Thursday, April 11, 2013

சோலார் பேனல் பராமரிப்பு

              சோலார் பேனல் களை பராமரிப்பது என்பது அதன் முழுத்திறனுடன் செயல்பட வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

     சோலார் பேனல் அதனை சுத்தம் செய்யும் வகயில் பொருத்துவது முக்கியமானது அதில் சிலர் செய்யக்கூடாத வேலைகளையும் செய்துவைப்பர். அவை பேனலின் மேற்பரப்பில் ஸ்டிக்கர்களை ஒட்டுதல், டேப் துண்டுகளை ஒட்டுதல், பெயிண்ட் துளிகளை சொட்டுதல், துணிகளை வைத்தல் என்பனவாகும். முக்கியமாக ஆயுத பூஜைக்கு பேனலுக்கு நடுவில் பொட்டுவைக்க கூடாது. இவ்வாறு செய்வதினால் தொடர் இணைப்பில் உள்ள பேனல்களில் மறைக்கப்பட்ட இடங்களில் டையோடாக செயல்படவேண்டிய செல்கள் இன்சுலேட்டராக மாறிவிடும்.

       சோலார் அரேயில் இடையில் மின்னோட்டம் தடைபடுவதால் அதன் மின் சுற்றானது பூர்த்தியாகமல் போய்விடும் அவ்வாறு மின்சுற்று பூர்த்தியாகவில்லை எனில் நமக்கு மின்சாரம் கிடைக்காது. சில நேரங்களில் குறைந்த மின்னோட்டம் பாயும் இவ்வாறு இருந்தால் செல்களுக்கிடையில் உயர்மின்னழுத்தம் உருவாகி அந்த அரே (தொடர்) முழுவதும் செயலிழந்துவிடும் பின்னர் இதனை சரி செய்யமுடியாது.  எனவே இதுமாதிரியான செயல்பாடுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

       இயற்க்கையாக வரும் இடர்பாடுகள் சில உண்டு அவை பறவைகளின் எச்சம், காற்றில் அடித்துவரப்படும் தூசிபடிதல், உப்புக்காற்றில் இருந்துவரும் உப்புபடிதல், அருகில் உள்ள கட்டிடங்கள், பதாகைகள்,மரங்களில் இருந்து விழும் நிழல். தினமும் ஒருமுறை நோட்டமிடவேண்டும் ஏதாவது பறவைகளின் எச்சம் இருந்தால் உடனே தண்னீரால் கழுவிவிடவேண்டும் அதாவது தண்னீரை மேற்ப்பரப்பில் இருந்து தெளிக்கவேண்டும் பேனலை கழட்டி தண்னீருக்குள் மூழ்கவைக்கக்கூடாது.

      தூசி அதிகம் படியும் இடங்களில் வாரத்திற்க்கு ஒருமுறையும் சாதாரண இடங்களில் ஒரு மாதத்திற்க்கு ஒருமுறையும் சோப்பு நீரினால் கழுவவேண்டும் பிறகு நல்ல நீரினால் கழுவவேண்டும். கண்டிப்பாக காலை 8 மனிமுதல் மாலை 5 மனிவரை கட்டிடம், மரம், பதாகை போன்றவற்றின் நிழல் எந்த ஒரு பகுதியிலும் விழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.



      ஏதாவது ஒரு காரணத்திற்க்காக தொடர் இணைப்பில் உள்ள பேனல்களின் இணைப்பை விடுவிக்க நேர்ந்தால் மிகவும் கவனமாக கையாளவேண்டும் சோலார் பேனல் சார்ட் சர்க்யூட்டைக்காட்டிலும் சர்க்யூட் பிளாக்கினால்தான் அதிக சேதம் அடையும். எனவே தொடர் இணைப்பில் ஒரு பேனலின் நேர்மின்முனை+ அடுத்த பேனலின் எதிர் மின் முனையுடன்(-) இனைக்கவேண்டும். எந்த இடத்தில் பக்கவாட்டு இணைப்பு அதாவது பேரலல் கணெக்சன் கொடுக்கப்படுகிறதோ அங்குமட்டுமே நேர்மின் முனைகளை எல்லாம் ஒன்றாகவும் எதிர்மின் முனைகளை எல்லாம் ஒன்றாகவும் இணைக்கவேண்டும்.




    கற்க்கள், அடிக்கடி ஏதாவது பொருட்க்கள் விழும் இடங்களின் பேனல்களை பொருத்தக்கூடாது மேலும் 45 டிகிரிக்குமேல் வெப்பம் உள்ள இடங்களிலும் சோலார் பேனல்களை பொருத்தக்கூடாது. பேனல்களை நில நடுக்கோட்டின் திசையை நோக்கி சிறிது சாய்வாக பொருத்தவேண்டும்.

2 comments:

  1. அட இவ்ளோ விசயமிருக்கா !
    சோலார் மேல துவைப்பாங்க்களா என்ன ?

    //45 டிகிரிக்குமேல் வெப்பம் உள்ள இடங்களிலும் சோலார் பேனல்களை பொருத்தக்கூடாது.//

    பாஸ் சோலார் னாவே சூரிய வெப்பத்துலருந்துதானே வருது .. அப்றம் ஏன் 45 டிகிரிக்குமேல் வெப்பம் உள்ள இடங்களிலும் சோலார் பேனல்களை பொருத்தக்கூடாது...? வெச்சா என்னாகும் ?

    ReplyDelete

  2. சோலார் பேனல் என்பது வெப்பத்தில் இருந்து மின்சாரம் கொடுப்பதல்ல சூரிய ஒளியில் இருந்து வரும் போட்டான்கள் பேனலின் உள் இருக்கும் P & N Layer களின்மேல் படும்போது போட்டான் துகளானது சந்தியின் ( PN Junction ) இடையே உள்ள அணுக்களில் இருந்து எலெக்ட்ரான்களை கேதோடை நோக்கியும் எலெக்ட்ரான் வெளியேற்றப்பட்டதால் ஒரு எலெக்ட்ரான் காலியாக உள்ள அணுவின் துளைகளை ஆனோடை நோக்கியும் உந்தித்தள்ளும். கேத்தோடு வழியாக செல்லும் எலெக்ட்ரான் லோடு வழியாக மின் சுற்றை பூர்த்தி செய்து ஆனோடில் உள்ள துளையில் சென்று ஐக்கியம் ஆகிவிடும்.

    சோலார் பேனலில் பயன்படுத்துவது mono crystalin silincon (or) poly crystalin silicon இந்த சிலிக்கான் என்பது ஒரு குறைகடத்தியாகும் குறைகடத்திகள் வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் கடத்தும் தன்மையை பெறும். சந்தியானது கடத்தியாக மாறிவிட்டால் அது மின்சாரத்தை உற்பத்தி செய்யாது அதனால் நீங்கள் முதலீடுசெய்வது குறைந்த இயக்குத்திறனையே கொடுக்கும்..

    ReplyDelete