Saturday, December 15, 2007

ஒரு எம்.என்.சி நிறுவனம் இப்படி இருந்தால்.

எம்.என்.சி நிறுவனங்கள் எப்படி நடக்கிறது என்பது பற்றி ஒரு ஆய்வு. உதாரணத்திற்க்கு ஒரு கிளையை எடுத்துக்கொள்வோம் இந்த நிறுவன ஊழியர்களை முதலில் பட்டியல் இடுகிறேன் பிறகு அவரவருக்கான வேலை என்ன என்று சொல்கிறேன்.


1. புராஜெக்ட் மேனஜர் -1 இவரது மாத சம்பலம் 1,10,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 5 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி ஆண்டின் நிறுவன கிளை மொத்த லாபத்தில் 20% இவருக்கு இன்சென்ட்டிவ்

2. அசிஸ்டன்ட் புராஜெக்ட் மேனஜர் -1 மாத சம்பலம் 60,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

3. புராஜெக்ட் கோ ஆர்டினேட்டர் - 2 மாத சம்பலம் தலா 40,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

4. ஆபிஸ் கோ ஆர்டினேட்டர் -1 மாத சம்பலம் 25,000. 00 கண்டிப்பாக இவர் உள்ளூர் காரராகத்தான் இருக்கவேண்டும்.

5. ஐ.டி சப்போர்ட் -1 மாத சம்பலம் 25,000. 00 இவருக்கு வேறு எந்த அலவன்ஸ்ம் கிடையாது இவர் நிரதர பணியாளர் அல்ல.

6. லாஜிஸ்ட்டிக் ஹெட் -1 மாத சம்பலம் 35,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

7. லாஜிஸ்ட்டிக் அசிஸ்டன்ஸ் -2 மாத சம்பலம் தலா 20,000. 00 இவர்களுக்கு வேறு எந்த அலவன்ஸ்ம் கிடையாது இவர் நிரதர பணியாளர் அல்ல.

8. ஒரு அக்கவுண்டன்ட் -1 மாத சம்பலம் 35,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

9. தரக்கட்டுப்பாட்டு அலுவலர் -2 மாதசம்பலம் தலா 40,000. 00 கார்ப்பரேட் கிரெடிட் கார்டுவுடன் மாதம் முழுவதும் 3 நட்சத்திற ஓட்டலில் தங்கும் வசதி

10. செக்யூரிட்டி - 2 ஆபிஸ் பாய் -3 மாத சம்பலம் தலா 6,000. 00

11. பீல்டு இஞ்சினியர் - 6 மாத சம்பலம் தலா 12,000. 00 அவுட் சோர்ஸ் அலுவலகம் விட்டுவெளியூர் சென்றால் ஒரு நாளைக்கு 7 நூறு ரூபாய்

12. பீல்டு ஒர்க்கர்ஸ்- 20 மாத சம்பலம் தலா 4,000.00 வேறேதும் சலுகை இல்லை கான்ட்ராக்ட்டர் கீழ் வேலை பார்ப்பவர்


இப்போது மேலே இருக்கும் பட்டியலை பார்த்திருப்பீர்கள் இவர்களில் முதல் 10 பட்டியலில் உள்ளவர்கள் அலுவலகத்தை விட்டு வீடு விடுதி தவிர வேறெங்கும் அலுவல் நிமித்தமாக செல்லவேண்டியதில்லை. முதல் 9 பட்டியலில் இருப்பவர்களை வெள்ளை காலர் பனியாளர்களாய் கருதுவோம்.

11 வது பட்டியலில் உள்ள இவர்தான் இந்த அலுவலகத்துக்கு எப்போதாவது வருவார் மற்ற நேரங்களில் காடு மலை என இரவு பகல் பாராமல் பெருத்த ஆபாத்துக்கிடையேயும் கொடுத்த டார்கெட் முடிக்க முடியாமல் அலையாய் அலைந்து திரிவார் புராஜெக்ட்டின் எந்த தொழில் நுட்ப்பத்தவறுகள்,கஸ்ட்டமர் திருப்த்தி மற்றும் காலதாமதம் எது வந்தாலும் இவரே பொருப்பாளி. இவர்கள் பெறுவது புரபசனல் பீ அதாவது தொழில் கட்டனம் என்வே இவர்கள் செலுத்துவது பிசினஸ் டாக்ஸ் 10.3 சதவீதம்.வேறு எந்த பாதுகாப்போ வசதியோ இவர்களுக்கு இல்லை . 12 வது பட்டியலில் உள்ளவர் 11ம் பட்டியலில் உள்ளவர் கொடுக்கும் பிரஷரால் உண்ண உறங்க நேரமின்றி இங்கும் அங்கும் ஓடி அலைந்து அடிப்ட்டு ரத்தம் கசிந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் இவருக்கு அலுவலகம் எங்கு இருக்கிறது என்றே தெறியாது. இப்போது முதல் பத்தின் ரோல் என்ன என்று பார்ப்போம்.

1. மேனேஜர் இவர் அசிஸ்டன் மேனேஜர், புரஜக்ட் கோ ஆர்டினேட்டர் இந்த மூன்று பேரை தவிர்த்து அவர் பேசும் நபர்கள் அவர்குடும்பத்தில் உள்ளவர்கள் நன்பர்களிடம் மட்டுமே. தீபாவளிக்கு கூட அனைவரையும் பார்த்து நல்வாழ்த்து சொல்ல மாட்டார். இவருடைய ஒரே வேலை எப்படி எப்படி எல்லாம் செலவை குறைப்பது உழைக்கிறவனை சுரண்டுவது என்பது மட்டுமே.

2. அசிஸ் இவரது வேலை மேனேஜர் சொல்வதை செயல் படுத்துவது மேலும் ஏதாவது சுரண்டும் வழி இருந்தால் சொல்வார் 10 பொருளுக்கு 10 பேரை கூட்டி வைத்து கலந்தாலொசிப்பார் 20 பைசா பேப்பர்கூட கஸ்டமருக்கே தரமாட்டார். அடுத்தௌ அலுவலகத்தில் உள்ளவர்கள் இவருக்கு வணக்கம் சொல்வது.

3. இவர்கள் மேனேஜர் இன்சினியர்களுக்கு இடையில் நடந்த வேலை மற்றும் நடக்கும் வேலை நடக்கவேண்டிய வேலை ஆகியவற்றை செய்தியாக பறிமாற்றுவது. கான்ட்ராக்டரின் பில்லை கட் செய்வது.

4. இவரது வேலை நிரந்தர ஊழியரான மேர்க்கண்ட முதல் 9 பட்டியலாருக்கும் கேப்(டாக்ஸி) ஏற்ப்பாடு செய்வது. அலுவலகத்துக்கு தேவையான காபி,டீ, குளிர்பானம் பேப்பர் போன்றவற்றை நிர்வகிப்பது.

5. இவரது வேலை நிரந்தர பனியாளர் அல்லாதோர் பயன் படுத்தும் நெட் கனெக்சன் ஐ கட்செய்வது.

6. இவர் வந்த வராத சரக்கு களைப்பற்றி மேனேஜருக்கு மெயில் செய்வது.

7. இவர்கள் வராத சரக்கு வந்ததாகவும் அனுப்பாத சரக்கு போய் சேர்ந்தாவும் போன் செய்து போன்செய்து அருகிலே அமர்ந்திருக்கும் ஹெட்டுக்கு தகவல் கொடுப்பது.

8. இவரது வேலை அந்த அலுவலகத்தில் டீ,காபி, பேப்பருக்கு ஒருமாதத்துக்கு ஆகும் 30 ஆயிரம் ரூபாய் செலவை கணக்கு பார்ப்பது பைசல் செய்வது. ஆனால் இவருக்கு சம்பலம் 35 ஆயிரம் ரூபாய்.

9. இவர்களது வேலை அலுவலகத்தில் அமர்ந்துகொண்டே தரம் கட்டுபாடு செய்வார்கள் அது எப்படி என்று இவர்களுக்கு மட்டும்தான் தெறியும். தரத்தில் பிரச்சினை வரும் போது இன்சினியர்மீது பழி போட்டுவிடுவார்கள். இவர்கள் இருப்பதே தரம் பார்க்கப்படுகிறது என்று கான்பிக்க மட்டுமே மற்றபடி டார்கெட்டில் தரம் எல்லாம் எதுவும் இருக்காது.

10. இவர்களாது வேலை மேலே உள்ளவர்களுக்கு வேலை செய்வது தான். இவர்களைப்பற்றி சொல்லத்தேவை இல்லை.

இந்த முதல் 9பட்டியலில் ல் இருப்பவர்கள் சென்டரலசைடு ஏ.சி அலுவலகம் 24 மனி நேர கேப்வசதி( நிறுவன செலவில் போக்குவரத்து வசதி), வெளியூருக்கு செல்ல நிறுவன செலவில் விமான பயன வசதி. இவர்கள் பெறுவது சம்பலம் ஆகையால் 5.1 சதவீதம் டீ.டி.எஸ் அதாவது சம்பலத்தில் பிடிக்கப்படும் வருமானவரி.ஆனால் இதுவரை பீல்டில் என்ன நடக்கிறது என்றுகூட ஒருவருக்கும் தெறியாது. இங்கு சம்பலம் பில்லிங் புராஜெக்ட் பெறுவது எந்த வேலையும் கிளை அலுவலகத்தில் செய்யப்படுவதில்லை அதெல்லாம் தலைமை அலுவலகத்தில் செய்யப்படுகிறது. இவர்கள் நிர்வாக பொருப்பில் உள்ளவர்கள் இவர்கள் செய்யும் நிர்வாகம் தான் என்ன 11 மனிக்கு அலுவலகம் வருவது 4 மனிக்கு வீடு திரும்புவது இதர்க்கு இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெறிந்திருக்கும். இது தான் ஒரு எம்.என்.சி யின் நிகழ்வு.

நன்பர்களே இப்போது மேலே உள்ள தகவல்களை பார்த்து எம்.என்.சி வருகையால் பயனடைபவர்கள் யார் இப்படி ஒரு எம்.என்.சி தேவையா? உங்களுக்கு என்ன தோன்றினாலும் பின்னூட்டுங்கள்

7 comments:

 1. இப்ப இதவச்சி என்ன தெறிஞ்சிக்கப்போற

  ReplyDelete
 2. புரட்சித்தமிழன்,

  நல்லாத்தான் ஆய்ய்வு செய்து இருக்கிங்க, ஆனால் எல்லா பெரிய கார்ப்பரேட் கம்பெனியும் இப்படித்தான் ஓடுதுனு நினைக்கிறேன்.

  வேலை அமைப்பில், மேல இருக்கவன் குறைந்த வேலை அதிக ஊதியம், கீழ இருப்பவன் அதிக வேலை குறைந்த ஊதியம் என்று.

  கேட்டால் அது அவங்க அனுபவத்திற்கு உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை என்பார்கள்!

  ReplyDelete
 3. இது எந்த வகையான எம்.என்.சி? அதையும் சொல்லுங்க. ஏன்னா ஒவ்வொரு துறை நிறுவனத்துலயும் ஒவ்வொருவிதமான வேலையடுக்குகள் இருக்கும்.

  சரி. இந்த எம்.என்.சி போயிருச்சுன்னா எல்லாருக்கும் பயன் வந்துருமா? நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு தெளிவாச் சொல்லுங்க.

  எனக்குத் தெரிஞ்சி 10 மணிக்கு வந்துட்டு 4 மணிக்கு வீட்டுக்குப் போறது அரசாங்க அலுவலகத்துலதான் நடக்குது. அரசாங்க அலுவலகத்துலயும் இதே மாதிரி பட்டியல் போடுங்க. அப்பத்தான் ஒப்பிட்டுப் பார்க்கவும் வசதியா இருக்கும்.

  அப்புறம்....எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம். பெயர்ல புரட்சியும் இருக்கு. தமிழும் இருக்கு. கொஞ்சம் எழுத்துப்பிழைகளைச் சரி செய்ங்க.

  ReplyDelete
 4. //இது எந்த வகையான எம்.என்.சி? அதையும் சொல்லுங்க. ஏன்னா ஒவ்வொரு துறை நிறுவனத்துலயும் ஒவ்வொருவிதமான வேலையடுக்குகள் இருக்கும்.//
  இது மென்பொருள் நிறுவனம் அல்ல.

  //சரி. இந்த எம்.என்.சி போயிருச்சுன்னா எல்லாருக்கும் பயன் வந்துருமா? நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு தெளிவாச் சொல்லுங்க.//
  இந்த எம்.என்.சி போகனும்னு சொல்லவில்லை நமது நாட்டில் அந்த நிறுவனம் நடத்தவேண்டுமானால் நமது அரசு சில வரையறை வைக்கலாமே. உடல் உழைப்பு உள்ள பனியாளர்களும் நிரந்தர ஊழியர்களாக இருக்கவேண்டும் குறைந்த பட்ச்சம் எத்தனை நிர்வாக ஊழியர்கள் இருகிறார்களோ அத்தனை உர்ப்பத்தி ஊழியர்களாவது நிரந்தர ஊழியராக இருக்கவேண்டும் என்று.

  //எனக்குத் தெரிஞ்சி 10 மணிக்கு வந்துட்டு 4 மணிக்கு வீட்டுக்குப் போறது அரசாங்க அலுவலகத்துலதான் நடக்குது. அரசாங்க அலுவலகத்துலயும் இதே மாதிரி பட்டியல் போடுங்க. அப்பத்தான் ஒப்பிட்டுப் பார்க்கவும் வசதியா இருக்கும்.//
  இப்போது எம்.என்.சி நிர்வாக அலுவலகம் புராஜெக்ட் சார்ந்த அலுவலகங்கள் அப்படித்தான் நடக்கின்றன மேலும் லஞ்சம் கூட அரசு அலுவலகத்தை மிஞ்சி விடுகிறது.

  //அப்புறம்....எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம். பெயர்ல புரட்சியும் இருக்கு. தமிழும் இருக்கு. கொஞ்சம் எழுத்துப்பிழைகளைச் சரி செய்ங்க.//

  கட்டாயம் திருத்திக்கொள்ள முயர்ச்சிக்கிறேன். இ கலப்பையில் தட்டச்சிடும் போது ஷிப்ட் சரியாக அழுத்தாததால் ஏற்ப்படும் பிரச்சினை இனிமேல் கவனமாக தட்டச்சிடுகிறேன்.

  ReplyDelete
 5. வவ்வால் மற்ரும் ராகவன் ஐய்யா அவர்களின் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 6. நல்லாவும் இருக்கு..

  நயமாவும் இருக்கு..

  உண்மையாவும் இருக்கு..

  உழைப்பைச் சுரண்டும் உலகத்தை நாசூக்கா காட்டியிருக்கீங்க..!

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. சுரேகா அவர்களின் வருகைஇக்கு நன்றி..
  இதைப்பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்களாமே என்றுதான் இந்த பதிவு.

  ReplyDelete