூடத்துக்கு வந்துவிட்டாள். ஒரு நாற்க்காலியில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்ச்சி பெட்டியை உசுப்பினாள் அது தேர்தல் நேரம் ஆகையால் ஒரு புதிய கட்சியின் தேர்தல் அறிக்கைகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

அந்த புதிய கட்சியில் கொள்கை பரப்பு செயலர் அறிக்கைகளை படித்துக்கொண்டிருக்கிறார்.

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிச்சை காரர்கள், அனாதைகள், ஏழைகள் என்று யாருமே இருக்கமாட்டார்கள்.
2. லஞ்சமும் ஊழலும் முற்றிலும் ஒழிக்கப்படும்.
3. மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்
4. சிறைகள் வெறுமையாகவே இருக்கும்
5. குற்றம் முற்றிலும் ஒழிந்திருக்கும் யாரும் குற்றம் செய்யும் வாய்ப்பின்றி இருக்கும்
6. நீதி மன்றங்கள் நிற்க ஆளின்றி இருக்கும்
7. குறைந்த பட்ச்சம் இலநிலைப்பட்டம் பெறாதவர்கள் ஒருவர்கூட இருக்கமாட்டார்
8. பசி எப்படி இருக்கும் என்று மறந்திருப்பர்.
9. திருடு கொலை கொள்ளை எல்லாம் ஒரு பழைய தமிழ் சொல்லாக இருக்கும்.
10. சாலைகள் நெறிசல் இன்றியும் பழுது இன்றியும் பராமரிக்கப்படும்.
11. தெருக்களும் சாலைகளும் மண் தூசியின்றி சுத்தமாக பராமரிக்கப்படும்.
12. அனைத்து கடைகளிலும் பயன் பாட்டிற்க்கு உகந்த தரமான பொருட்களே கிடைக்கும்
13. குடினீர் முற்றிலும் சுத்தம் செய்து வழங்கப்படும்.
14. உணவு விடுதிகள் நியாயமான விலையில் சுத்தமான உணவுகள் சுத்தமான சூழலில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.
15. சுகாதாரம் நன்றாக பராமரிக்கப்படுவதால் பிரசவத்திற்க்கு தவிற வேறு எதற்க்கும் மருத்துவமணைக்கு வரமாட்டார்கள்.
16. அனைத்து மக்களுக்கும் வருடாந்திர சோதனைகள் செய்து உடலில் உருவாகும் ஊட்டச்சத்து குறைகள் சமன் படுத்தப்படும்.
17. அனைத்து வாகனங்களும் மாதாந்திர சோதனை செயவதின் மூலமும் சிறப்பான சாலை அமைப்பாலும் விபத்தே ஏற்ப்படாதிருக்கும்.
18. யாரும் யாரையும் எதையும் ஏமாற்ற முடியாத அமைப்பு ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கும்.
19. அனைவருக்கும் அமெரிக்க குடிமகனைக்காட்டிலும் ஒரு படி மேலான வசதி வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கும்.
20. 24 மனி நேரமும் உதவி மையம் தயாராக இருக்கும் யாரும் எப்போதும் தொலைபேசி மூலமும் இனையம் மூலமும் உதவி கோரலாம்.
21. நாடு முழுவதும் மாசற்ற வாழ் நிலை சூழ்னிலையாக மாற்றப்பட்டிருக்கும்.
22. அனைத்து மாநகரங்களும் அதிவேக மாநில அரசு இரயிலினால் இனைக்கப்பட்டிருக்கும்.
23. அனைவரின் உரிமைகளும் பாது காக்கப்பட்டிருக்கும்.
24. வேலை வாய்ப்பின்றி யாருமே இருக்க மாட்டார்கள்.
25. அனைத்து வாகனங்களும் நவீன மயமாக்கப்பட்டு ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு விபத்தேதும் நடக்காமல் சாட்டிலைட் மூலம்
கண்கானிக்கப்படும்.
26. அனைத்து விடுதிகளும் நட்ச்சத்திர அந்தஸ்த்து பெற்ற ஓட்டல்களுக்கு இனையாக சுகாதாரம் பராமரிக்கப்பட்டிருக்கும்.
27. உலகில் உள்ள அனைத்து நவீன தயாரிப்புகளின் தொழிர்ச்சாலைகளும் அரசினாலேயே நிறுவப்பட்டிருக்கும்.
28. ஆராய்ச்சி ஆர்வமுள்ள அனைவருக்கும் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டு ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டிருக்கும்.
29. வெளி மாநிலங்களில் உள்ளோர் இங்கு குடியேறவோ வேலை செய்யவோ இயலாதவாறு அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டிருக்கும்.
30. மது வகைகள் மற்றும் புகையிலை தயாரிப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கும்.
31. மக்களின் பணத்திற்க்கும் உழைப்பிற்க்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்படும். 32. அடகு கடைகள் தனியார் வட்டித்தொழில் முழுவது மாக ஒழிக்கப்பட்டிருக்கும்.
33. அனைவருக்கும் குறைந்தபட்ச்ச எல்லையில் கடன் அட்டைகள் வட்டியின்றி அரசினால் வழங்கப்படும்.
34. அனைத்து நகரங்கள் பேரூர்களில் 24 மனி நேரமும் உணவு முதல் அத்தனை அத்தியாவசியப்பொருட்களும் கிடைக்க செய்யப்பட்டிருக்கும்.
35. அனைத்து துறைகளிலும் முன்னேற அனைவருக்கும் தேவையான பயிற்ச்சிகள் அரசினாலேயே அளிக்கப்படும்.
36. உலகிலேயே மிகச்சிறந்த பாடதிட்டம் மானவர்களுக்கு வழங்கப்படும்.
37. அனைத்து அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் நவீன உள்கட்டமைப்புடன் மாற்றப்பட்டு தூய்மையாக பராகரிக்கப்படும்.
38. அனைத்து அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் ஆன் லைன் மற்றும் செயற்க்கை கோள் மூலம் இனைக்கப்படும்.
39. எல்லா பாடங்களும் எளிதில் அனைத்து மானவர்களும் புரிந்துகொள்ளும் அளவிற்க்கு பாடதிட்டம் இருக்கும்.
40. பாடதிட்டங்கள் வீடியோ காட்ச்சிகளாக விளக்கங்களுடனும் கதை தொகுப்புகளுடன் நேரடி ஒளிபரப்பாக திரையிட்டு காட்டப்படும்.
41. ஆசிரியர்கள் மானவர்களுக்கு ஏற்ப்படும் சந்தேகங்களை தீர்ப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும்.
42. காலத்தை வீனடிக்கும் தேவயற்ற அலுவலக வழிமுறைகள் அனைத்தும் மாற்றப்படும்.
43. அனைத்து திட்டங்களும் ஒப்பந்ததாரார் இன்றி அரசினாலேயே துரிதமாக செய்யப்படும்.
44. அனைத்து பணிகளுமே போர்க்கால அடிப்படை பணிகள் போலவே நடத்தப்படும்.
45. ஒரு நாளைக்கு 6 மனி நேரம் மட்டுமே பணி செய்யும் நேரமாக மாற்றப்படும்.
46. யாருக்கும் அதிக பணி சுமை மற்றும் கடினமான வேலைகள் செய்ய நேரிடாமல் வேலை அமைப்பு இருக்கும்.
47. அனைத்து பணியாளர்களும் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளின்படியே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
48. அனை வருக்கும் சராசரி ஆயுட்க்காலம் 90 ஆண்டுகளாக மாற்ற முயற்சி செய்யப்படும்.
49. ஒருவரின் வீட்டுக்கு வேறொருவர் வேலைக்காரார் களாக இருக்கமாட்டார்கள்.
50. அனைவரின் மகிழ்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் முழு உத்திரவாதம் அளிக்கப்படும்.
etc.......

எமது கட்ச்சியில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் அனைவரும் நல்ல அனுபம் மிக்க கல்வி மற்றும் அனுபவ முதிர்ச்சி பெற்றவர்கள் தேர்தலுக்காக காசு பணம் ஏதும் விரையம் இன்றி போடியிடுகிறார்கள். எனவே உங்கள் நன்மை கருதி எங்களுக்கு வாக்களிக்க விருப்பமாயின் வாக்களியுங்கள் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். என்று சொல்லி அவர் தன் உரையை முடித்துக்கொண்டார். கார்குழலி நாற்க்காலியை விட்டு எழுந்து அறைக்கதவை திறந்தாள்.
(தொடரும்.....)

Monday, December 17, 2007

மக்களின் மன நிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 10

மது அருந்தியவன் மன நிலை.

மது அருந்தியவுடன் மனிதனின் பலம் அதிகரித்துவிடுகிறது தனக்குள் ஒரு புத்துணர்ச்சி ஆனால் மந்தமான புத்துணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. அதாவது உட்கார்ந்துகொண்டே ஓடுவது போல் ஒரு தெம்பு வரும். அவன் குடித்த மதுவானது தன் வயிற்றினுள் இருக்கும் உணவு மற்றும் கொழுப்புகளை வேகமாக சக்தியாக மாற்றுகிறது. மேலும் இந்த மாற்றப்பட்ட சக்திதான் அவனை ஒரு சாதாரண மன நிலையில் இருந்து அசாதாரண மன நிலைக்கு மாற்றுகிறது. இப்போது அவன் மனதில் எந்த வித உணர்ச்சிகள் இறுக்கங்கள் இருந்தாலும் அப்படியே அதற்க்கு எதிராக மாறிவிடுகிறது.

இப்போது அவனுக்கு பயம் அச்சம் வெட்கம் எல்லாம் போய்விட்டு இருக்கும் சாதாரண நிலையில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நினைத்தானோ அதனை எல்லாம் செய்ய இப்போது எதுவும் தடையாக இருப்பதாக தெரியாது. பிறர் என்ன சொல்வார்கள் என்ன நினைப்பார்கள் என்ற எதுவும் அவனுக்கு தோன்றாது. அப்போது அவன் ஒரு புதிய உலகிற்க்கு வந்திருப்பான் அங்குதான் அவன் உன்மையான உலகத்தில் இருப்பான். அவன் மனம் தற்செயலாக சிந்தனைக்கு விடுப்பு கொடுத்திருக்கும் இப்போது எதை பற்றியும் சிந்திக்க முடியாது. மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே செயலாக வெளிப்படுத்துகிறான். யாரும் ஒருவனை குடித்து விட்டு உளறுகிறான் என்று சொல்லக்கூடாது அப்போதுதான் உண்மையாக அவன் மனதில் என்ன இருக்கிறதோ அதை கூறுவான் செய்வான்.

மது அருந்துவதனால் அவன் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறான் என்று சொல்வார்கள் அதுவல்ல உண்மை மது அருந்தியவன் அனைவரும் ஒரேமாதிரியான செய்கைகளை செய்வதில்லை. ஒழுங்கீன மனது கொண்டவன் தான் ஒழுங்கீனமாக நடந்து கொள்வான். இப்போது எது எது உண்மையாகவே பிடிக்கவில்லையோ அதன் மீது நேரடியாக வெறுப்பை எந்த வடிவத்தில் காட்டவேண்டும் என்று சாதரண நிலையில் நினைத்தானோ அதைத்தான் அப்போது காட்டுவான். உண்மையான அன்பு எல்லாம் அப்போது தான் வெளிப்படும் கோபமும் அப்படிதான் வெளிப்படும் ஒருவனை அடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் அப்போது அவன் கண்ணெதிரில் தென்பட்டால் அடித்துவிடுவான். இப்போது கூச்சம் வெட்கம் எல்லாம் போய்விட்டு இருக்கும் எதற்கும் வெட்கப்படவோ கூச்சப்படவோ மாட்டான். அவன் செய்கை அனைத்தும் யாருக்கும் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் என்ன செய்வானோ அதைத்தான் குடித்தபோது செய்வான்.

மீண்டும் சொல்கிறேன் குடித்துவிட்டு போதையில் உளறுகிறான் என்று நினைக்காதீர்கள் அவன் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். ஒரு சிலர் போதையில் தற்கொலை கூட செய்து கொள்வார்கள் அதற்க்குக் காரணம் அவர்கள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்திருக்கும் நாம் செத்துவிடவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கும். அதை தன் குடும்பம் குழந்தைகள் தாய் தந்தை குடும்ப கவுரவம் போன்றவற்றின் எதிர்கால நிலை கருதி அதை செயல் படுத்தாமல் இருப்பர் அந்த நபர் குடிக்கும் போது எல்லா தடைகளும் எடுபட்டு போய்விடுகிறது இப்போது தான் மட்டுமே என்ற எண்ணம் தோன்றுவதால் தற்கொலை செய்துகொள்ள நினைத்தவன் செய்துகொள்கிறான்.

இப்போது அவன் மனம் சுய சிந்தனையில் இல்லாமல் இருப்பதனால் அந்த கணத்தில் அவனது தேவையை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்கள் அப்போது நம்பிக்கைகுறியவர்களாகி விடுகிறார்கள். அவர்கள் சொல்வதை உண்மை என நம்புகிறான் அவர்கள் கேட்பதைக் கொடுக்கிறான் அவர்கள் சொல்வதை செய்கிறான். இதனால் அவனுக்கு எத்தனை பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது சட்ட விரோதமான செயல்கள், கொலை செய்தல் , அடித்தல், தன் மனைவியை கூட நம்ப மறுப்பது, தன் சொத்து பணம் முதலானவற்றை இழந்துவிடுவது, கேட்கும் இடங்களில் யோசிக்காமல் கையெழுத்திடுவது என சொல்லிக்கொண்டே போகலாம், இந்த தருணத்தில் மற்றொரு பெரிய பிரச்சினை வர வாய்ப்புகள் உள்ளது காம இச்சையில் உள்ளோரை அப்போது இச்சை தீர வாய்ப்பளித்து அதை படமெடுத்து மிரட்டுவது போன்ற செயல் கூட நடக்கலாம்.

நண்பர்களே விழிப்பாய் இருங்கள் யார் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது புதிதாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் சற்று கவனாக விழிப்புடன் இருக்கவும். ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை எண்ணம் தோன்றியவர்கள் தயவு செய்து குடிக்காதீர்கள் அது உங்களின் முடிவுக்கு வாய்ப்பாகிவிடும். மேலும் அலுவலக பார்ட்டிகளில் குறைவாக குடிப்பது நல்லது முடிந்தவரை கையில் ஒரு கோப்பை வைத்துக்கொண்டு அப்படியே நேரத்தை கடத்திவிடுவது சாலச்சிறந்தது. இல்லையெனில் சில சொல்லாமல் மறைத்த சொல்லக்கூடாத உண்மைகள் விசயங்கள் எல்லாம் உன்னிடம் இருந்து வாக்குமூலங்களாக பெறப்பட்டுவிடும் மறுநாள் என்ன கூறினோம் என்று நீங்களே மறந்திருப்பீர்கள்.

அம்மா பகவானின் அற்ப்புதம் வாரீர் அனிந்திடுவீர் வரதீட்ச்சைமாலை
என் பெயர் கே.டி.மாயாண்டி என் சொந்த ஊர் மூக்கருத்தம்பட்டி நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். வேலை வெட்டி ஏதும்
கிடைக்காமல் ஊர் ஊராய் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு நன்கு பரிட்ச்சையமான ஒரு நன்பர் ஏன் இப்படி எல்லாம் சுற்றிக்கொண்டு திரிகிறாய் நான் சொல்வதை கேள் என்றார். அப்போது அவர் " ஓம் சத் சித் ஆனந்த பர பிரம்ஹா புருஷோத்தம பரமாத்மா ஸ்ரீ பகவதி சமேத ஸ்ரீ பகவதே நமஹ" அப்படி ஒரு சுலோகம் சொன்னார். பின்னர் என்னிடம் அம்மா பகவான் என்று ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற சுவாமி
இருக்கிறார்கள் அவர்களிடம் வரதீட்ச்சை மாலை அனிந்து சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்றார்.

நானும் ஒரு தொலை பேசி என்னை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். பின்னர் ஒரு காயின் பூத்துக்கு போய் அந்த என்னுக்கு
தொலைபேசினேன். அப்போது அந்த நபர் எந்த மாவட்டம் என்று கேட்டார் நான் எதர்க்கு என்று கேட்டபோது வரதீட்ச்சை மாலை வழங்குவதர்க்காக ஒரு மாவட்டத்திற்க்கு ஒரு முகவர் இருக்கிறார் என்று கூறினார். பின்னர் நான் சிவகங்கை மாவட்டம் என்று சொல்ல அவர் வேறு ஒரு தொலைபேசி
என்னை கொடுத்தார். அந்த முகவர் கொடுத்த எண்ணை வைத்துக்கொண்டு எனது மாவட்ட முகவருக்கு போன்செய்தேன். உடனே அவரும் வந்து
பணத்தை கட்டிவிட்டு வரதீட்ச்சை மாலையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

நானும் மறு நாள் சென்று பணத்தை கட்டிவிட்டு வரதீட்ச்சை மாலை அனிந்துகொண்டேன். என்ன ஆச்சர்யம் நான் வீடு வந்து பார்க்கிறேன்
எனக்கு ஒரு தபால் வந்திருந்தது அதுவும் லண்டனில் இருந்து. உங்களுக்கு துனை மேலாலராக பனி நியமனம் செய்துள்ளோம் என்று. எனக்கு
மிகுந்த சந்தோஷம் நான் இது வரை வெளிநாடுகளுக்கு வேலைக்காக வின்னப்பித்ததே இல்லை. பிறகு நான் எப்படியும் அம்மா பகவானை
சந்தித்து விட்டுத்தான் போகவேண்டும் என்று நினைத்தேன். உடனே பாஸ்ப்போர்ட் விசா எல்லாம் ஒரு வாரத்துக்குல் எடுத்து விட்டேன் நேராக
அம்மா பகவானை தரிசனம் செய்தேன். அபோது அம்மா பகவான் கூறினார் இன்னும் உனக்கு திருமணம் ஆகவில்லை எந்த மாதிரி பெண்
வேண்டும் என்று கேட்டார் நான் கூறினேன் நல்லா அழகா சிரித்தால் கன்னத்தில் குழிவிழர மாதிரி இருந்தால் போதும் என்றேன்.

சென்னையில் இருந்து புரப்பட்டு லண்டன் அடைந்தேன். அங்கு லண்டன் விமான நிலையத்தில் டாக்ஸிக்காக காத்திருந்த போது என் அருகில்
ப்ரீத்தி ஜிந்தா வந்தார். நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா எனக்கேட்டார் நானும் ஆம் என்றுகூறினேன். உங்களைப்பார்த்தால் ஏதோ
கிராமத்தில் இருந்து வருபவர் போல் இருக்கிறீர்கள் என்ன ஊர் என்று கேட்டார் நானும் மூக்கருத்தம்பட்டி என்று கூறினேன். அதர்க்கு அந்த பேர்
என் வாயில் நுழையவில்லை என்றவர் சிறிது நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் உங்களை போன்ற கள்ளம் கபடம் இல்லாத ஆளை
பார்த்ததே இல்லை என்று கூறினார். சிறிது நேரம் கழித்து அவருடைய டாக்சி வந்தது உடனே நான் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு என்னிடம்
ஒரு கடிதத்தை கொடுத்தார் நான் என்ன இருக்கிறது என்று பார்ப்பதர்க்குள் காரில் அமர்ந்துகொண்டு பை பை சொன்னார்.

அந்த கடிதத்தில் உங்களை போன்ற நல்ல கள்ளம் கபடம் அற்ற கிராமத்து மனிதரை கண்டதில்லை நான் திருமணம் செய்தால் இப்படி ஒரு
வரணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஐ லவ் யூ என்று எழுதி கீழே அவருடைய மொபைல் நம்பரும் முகவரியும்
கொடுத்து இருந்தார். சிறிது நேரத்தில் என் டாக்ஸியும் வந்தது டாக்ஸில் ஏறி லண்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்க்கு சென்றேன். அவர்கள்
என்னிடம் எல்லாம் விசாரித்துவிட்டு உனக்கு மாதம் 37500 இங்கிலாந்து பவுண்டு சம்பலம் கொடுப்போம் தங்கும் வசதி உணவு வசதி அனைத்தும்
நிறுவனமே கொடுக்கும் என்றார்கள். உடனே எனக்கு கொள்ளை மகிழ்ச்சி உடனே அம்மா பகவானுக்கு போன்போட்டு நன்றி தெறிவித்தேன்
அவரும் மகிழ்ச்சி உனக்கு கூடிய சீக்கிரம் உன்னை விரும்பிய பெண் மனம் முடிப்பார் என்று கூறினார். தர்ச்சமயம் இங்கிலாந்தில் ஒரு மல்டி
நேஷனல் கம்பெனியில் வேலைசெய்து வருகிறேன். அனைவரும் வரதீட்ச்சை மாலை அனிந்திடுவீர் அம்மா பகவானை தரிசிப்பீர்.

" ஓம் சத் சித் ஆனந்த பர பிரம்ஹா புருஷோத்தம பரமாத்மா
ஸ்ரீ பகவதி சமேத ஸ்ரீ பகவதே நமஹ"


இப்படி எல்லாம் காலையில கனவு கண்டேன் யாரவது சொல்லுங்க விடியகாலை கனவு பலிக்குமா

மாவு ஆட்டும் வ.கி.மாநில அரசுகள்.

மாவு ஆட்டும் மாநில அரசுகள் என்றவுடன் என்ன இது புதிய கதையாக இருக்கிறதே என்று நினைக்கலாம் ஆனால் சில உண்மைகள் யாருக்கும் தெறியாமல்தான் போய்விடுகிறது. இப்போதெல்லாம் அரசியல் என்பதே வேலை பளுமிகுந்த ஒன்றாகிவிட்டது இடயரது ஓய்வற்ற வேலை என்ன பங்கு போடும் வேலைதான். யாருக்கு போக வேண்டிய பணத்தை பங்கு போடுகிறார்கள் என்று பாருங்கள்.

மாவோயிஸ்ட்டுகள் எனப்படுபவர்கள் யார் அவர்கள் என்ன செய்கிறார்கள். இவர்களும் மனிதர்கள்தான் இவர்களுக்கும் சாதாரன மனிதர்களுக்கு உள்ள அனைத்து குணங்களும் உள்ளன ஆனால் வசிப்பிடம் காடுகளும் குக்கிராமங்களும்தான். இவர்களுக்கு படிப்பறிவு இல்லை அதாவது அளிக்கப்படவில்லை இவர்கள் ஒருவர் இருவர் அல்ல ஒரு மாநிலத்தின் 70 % பகுதிகளில் வசிப்பவர்கள். இவர்களின் வாழ்க்கை அதிக பட்ச்சமாக விலங்குகலுடனும் காடுகளுடனும் கழிந்து விடுகிறது. இவர்களுக்கு சாலை வசதி போகுவரத்துவசதி குடி நீர் மருத்துவம் எந்த அடிப்படை வசதிகளுமே கிடைப்பதில்லை. ஆனால் இவர்கள் வாழும் பூமியோ இரும்பும் அலுமினியமும் நிலக்கரியும் நிறைந்த இடங்கள் இந்த கனிம வளத்தினை அனுபவிப்பதற்க்காக அவர்கள் வசிப்பிடங்களில் இருந்து பெரிய பணமுதலை களாலும், அரசாலும் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.


இவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிக்க வழியும் இல்லை என்ன செய்வார்கள். ஏ.சி காரில் பகாட்டாக செல்லும் மனிதர்கள் இவர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் போது எந்த வசதியையும் அனுபவித்திராத இந்த மக்கள் நாம் இந்த நிலையில் இருப்பதர்க்கு இவர்கள்தான் காரணம் என்று என்னுகிறார்கள் உண்மையும் அதுதான். இப்போது அவர்களுக்கு புதையல் கிடைத்திருக்கிறது விடுவார்களா பணக்காரர்களை அப்படியே அமுக்கி பிடித்து விடுகிறார்கள்.
பிடித்தவனை வைத்து எவ்வளவு பணம் பெறமுடியுமோ அவ்வளவும் பெற்றுவிடுகிறார்கள் இன்னும் சிலர் இந்த பகட்டு மனிதர்களின் நிலையை சகிக்காது கொன்றும் விடுகிறார்கள். நமது தமிழ் நாட்டில் வசிக்கும் குக்கிராம மக்கள் பெறும் வசதியில் 10ல் ஒரு பங்கு கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை.

அரசு அலுவலர்கள் கிராமங்களுக்கு செல்லாமலே சம்பலம் பெற்றுகொண்டு நகரத்திலே வாழ்கிறார்கள் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் திட்டங்களை வெறும் காகிதத்திலே நிறைவேற்றி பில் போட்டு பணமும் பெற்றுவிடுகிறார்கள். காவல் துறையும் இந்த மக்கள் மீது அடக்கு முறையை கையால்கிறார்கள் இவர்கள் யாரையும் மனிதர்களாகவே மதிப்பதில்லை. அடித்தவர்களை திருப்பி அடிக்க பழிவாங்க காவல் நிலையத்தை சூரையாடுகிறார்கள் தனியாக செல்லும் அரசு அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் தாக்குகிறார்கள். நகரங்களுக்கு மட்டும் தேவைக்கு அதிகமான வசதிகளை செய்து கொண்டு கிராமங்களை புரக்கனித்து விடுகிறார்கள்.

மத்திய அரசு கிராம வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் நிதியை கூட திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இவர்களின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்படுகிறது இடஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் கூட நிரப்ப படாமல் காலியாகவே வைக்கப்படுகின்றன. நகரங்களில் இவர்கள் குடியேற மருக்கப்படுகிறார்கள் தனியார்னிறுவங்களிலும் இவர்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. இவர்களால் ஓட்டல் ஏன் பான் கடைகூட வைத்து நடத்தமுடியாது இவர்கள் செய்யும் உணவையும் இவர்கள் கடையில் விற்க்கும் பான் கூட வாங்குவதில்லை நகரமக்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கு வாக்குரிமை கூட சரியாக கிடைப்பதில்லை சில இடங்களில் வாக்குசாவடியே அமைக்கப்படுவதில்லை. மத்திய அரசு வழங்கும் 100 நாள் வேலைத்திட்டம் கூட இங்கு நடப்பதில்லை நடப்பது வெறும் அலுவலகங்களில் மட்டுமே. தனக்கு தேவையானவற்றை தட்டிகேட்க்கும் போது இவர்களை ஒரே அடியாக புரக்கனிக்க அரசு குத்திய முத்திரைதான் மாவோயிஸ்ட்.

உதாரணத்திற்க்கு ஒரிசாவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி

Govt loosing on mine profits: Odisha

samrudha odisha, new political party,has asked the state government to seek amendments to acts on mining. so that orissa is able get least 50 percent of profits from its minerrals as cess. In memorandum, the party asked chief minister naveen patnayak to hilight the state demand when the meets the prime minister manmohan singh on december 19 in new delhi to discus the amendments to the acts.

party chief jatish chandra mohanty said, "About 20 leaseholders of mines in orissa have made a hopping profit of about Rs 24,500 crores during the 2006-2007and paid Rs 900 crores to the state. Out of this 20,18 or from other states. the profit is seventimes the state's plan budget the same year. it is totaly unjust and unfair and under thes circumstances how does Orissa benefit out its huge mineral resources, which is about the 25% of the country?" mohanty alleged that lion's share of the profit was being siphoned away the government officials.

the party's memorandam stated," If mine owners share a minimum of 50 percent profit with the state, Orissa will get an additional revenue of Rs 12,259 crore every year from iron ore, coal,bauxite,manganise and chromite. with this mony, the government can eradicate poverty from the state with in a year.
மேல இருக்கிற மேட்டர படிச்சிங்களா இது 15-12-2007 ல் தி டைம்ஸ் ஆப் இந்திய பத்திரிகையில் 3 ஆம் பக்கத்தில் வெளியான செய்தி.

ஆனால் இன்னும் இந்த மாநிலத்தில் மின் வசதி பெறாத கிராமங்கள் 30 சதவீதம். மின் வசதியே இப்படி என்றால் மற்றவை எல்லாம் எப்படி என்று நினைத்துப்பாருங்கள். இங்கு மின்சாரத்துறை தனியார் மயம் ஆக்கப்பட்டுள்ளது இவர்களின் குறிக்கோள் லாபம் மட்டுமே புதிதாக பிக்ஸ்டு அசட் எதையும் நிறுவ இந்த தனியார் மின் துறை விரும்புவதில்லை இருப்பதையும் சரியாக பராமரிப்பதில்லை கிராமங்களுக்கு புதிதாக மின் வசதி ஏற்ப்படுத்தி அதர்க்காக முதலீடும் செய்து அவர்களுக்கு கொடுக்கும் குறைந்த டாரிப்பினால் லாபம் ஈட்ட வழியே இல்லை. இந்த தனியார் மின் நிறுவனம் நட்டம் ஈட்டினால் மாநில அரசு எந்த உதவியும் அளிக்காது இது தான் தனியார்மயமான பொது நிறுவனங்களின் நிலை.

" என்ன வளம் இல்லை இந்த ஒரு ஸ்டேட்டில்
ஏன் 30% மக்கள் வாழ்க்கை பெரு இருட்டில்"

ஆசியாவிலேயே மிகப்பெரிய சாலை ஹோலி சிட்டி பூரியில் உள்ள கிராண்ட் ரோடு 100 மீட்டர் அகலம். என்ன இவ்வளவு பெரிய ரோட்டில் எவ்வளவு வாகங்கள் செல்லும் என்று நினைக்கிறீர்களா ஒரே ஒரு வாகனம் தான் உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் தேரில் செல்வார் இது தான் இவர்கள் மாநிலத்திலேயே பெரிய முன்னேற்றம்.

Saturday, December 15, 2007

செல்போன்ல முட்டை சமைக்கிறாங்களாம் மக்களை பயமுறுத்தாதீங்க

இரண்டு செல்போன் களுக்கு நடுவில் முட்டை வைத்து அதன் அருகில் ஒரு மியுசிக் சிஸ்டம் வைத்து குத்து பாட்டுகூட போட்டுவிடலாம் ரெண்டு போனுக்கும் கால் போட்டு வைக்கனும் அவ்வலவுதான் 40 நிமிடத்தில முட்டை வெந்து போய்டும் . செல் போனில் இருந்துவருவது மின்காந்த அலைகள் நுன் அலை அல்ல நுன்லையில் தான் அதிக சூடு ஏற்ப்படும் . மின் காந்த அலைகளால் துடிப்பு மட்டுமே ஏற்ப்படுத்தமுடியும் வெப்பத்தை அல்ல.

இந்த மாதிரி பன்னா முட்டை வெந்துபோகும் தான் ஆனா பேன்ட் பாக்கெட்ல போட்டா அது வெந்துபோய்டும்னு சொல்றீங்களே அதான் ஓவர். யாரும் பயப்பட எல்லாம் தேவையில்லை முட்டை வேகும் உண்மை. ஒரே ஒரு செல்போன் வெச்சி ஒருமாசம் பேசனாலும் முட்டை அழுகிதான் போகுமே ஒழிய வெந்துப்போகாது. யாருப்பா சொன்னது ரொம்ப காஸ்ட்லினு சி யு ஜி மொபைல் 24 மனி நேரமும் இலவசம் தானே. இது சயின்டிபிக்கா சொல்லாமா நம்மல எல்லாம் வெறுப்பேத்ததான். ரெண்டு மொபைலும் பக்கத்தில வச்சி சத்தம்போட்டா என்ன ஆகும் ஒரே சத்தத்தை இரண்டு மொபைல்களும் தன் ஸ்பீக்கர்வழியாக வெளிப்படுத்தும் ஒரே அளவான மின்காந்த அலைகளும் ஒலி அலைகளும் எதிர் எதிர் திசையில் பயனிக்கும் போது இரண்டும் சந்திக்கும் சமதொலைவில் உள்ள புள்ளியில் ஒத்ததிர்வு அதாவது ரெசோனன்ஸ் உண்டாகும்.

இந்த ஒத்ததிர்வை உண்டாக்கும் சோர்ஸ்களின் பலத்தை பொருத்து முட்டை என்ன பாலமே தூள் தூளாக போய்விடும் இதனால்தான் பாலங்கள் நிரந்தரமாக இனைக்கப்படாமல் துண்டு துண்டாக கட்டப்படுகிறது பாலம் நிலையாக இருக்குமானால் ஒரேஅளவு அதிர்வுடன் இரண்டு வாகனங்கள் வரும் போது பாலம் உடைந்துவிட வாய்ப்பு உள்ளது. இப்படி ஏற்ப்படும் ஒத்ததிர்வின்காரனமாக அந்தபுள்ளியில் ஏற்ப்படும் அழுத்தமானது வெப்பமாக மாற்றப்படுகிறது இதுதான் முட்டை வேக காரணமாக இருக்கிறது நானும் அலைபேசி துறையில் பனிபுரிபவன் தான் எல்லா ஆரய்ச்சியும் முட்டையவச்சி செய்து பாத்தாச்சி என்கேஜ்ஜாகவே இருந்ததால் அலுவலகத்தில் இருந்து ஆப்பு வாங்கியதுதான் மிச்சம்.

பெண்கள் பற்றிய சமூக மன நிலை ஏன் இப்படி

இப்போது நம்து சமூகத்தில் பணக்காரன் ஏழை பிச்சைகாரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கொலைகாரன் கொள்ளைக்காரன் என பலதரப்பட்ட மக்கள் இது ஏன்?. அடுத்தவனைக்காட்டிலும் தான் உயர்வாக இருக்கவேண்டும் என்ற என்னம் அது முதலில் தன் குடும்பத்திலேயே ஆரம்பமாகி விடுகிறது அனைவருக்கும் மற்றோர் எண்ணம் தாம் செய்வது தாம் சொல்வது தான் சரியாக இருக்கும் நடக்கவேண்டும் என்றும் சிலர் ஒரு படி மேலே போய் அது தவறாக இருந்து தவறு என தெறியும் பட்ச்சத்தில் தன் முழுபலத்தையும் பயன்படுத்தி அதுதான் சரி அதுதான் உன்மை என அடுத்தவரைநம்பவைப்பது. ஒரு சிலர் இதர்க்காக விபரீதமான முடிவுகள் வரை எடுப்பர் தன் மனம் தான் சொல்வது செய்வது தவறு என்பதை ஏற்க்க மறுக்கிறது.

தன் கருத்துக்கு எதிர் கருத்து கூறுபவ்ரின் கருத்து தவறாகவே இருக்கவேண்டும் என நினைப்பது தன்னைவிட அறிவிலும் பனத்திலும் பலத்திலும் திறத்திலும் தன் அருகில் இருப்பவர் உயர்ந்து வரக்கூடது என்ற என்னம். இவை அனைத்தும் தனக்கான ஒரு சோர்ஸ் கிடைக்கும் போது தான் வெளிப்படும். இப்படி ஒட்டுமொத்தமாக சொன்னால் குழப்பமாக இருக்கும் எனவே தனித்தனியாக பட்டியலிடுவது சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்.எதிர்பாலினத்தின் மீதான வெளிப்பாடு.ஓர் ஆண் என்ன நினைக்கிறான் பெண்கள் தம்மைவிட அறிவும் திறமையும் குறைந்தவர்களாக கருதுகிறான் அடுத்து பெண் என்பவள் ஆணுக்கு அடிமையாக அல்லது கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று எண்ணுகிறான்.

பெண்ணும் அப்படித்தான் நினைக்கிறாள் ஆனால் காலம் அவளை செயல்பட முடியாமல் கட்டிப்போட்டிருக்கிறது. சிறிது வாய்ப்புகிடைக்கும் போது சீறிப்பாய்கிறாள் ஆனால் பெண்ணுக்குறிய ஒரே குறைபாடு ஆண்களைவிட உடல் அமைப்பு வளிமையில் குறைந்திருக்கிறாள் பிள்ளை பெறும் வேலைவேறு இருக்கிறது. தன் ஆதிக்கத்தின் கீழ் படிந்த பெண்ணை பாலியல் ரீதியாக உறவு கொள்ள மனைவி என்று வரும் போது (இது நம்மஊர் சமாச்சாரம்) அவளை ஒரு போகப்பொருளாக கருது கிறான் அவள் தன்னிடம் மட்டும்தான் இன்பம் அனுபவிக்கவேண்டும் என்றும் தான் யாரிடம் வேண்டுமானாலும் இன்பம் பெறலாம் என்று நினைக்கிறான் பெண்ணும் தன் கணவன் தன்னிடம் மட்டுமே தான் இன்பம் பெறவேண்டும் என்றும் தாம் அடுத்தவருடன் போகலாமென்று நினைக்கிறாள்.

இந்த எதிர்ப்பார்ப்பில் இருவருக்குமே நியாம் இல்லை ஆண்கள் எல்லோர் மனதிலும் ஒரு ஆசை இருக்கும் உதாரனத்திற்க்கு நமீதாவோ இல்ல சிரேயாவோ ரெடி இலவசம் என்று சொல்லட்டும் எத்தனை பேர் வேண்டாம் என்று சொல்வார்கள் இதற்க்கு முன் அவர்கள் எத்தனை பேருடன் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார்கள். சூர்யாவும் சிம்புவும் ரெடினு சொன்னாலும் எல்லா பெண்களும் ஓகேனுதான் சொல்வாங்க ஆனா எத்தனை ஆண்கள் இதை ஒத்துக்கொள்வார்கள் உடனே கலாச்சாரம் அது இதுனு ஆரம்பித்துவிடுவார்கள். ( நமீதா,சிரேயா,சூர்யா,சிம்பு எல்லாம் என்னை மன்னித்துவிடுங்கள் நீங்கதான் இப்ப இண்டஸ்ட்ரீல ரொம்ப கிளாமரா இருக்கீங்க கண்டிப்பா எல்லாருக்கும் உங்கமேல ஆசை இருக்குமுனு ஒரு நம்பிக்கை)

ஆனால் யாரும் ஒன்றை சிந்திக்க மறந்து விடுகிறார்கள் தான் ஒரு பெண்ணை நாடும் போது அவள் அடுத்தவன் மனைவியோ அல்லது அடுத்தவனுக்கு மனைவி ஆகப்போகிறவளோ இப்படி ஏதாவது ஒன்று இருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்ச்சட்த்தில் தன் மனைவி மட்டும் யாரையும் நாடமாட்டாள் நாடியிருக்கமாட்டாள் என்பதில் என்ன நிச்சயம் இது அனைவருக்கும் முள்ளாக குத்தத்தான் செய்யும். இவன் நாடிப்போகும் பெண்கள் என்ன மெஷினிலா செய்தார்கள் அப்படி ஒன்றும் இல்லையே. ஒரு ஆண் தன்பலத்தால் செல்வாக்கால் தன்மனைவியை வீட்டுக்குள்ளே வைத்திருந்தாலும் இச்சை வந்துவிட்டால் வேலைக்காரனை இல்ல வாட்ச்மேனையோ நாடமாட்டாள் என்று என்ன நிச்சயம் மேலும் பெண்கள் காவலுக்கு வைத்தாலும் லெஸ்பியனாக மாறமாட்டால் என்று என்ன நிச்சயம்.

ஒரு பெண் தலைமை பொருப்பில் இருப்பதை எந்த ஒரு ஆனும் சுலபத்தில் ஏற்றுக்கொள்வதே இல்லை திருமணம் ஆனால் அந்த அதிகாரத்தை தன்னிடம் எடுத்துக்கோள்ள பார்க்கிறான். திருமணமாகாத பெண்கள்தான் அந்த பொருப்புகளை வகிக்கமுடிகிறது. இதில் பெண்களுக்கும் வசதியாக போய்விட்டது பொருப்பு ஆண்களிடம் சென்றுவிட்டது இனி தலைவளி இல்லை ஆண்சம்பாதிக்கப்போகிறான் பொருப்புகளை கவனிக்க போகிறான் நாம் அவன் நிழலிலே ஒன்றிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆண் தன் திறமையை நிரூபிக்கவும் தன் பொருப்புகளை கவனிக்கவும் அதிகபட்ச்ச ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறான் எதைவேண்டுமானாலும் செய்கிறான்.

பெண்கள் ரிஸ்கெடுக்க தயாராக இல்லை தனக்கு கிடைக்கும் சலுகைகளை பயன் படுத்திக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு ஆண்களை கவரும் ஒரு கவர்ச்சிப்பொருளாகவே இருக்கிறாள்.திருமண விஷயதில் எடுத்துக்கொள்வோம் ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்கும் ஆன் வேலைக்கே போகாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வான். ஒரு வேலைக்கு போகும் பெண் கண்டிப்பாக தன்னைவிட அதிக சம்பலம் வாங்கும் ஆணைத்தான் திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள். ஒரு படித்த பெண் தன்னை விட அதிகம் படித்த ஆணைத்தான் திருமணம் செய்துகள்ள விரும்புகிறாள் இது தான் உணமை வேண்டுமானால் மேட்ரிமோனி வெப்சைட்டுல போய் பாருங்க. பெண்கள் எப்போதுமே தன்னைவிட படிப்பிலும் சம்பலத்திலும் அதிகம் உள்ள ஆண்களை எதிர்ப்பார்க்கும் போது அந்த ஆண்கள் இந்த பெண்களை அடிமைகளாகத்தான் நடத்துவார்கள்.

வரதட்ச்சினை இது தான் அனைத்து இடங்களிலும் மிகவும் சென்சிடிவ்வான விஷயமாக பேசப்படும் ஒன்று இதுவரை ஒரே ஒரு புகாராவது திருமணம் ஆகாத ஆணின்மீது வரதட்ச்சினை கேட்டதாக புகர் கொடுக்கப்படிருகிறதா? பணக்காரவீட்டு காதலனைதவிர. இப்ப எதுக்கு வரதட்ச்சினை பத்தியெல்லாம் இந்த டாப்பிக்குல வருதுனு கேக்கலாம் இதுக்கும் சம்பந்தம் இருக்கு. ஒருவர் தன் மகளுக்கு வரன் பார்க்கும் போது அரசாங்க உத்தியோகம் பார்கிரானா, தன்னைவிட பனக்காரனா, கை நெறய சம்பாதிகிறானா, நெறைய படிச்சிருக்கான அவனுக்கு நம்ம வேலைவாங்கி கொடுத்துக்களாம்(வேலை சூப்பர்மார்க்கட்ல விக்கறதா நெனப்பு) இப்படிதான் மாப்பிள்ளை பார்ப்பாங்க.

ஆனா இவரோட பெண்ணோ கொஞ்சம்தான் படிச்சிருக்கும் எங்கயும் வேலையும் செய்யாது இதலவேற சொல்லுவாறு பொண்ண உக்காரவச்சி சோறுபோடர மாப்பிள்ளையா பாருனு( இது என்ன பிராய்லர் கோழியா எந்த வேலையுமே வாங்காத முட்டகூட போடாத நேரா 45 நாள்ள வெட்டி எடைபோட). இவரோட பெண் காலம் முழுதும் கஸ்ட்டப்படாமல் வச்சி காப்பாத்தனும்மா! இப்படி சொன்னா எவன் தான் வரதட்ச்சினை கேக்கமாட்டான் பெண் பார்க்கும் போது சரி தரோம்முனு தலைய ஆட்டவேண்டியது அப்புறமா முடியலனு சொல்லும் போது பிரச்சினை ஆனா வரதட்ச்சினை கொடுமையினு போலீஸ்ல கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டியது.

இது வரைக்கும் புருஷனவிட அதிகா சம்பாதிக்கிற இல்ல புருஷனோடவீட்டவிட வசதி அதிகம் படைச்சவீட்டுப்பெண் அல்லது வேலை செய்யாத் புருஷன் வேலைசெய்ர பொண்டாட்டிய வரதட்ச்சினை கொடுமை பன்னினதா ஏதாவது கேஸ் இருக்கா. ஏன் அதிகபட்ச்சமா கல்லியானம் ஆனா பெண்கள் புருஷன் வீட்டில் இருக்க ஆசைப்படுகிறார்கள். மனைவியின் வீட்டுக்கு புருஷனை கூட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே. அப்ப இந்த ப்ராப்லமே வராது இல்லையா?அடுத்து பொது இடங்களில் தர்ம அடி பொதுமாத்து இதெல்லாம் பார்த்திருப்பீர்கள் இதல அதிகமா பெண்கள் விஷயமாகத்தான் இருக்கும்.அடிப்ப்தும் அடிவாங்குவதும் ஆண்களாகத்தான் இருக்கும். ஒரு ஒரு ஆணை காம இச்சைக்காகவோ அல்லது காதலை சொல்லவோ அழைத்தால் அதை அருகில் இருப்பவர்களிடம் கூறினாலோ யாரும் கண்டுகொள்வதே இல்லை அவன் போனதும் பக்கத்தில் இருக்கரவன் ட்ரைபன்னுவான்.

இதே ஒரு ஆண் பெணிடம் சொல்லும்போது அந்தப்பெண் சொல்லிமுடிப்பதற்க்குள் அடிக்க ஆரம்பித்துவிட்டு இருப்பார்கள் ஏன் இந்த மன நிலை என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள். அதிகமாக வெளியில் நடமாடுபவர்கள் ஆண்கள்தான் அவர்களுக்கு ஒரு எண்ணம் அடுத்தவனுக்கு அந்த பெண்கிடைக்கக்கூடாது அடுத்தவன் சந்தோஷமாக இருக்ககூடாது என்ற எண்ணம் ஒரு நொடிப்பொழுதில் அவனுக்கு உண்டாகிவிடுகிறது. உடனே அதனை அவன்மீது வெளிப்படுத்துகிறான். அப்படி அடிக்கரஎவனுக்கும் காம எண்ணம் இல்லை என்று நினைக்காதீர்கள் அவர்கள் மனதில் தான் காம எண்ணம் வக்கிரமாக இருக்கும். அவ்வள்வு சீக்கிரம் எந்த பெண்ணும் அடிக்க போவதில்லை ஒரு சிலர் அடுத்தவர் மெச்ச அல்லது என்னை விட்டு அவளபோய் கூப்பிட்டயேனு வேனும்னா அடிக்கலாம். ஆனால் பெண்களை யாரும் இந்த விசயத்தில் கண்டிப்பதே இல்லை மற்ற பெண்களும் எப்படியும் மற்ற ஆண்கள் சப்போர்ட்டுக்கு வரமாட்டாங்க நம்மஏன் வீனா இவக்கூட சண்டபோடனும்னு நெனச்சிக்கிட்டு போய்டுவாங்க.

ஒரு எம்.என்.சி நிறுவனம் இப்படி இருந்தால்.

எம்.என்.சி நிறுவனங்கள் எப்படி நடக்கிறது என்பது பற்றி ஒரு ஆய்வு. உதாரணத்திற்க்கு ஒரு கிளையை எடுத்துக்கொள்வோம் இந்த நிறுவன ஊழியர்களை முதலில் பட்டியல் இடுகிறேன் பிறகு அவரவருக்கான வேலை என்ன என்று சொல்கிறேன்.


1. புராஜெக்ட் மேனஜர் -1 இவரது மாத சம்பலம் 1,10,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 5 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி ஆண்டின் நிறுவன கிளை மொத்த லாபத்தில் 20% இவருக்கு இன்சென்ட்டிவ்

2. அசிஸ்டன்ட் புராஜெக்ட் மேனஜர் -1 மாத சம்பலம் 60,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

3. புராஜெக்ட் கோ ஆர்டினேட்டர் - 2 மாத சம்பலம் தலா 40,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

4. ஆபிஸ் கோ ஆர்டினேட்டர் -1 மாத சம்பலம் 25,000. 00 கண்டிப்பாக இவர் உள்ளூர் காரராகத்தான் இருக்கவேண்டும்.

5. ஐ.டி சப்போர்ட் -1 மாத சம்பலம் 25,000. 00 இவருக்கு வேறு எந்த அலவன்ஸ்ம் கிடையாது இவர் நிரதர பணியாளர் அல்ல.

6. லாஜிஸ்ட்டிக் ஹெட் -1 மாத சம்பலம் 35,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

7. லாஜிஸ்ட்டிக் அசிஸ்டன்ஸ் -2 மாத சம்பலம் தலா 20,000. 00 இவர்களுக்கு வேறு எந்த அலவன்ஸ்ம் கிடையாது இவர் நிரதர பணியாளர் அல்ல.

8. ஒரு அக்கவுண்டன்ட் -1 மாத சம்பலம் 35,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

9. தரக்கட்டுப்பாட்டு அலுவலர் -2 மாதசம்பலம் தலா 40,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

10. செக்யூரிட்டி - 2 ஆபிஸ் பாய் -3 மாத சம்பலம் தலா 6,000. 00

11. பீல்டு இஞ்சினியர் - 6 மாத சம்பலம் தலா 12,000. 00 அவுட் சோர்ஸ் அலுவலகம் விட்டுவெளியூர் சென்றால் ஒரு நாளைக்கு 7 நூறு ரூபாய்

12. பீல்டு ஒர்க்கர்ஸ்- 20 மாத சம்பலம் தலா 4,000.00 வேறேதும் சலுகை இல்லை கான்ட்ராக்ட்டர் கீழ் வேலை பார்ப்பவர்


இப்போது மேலே இருக்கும் பட்டியலை பார்த்திருப்பீர்கள் இவர்களில் முதல் 10 பட்டியலில் உள்ளவர்கள் அலுவலகத்தை விட்டு வீடு விடுதி தவிர வேறெங்கும் அலுவல் நிமித்தமாக செல்லவேண்டியதில்லை. முதல் 9 பட்டியலில் இருப்பவர்களை வெள்ளை காலர் பனியாளர்களாய் கருதுவோம்.

11 வது பட்டியலில் உள்ள இவர்தான் இந்த அலுவலகத்துக்கு எப்போதாவது வருவார் மற்ற நேரங்களில் காடு மலை என இரவு பகல் பாராமல் பெருத்த ஆபாத்துக்கிடையேயும் கொடுத்த டார்கெட் முடிக்க முடியாமல் அலையாய் அலைந்து திரிவார் புராஜெக்ட்டின் எந்த தொழில் நுட்ப்பத்தவறுகள்,கஸ்ட்டமர் திருப்த்தி மற்றும் காலதாமதம் எது வந்தாலும் இவரே பொருப்பாளி. இவர்கள் பெறுவது புரபசனல் பீ அதாவது தொழில் கட்டனம் என்வே இவர்கள் செலுத்துவது பிசினஸ் டாக்ஸ் 10.3 சதவீதம்.வேறு எந்த பாதுகாப்போ வசதியோ இவர்களுக்கு இல்லை . 12 வது பட்டியலில் உள்ளவர் 11ம் பட்டியலில் உள்ளவர் கொடுக்கும் பிரஷரால் உண்ண உறங்க நேரமின்றி இங்கும் அங்கும் ஓடி அலைந்து அடிப்ட்டு ரத்தம் கசிந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் இவருக்கு அலுவலகம் எங்கு இருக்கிறது என்றே தெறியாது. இப்போது முதல் பத்தின் ரோல் என்ன என்று பார்ப்போம்.

1. மேனேஜர் இவர் அசிஸ்டன் மேனேஜர், புரஜக்ட் கோ ஆர்டினேட்டர் இந்த மூன்று பேரை தவிர்த்து அவர் பேசும் நபர்கள் அவர்குடும்பத்தில் உள்ளவர்கள் நன்பர்களிடம் மட்டுமே. தீபாவளிக்கு கூட அனைவரையும் பார்த்து நல்வாழ்த்து சொல்ல மாட்டார். இவருடைய ஒரே வேலை எப்படி எப்படி எல்லாம் செலவை குறைப்பது உழைக்கிறவனை சுரண்டுவது என்பது மட்டுமே.

2. அசிஸ் இவரது வேலை மேனேஜர் சொல்வதை செயல் படுத்துவது மேலும் ஏதாவது சுரண்டும் வழி இருந்தால் சொல்வார் 10 பொருளுக்கு 10 பேரை கூட்டி வைத்து கலந்தாலொசிப்பார் 20 பைசா பேப்பர்கூட கஸ்டமருக்கே தரமாட்டார். அடுத்தௌ அலுவலகத்தில் உள்ளவர்கள் இவருக்கு வணக்கம் சொல்வது.

3. இவர்கள் மேனேஜர் இன்சினியர்களுக்கு இடையில் நடந்த வேலை மற்றும் நடக்கும் வேலை நடக்கவேண்டிய வேலை ஆகியவற்றை செய்தியாக பறிமாற்றுவது. கான்ட்ராக்டரின் பில்லை கட் செய்வது.

4. இவரது வேலை நிரந்தர ஊழியரான மேர்க்கண்ட முதல் 9 பட்டியலாருக்கும் கேப்(டாக்ஸி) ஏற்ப்பாடு செய்வது. அலுவலகத்துக்கு தேவையான காபி,டீ, குளிர்பானம் பேப்பர் போன்றவற்றை நிர்வகிப்பது.

5. இவரது வேலை நிரந்தர பனியாளர் அல்லாதோர் பயன் படுத்தும் நெட் கனெக்சன் ஐ கட்செய்வது.

6. இவர் வந்த வராத சரக்கு களைப்பற்றி மேனேஜருக்கு மெயில் செய்வது.

7. இவர்கள் வராத சரக்கு வந்ததாகவும் அனுப்பாத சரக்கு போய் சேர்ந்தாவும் போன் செய்து போன்செய்து அருகிலே அமர்ந்திருக்கும் ஹெட்டுக்கு தகவல் கொடுப்பது.

8. இவரது வேலை அந்த அலுவலகத்தில் டீ,காபி, பேப்பருக்கு ஒருமாதத்துக்கு ஆகும் 30 ஆயிரம் ரூபாய் செலவை கணக்கு பார்ப்பது பைசல் செய்வது. ஆனால் இவருக்கு சம்பலம் 35 ஆயிரம் ரூபாய்.

9. இவர்களது வேலை அலுவலகத்தில் அமர்ந்துகொண்டே தரம் கட்டுபாடு செய்வார்கள் அது எப்படி என்று இவர்களுக்கு மட்டும்தான் தெறியும். தரத்தில் பிரச்சினை வரும் போது இன்சினியர்மீது பழி போட்டுவிடுவார்கள். இவர்கள் இருப்பதே தரம் பார்க்கப்படுகிறது என்று கான்பிக்க மட்டுமே மற்றபடி டார்கெட்டில் தரம் எல்லாம் எதுவும் இருக்காது.

10. இவர்களாது வேலை மேலே உள்ளவர்களுக்கு வேலை செய்வது தான். இவர்களைப்பற்றி சொல்லத்தேவை இல்லை.

இந்த முதல் 9பட்டியலில் ல் இருப்பவர்கள் சென்டரலசைடு ஏ.சி அலுவலகம் 24 மனி நேர கேப்வசதி( நிறுவன செலவில் போக்குவரத்து வசதி), வெளியூருக்கு செல்ல நிறுவன செலவில் விமான பயன வசதி. இவர்கள் பெறுவது சம்பலம் ஆகையால் 5.1 சதவீதம் டீ.டி.எஸ் அதாவது சம்பலத்தில் பிடிக்கப்படும் வருமானவரி.ஆனால் இதுவரை பீல்டில் என்ன நடக்கிறது என்றுகூட ஒருவருக்கும் தெறியாது. இங்கு சம்பலம் பில்லிங் புராஜெக்ட் பெறுவது எந்த வேலையும் கிளை அலுவலகத்தில் செய்யப்படுவதில்லை அதெல்லாம் தலைமை அலுவலகத்தில் செய்யப்படுகிறது. இவர்கள் நிர்வாக பொருப்பில் உள்ளவர்கள் இவர்கள் செய்யும் நிர்வாகம் தான் என்ன 11 மனிக்கு அலுவலகம் வருவது 4 மனிக்கு வீடு திரும்புவது இதர்க்கு இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெறிந்திருக்கும். இது தான் ஒரு எம்.என்.சி யின் நிகழ்வு.

நன்பர்களே இப்போது மேலே உள்ள தகவல்களை பார்த்து எம்.என்.சி வருகையால் பயனடைபவர்கள் யார் இப்படி ஒரு எம்.என்.சி தேவையா? உங்களுக்கு என்ன தோன்றினாலும் பின்னூட்டுங்கள்

Thursday, December 13, 2007

அறிவும் ஆற்றலும் உழைப்பும் மிக்க வட மாநில மக்கள்.

மக்களின் மன நிலை பத்தியெல்லாம் 9 பக்கம் கிழிச்சாச்சு அடுத்து எதை கிழிக்கறதுனு யோசிச்சிகிட்டு இருக்கும் போது தான் சரி வட இந்திய
மாநிலங்கள் எப்படி இருக்கு அங்க இருக்கும் மக்களும் அரசும் எப்படி இருக்குனு கொஞ்சம் கிழிக்கலாமுனு நெனைக்கிறேன். இந்த ஆசிய
கண்டத்திலே ரொம்ப உழைப்புனா என்னானு தெறிஞ்சி அதிகமா உழைக்கிறவங்க யாருன்னா நம்ம வட இந்திய மக்கள் அவங்க மட்டும் தனியா இருந்திருந்தா இந்தியா எப்போ வல்லரசாகி இருக்கும்.


எல்லாரும் எப்போதும் கடுமையா உழைத்துக்கொண்டே இருப்பார்கள் அடுத்தவனை எதற்க்கும் எதிர்பார்க்கமாட்டார்கள் அவ்வளவு கடுமையானா உழைப்பாளிகள். இவர்களின் திறமைக்கும் சிந்திக்கும் ஆற்றலுக்கும் இனையானவர்கள் உலகில் எங்கும் இருக்க மாட்டார்கள் அத்தனை சிந்தனை வளம். எந்த வித கனிம வளங்களும் இல்லாத ஜார்கண்ட் ஒரிசா பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் அரசின் கடுமையான உழைப்பின் காரனமாக காற்று ஆகாயம் இதிலெல்லாம் இரும்பு அலுமினியம் நிலக்கரி எல்லாம் இருக்கிறது என்று அயராது உழைத்து கண்டுபிடித்து உள்ளார்கள்.

வட மாநில மக்கள் எல்லாம் நூறு சதம் கல்வியில் முன்னேறியவர்கள் இவர்களின் கல்வியின் தரம் மிகவும் உயர்ந்தது டிகிரி வாங்காத யாருமே இல்லை. சிந்திப்பதில் கூட சாக்ரெட்டீஸ்சை மிஞ்சியவர்கள் மாநிலத்தின் அனைத்து கிராமம் குக்கிராமம் என்று எல்லா தர இடங்களிலும் அமெரிக்காவின் சிக்காகோ நகரை மின்சும் திட்டமிட்ட அதி நவீன வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்புகள். காடு மலை மேடு என்று எங்கு இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் அவர்களின் தேவைக்கு மீறி பத்து மடங்கு அதிகமாக மாநில அரசால் மின் வினியோகம் செய்யப்படுகிறது. பயன் படுத்திய மின்சாரம் போக மீதம் இருப்பதை வீட்டிலேயே ஒரு டாங்க்கு கட்டி சேமித்து வைத்துக்கொள்கிறார்கள்.

அம்மாநில அரசுகளோ நகர் மாநகர் பகுதிகளை தவிர்த்து கிராமங்களுக்கே எப்போதும் அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. ரோடு எல்லாம் எப்படி இருக்குது தெறியுமா நம்ம வடிவேலு சொல்லறமாதிரி அப்படியே வழு வழுனு முகம் தெறியும் அப்படியே முகம் பார்த்து பொட்டுவச்சி அதுல
ஒரு கவலம் சோத்தபோட்டு கொழச்சி அடிக்கலாம் அப்படி இருக்கும்.
நம்ம ஊருமாதிரி நடுரோட்டுல மரத்த அப்படியே விட்டு மேல லேசா தார்பூசிட்டு போற வேலையெல்லாம் அங்க கிடையாது ரோடு போடரத்து எப்படினு இங்கவந்துதான் உலகத்தில இருக்கற எல்லாரும் கத்துக்கிட்டு போறாங்க நம்மலும் இவர்கலை வழிகாட்டியா எடுத்து ரோடு போட்டா சாலைவிபத்தே நடக்காது.

பொதுமக்கள் மீது இவர்களுக்கு எவ்வளவு அக்கரை ரோடில் நடந்து மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் நிழலிலே போக மரத்தினை சாலையின் நடுவே விட்டு சாலை அமைத்த்ரிஉப்பார்கள் அவ்வளவு விழிப்பும் தெளிவும் உள்ள மக்கள். சுத்தம் சுகாதாரம் எல்லாவற்றையும் உலக சுகாதாரமையமே அங்கு வந்து தான் கற்றுகொள்ளவேண்டும் அந்த அளவுக்கு சுத்தமா அக்மார்க் முத்திரை போடப்பட்ட அவ்வளவு தரமான உணவு பொருட்க்களை தயாரித்து
கடைகளில் கொடுப்பர். யாருக்கும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது பான் பராக், சபல்,சிகரெட், பான் பீடா, குடி அப்படி என்றால் என்னவென்றே தெறியாது அவர்களுக்கு இந்த அலவுக்கு கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாத மக்களை உலகிலே எங்கும் கானத இயலாது.


அன்புமனி திரைப்படத்துல சிகரெட் பிடிக்ககூடாதுனு தமிழ் நாட்ல சொன்னது கூட இவங்க சிகரெட்டா அப்படினா என்னானு கேட்டாங்க. சாப்பாடுனா இவ்வளவு சுத்தமான சாப்பாடு எந்த ஐ எஸ் ஓ வாலும் குறையே சொல்லமுடியாத அளவுக்கு சுத்தமான சாப்பாட்டதான்
சாப்பிடுவாங்க. எல்லா ஓட்டலும் அந்த அளவு சுத்தம் பராமரிக்கப்படுகிறது. இங்க இருக்கர டாக்ட்டரெல்லாம் நம்ம ஊரு டாக்ட்டர் மாதிரி
பப்ளிக்கா குடிக்க தம்மடிக்க மாட்டாங்க குடிப்பழக்கம் இருக்கற ஒரு டாக்ட்டர இங்க கண்டுபிடிக்கரது முடியாத காரியம் ஏன்னா இங்க யாரும்
குடிக்கரதே இல்லையே. "கானா பீனா ஹோகய" அப்படின்னு தான் கேப்பாங்க இதுக்கு என்ன அர்த்தமுன்னா குளிச்சிட்டு சாப்பிட்டாச்சா இதான் மீனிங்.

அதுவும் இவங்க எல்லாரும் 100 % சுத்த மான இங்கிலீஷ் பேசுவாங்க அந்த இங்கிலீஷ் கேக்கவே அவ்வளவு அருமையா இருக்கும் அவங்க இந்தி நல்லா படிக்கிறதினால தான் இங்லீஷ் அவ்வளவு அழகா பேசாறாங்க. உயர்ந்தவன் தாழ்ந்தவன் வேறு மதத்துக்காரன் என்ற எந்த பேதமும் பார்க்க மாட்டாங்க எல்லாருக்கும் சம உரிமை நம்ம மக்கள் இவங்களை பார்த்தாலே போதும் பெரியார் எல்லாம் தேவையில்லை.

ரெக்கமண்டேசன் அப்படினா என்னனு தெறியாது எல்லாருக்கும் பாரபட்ச்சம் இல்லாம தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் எதுவா இருந்தாலும் வேலை கொடுப்பாங்க உழைக்கிறவனுக்கு ரொம்ப மதிப்புகொடுப்பாங்க உடனே பிரமோஷன் தான். சாப்பாட்டுக்கு எங்கேயும் பஞ்சம் இல்லை வெளியூர்காரன் எந்த ஊருக்கு போனாலும் நல்ல சாப்பாடு எல்லா இடத்திலையும் கிடைக்கும். யாரையும் யாரும் அடிக்கமாட்டாங்க 24 மனி நேரமும் எங்கவேனும்னாலும் போகலாம் நம்மலோட பாதுகாப்புக்கு 100% கேயரண்டி எல்லா மக்களும் நல்ல உதவி மனப்பான்மை உள்ளவங்க பக்கத்து ஊருக்கு போறவன் திருடன் மாதிரி இருந்தாலே போதும் உடனே அவன புடிச்சி போலீஸ்ல குடுத்துடுவாங்க.

அவன் பக்கத்து ஊருக்குதான திருடபோறான் பக்கத்துவீட்டுலதான திருடாரான் நமக்கென்ன வந்தது அப்படி எல்லாம் யாரும் நினைக்கவே மாட்டாங்க மேலும் இங்கவேற திருடங்களே இல்ல ஏன்னா இது ராமராஜ்ஜியம் நடந்த இடம் அதுனால இப்பவும் ராமராஜ்ஜியம் தான் நடக்குது. அதுவும் இந்த பக்கம் இருக்கர போலீஸ் மாதிரி சுத்தமான கை வேர என்கயுமே பாக்கமுடியாது இவங்களதாண்டி ஒரு கடத்தல் காரன்கூட போகமுடியாது. அந்த அளவு கடமை கன்னியம் கட்டுபாடு உள்ளவங்க. இந்த ஊர் கிராமங்களுக்கு யாராவது வெளியூர்காரங்க போன அவங்கள ரொம்ப அன்பா உபசரிப்பாங்க இங்க இருக்கிற அரசியல்வாதிகள் செய்தவேலை கான்ராக்ட் இதுக்கெல்லாம் கூட காசே வாங்கமாட்டாங்க மக்கள் நலத்துல ரொம்ப அக்கரையானவங்க.

இவங்க மட்டும் இல்லனா இன்னும் இந்தியா இருக்கர எடமே தெறிந்திருக்காது. இங்க சாமியார்களே கிடையாது ஆனா பாருங்க இங்க இருகர சாமியாரெல்லாம் மக்களை ரொம்ப புத்திசாலியாவும் அறிவாலியாவும் மாத்திக்கிட்டு வாராங்க எல்லா சாமியாரும் சயின்ஸ் கிளாஸ் எடுக்கிராங்க அந்த அளவுக்கு நல்ல வடமாநிலங்கள் இருக்கு நம்மளுக்குதான் தெறிய மாட்டேங்குது.

Sunday, December 9, 2007

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 8

அராசாங்கம் பற்றிய மக்களின் வெளிப்பாடு.

மக்கள் எந்த பிரச்சினை என்றாலும் அதற்க்கு அரசே காரனம் என்று கூறுகிறார்கள் ரோட்டோரத்தில் குடியிருப்பவன் முதல் பெரிய பெரிய பணமுதலைகள் வறை இதைத்தான் சொல்லுகிறார்கள். குடிக்கின்ற தன்னீர் முதல் புதைக்கிற சுடுகாடு வரை ஏகப்பட்ட பிரச்சினைகள் இந்த அரசின் ஆட்ச்சியில் இதுசரியில்லை அது சரியில்லை முழுசுதந்தைரம் இல்லை பாதுகாப்பு இல்லை என்கிறார்கள்.

முதலில் முழு சுதந்திரம் என்றால் என்ன முழுபாதுகாப்பு என்றால் என்ன என்று யாரும் சிந்தித்து பார்க்கும் மன நிலையில் இல்லை. ஒருவனுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டுமானால் அவனை அரசு எந்த விதத்திலும் கட்டுப்படுத்தகூடாது அப்படியானால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செயாமலும் இருக்கலாம் அது அவன் விருப்பமாக இருக்கும். கொலை செய்தாலும் திருடினாலும் அடித்தாலும் ஏன் என்று யாரும் கேட்க்கமுடியாத நிலைதான் முழுசுதந்திரம். அடுத்து முழு பாதுகாப்பு ஒருவனுக்கு வழங்கவேண்டுமானால் அவன் முற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் குடிக்கும் தண்ணீர் முதல் படுக்கும் படுக்கைவரை என்ன வாங்கவேண்டுமானாலும் எதை செய்யவெண்டுமானாலும் அரசின் வழிகாட்டுதலில் இருந்து ஒரு இமியும் பிசகாமல் இருக்கவேண்டும் அப்போது தான் முழு பாதுகாப்பு கிடைக்கும்.

இப்போது இது இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை ஏதாவது ஒரு பக்கத்தைதான் பார்க்கமுடியும் இரண்டையும் ஒருசேரப்பார்ப்பது கடினம். சிலர் கேட்க்கலாம் கண்ணாடியில் பார்க்கலாம் என்று கண்ணாடியில் தோன்றுவது மாயபிம்பம்தானே அப்படியானால் நீங்களும் அந்த வாழ்க்கையை கனவினில் மட்டுமே அனுபவிக்கமுடியும் நிஜத்தில் அல்ல.

இப்போது நமக்கு எது தேவை சுதந்திரமா இல்லை பாதுகாப்பா இல்லை இரண்டும் தேவை எனில் 50% சுதந்திரம் 50% பாதுகாப்பு என வைத்துக்கொள்வோமா. அப்படி யெனில் நானயத்தை செங்குத்தாக வைத்துப்பார்ப்பதை போன்று தான் இருக்கும் நாம் பாதுகாப்பாக இருப்பதும் மற்றும் சுதந்திரமாக இருப்பதும் நமக்கே தெறியாது அது சந்தேகமாகவே இருக்கும். அந்த நானயம் லேசாக ஒரு புரம் சாய்ந்தாலும் ஒரு பக்கம் தெறியும் மறுபக்கம் தெறியாது இதை மக்களின் முடிவுக்கே விட்டுவிட்டால் எது எத்தனை சதம் வேண்டும் என்று நினைக்கிறார்கள் பார்ப்போம்.

உணக்கு துப்பாக்கி வைத்திருக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு உனக்கு பாதுகாப்பும் கொடுக்கவேண்டும் என்றால் " இது சின்ன பிள்ளத்தனமா இல்ல இருக்கு " இப்போ நம்மிடம் உள்ள முரன்பாடுகளை பார்ப்போம் ஒருவன் மற்றொருவனை அடித்தால் அடிவாங்கியவன் பாதுகாப்பாக இருக்கிறானா இல்லையா. சரி அடிவாங்கியவன் பாதுகாப்பாக இல்லை என்று கூறினால் ஒரு தாய் அல்லது தந்தை தன் குழந்தையை அடித்தால் அது பாதுகாப்பா இல்லையா. இது தான் அந்த பெரிய முரன்பாடு நான் பெற்றகுழந்தை அதற்க்கு அனைத்து செலவினங்களையும் சலுகைகளையும் அளிக்கும் நான் அந்த குழந்தையை அடிக்க உரிமை உண்டு என்று சொன்னால்.

உன்னை பாதுகாத்து உனக்கு தேவையான வற்றையெல்லாம் கொடுக்கும் அரசு உன்னை சவுக்கால் அடித்தால் நீ என்னசொல்வாய் அரசு என்னை அடிமையாக நடத்துகிறது என்றுதானே. அப்படி இருக்கையில் உன்குழந்தையை நீ அடிமையாக நடத்துகிறாய் என்றுதானே அர்த்தம் நீங்கள் அடிக்கும்போது என்ன அவர்களுக்கு சுகமாக இருக்குமா. இது என் சுதந்திரம் என்றால் குழந்தையின் சுதந்திரம் என்ன ஆவது அந்த குழந்தை எந்த உடை உடுத்தவேண்டும் என்ன படிக்கவேண்டும் என்னசாப்பிடவேண்டும் யாரை திருமணம் செய்து கொள்வது வரை உனக்கு பிடித்தவற்றையே பிள்ளைகள் மீது தினித்தால் அந்த இளம் பிஞ்சுகளின் கணவு அடியோடு பழாய்போய்விடுகிறது. அவர்களுக்கு உலகத்தைபற்றி எதுவும் தெறியாது என்று அவர்களுக்கு எதையும் தெறியாமலே செய்துவிடுகிறார்கள்.

இப்படி செய்வதெல்லாம் செய்து விட்டு அரசாங்கம் சரியில்லை என்பது நாமும் அரசாங்கத்தின் ஒரு அங்கம் தானே நாம் சரியாக இருக்கிறோமா இல்லை. தாங்கள் விருப்பப்பட்ட படிப்புகளை அரசினர் கல்லூரிகளில் சீட் இல்லை என்றாலும் தனியார் கல்லூரிகளில் சேர்த்து படிக்கவைத்துவிட்டு அந்த படிப்பிற்க்கு தகுதியான வேலைவாய்ப்பினை அரசு ஏற்ப்படுத்தி தரவேண்டுமாம். இந்து இடுக்கு பொறம்போகு போன்ற வசதியற்ற இடங்களில் வீடுகளை கட்டிக்கொண்டு அரசு சரியான வசதி செய்து தரவில்லை குடி நீர் வசதியில்லை சாக்கடை வசதி இல்லை என்று சொல்வது முடியாது என்றாலும் லஞ்சம் கொடுத்தாவது அதை சாதித்துவிடுவது என்னே சாதனை.

எல்லாரும் நகரங்களை நோக்கி குடியேறிவிட்டு நெறிசல் பற்றாகுறை மாசு பட்டுவிட்டது என்று அரசினை கடிந்து கொல்வதில் அர்த்தம் என்ன இருக்கிறது சாலை நெறிசல் கட்டிடங்களை அகற்றி சாலையை அகலப்படுத்தவும் மக்கள் விடமாட்டார்கள் எத்தனைபேர் ரோட்டில் அடிபட்டு செத்தாலும் பறாவாயில் நடுரோட்டில் இருக்கும் கோவில் களை அகற்றகூடாது மசூதிகளை அகற்றகூடாது என்றால் ஓட்டுவாங்கியதற்க்காக அமைச்சர்களின் தலைமீதா வண்டி ஓட்டுவதுஅரசு என்றால் அலாவுதீனின் அடிமை பூதம் என்று நினைக்கிறார்கள் கேட்டதெல்லாம் கொடுக்க. நீங்கள் கேட்ப்பதெல்லாம் வெளினாட்டில் இருந்து பெறவேண்டுமானால் நமது நாட்டை உலகவங்கியில் அடகுவைத்துதான் பெறமுடியும் அதற்க்கு ஈடாக உலகவங்கியும் சேர்ந்து நமது நாட்டை ஆட்ச்சி செய்கிறது நமக்குதேவயானவற்றை நாமே செய்துகொண்டால் நமக்கேன் இந்த பிரச்சினை.

Sunday, December 2, 2007

புரட்ச்சி செய்ய வந்திருக்கும் ஒரு தமிழன் இவனும் ஒருவன்

என்னைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து வைக்கத்தான் வேண்டும் அப்போதுதான் சிலர் திரும்பியாவது அல்லது ஒரு பொருட்டாகவாவது பார்ப்பார்கள். வைரம் ஒன்று வழியிலே கிடந்தாலும் வைரம் என்றாலே என்ன என்று தெரியாத ஒருவன் அதை கண்டும் கானாமலும் தான் செல்வான் சிறிது மின்னினால் கண்ணாடி துண்டு என்று நினைத்துப்போவான். அதற்க்குத்தான் எனக்கும் ஒரு விளம்பரம் அதாவது அறிமுகம் தேவைப்படுகிறது அப்போது தான் புரட்ச்சிதமிழன் எழுதுவது இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து சிலர் சட்டையாவது செய்வார்கள். என்ன செய்வது நாடே விளம்பரப்பிரியம் ஆகிவிட்டது ஒரு பொருளைப் பற்றி ஐம்பதுமுறை சொன்னால் இது தான் நல்லது இதுதான் உண்மை என்று நம்பிவிடுகிறோம். ஒரு பொருளை வாங்க நினைக்கும் போது எந்த பிராண்டின் பெயரை அதிகமாக கேட்டிருக்கிறோமோ பார்த்திருக்கிறோமோ அது தான் நமக்கு விறைவில் ஞாபகம் வருகிறது.

ஒன்றைப்பற்றி சிலகாலம் யாரும் சட்டைசெய்யவில்லை என்றால் அனைவரும் அதை மறந்தே விடுகிறோம் சில ஆண்டுகளுக்கு முன்பு குட்டி சாமியார் என்று ஒரு சிறுவனை மீடியா பரபரப்பாக சித்தரித்தது இப்போது அந்த சிறுவன் என்ன ஆனான் அவன் பெயர் என்ன என்பது கூட எனக்கு மறந்துபோய்விட்டது. இதர்க்குத்தான் தெறிந்த விஷயமாக இருந்தாலும் பலர் அறிந்த விஷயமாக இருந்தாலும் திரும்பத்திரும்ப மீடியாவிலோ பொதுமேடைகளிலோ அலசினால் தான் அதை ஒரு மூலையில் ஞாபகம் வைத்துக்கொல்வார்கள் அதைப்பற்றி சிந்திப்பது அடுத்தவிஷயம். ஏதோ இந்த இனையம் எனக்குகிடைத்த ஒரு மீடியா பொக்கிஷம் இந்த ஏழையால் (மீடியா ஏழை) இதில் என்னைப்பற்றியும் கொஞ்சம் விளம்பரம் செய்ய வேண்டி இருக்கிறது.

நான் சிறுவயது முதலே சில பல அந்தஸ்த்துகளில் சில வசதிகளுடனும் சில வசதிகள் இன்றியும் படித்தும் வளர்ந்தும் வந்திருக்கிறேன். பல நேரம் பசியும் கண்டிருக்கிறேன் சில நேரம் புளியாப்பமும் கண்டிருக்கிறேன் பணம் இருந்தும் பசி இருந்திருக்கிறது பணம் இன்றியும் புளியாப்பம் இருந்திருக்கிறது. இதர்க்கு பணம் ஒரு காரணியே அல்ல நாம் இருக்கும் இடமும் சூழலும்தான் காரணம் ஒருவனை அரிசி குடோனிலே பூட்டிவைத்தாலும் அவன் பசியுடன் தான் இருப்பான் எப்படி சமைப்பது என்று தெறியாதவரை.

மாதம் 3 ஆயிரம் வீட்டிலிருந்து வாங்கி செலவு செய்துவிட்டு 2 ஆயிரம் சம்பலத்துக்கு வேலைதேடியும் அலைந்திருக்கிறேன் இன்ட்டர்வியூக்கு போன பின் இன்ட்டர்வியூ செய்பரை ஏளனம் செய்து அவமதிதும் இருக்கிறேன். கடினமான வேலைகள் முதல் ஆபத்தான வேலைகள் வரை செய்திருக்கிறேன் சில முறை விபத்திலிருந்தும் மீண்டிருக்கிறேன். சில ஆண்டு ஒரு துறையில் பனி புரிந்து பின்னர் புதிதாக வேறு துறையை தேர்ந்தெடுத்தேன் அது தான் இந்த டெலிகாம் துறை இருப்பதிலே இந்த துறைதான் ரெக்கமண்டேஷன் இல்லாமல் உள்ளே நுழைவதும் ரெக்கமெண்டேஷன் இல்லாமல் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்க்கு மாறுவதும் மிகக் கடினம்.

ஆனால் இந்த துறையில் எனக்கு கிடைத்த ஒரே அனுகூலம் இந்தியாவிலுல்ல சில மாநிலங்களில் பட்டி தொட்டி காடு மலை சிற்றூர் பேரூர் நகர் மாநகர் என எல்லா இடங்களிலும் நக்சலைட்டுகள் மாவோயிஸ்ட்டுகள் ஆதிவாசிகள் உல்பா நகரவாசிகள் கிராமவாசிகள் காட்டுவாசிகள் என அனேக மக்கள்வசிக்குமிடங்களில் எல்லாம் சென்று அவர்கள் வாழ்க்கை முறைகளையும் சமூகத்தில் அவர்கள் அடைந்திருக்கும் வசதி வாய்ப்புகள் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு அரசியல் அரசியல் வாதிகளின் தாக்கம் அவர்களுடைய குறிக்கோள் அவர்களுடைய அனுகுமுறைகளையும் சமூகம் அவர் அவர்களுக்கு அளித்திருக்கும் அந்தஸ்த்தையும் பார்த்திருக்கிறேன்.

ஆகையால் தமிழர்களே"எம்மக்களே உம் நிலைகண்டு வெகுண்டெழுந்த புரட்ச்சித்தமிழன் நான்" உறங்கும் மக்களையும் (பசி,போதை,பணம்,ஜாதி,அதிகார,மாயை) மயக்கத்தில் இருக்கும் தமிழ் மக்களையாது விழிக்க தெளியவைக்க முயற்ச்சிக்கும் சராசரி மக்களினும் ஒரு படி மேலே போய் முயர்ச்சிக்கும் ஒரு புரட்ச்சித்தமிழன். இதையெல்லாம் செய்ய என்ன அறுகதை உனக்கு என்று நீங்கள் கேட்க்கலாம் என்னைவிட அதிக அருகதையுள்ள யாரும் இதை செய்ய முன் வரவில்லை சிலகாலம் பார்த்தபின்புதான் நான் வந்திருக்கிறேன். அதுவும் தமிழ் மட்டுமே ஓரளவுக்கு நன்றாக தெறியும் என்றகாரனத்தால் தமிழனையாவது எழுப்பிவிடுவோம். முதலில் கதவை திறப்போம் விளக்கேற்றுவோம் தண்ணீர் தெளிப்போம் வெண்ணீர்தெளிப்போம் அப்படியும் எழவில்லை என்றால் ஓங்கி எத்துவோம் அப்படியும் பயனில்லை எனில் செத்துவிட்டான் என்று நினைத்து ஒரு கண்ணீர் துளி விட்டுவிடுவோம்.