Monday, April 7, 2008

மக்கள் தொலைக்காட்சியின் கேள்விக்கு என்ன பதில்? அனைவருக்கும் சமச்சீர் கல்வி

நான் 7.4.2008 திங்கள் அன்று காலை 11 மனிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான கேல்விக்கு என்ன பதில் என்ற நேரலை நிகழ்ச்சியைப் பார்த்தேன் அந்த நிகழ்ச்சியில் என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம் என்று தொலைபேசியில் பலமுறை முயற்சித்தும் இணைப்பு கிடைக்கவில்லை. எனவே என் கருத்துக்களை நமது பதிவர்களிடமாவது பகிர்ந்துகொள்ளலாம் என்று பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொடுக்கவேண்டும் என்றால் கல்விக்கூடங்களில் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஒரே அளவு கற்பித்தல் திறன் மற்றும் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இது எப்படி இப்போது இருக்கும் சாதாரண முறையில் சாத்தியம் ஆகும். அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொடுப்பது சாத்தியம் ஆகும். எப்படி எனில் நாம் கொடுக்கும் பாடதிட்டம் மற்றும் கல்வியின் தரம் உலகிலேயே முதல் தரமானதாக இருக்கவேண்டும். கற்பிக்கும் முறை மாணவர்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் கல்விக்கூடங்களுக்கு வரமுடியாத நிலையிலும் வெளியூர்களில் இருக்கும் போதும் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

மேலே குறிப்பிட்ட அணைத்தும் சரி எனில் இவற்றை எப்படி செயல் படுத்துவது. முதலில் அனைத்து பாடங்களுக்கும் தனித்தனியே துரைசார்ந்த வல்லுனர்களைக் கொண்டு நவீன பாடதிட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் அமைக்கவேண்டும். இந்த பாடங்கலை ஒலி ஒளி (படக்காட்சிகளாக) தயாரிக்கவேண்டும். தயாரிக்கப்பட்ட படக்காட்சிகளை கல்விக்கூடங்கள் இயங்கும் நேரங்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி அலைவரிசைகளில் தொலைக்காட்சி மூலமோ அல்லது அகன்ற அலைவரிசை இணைய இணைப்புகள் மூலமோ வகுப்பறைகளுடன் இணைக்க வேண்டும்.

வகுப்பு நடக்கும் நேரங்களில் பங்குகொள்ள முடியாத மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டிலோ வெளியூரில் இருக்கும்போது அந்த ஊரிலேயோ உள்ள கல்விக்கூடங்களுக்குச்சென்று அன்றைய பாடங்களை அறிந்துகொள்ள வசதியாக மறு ஒளிபரப்பு செய்யவேண்டும். முடிந்த வரை தேவையற்ற பாட சுமைகளை குறைக்கவேண்டும். வரலாறு, புவியியல், சமூகவியல் ஆகிய பாடங்களை மொழிப்பாடங்களில் உள்ள உரைநடை பகுதிகளுக்குப்பதிலாக இனைத்துவிடலாம். உதாரணத்திற்கு ஆறாம் வகுப்பில் வரலாறை ஆங்கிலத்தில் படித்தால் அதே பாடத்தை ஏழாம் வகுப்பில் தமிழில் படிக்கவேண்டும். இதனால் மாணவர்களின் மொழி அறிவும் வளரும் ஒரு பாடத்தின் சுமையும் குறைக்கப்படும். வகுப்பில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எழும் அய்யங்களை தீர்க்கும் பணியை செய்யவேண்டும். மேலும் ஆசிரியர்கள் தினமும் ஒலிப்ரப்பாகும் பாடங்களை கவனித்து தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அதே பாடத்தில் கீழ்வகுப்பில் படித்த (கற்று அறிந்த) பகுதிகளில் இருந்து 40% வினாக்களை கேட்கப்படவேண்டும். அப்போது தான் மாணவர்கள் தற்காலிக மனப்பாடம் அல்லாமல் நிரந்தர கல்வி அறிவை பெற்றதாக கருதமுடியும். ஒவ்வொரு கல்விக்கூடத்திலும் ஆராய்ச்சி ஆர்வம் உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த ஆரய்ச்சி உதவி மேம்பாட்டு மையம் அமைக்கவேண்டும். கல்விக்கூடங்கள் இறைச்சல் அற்ற பகுதிகளில் அல்லது இறைச்சல் உள்ளேவந்து மாணவர்களின் கவனத்தை சிதறடிக்காதவாறு அமைக்கவேண்டும். மேலும் வகுப்பறைகளும் கழிவறைகளும் சுத்தமாக பராமரிக்கப்படவேண்டும்.

மாணவர்களின் மனம் பாதிக்காமல் மன அழுத்தம் ஏற்படாமல் அவர்களை கல்விக்கூட ஊழியர்கள் அன்பாக நடத்தவேண்டும். தேவையில்லாமல் மாணவர்களுக்கு எழுத்துச் சுமைகளை கொடுக்கக்கூடாது. குறிப்பாக மாணவர்கள் பண்புள்ள ஊழியர்களால் அன்பாக பராமரிக்கப்படவேண்டும். ஆசிரியர்கள் தனிவகுப்புகள் நடத்தினால் அரசு அவர்களை திருடர்களுக்கு இணையாக கருதி தண்டனை அளிக்கவேண்டும். அணைத்து ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படவேண்டும். அதில் முழுமையான திறம் அற்ற ஆசிரியர்களை உடனே பணி நீக்கம் செய்யவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் முடிந்தவுடம் மருத்துவர்களைக் கொண்டு மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.

6 comments:

  1. //தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அதே பாடத்தில் கீழ்வகுப்பில் படித்த (கற்று அறிந்த) பகுதிகளில் இருந்து 40% வினாக்களை கேட்கப்படவேண்டும். அப்போது தான் மாணவர்கள் தற்காலிக மனப்பாடம் அல்லாமல் நிரந்தர கல்வி அறிவை பெற்றதாக கருதமுடியும்.//

    மிக சிறப்பான யோசனை

    ReplyDelete
  2. //ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் முடிந்தவுடம் மருத்துவர்களைக் கொண்டு மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.//

    இது தற்பொழுது நடை முறையில் உள்ளது. கிராமப்புறங்களில் சிறப்பாக செய்யப்படுகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

    தமிழ் நாட்டில் மருத்துவர்களின் பற்றாக்குறை நகரத்தில் அதிகம் என்பது பலருக்கு தெரியாத செய்தி :) ;)

    ReplyDelete
  3. மருத்துவர் புருனோ அவர்களுக்கு நன்றி உங்களுக்கு தோன்றும் நல்ல இதைப்பற்றிய நல்ல யோசனைகள் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாமே

    ReplyDelete
  4. //முடிந்த வரை தேவையற்ற பாட சுமைகளை குறைக்கவேண்டும்//

    ரொம்ப முக்கியமான விஷயம். :)

    ReplyDelete
  5. //புருனோ Bruno said...
    தமிழ் நாட்டில் மருத்துவர்களின் பற்றாக்குறை நகரத்தில் அதிகம் என்பது பலருக்கு தெரியாத செய்தி :) ;)//

    புருனோ அய்யா எங்கயாவது இடம் கிடைக்கும் போதெல்லாம் கொடி பிடித்துவிடுகிறீர்கள் நீங்கள் நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள்.

    சஞ்சய் தங்களின் வருகைகும் நன்றி

    ReplyDelete