Monday, December 17, 2007

அம்மா பகவானின் அற்ப்புதம் வாரீர் அனிந்திடுவீர் வரதீட்ச்சைமாலை
என் பெயர் கே.டி.மாயாண்டி என் சொந்த ஊர் மூக்கருத்தம்பட்டி நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். வேலை வெட்டி ஏதும்
கிடைக்காமல் ஊர் ஊராய் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு நன்கு பரிட்ச்சையமான ஒரு நன்பர் ஏன் இப்படி எல்லாம் சுற்றிக்கொண்டு திரிகிறாய் நான் சொல்வதை கேள் என்றார். அப்போது அவர் " ஓம் சத் சித் ஆனந்த பர பிரம்ஹா புருஷோத்தம பரமாத்மா ஸ்ரீ பகவதி சமேத ஸ்ரீ பகவதே நமஹ" அப்படி ஒரு சுலோகம் சொன்னார். பின்னர் என்னிடம் அம்மா பகவான் என்று ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற சுவாமி
இருக்கிறார்கள் அவர்களிடம் வரதீட்ச்சை மாலை அனிந்து சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்றார்.

நானும் ஒரு தொலை பேசி என்னை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். பின்னர் ஒரு காயின் பூத்துக்கு போய் அந்த என்னுக்கு
தொலைபேசினேன். அப்போது அந்த நபர் எந்த மாவட்டம் என்று கேட்டார் நான் எதர்க்கு என்று கேட்டபோது வரதீட்ச்சை மாலை வழங்குவதர்க்காக ஒரு மாவட்டத்திற்க்கு ஒரு முகவர் இருக்கிறார் என்று கூறினார். பின்னர் நான் சிவகங்கை மாவட்டம் என்று சொல்ல அவர் வேறு ஒரு தொலைபேசி
என்னை கொடுத்தார். அந்த முகவர் கொடுத்த எண்ணை வைத்துக்கொண்டு எனது மாவட்ட முகவருக்கு போன்செய்தேன். உடனே அவரும் வந்து
பணத்தை கட்டிவிட்டு வரதீட்ச்சை மாலையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

நானும் மறு நாள் சென்று பணத்தை கட்டிவிட்டு வரதீட்ச்சை மாலை அனிந்துகொண்டேன். என்ன ஆச்சர்யம் நான் வீடு வந்து பார்க்கிறேன்
எனக்கு ஒரு தபால் வந்திருந்தது அதுவும் லண்டனில் இருந்து. உங்களுக்கு துனை மேலாலராக பனி நியமனம் செய்துள்ளோம் என்று. எனக்கு
மிகுந்த சந்தோஷம் நான் இது வரை வெளிநாடுகளுக்கு வேலைக்காக வின்னப்பித்ததே இல்லை. பிறகு நான் எப்படியும் அம்மா பகவானை
சந்தித்து விட்டுத்தான் போகவேண்டும் என்று நினைத்தேன். உடனே பாஸ்ப்போர்ட் விசா எல்லாம் ஒரு வாரத்துக்குல் எடுத்து விட்டேன் நேராக
அம்மா பகவானை தரிசனம் செய்தேன். அபோது அம்மா பகவான் கூறினார் இன்னும் உனக்கு திருமணம் ஆகவில்லை எந்த மாதிரி பெண்
வேண்டும் என்று கேட்டார் நான் கூறினேன் நல்லா அழகா சிரித்தால் கன்னத்தில் குழிவிழர மாதிரி இருந்தால் போதும் என்றேன்.

சென்னையில் இருந்து புரப்பட்டு லண்டன் அடைந்தேன். அங்கு லண்டன் விமான நிலையத்தில் டாக்ஸிக்காக காத்திருந்த போது என் அருகில்
ப்ரீத்தி ஜிந்தா வந்தார். நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா எனக்கேட்டார் நானும் ஆம் என்றுகூறினேன். உங்களைப்பார்த்தால் ஏதோ
கிராமத்தில் இருந்து வருபவர் போல் இருக்கிறீர்கள் என்ன ஊர் என்று கேட்டார் நானும் மூக்கருத்தம்பட்டி என்று கூறினேன். அதர்க்கு அந்த பேர்
என் வாயில் நுழையவில்லை என்றவர் சிறிது நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் உங்களை போன்ற கள்ளம் கபடம் இல்லாத ஆளை
பார்த்ததே இல்லை என்று கூறினார். சிறிது நேரம் கழித்து அவருடைய டாக்சி வந்தது உடனே நான் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு என்னிடம்
ஒரு கடிதத்தை கொடுத்தார் நான் என்ன இருக்கிறது என்று பார்ப்பதர்க்குள் காரில் அமர்ந்துகொண்டு பை பை சொன்னார்.

அந்த கடிதத்தில் உங்களை போன்ற நல்ல கள்ளம் கபடம் அற்ற கிராமத்து மனிதரை கண்டதில்லை நான் திருமணம் செய்தால் இப்படி ஒரு
வரணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஐ லவ் யூ என்று எழுதி கீழே அவருடைய மொபைல் நம்பரும் முகவரியும்
கொடுத்து இருந்தார். சிறிது நேரத்தில் என் டாக்ஸியும் வந்தது டாக்ஸில் ஏறி லண்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்க்கு சென்றேன். அவர்கள்
என்னிடம் எல்லாம் விசாரித்துவிட்டு உனக்கு மாதம் 37500 இங்கிலாந்து பவுண்டு சம்பலம் கொடுப்போம் தங்கும் வசதி உணவு வசதி அனைத்தும்
நிறுவனமே கொடுக்கும் என்றார்கள். உடனே எனக்கு கொள்ளை மகிழ்ச்சி உடனே அம்மா பகவானுக்கு போன்போட்டு நன்றி தெறிவித்தேன்
அவரும் மகிழ்ச்சி உனக்கு கூடிய சீக்கிரம் உன்னை விரும்பிய பெண் மனம் முடிப்பார் என்று கூறினார். தர்ச்சமயம் இங்கிலாந்தில் ஒரு மல்டி
நேஷனல் கம்பெனியில் வேலைசெய்து வருகிறேன். அனைவரும் வரதீட்ச்சை மாலை அனிந்திடுவீர் அம்மா பகவானை தரிசிப்பீர்.

" ஓம் சத் சித் ஆனந்த பர பிரம்ஹா புருஷோத்தம பரமாத்மா
ஸ்ரீ பகவதி சமேத ஸ்ரீ பகவதே நமஹ"


இப்படி எல்லாம் காலையில கனவு கண்டேன் யாரவது சொல்லுங்க விடியகாலை கனவு பலிக்குமா

7 comments:

 1. //எந்த மாதிரி பெண்
  வெண்டும் என்று கேட்டார் நான் கூறினேன் நல்லா அழகா சிரித்தால் கன்னத்தில் குழிவிழர மாதிரி இருந்தால் போதும் என்றேன்.

  சென்னையில் இருந்து புரப்பட்டு லண்டனை அடைந்தேன். அங்கு லண்டன் விமான நிலையத்தில் டாக்ஸிக்காக காத்திருந்த போது என் அருகில்
  ப்ரீத்தி ஜிந்தா வந்தார்.//

  :-)))

  ம்.ம்.ம்... கொடுத்து வைத்தவர் நீங்கள் சரியான வழிகாட்டி கிடைத்து இருக்கிறார்.

  அவனவன் பெண் தேடியும் , வேலை தேடியும் பல இடங்களில் பதிவு செய்துவிட்டு இன்னும் தேமேன்னு ஒக்காந்து இருக்கிறானுகள்...

  ReplyDelete
 2. ப்ரீத்தி ஜிந்தாவ கேட்டதா சொல்லுங்க.

  " ஓம் சத் சித் ஆனந்த பர பிரம்ஹா புருஷோத்தம பரமாத்மா
  ஸ்ரீ பகவதி சமேத ஸ்ரீ பகவதே நமஹ"

  :)

  ReplyDelete
 3. பலூன் மாமா அவர்களின் வருகைக்கு நன்றி,
  நீங்கலும் ஒரு முறை முயற்ச்சிக்கலாமே 37500 பவுண்டு சம்பலம் ஒருவருடத்துக்கு 4 கோடி ரூபாய் அதையும் நாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 4. //SurveySan said...
  ப்ரீத்தி ஜிந்தாவ கேட்டதா சொல்லுங்க.//
  இதெல்லாம் நீங்க ஏன் கேக்குறீங்க தப்பு தப்பு சர்வே பன்றவேலைய மட்டும் பாருங்க
  ப்ரீத்திக்கு நான் கேயரண்டி

  ReplyDelete
 5. தங்கள் கனவு மெய் சிலிற்க வைத்தது.

  ReplyDelete
 6. கலாம் கனவு காணுங்கள்னு சொல்லீட்டார்ல.
  இஷ்டபடி கண்டுக்குங்க.

  ReplyDelete
 7. யோகன் மற்றும் அனானி வருகைக்கு நன்றி. கலாம் சொன்னதுக்கு அப்புறமும் கனவு கானவில்லை என்றால் இந்திய குடிமகனாக இருக்கவே முடியாது.

  ReplyDelete