Showing posts with label குஜராத் முதல்வர். Show all posts
Showing posts with label குஜராத் முதல்வர். Show all posts

Wednesday, December 26, 2012

இன்று நான்காவது முறையாக முதல்வராக பதவி ஏற்க்கிறார் நரேந்திரமோடி நேரலையில் காண்க

பதவி ஏற்ப்பு விழாவை நேரலையில் இனையம்மூலம் கான இங்கே சொடுக்கவும்

சென்ற ஆட்சியின் காலத்தில் தான் செய்த சாதனைகளால் வென்ற மோடி இன்று மீண்டும் பதவி ஏற்க்கிறார்.

சாதனைகள்

1. அமரிக்காவில் 12  நகரங்களில் வாழும் இன்தியர்களுடன் வீடியோ கான்பரஸ்மூலம் குஜராத்தின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளைப்பெற்றார் அது 20 மே 2012 அன்று நேரலையாக ஒளிபரப்பானது. இதில் விவசாயம் தொழில்துறை மற்றும் சேவைத்துறை குறித்து விவாதிக்கப்பட்டது.

2. 2001 ஆம் ஆண்டு ரூ 6700 கோடி நிதி பற்றாகுறையாக இருந்த மாநிலம் இன்று 10 ஆண்டுகளில் உபரி வருவாய் மிக்க மாநிலமாக உருவெடுத்துள்ளது. இத்தனைக்கும் மக்கள் மீது எந்த கூடுதல் வரிச்சுமையும் தினிக்கப்படவில்லை இந்த கால கட்டத்தில் புயல் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டபோதிலும் சாதிதுள்ளது.

3. இந்தியாவின் விவசாய வளர்ச்சி 3%மாக உள்ளபோது குஜராத்தின் விவசாய வளர்ச்சி 11% மாக உயர்ந்துள்ளது, மேலும் இங்கு வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. 14700 கோடியாக இருந்த விவசாயத்தின் மூலமான வருமானம் 98000 கோடியாக உயர்ந்துள்ளது இவை அனைத்தும் நேரடியாக விவசாயிகளை சென்றடைகின்றது.

4. 2001 ஆம் ஆண்டில் 108 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த விளை நிலம் கடலோர தரிசு நிலமேம்பாட்டின் மூலம் 145 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.  பத்து ஆண்டுகளில் 68% பால் உற்பத்தி அதிகரித்துள்ளது, 23 லட்சம் பேல்களாக இருந்த பருத்தி உற்பத்தி 1 கோடி 23 லட்சம் பேல்களாக உயர்த்தப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பம் மூலம் உருளைகிழங்கு பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

5. அமரிக்க நிறுவனங்கள் 15000 கோடியை குஜராத்தில் முதலீடு செய்துள்ளன மேலும் 2013 ம் ஆண்டில் 60 நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.

6. அனைத்து கிராமங்களும் 24X7 தடையற்ற மின்சாரம் பெருகிறது. சூரத் அகமதாபாத் ராஜ்கோட் பரோடா போன்ற பெரு நகரங்கள் அனைத்தும் குழாய்மூலம் கேஸ் (Gujarat Gas )இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

7.சுற்றுலா வளர்சியில் 16%த்தை எட்டியுள்ளது கிர் காடு மேம்படுத்தப்பட்டுள்ளது.

8. சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின் மூலம் 98% பிரசவம் தாய் சேய் நலத்துடன் பிரசவிக்கப்படுகிறது.

9. 2001 ஆம் ஆண்டு 56 லட்சம் வீடுகள் உள்ள குஜராத்தில் 46 லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை இப்போது கழிப்பறை கட்டுவதற்கு அரசின் நிதியுதவி மூலம் 44 லட்சம் வீடுகள் கழிப்பறை வசதியுள்ள வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. மீதமும் விரைவில் மாற்றப்பட்டு விடும்.

10. 2001 ஆம் ஆண்டு அரசின் மருத்துவ கல்லூரிகளில் வெறும் 500 இடங்கள் மட்டுமே இருந்தது இன்று 6000 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் 8000 இடங்கள் இன்று 42000 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

11. குஜராத்தில் மட்டும் 600 மெகாவாட் சூரி ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது (சரன்கா சோலார் பூங்கா நம்ம பங்கு அதுல 150 மெகாவாட் சிவில் மற்றும் சோலார் பிரேம் கட்டுமானம் KP Energy ). குஜராத்தை தவிர்த்து இந்தியா முழுவதும் 120 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை மூலம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

12. 2012. சுவாமி விவேகானந்தாவின் 150 வது பிறந்த நாளில் " யுவ சக்தி வருடம் " என்ற பெயரில் ஒரே வாரத்தில் 65000 இளைஞர்களுக்கு   பனிவாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்ப சொல்லுங்க உங்க ஓட்டு யாருக்கு?