Tuesday, April 9, 2013

சோலார் பேனல்களை பயன்படுத்த சில முக்கிய குறிப்புகள் ( டிப்ஸ்)

    இன்று நம்ம ஊர்களில் மின்வெட்டு சமாளிக்க முடியாத்தாய் இருக்கிறது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள சோலார் பேனல்கள் பெரும் உதவியாய் இருக்கும், ஆனால் அதை பயன்படுத்தும்போது முதலீடு அதிகமாக தேவைப்படுகிறது அதனால் முதலீட்டை திரும்பபெரும் காலம் என்பதை கணக்கிடமுடியாதவாறு அதிக அளவில் விலை இருப்பதால் நான் சில யோசனைகளை முன்வைக்கிறேன்.

    இப்போது சோலார் சிஸ்டம் என்றாலே பேட்டரி இன்வெர்டர் என்று கூடுதல் உபகரணங்கள் சேர்த்தே பரிந்துரைக்கப்படுகின்றன.    இந்த கூடுதல் உபகரணங்களை தவிர்த்து எப்படி எல்லாம் சோலார் பேனல்களை பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

        முதலில் விவசாய பம்புசெட்களை பார்ப்போம். ஏற்கணவே விவசாயம் இலாபம் குறைந்த தொழிலாக இருக்கும்போது அவர்களின் கடன் சுமையை இந்த சோலார் இன்வெர்ட்டர் பேட்டரிகள் அதிகமாக்கிவிடுகின்றன. இருக்கும் பம்புசெட் களை அப்படியே தனியாக மின்சாரவாரிய இணைப்பில் இருந்து மாறுதல் செய்யாதீர்கள். சோலார் பம்புசெட்களுக்காக டி.சி மோட்டார்களை பயனபடுத்துங்கள் அதுவும் பகல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும்.

          டிசி மோட்டாரை நேரடியாக பயன்படுத்துவதன்மூலம் இன்வெர்ட்டர் பேட்டரி போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள் அரசு மானியத்திற்க்கு ஆசைப்பட்டு அதிக கடன்சுமைகளை சுமக்காதீர்கள். அடுத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து அமெரிக்க தயாரிப்புகளை வாங்குவதைவிட பத்தாயிரம் கொடுத்து சீனதயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள், சோலர் பேனல் பழுதானால் அதனை வாரண்டியில் மாற்ற செலவு செய்யும் போக்குவரத்துச் செலவு காத்திருப்பு  அகியவற்றைவிட ஒரு சீன தயாரிப்பு பேனல் பழுதானால் உடனே புதிய பேனல் ஒன்றை வாங்கி பொருத்திவிடுவது இலாபகரமானதாக இருக்கும்.

       இந்த இன்வெர்ட்டர் தயாரிப்பு நிருவனங்கள் AMI அது இதுவென்று மக்களை கொள்ளையடித்துக்கொண்டு இருப்பார்கள் எனவே கூடியமட்டும் இன்வெர்டர் இல்லாமல் டிசி சாதனங்களை உபயோகியுங்கள். உதாரணத்திற்க்கு நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பல டிசியில் தான் இயங்குகின்றன. RO watter purifire 36 V Dc பம்பில்தான் இயங்குகிறது ,  LCD , LED TV 12 V DC ,      Laptop 19 V DC, DTH  12 V DC  என அதிக பயன்பாட்டில் உள்ள பொருட்கள் DC ல் தான்இயங்குகின்றன. முடிந்தவரை மின் விளக்குகள் மின்விசிறிகள் போன்றவற்றையௌம் டிசி யிலே பயன்படுத்துங்கள் இது உங்களுடைய ROI ஐ விரைவில் மீட்டுகொடுத்துவிடும்.

8 comments:

 1. என்னிடம் 800 வாட் சக்தி இன்வேர்ட்டர் உள்ளது சோலார் பேணல் மட்டும் வாங்கி பொறுத்த இயலுமா ? எவ்வளவு செலவு ஆகும்?

  ReplyDelete
 2. ஒரு கிலோ வாட் ( 1000 வாட்) க்கு இனையான சோலார் பேனல் சிறந்ததாக இருக்கும் சோலார் பேனலை நேரடியாக பேட்டரியுடன் இனைத்துவிடலாம் குறைந்தபட்சம் பத்தாயிரத்தில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் +/- 10% மேலும் உங்கள் இன்வெர்ட்டர் டிசி டெர்மினல் அதாவது பேட்டரி வோல்டேஜ் க்கு தகுந்தவாறு பேனல்களை தேர்வு செய்யவேண்டும் 24 V சிஸ்டமாக இருந்தால் 30 V பேனல்களை பயன்படுத்தலாம் 12 V சிஸ்டமாக இருந்தால் இரண்டு 12V பேட்டரிகளை தொடர் இணைப்பில் சார்ஜ் செய்யவும் இன்வெர்ட்டருக்கு ஒவ்வொரு பேட்டரியில் இருந்தும் தனித்தனியாக டேப் செய்து ரோட்டரி அல்லது சேஞ்ச் ஓவர் சுவிட்ச்மூலம் பயன்படுத்துங்கள்.

  ReplyDelete
 3. ஒரு மூன்று பெட்ரூம் வீடு...carpet area 1200 sq.feet உள்ள வீடு.

  1.5 டன் a/c ஒரு வாஷிங் machine ஐந்த fan உள்ள வீட்டிற்கு எவ்வளவு செலவு ஆகும்?

  ReplyDelete
 4. 5 tube light 200w, 5 fan 300w, AC 2250w, WM 1500w = 4250w , ஏர் கண்டிசனர் மற்றும் வாஷிங்க்மெசின் இவை இரண்டும் சீரான லோடு அல்ல ஆகையால் 1.7 மடங்கு starting current ஐ எடுக்கும் என்பதனால் அதையும் கணக்கில் கொள்ளவேண்டும். பகல் நேர பயன்பாடு மட்டும் எனில் 6KW இன்வெர்ட்டர் மற்றும் 6 KW சோலார் பேனல் போதுமானதாக இருக்கும் இதற்க்கான சோலார் பேனல் aprox Rs 70000/-, inverter aprox Rs 65000/- cablles and structures aditional aprox Rs 30000/- it cost around 2 lakhs, suppose to use 24 hrs solar pannel 10 kw cost around Rs.120000/- ,inverter aprox Rs 65000/-, Battery 48 V 1500 Ah Required, Cost aprox Rs. 450000/-, structures and cables adiional aprox Rs.50000/- your budget for 24 ours system around Rs. 7 lakhs. தங்கள் கவனத்திற்க்கு இதில் குரிபிட்டுள்ள மதிப்பீடு எனக்கு கிடைத்த Lease quotation அடிப்படையில் கொடுத்துள்ளேன். பொருட்க்களை வாங்கும்போது இந்த தொகைகளுடன் சரிபார்த்து குறைத்து கேளுங்கள். நன்றி

  ReplyDelete
 5. நம்பள்கி அவர்களுக்கு 10 கிலோவாட் பேனல் பொருத்த 50 சதுரமீட்டர் இடம் தேவைப்படும், பேட்டரியின் உழைக்கும் காலம் 4 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே, பேட்டரிகளை வைக்க 6 சதுரமீட்டர் அறை தேவைப்படும்.

  ReplyDelete
 6. பாட்டரி விலையை மட்டுமே கணக்கில் எடுத்தாலெ...இதில் செலவு அதிகம் ஆகிறதே! அப்புறம் என இதை உபயோகிக்கவேண்டும்?

  ReplyDelete
 7. சோலார் மின்சக்தியை பகலில் மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது. தமிழக அரசு ஓபன் கிரிட் சிஸ்ட்டத்தை வழங்கினால் நாம் பயன்படுத்தியது போக மீதம் உள்ளதை மின்சாரவாரிய இனைப்பில் பின்னோக்கி செலுத்தலாம் அதனால் நமக்கு மின்சார வாரியம் பணம் கொடுக்கும் இரவில் பயன்படுத்தும் மின்சாரத்தை பகலில் கொடுத்ததில் இருந்து கழித்துக்கொள்ளலாம். பேட்டரியும் தேவைப்படாது.

  ReplyDelete
 8. நன்றி! உங்கள் பதில்களுக்கு.

  ReplyDelete