Wednesday, December 5, 2012

பதில்:- செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா? இதுதாண்டா ஜாதி

// பெண்களிடம் வரதட்சிணை வாங்கி அவர்களை சுரண்டித் தின்கிற ஜாதிக்கரான், தன் ஜாதிக்காரனா? தலித்தா?//  

தலித்துகள் யாரும் வரதட்சனை வாங்குவதே இல்லையா?

//செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா? தன் ஜாதி பெண்களை சுரண்டித் தின்னுப்புட்டு… அப்புறம் என்ன ஜாதி பெருமை வெங்காயம் வேண்டிக்கிடக்கு?// 

உங்களுடைய காதல் வெறும் செக்ஸ் மட்டும்தான் என்று கீழ்த்தரமாக நிரூபித்து இருக்கிறீர்கள்.

//இதில் கொஞ்சம் குறைந்தாலோ, பிறகு பண்டிகை, குழந்தை பிறப்பு போன்ற நாட்களில் சீர் செய்ய முடியாமல் போனாலோ அடி, உதை, குத்து என்று தன் ஜாதி பெண்களிடம் செயல்பட்டு தாங்கள் வீரபரம்பரை என்பதை நிரூபிக்கிறார்கள் எல்லா ஜாதிக்காரனும்.//
   
     பண்டிகை குழந்தை பிறப்பு இவைகளுக்கு சீர் செய்யும்போதுதான் உறவு களின் பாசம் பரிமாரிக்கொள்ளப்படும். கணவன் அடித்ததால் சகோதரியின் கண்ணில் வரும் ஒரு சொட்டு கண்ணீருக்குகூட சகோதரர்களிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

     இதே ஒரு தலித்துக்கு வேறு  சாதிக்காரன் பெண்கொடுத்து அவன் செய்யும் அக்கிரமத்தை தட்டிக்கேட்டால் கேட்ப்பவர்மீது PCR வழக்கு தொடுப்பார்கள் அப்போது அந்த அபலையில் குறலுக்கு ஆறுதல்கூட கூற முடியாது.

//உனக்கு தில் இருந்தா, இனி எவனாவது நம்ம ஜாதி, மத பெண்கிட்ட வரதட்சிணை வாங்குன அவனை சும்மா விட மாட்டோம். இதுக்கு முன்னால வாங்கிய வரதட்சிணையையும் திருப்பிக் கொடு என்று சொல்லு.
முடியுமா? முதலில் உன்னால வாங்கமா இருக்க முடியுமா? டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் எவ்வளவு கொட்டி அழுதிருப்பாங்க..//

  தன் மகளின் நிலையான வாழ் நாள் முழுதுமான பொருளாதார பாதுகாப்பிற்க்காக பெற்றோர்கள் கொடுக்கும் விலையும் சகோதரர்களின் சொத்திற்கு இனையாக சொத்துரிமை பங்கீடாக கொடுக்கப்படும் பொருள்.

 //பார்ப்பனப் பெண்களிலிருந்து வன்னியர் பெண்கள் வரை தன் ஜாதி ஆண்களின் கொடுமைகளிலிருந்து ஓரளவுக்கு பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் வாழ்கிறார்கள் என்றால் அது அண்ணல் அம்பேத்கரால்தான்.//

  ஒவ்வொரு தலித் குடியிருப்புக்கும் மாலை 6 மனிக்குமேல் சென்று வீடியோ எடுத்து வரவும் எத்தனை பேர் குடித்துவிட்டு மனைவியை நடு ரோட்டில் போட்டு அடிக்கிறார்கள் என்று தெறியும்.
  பாவம் அம்பேத்காரால் உங்கள் வீட்டு பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு தரமுடியவில்லை.

//
‘சொத்துக்கு ஆசைப்பட்டு, நம்ம வீட்டு பெண்களை காதல் கல்யாணம் செய்கிறார்கள்’, என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.
பெண்களுக்கு எந்த ஜாதி இந்து சரிபாதியா சொத்துக் கொடுக்குறான்? எல்லா சொத்தையும் மகன்களுக்குத்தானே எழுதி கொடுக்குறான்.
தன் பெண்களுக்கு செலவு செய்து திருமணம் செய்கிறான். சீர் செய்கிறான் அவ்வளவுதான். சொத்துல பங்கு கேட்டால் கூட கொடுப்பதில்லை.//

  கல்யாணம் செய்து தனித்தனி ஊர்களில் கணவன் மனைவியை பிரித்து வைப்பதா? அப்படி கொடுத்தா அந்த சொத்தை யார் பராமரிப்பது?

//
பெண்ணை பெற்றவர்களுக்கு காதல் திருமணம் ஒரு வரப்பிரசாதம்.
வறுமையில் இருக்கிற ஒரு ஜாதி இந்து, தன் ஜாதிக்குள்ளேயே தன் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், மிகக் குறைந்தது 3 லட்சமாவது உடனடியாக தேவை.
மாறாக, அந்தப் பெண் தலித் இளைஞரையோ, வேறு ஜாதிக்காரரையோ காதல் திருமணம் செய்து கொண்டால், அந்த செலவு மிச்சம்.//

   காதல் திருமணம் என்றால் என்ன? யாருக்கும் தெறியாமல் பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிவிடுவதா?
  அப்ப ஜாதி இந்து தவிர மற்றவர்களெல்லாம் திருமணம் செய்வதில்லை அப்படியே மணதுக்கு பிடித்த பெண்கள் கண்ணில் பட்டவுடன் அவளுடன் சேர்ந்து குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிடுவார்களா?
 
 
 // ஆனால், மாப்பிள்ளை தலித்தாக இருந்தால், தன் பொருளாதார லாபத்தை விடவும், இந்தத் திருமணம் தனக்கு மிகப் பெரிய அவமானமாக கருதுவதான் ஜாதி இயங்கும் தன்மை.//

     எந்த பெற்றோரும் தன்னைவிட தன் குழந்தையைத்தான் அதிகமாக நேசிப்பர் தான் வெயிலில் காய்ந்தாலும் தன் குழந்தை நிழலில் உறங்கவேண்டும் என்று துடிப்பதுதான் தாயுள்ளம். குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு மட்டுமே அது புரியும், கழிப்பவர்களுக்கு கழிவை சும்மா அகற்றப்படுவதால் நமக்குதான் லாபம் என்ற என்னம் வரும்.

No comments:

Post a Comment