Friday, January 4, 2013

கடவுள் இல்லை என்றாலும் இருக்க வேண்டும்

           கடவுள் ஏன் இல்லாமல் போகவேண்டும் எத்தனையோ இல்லாதவைகள் இருக்கும்போது கடவுளும் ஒரு பக்கம் இருக்கட்டுமே.கடவுள் இல்லையாம் இதை பெரிதாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார்கள்.  கடவுள் இல்லை என்பது அவரை உருவாக்கியவனுக்கே தெறியும். இல்லாத கடவுளை ஏன் உருவாக்கினார்கள்? அவர்களுக்கு கடவுள் தேவைபட்டது உருவாக்கினார்கள் அதில் என்ன தவறு இருக்கிறது.

      கடவுளை உருவாக்கியவர்கள் மோசடி காரர்களாம் அப்படி என்றால் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் யோக்கியர்களா? கடவுளை காப்பாற்றுபவன் தன்னை பசியாற்றிக்கொள்ள தட்சனை வாங்குகிறான். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாம் கல்லுடைத்துதான் கஞ்சி குடிக்கிறார்களா?. கடவுளின் பெயரால் மக்களுக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஊட்டப்படுகிறது. கடவுள் இல்லை என்பவர்கள் மக்களுக்கு ஒரு வாய் சோறுகூட ஊட்டமாட்டார்கள், முடிந்தால் நாங்கள் எச்சில்கூட பார்ப்பதில்லை என்று கூறி உங்கள் வாயில் உள்ளதைகூட பிடுங்கிக்கொள்வார்கள்.

      கடவுள் இல்லை தப்பு செய்யாதீர்கள், கடவுள் இல்லை குடிக்காதீர்கள், கடவுள் இல்லை குடியை கெடுக்காதீர்கள்,  கடவுள் இல்லை தானம் செய்யுங்கள் என்று கூறுவார்களா?. இந்தப் போலி பகுத்தறிவு கூட்டம் சட்டத்தின் சந்து பொந்துகளில் உள்ள ஓட்டைகளை தேடிக்கொண்டிருக்கிறது தப்பு செய்துவிட்டால் தப்பித்துக்கொள்வதற்கு. இன்றுவரை பெரியார் உயிருடன் இருந்திருந்தால் தன்னலவாதிகளைக் கண்டு தலையிலே அடித்து கொண்டிருப்பார்.

     ஒரு சில இடங்களில் உண்மையை மறைத்து இல்லாத ஒன்றை உருவாக்கவேண்டிய தேவை ஏற்ப்படுகிறது ரகசியம் காக்கப்பட வேண்டி இருக்கிறது. இன்றைய தேவை எல்லாம் ஒழுங்கீனங்களை ஒடுக்கி ஒழுக்கத்தை ஓங்கி ஒலிக்கச்செய்வதே. கடவுள் இல்லை கண் இல்லாத பெண்களை கற்பழிக்கலாம் சாட்சி இருக்காது என்ற மன நிலையில் மக்களை உருவாக்கியிருக்கிறது இன்றைய பகுத்தறிவு .

     என்னை பொருத்தவரை கடவுள் இருக்கிறார் இல்லை என்ற விதண்டாவாதம் தேவையில்லை. எனக்கு கடவுள் வேண்டும் . சரியான அனுகுமுறையில் கடவுளை காப்பாற்றினால் அறிவு அன்பு அரவனைப்பு என அனைத்தையும்  அடுத்தடுத்த தலைமுறைகளையும் காப்பாற்றலாம். கவிதைக்கு பொய் எவ்வாறு அழகாய் இருக்கிறதோ அதே போன்றுதான் காவியம் மற்றும் வேதங்களில் வெற்றிடத்தை நிரப்பி இருப்பார்கள் அதை புரிந்துகொண்டு நாம்தான் சரியாக கையாளவேண்டும்.

No comments:

Post a Comment