Showing posts with label சீரழிக்கும் சமுதாயமே. Show all posts
Showing posts with label சீரழிக்கும் சமுதாயமே. Show all posts

Tuesday, December 4, 2012

பெற்றோர்களின் முதலீடுகளை முடமாக்கும் நஞ்சு முற்கள்

          இன்றைய சமூக சூழலில் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளை வளர்ப்பதற்காக தம் வாழ்வையே முதலீடு செய்கிறார்கள். தம் வாழ் நாளில் 20 வருடங்களுக்குமேல் தம் குழந்தை செல்வங்களுக்காக தனது தூக்கம் நிம்மதி ஓய்வு என அனைத்தையும் தொலைத்திருப்பார்கள் இவை எல்லாம் எதற்க்காக?

          தமது ரத்தம் தமது உயிரின் ஒரு பகுதியாகிய தன் குழந்தை செல்வங்களின் எதிர்காலதிற்காகவும் தனது கடைசி காலங்களில் தான் வளர்த்த மரத்தின் நிழலில் இலைப்பாறவும் தானே ! அதுவே சூறைக்காற்றால் அடித்து செல்லப்பட்டால் அலலது அந்த மரத்தின் நிழலில் முழுதுமாக  நஞ்சு முற்கள் முலைத்துவிட்டால் என்ன செய்வது.

        தன்னுடைய எதிர்கால கனவுகள் எல்லாம் கண்ணாடி கோட்டையாய் கண்முன்னே இடிந்து நொறுங்கும்போது அவர்களின் மனம் என்ன பாடுபடும். அதை ஒருமுறையேனும் தன் வாழ்வில் அனுபவிக்க நேர்ந்தால் அவர்களுக்கு மட்டுமே புரியும் அதன் வலி எவ்வளவு ஆழமானதென்று.

       இளைஞர்களை தவரான பாதைக்கு இட்டுச்செல்கிறார்கள் காமத்தை விற்று பணம் சம்பாதிக்கும் திரை துறையினர். வேலை வெட்டி இல்லாதவனும், ரவுடிகளும், தெரு பொறுக்கிகளும், அழகிய கல்லூரி படிக்கும் பென்களையும் மேல் சாதி பெண்களையும் நடுத்தர மற்றும் வசதியான வீட்டுப்பெண்களையும் துரத்தி துரத்தி காதல் செய்வதாக படம் எடுக்கிறார்கள். சமூகத்தை சீரழிக்கும் இவர்கள் எவரும் காதல் இல்லாமல் படம் எடுக்க முடிவதில்லை பெண்களை பெற்றெடுத்த தகப்பன்களை எல்லாம் வில்லனாக சித்தரிக்கிறர்கள். எந்த சோமாரியாவது காதலினால் வழ்க்கை வீனாய் போன பெண்கள் பிள்ளைகளின்மேல் அவர்கள் நினைத்த எதிர்காலம் திசைமாறிப்போனதல் பெற்றோர்கள் படு வேதனை, இவர்களின் காதல் திருமணத்திற்க்குபின் வாழ் நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை படம் எடுத்திருகிறார்களா?.     


         போதை பொருட்கள் உடலை சீரழிக்கிறது, வாழ்க்கையை திட்டமிடாத கவர்ச்சியினால் வரும் காமகாதல் வாழ்க்கையையே சீரழித்துவிடுகிறது.. திருமணம் ஆகும் நாள்வரை பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் இழந்த அனைத்திற்கும் விலையாக என்னகொடுகிறார்கள், சோரூட்டி வளர்த்த பிள்ளைகள் சோற்றுக்கு கஷ்ட்டப்படும் பெற்றோர்களும் இருக்கிறார்கள் ஊட்டி வளர்த்தபிள்ளை உணவின்றி கஷ்ட்டப்படுவதையும் பார்கிறார்கள்.
      
       மகன் அல்ல மகள் அல்ல இவர்கள் மக்கட்செல்வம் எங்கள் செல்வத்தை கொள்ளையடிக்க முயலாதீர்கள். விதைத்த விதை விருட்சமாகி பழம் தரும் நேரத்தில் வேருடன் பிடுங்கி எங்கள் வாயினில் மண்ணை போடாதீர்கள் விட்டுவையுங்கள் நிழலில் அமர்ந்து கனியுண்டு இளைபாறும் நேரமிது.