Tuesday, October 2, 2012

ஈமு கோழிகளும் இலிச்சவாய் மக்களும்

         நீண்ட நாட்களாக நான் இதை பற்றி எழுதவேண்டும் என்று நினைதிருந்தேன் இன்றுதான் அதற்கான நேரம் கிடைத்தது.

     மக்கள் ஏமாறுவது அவர்கள் தலைவிதி அவர்களை ஏமற்றுபவன் புத்திசாலி, ஏமாற்றுகாரன் வருவதை நாங்கள் பார்கிறோம் அவர்களுக்கு அனுமதியையும் நாங்களே அளிப்போம், ஏனென்றால் அதர்க்கான கட்டணத்தை அவர்கள் கொடுக்கிறார்கள் அதை அனுமதிப்பது அலுவலர்களின் கடமை கொள்ளையடிக்கும் ஏஜன்ஸி என்று ஒன்று துவங்கினாலும் அதற்க்கும் அனுமதி கிடைக்கும். 

     
      எந்த ஒரு புதிய தொழில் அல்லது புதுவகையன நிருவணங்களை துவக்கினாலும் அதைபற்றி ஆராயவேண்டியது அரசின் கடமை இல்லை இலட்சக்கணக்கான காவலர்கள் பனியாற்றுவது மக்களின் பாதுகாப்பிற்காக அல்ல மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்காக மட்டுமே 


       ஒரு பாஸ்போர்ட் அளிக்கும் அரசிற்கு அந்த ஒற்றைகுடிமகனுக்கு காவல் துறை விசாரனை தேவபடுகிறது. அவன் வெளி நாடு சென்று அங்கு ஏதாவது தவறு செய்துவிட்டால் இந்தியாவின் மானம் போய்விடும். நமது நாட்டிற்குள் யார் யாறைவேண்டுமானாலும் ஏமாற்றலாம் அது வெளினாட்டுகாரனாக இருந்தாலும் சரி.  எம்மக்கள் அதிக சதவிகிதத்தில் ஏமாளிகளக இருக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம். அப்போதுதான் நாங்கள் அரசியல் செய்யமுடியும் இப்படி இருந்தால்தான் எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

       ஊடகங்கள் எனப்படும் பத்திரிகை தொலைகாட்சி வானொலி எல்லாம் பத்திரிக்கை சுத்தந்திரம் ஊடகங்களுக்கான சுதந்திரம் என்றெல்லாம் கூப்பாடு போடுவார்கள் அவர்கள் ஒருபோதும் மக்களின் நலன்களைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை கவலைபடவேடியதும் இல்லை. ஒரு ஏமாற்றுகார நிறுவனத்தினை ஒரு நளைக்கு நூறு முறை விளம்பரப் படுத்துவார்கள், அதே நிறுவணத்தின் குட்டு வெளிப்படும்போது அதே ஊடகத்தில் முக்கிய செய்தியாக வரும்  இந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை விளம்பரப் படுதியதர்க்காக  அந்த ஊடகத்தின்மீது குற்றம் பதியப்படுகிறதா இல்லை அந்த ஊடககங்கள் ஒரு மன்னிப்பாவது கேட்டிருகிறதா.

      மக்களாகிய நாங்கள் எங்களை இந்த ஏமாற்றுகாரர்களிடம் இருந்து பாதுகாத்துகொள்ள இயலவில்லை அப்படி முடிந்திருந்தால் அதற்கான விழிபுணர்வு எங்களுக்கு ஏற்ப்பட விட்டிருந்தால் நாங்களும் புத்திசலிகளாக இருந்திருப்போம் இந்த ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் கோமாளிகளாக மாற்றியிருப்போம்.

    மானத்தை விற்கிறவன் விபச்சாரி ஏமாற்று நிறுவனங்களுக்கான விளம்பர நடிகர்களும் அந்த நிறுவணஙள் குட்டு வெளிப்படும்போது-- (விபச்சாரவிடுதிக்கு ரெய்டுபோனாத்தான் தெறியும் யார் யார் விபச்சாரினு). 

2 comments:

 1. இது ஒரு பக்க காணலாக உள்ளது.

  ஒன்று, ஈமு கோழி விவகாரத்தில், பணம் போடுபவர்களைப் பங்குதார்களாகக் காட்டியுள்ளார்கள் என நினைக்கிறேன்.
  முதல் போட்டு எந்த, சட்ட விரோதமில்லாத வணிகமும் செய்யலாம். பலர் முதலீடு செய்து ஈமு கோழி வளர்த்து, லாபத்தை பகிர்ந்து கொள்வது சட்டப்படி தவறு இல்லை. உரிமம் கொடுத்தது அந்த தொழிலைத் தொடங்கத்தான்; அவர்கள் எவரிடம் முதல் பெற்று தொழில் செய்வார்கள் என்பது உரிமம் கொடுக்கும் அரசு அதிகாரிக்கு தெரிவிக்கத் தேவை இல்லை. அதைக் கேட்க வேண்டும் என்று இது வரை சட்டம் வரவில்லை.( சட்டம் எழுதும் போது என்னென்ன விதத்தில் ஏமாற்றுக் காரர்கள் உதயமாவார்கள், எப்படி எல்லாம் மக்கள் ஏமாறக் காத்துக் கொண்டு இருப்பர் என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே சட்டத்தில் அடைப்பார்கள்).
  கேப்பையில் நெய் வழிகிறது யாரோ பேசிக்கொண்டால் என்றால் பாத்திரம் எடுத்துகொண்டு ஓடும் கூட்டம் இருக்கிறது.
  அவர்கள் என்ன வியாபாரம் செய்வார்கள், அவர்களுக்கு இவ்வளவு லாபம் வருமா, நம் பணம் சரியான வழியில் செலவு ஆகுமா, காக்கப் படுமா என்றெல்லாம் எண்ணிப்பார்க்காமல், ஆயிரங்களையும் லட்சங்களையும் முன் பினதெரியாதவர்களிடம் கொடுக்கும் நபர்கள் இருக்கும் போது நாம் யாரைக் குற்றம் சொல்ல முடியும்?

  நாம் எதற்கெடுத்தாலும் அரசைக் குற்றம் சொல்லிப் பழகி விட்டோம். மக்களின் அறியாமை, அதிக ஆசை போன்றவை தான் இது போன்றவைக்குக் காரணம் என்று தோன்றுகிறது.
  ஆனால் ஒன்று: சட்டம் ஒரு ஆமை; சட்ட ரீதியாக நடவடிக்கைகள் நீ....ண்ட காலம் இழுத்து அடிக்கும்; குற்றம் செய்தவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள் என்று அச்சம் இல்லாமல் போனதற்கு அரசும் ஒரு காரணம்.

  ReplyDelete
 2. பக்கத்து வீட்டுகாரனை எதிர் வீட்டுகாரன் ஏமாற்றினால் அதர்க்கு அரசு பொறுப்பு ஏற்கதேவையில்லை ஊடகங்களினூடாக விளம்பரம் செய்வதை அரசு தனிக்கை செய்யவேண்டும் ஆய்வு செய்யவேண்டும் அது மக்களை ஏமாற்றதில் இருந்து காக்க அரசு செய்யவேண்டிய கடமை சட்டம் இல்லை இருகிறது என்பதல்ல பிரச்சினை. கஞ்ஜா விற்றால்கூட பனம் கிடைக்கும் அதை அனுமதிக்குமா அரசு, ஆசை என்பது ஒரு போதை தான் அதை திரும்ப திரும்ப விளம்பரபடுத்துவதன் மூலம் மக்களை அவர்களின் புத்தி மழுங்கடிக்க செய்விக்கப்படுகிறது, நீங்கள் திடீர் என்று ஒரு பொருளை வாங்க நினக்கும்போது அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட பிராண்டே நினைவிற்க்கு வருகிறது அதையே வாங்குகிறீர்கள்

  ReplyDelete