Saturday, December 22, 2007

நான் எழுதும் தமிழில் இருக்கும் சில பிழைகளுக்கு காரணம் இவை தான்.

நான் தமிழ் தெரியாது என்று கூறும் மற்ற சிலரைப்போல் சிறுவயதில் இருந்தே ஆங்கில மீடியம் எல்லாம் படிக்கவில்லை. நான் தமிழ் வழியில் தான் 12 ஆம் வகுப்புவரை படித்தேன். பிறகு எப்படி உனக்கு மட்டும் தமிழில் இத்தனை எழுத்துப்பிழைகள் மற்றும் உன் எழுத்துக்கள் இத்தனை இலக்கணப் பிழையாக இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நான் சிறுவயது முதலே மற்றவர்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமாகவே வளர்ந்தவன் (அப்படித்தான் நான் நினைத்து கொண்டிருகிறேன்). எப்போதும் எதிலும் சற்று சிந்திப்பது என்பது எனது பழக்கமாகவே ஆகிவிட்டது . எதைப்பார்த்தாலும் இது எப்படி இயங்குகிறது எப்படி செயல் படுகிறது என்பதின் அடிப்படையை தெறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் அதை ஆராய்ந்து விடுவது எனது பழக்கமாகிவிட்டது எதனையும் முடியாது என்று நான் ஒதுக்கியதும் இல்லை.


நான் எந்த வேலையை எடுத்துச் செய்தாலும் அதில் நிச்சயம் தரம் இருக்கும் மேலும் எடுத்தவேலையை முடிக்காமல் விட்டதும் இல்லை தெரியாத வேலையையும் சிறப்பாக செய்திருக்கிறேன். ஆனால் நான் தற்போது எழுதும் தமிழ் எழுத்துக்கள்தான் தலையிலே என்னை தட்டி வைத்திருக்கிறது அதைப் படிப்பவர்களும் என்னைக் குட்டி(திட்டி) வார்த்தைகளால் அறைந்தும் இருக்கிறார்கள். இதற்காக நான் வெட்கப்படவோ இல்லை வருத்தப்படவோ இல்லை மாறாக நான் அவர்களை என் எழுத்தின் தரத்தை உயர்த்தவந்த தர கட்டுபாட்டாளர்களாகத்தான் கருதுகிறேன்.


எனக்கு சிறுவயது முதலே மொழி பாட திட்டத்தின் மீது இருந்த அதிருப்தி வெறுப்பு இதுதான் என்னை இந்த நிலைக்கு தள்ளியது. எனக்கு அப்போது தோன்றிய எண்ணம் எல்லாம் மொழிப்பாடங்கள் ஆக்க பூர்வமாக நமக்கு எதையும் கற்றுத்தருவதில்லை என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது தான் காரணம். தமிழ் மொழிப்பாடத்தை எடுத்துக்கொண்டால் செய்யுள் பகுதிகளும் உப்புக்கு உதவாத உரைநடைகளும்தாம் புத்தகத்தை நிரப்பி இருந்தது. அந்த சிறுவயதில் எனது அறிவுக்கு எட்டாத கவிதைகள் காதல் காவியங்கள் அந்த காவியங்களை சிறுவயதாக இருக்கும் மாணவர்களிடத்தில் இது வயதிற்கு ஏற்றதல்ல எனக்கருதி ஆசிரியர்கள் சரியாக விளக்காமல் விட்டதும். மேலும் அதனை அப்படியே மனப்பாடம் செய்து தாளில் பதிவிறக்கவே செய்ய வைத்தார்கள்.


ஒருவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலை எனக்கு எப்போதுமே இல்லை ஆகையால் எனக்கு இந்த மனப்பாடம் செய்வது எல்லாம் பிடிக்காமல் போனது. நான் பிறந்ததோ இந்து சமூகத்தில் என் வீட்டிலும் அக்கம் பக்கத்து வீட்டிலும் சாமி கும்பிடுவார்கள் இந்து கடவுள்களைப் பற்றின கதைகளையும் கூறுவார்கள். நம்து தமிழ் பாட புத்தகத்திலோ செய்யுள் பகுதியில் இந்து முஸ்லீம் கிரிஸ்த்து என இட ஒதுக்கீடு வழங்கி வைத்திருப்பார்கள். எந்த ஒரு தமிழ் ஆசிரியரும் இந்த மூன்றையுமே சரியாக விளக்கவும் மாட்டார். மேலும் எனக்குக் கணக்கு பாடம் நடத்தும் ஆசிரியை ஒருவர் இருந்தார் அவர் கிறிஸ்த்து மதத்தைச் சார்ந்தவர் ஆகையால் வகுப்பில் பாடம் நடத்துவதைத் தவிர்த்து மத போதனையில் இறங்கிவிடுவார். இந்து மத கடவுள்களைப் பேய் என்றும் சாத்தான் என்றும் கூறுவார்.

எனக்குச் சிறுவயதிலேயே மற்றொரு பழக்கம் உண்டு யார் எதை சொன்னாலும் உடனே அதை வேறு யாராவது ஒருவரிடத்தில் சொல்லிவிட வேண்டும் இல்லை எனில் என் மண்டை வெடித்துவிடும். அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன் நமது வீட்டில் பிள்ளையாரையும் முருகனையும் கும்பிடுகிறார்கள் நமது ஆசிரியை அந்த கடவுள்களை பேய் பிசாசு சாத்தான் என்று கூறுகிறார். அப்படி என்றால் நம்வீட்டில் எல்லாம் பேயையும் பிசாசையும் கும்பிட்டுக்கொண்டு இருக்கிறார்களா என நினைத்துக்கொள்வேன். இனிமேல் நம் வீட்டில் யாரும் பேய் பிசாசு போன்றவற்றை எல்லாம் கும்பிடக்கூடது என்று வகுப்பில் ஆசிரியை சொன்ன ஏசு நாதர் பற்றிய கதைகளை வீட்டில் சொல்வேன். இதை கேட்ட என் வீட்டில் உள்ளவர்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த ஆசிரியை மீது தலமை ஆசிரியரிடம் புகார் கூறினார்கள்.

இந்தப் பிரச்சினைகளைச் சந்தித்த எனக்கு இவ்வளவு சிக்கல் நிறைந்த இந்தப் பாடதிட்டமும் சேர்ந்து மண்டையைக் குடையவே சிக்கலே வேண்டம் என்று அந்தப் புத்தகத்தைத் தொடுவதே இல்லை. ஆங்கிலப் பாடமும் அப்படிதான் இது சற்று வேறுபட்டது இதிலும் என் அறிவுக்கு உகந்த விஷயம் எதுவும் தென்படவில்லை. மேலும் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடுவரை அனைவரும் சொல்லும் சுதந்திரக்கதைகள் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தித் துன்புருத்தி வந்தார்கள். மகாத்மா காந்தி, திருப்பூர் குமரன் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் போராடி அடிபட்டு செத்து ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றார்கள் என்று சொல்லவே. நம்மை அடிமை படுத்திய ஆங்கிலேயனின் மொழியான ஆங்கில புத்தகத்தை நாம் ஏன் படிக்கவேண்டும் என்று அதையும் தொடுவதில்லை.

இந்தக் குழப்பமான பாடத்தையும் நம்மை அடிமைப்படுத்தியவனின் பாடத்தையும் படிக்காமல் தேர்வு எழுதுவது எப்படி தேர்வில் தோல்வியுற்றால் வீட்டிலோ தோலை உரித்துவிடுவார்கள். பிறகு வேறேன்ன செய்ய முடியும் என் அருகில் அமரும் மாணவனின் விடைத்தாளை அப்படியே ஜெராக்ஸ் செய்வது தான் தேர்வு என்று ஆகிவிட்டது. அருகில் தேர்வில் அமரும் அந்த மாணவனுக்குத் தேர்வு காலங்களில் பால் கோவாவுக்கும் பஞ்சு மிட்டாய்க்கும் பஞ்சம் வந்ததே இல்லை. பிறகு பள்ளிப் படிப்பு முடிந்து பொறியியல் கல்வி படிக்கும் போது சரியான தமிழ் மொழியில் புத்தகங்கள் இல்லாததால் நான் ஆங்கிலத்திலேயே படிக்க நேர்ந்தது.

இப்போது நான் மதில் மேல் நிற்கும் பூனையாக நிற்க்கிறேன் எந்த பக்கமும் குதிப்பதற்காக அல்ல எந்தப்பக்கம் என்ன நடக்கிறது என்று பார்த்துகொண்டே இருக்கத்தான் அடுத்து ஏறினால் மாடிமீது மட்டும்தான் கீழே குதிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இது தான் நான் சரியாக தமிழ் பிழையின்றி எழுத முடியாமல் போனதுக்கு காரணம். இப்போதும் கூட நினைத்துக்கொள்வேன் என்னைப்போல் எத்தனை நபர்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்று. நான் பள்ளிப் படிப்புகளை எல்லாம் முடித்து பத்து ஆண்டு களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம் பாடதிட்டம் அப்படியே இருப்பது நான் தமிழ் பதிவில் கைவைத்த போதுதான் எனக்கு மனது வலிக்கின்றது.

இன்னும் இப்படியே எத்தனை நாளைக்குத்தான் நமது பாடதிட்டங்கள் உப்புக்கு உதவாத மொழிப்பாடங்களாக இருப்பது. எது எது எந்த வயதில் கற்பித்தால் புரியுமோ அதை அதை அந்த வயதில் தான் கற்பிக்க வேண்டும். நீலி தன் தலைவனை கானாத துயரத்தினை அண்ணப்பறவையிடம் கூறினாள் என்றால் ஒரு 11 வயது சிறுவனுக்கு என்ன புரியும். நீலி ஏன் தலைவனை கானவேண்டும் அப்ப தலைவன் என்றால் யாரு அண்ணப்பறவையிடம் சொன்னால் அது போய் சொல்லுமா இப்படி எல்லாம் சிந்திக்க மாட்டானா. பாடதிட்டம் தயாரிப்பவர்கள் அந்தத வயது பருவத்திற்கே சென்று புரிந்து தயாரிக்க வேண்டாமா. ஏன் தேவை அற்ற குப்பைகளை எல்லாம் போட்டு புத்தகத்தை நிரப்ப வேண்டும் எது வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேவையோ அதை மட்டும் கொடுத்தால் போதாதா.

பின் குறிப்பு:-

நான் தமிழ் மொழியை நன்றாக எழுத கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் மொழி என்பது என் தனிப்பட்ட சொத்தும் அல்ல அது என்னையும் என்னை சார்ந்த சமூகத்தையும் சார்ந்தது. இது ஆரம்ப காலம் முதல் அப்படியே இருந்திருக்க முடியாது பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும். தமிழ் என் தாய் மொழியாகவும் நான் நன்றாக சிந்திக்க பேசத்தெரிந்த மொழியாகவும் இருப்பதினால் நான் சார்ந்த சமூகத்தை முன்னேற்ற முயற்சிக்க என் சிந்தனைகளை வெளிப்படுத்த அவசியமாகத் தமிழ் இலக்கணத்துடன் எழுதக் கற்றுக்கொண்டே தீர வேண்டும் (என்னுடைய பெற்றோர் வைத்த பெயர் ராமஜெயம் இது என்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்துவதாலும் இதன் பொருள் எனக்கு பிடிக்காத தாலும் வேறு பெயர் மாற்றிக்கொண்டேன் பேச முடியாத பெண்ணுக்குத் தேன்மொழி என்று பெயர் இருப்பதில்லையா அப்படித்தான் நான் என் புனை பெயரையாவது புரட்சி தமிழன் என்று வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன் அப்போது தான் என் பெயரைப் பார்த்தாவது சிலர் சினமுற்று திட்டியாவது திருத்த உதவி புரிவர் என்று தான்) நண்பர்களே தயவு செய்து என் பதிவுகளைப் படிக்கும்போது ஏதாவது பிழை இருப்பின் பின்னூட்டம் இடுங்கள் எழுதக் கற்றுக்கொள்கிறேன் என் மனம் புண்படும் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.வாசித்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

5 comments:

 1. //.......தெறியாது.........
  .......தெறியாது.........
  .......தெறியாது.........
  .......தெறியாது.........
  .......தெறியாது.........
  .......தெறியாது.........
  .
  .
  .
  .
  .
  .//

  :-(

  ReplyDelete
 2. கவலை வேண்டாம்...

  நீண்ட நாட்களுக்குப் பின் தமிழில் எழுதும்(தட்டச்சும்) போது இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்... போகப் போகச் சரியாகி விடும்....

  :))

  ReplyDelete
 3. //கவலை வேண்டாம்...

  நீண்ட நாட்களுக்குப் பின் தமிழில் எழுதும்(தட்டச்சும்) போது இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்... போகப் போகச் சரியாகி விடும்....

  :))
  // திரு ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 4. நிறைய எழுத எழுத பிழைகள் குறைந்துவிடும். நூறு சதவீதம் பிழையில்லாமல் எழுதுவது அரிது.

  சில பிழைகளைப் பார்த்தால் தட்டச்சுப் பிழையாகவே எனக்குத் தெரியவில்லை :-)

  நிறைய படியுங்கள் - அதுவே எழுதும்போது பல பிழைகளைக் களைந்துவிடும்.

  தலைப்பில் 'இவைகள்' தவறு. 'இவை' என்பதே பன்மைதான்.

  அவை, இவை - சரி
  அவைகள், இவைகள் - தவறு

  அவைகள் என்று பாராளுமன்றம், சட்ட மன்றம் என்று இரண்டு அவைகளிலும் - என்று சொல்வதற்காக எழுதலாம். :-)

  ReplyDelete
 5. //
  திரு ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி
  //
  அது சரி... ஜெகதீசன் தெரியும்.. அது நான் தான்..
  அதுக்கு முன்னாடி இருக்குற "திரு" யாரு.... :)))
  இவ்வளவு மரியாதை எல்லாம் எனக்கு வேணாம்ப்பா.... சும்மா "ஜெகதீசன்"ன்னு கூப்பிட்டாப் போதும்....
  :)))))))))

  ReplyDelete