Monday, April 7, 2008

மக்கள் தொலைக்காட்சியின் கேள்விக்கு என்ன பதில்? அனைவருக்கும் சமச்சீர் கல்வி

நான் 7.4.2008 திங்கள் அன்று காலை 11 மனிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான கேல்விக்கு என்ன பதில் என்ற நேரலை நிகழ்ச்சியைப் பார்த்தேன் அந்த நிகழ்ச்சியில் என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம் என்று தொலைபேசியில் பலமுறை முயற்சித்தும் இணைப்பு கிடைக்கவில்லை. எனவே என் கருத்துக்களை நமது பதிவர்களிடமாவது பகிர்ந்துகொள்ளலாம் என்று பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொடுக்கவேண்டும் என்றால் கல்விக்கூடங்களில் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஒரே அளவு கற்பித்தல் திறன் மற்றும் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இது எப்படி இப்போது இருக்கும் சாதாரண முறையில் சாத்தியம் ஆகும். அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொடுப்பது சாத்தியம் ஆகும். எப்படி எனில் நாம் கொடுக்கும் பாடதிட்டம் மற்றும் கல்வியின் தரம் உலகிலேயே முதல் தரமானதாக இருக்கவேண்டும். கற்பிக்கும் முறை மாணவர்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் கல்விக்கூடங்களுக்கு வரமுடியாத நிலையிலும் வெளியூர்களில் இருக்கும் போதும் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

மேலே குறிப்பிட்ட அணைத்தும் சரி எனில் இவற்றை எப்படி செயல் படுத்துவது. முதலில் அனைத்து பாடங்களுக்கும் தனித்தனியே துரைசார்ந்த வல்லுனர்களைக் கொண்டு நவீன பாடதிட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் அமைக்கவேண்டும். இந்த பாடங்கலை ஒலி ஒளி (படக்காட்சிகளாக) தயாரிக்கவேண்டும். தயாரிக்கப்பட்ட படக்காட்சிகளை கல்விக்கூடங்கள் இயங்கும் நேரங்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி அலைவரிசைகளில் தொலைக்காட்சி மூலமோ அல்லது அகன்ற அலைவரிசை இணைய இணைப்புகள் மூலமோ வகுப்பறைகளுடன் இணைக்க வேண்டும்.

வகுப்பு நடக்கும் நேரங்களில் பங்குகொள்ள முடியாத மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டிலோ வெளியூரில் இருக்கும்போது அந்த ஊரிலேயோ உள்ள கல்விக்கூடங்களுக்குச்சென்று அன்றைய பாடங்களை அறிந்துகொள்ள வசதியாக மறு ஒளிபரப்பு செய்யவேண்டும். முடிந்த வரை தேவையற்ற பாட சுமைகளை குறைக்கவேண்டும். வரலாறு, புவியியல், சமூகவியல் ஆகிய பாடங்களை மொழிப்பாடங்களில் உள்ள உரைநடை பகுதிகளுக்குப்பதிலாக இனைத்துவிடலாம். உதாரணத்திற்கு ஆறாம் வகுப்பில் வரலாறை ஆங்கிலத்தில் படித்தால் அதே பாடத்தை ஏழாம் வகுப்பில் தமிழில் படிக்கவேண்டும். இதனால் மாணவர்களின் மொழி அறிவும் வளரும் ஒரு பாடத்தின் சுமையும் குறைக்கப்படும். வகுப்பில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எழும் அய்யங்களை தீர்க்கும் பணியை செய்யவேண்டும். மேலும் ஆசிரியர்கள் தினமும் ஒலிப்ரப்பாகும் பாடங்களை கவனித்து தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் அதே பாடத்தில் கீழ்வகுப்பில் படித்த (கற்று அறிந்த) பகுதிகளில் இருந்து 40% வினாக்களை கேட்கப்படவேண்டும். அப்போது தான் மாணவர்கள் தற்காலிக மனப்பாடம் அல்லாமல் நிரந்தர கல்வி அறிவை பெற்றதாக கருதமுடியும். ஒவ்வொரு கல்விக்கூடத்திலும் ஆராய்ச்சி ஆர்வம் உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த ஆரய்ச்சி உதவி மேம்பாட்டு மையம் அமைக்கவேண்டும். கல்விக்கூடங்கள் இறைச்சல் அற்ற பகுதிகளில் அல்லது இறைச்சல் உள்ளேவந்து மாணவர்களின் கவனத்தை சிதறடிக்காதவாறு அமைக்கவேண்டும். மேலும் வகுப்பறைகளும் கழிவறைகளும் சுத்தமாக பராமரிக்கப்படவேண்டும்.

மாணவர்களின் மனம் பாதிக்காமல் மன அழுத்தம் ஏற்படாமல் அவர்களை கல்விக்கூட ஊழியர்கள் அன்பாக நடத்தவேண்டும். தேவையில்லாமல் மாணவர்களுக்கு எழுத்துச் சுமைகளை கொடுக்கக்கூடாது. குறிப்பாக மாணவர்கள் பண்புள்ள ஊழியர்களால் அன்பாக பராமரிக்கப்படவேண்டும். ஆசிரியர்கள் தனிவகுப்புகள் நடத்தினால் அரசு அவர்களை திருடர்களுக்கு இணையாக கருதி தண்டனை அளிக்கவேண்டும். அணைத்து ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படவேண்டும். அதில் முழுமையான திறம் அற்ற ஆசிரியர்களை உடனே பணி நீக்கம் செய்யவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் முடிந்தவுடம் மருத்துவர்களைக் கொண்டு மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.

Wednesday, March 12, 2008

நம் நாட்டில் உள்ள அணைவரும் வசதியாக வாழமுடியுமா?

ஏன் முடியாது வசதி எண்பது அடுத்தவன் நமக்கு கீழிருந்து வேலை பார்பதுதான் என்ற பொருள்படாத போது இது சாத்தியமே. நாம் ஏன் மற்ற நாடுகளைக்காட்டிலும் சுகாதாரத்திலும் அடிப்படைவசதியிலும் அத்தியாவசியத் தேவைகளிலும் முன்னேறிய முதலாவது நாடாக மாற்ற முடியாது. இதறகெல்லம் ஒரே காரணம் ஒரு நல்ல கருத்தை ஒருவன் கூறினாலும் அவனை பிடிக்காதவனாகவோ அல்லது இதை சொல்ல இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று நினைப்பதுதான் காரணம்.
இதற்கெல்லாம் நிறைய காரணங்களை நாம் கூறமுடியும் முக்கியமாக நம் வீடுமட்டும் சுத்தமாக இருக்கவேண்டும் வீதி எக்கேடு கெட்டால் என்ன என்று நினைத்துக்கொண்டிருப்பது. ஏன் இப்படி இந்த வீதியை நாம் மட்டும் பயன்படுத்தவில்லை வேறு சிலரும் பயன் படுத்துகிறார்கள் அவர்களுக்காக நாம் ஏன் பராமரிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாமும் அந்த வீதியில் நடக்கிறோமே என்ற என்னம் அவர்களுக்கு சிறிதேனும் வருவதில்லை.
அடுத்து யாராவது வந்து செய்யுங்க யாரவது வந்து காப்பாத்துங்க என்று எதையுமே செய்யாமல் ஒருவன் கூக்குறல் இடுவது போல அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பது புலம்பிக்கொண்டிருப்பது

Monday, February 4, 2008

60% மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை. கற்றல் திறன் மற்றும் கற்பிக்கும் திறன் பற்றித் தெரியாத அரிவாளிகள்.

கற்றல் திறன் என்பது மாணவர்களின் புறச்சூழல் மற்றும் அவர்கள் படிப்பதற்கான பள்ளி அமைந்திருக்கும் தூரம் அந்த மாணவனின் பொருளாதார நிலை கற்பிக்கும் ஆசிரியர் அந்த பகுதி மக்களின் பேச்சுவழக்கு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. வசதி வாய்ப்புகள் நிறைந்த ஒரு நகர்ப்புற மாணவனுக்கு படிப்பதைத்தவிர வேறு வேலை இருக்கமுடியாது மேலும் அவனுக்குத்தேவையான அனைத்தும் எந்த பொருளாதாரச்சிக்கலும் இல்லாமல் உடனே கிடைக்கும் வாய்ப்புகள். மேலும் அவனுக்கு பள்ளியில் ஆசிரியர் பாடம் எடுப்பது புரியாத நிலையில் அவனுக்கு தனிவகுப்புகள் அனுப்பும் பொருளாதாரம் மற்றும் அவனுடைய வீடு அதற்கு அருகில் அமைந்திருப்பது ஆசிரியர் நகர்ப்புரத்தை சேர்ந்தவராக இருப்பது போன்ற கூடுதல் அணுகூலங்கள் இருக்கும்.

அதே ஒரு கிராமப்புற மாணவனுக்கு அவன் வீட்டில் இருந்து பள்ளிக்கு வர சரியான நேரத்தில் பேருந்து வசதியின்ன்மை, நெடுந்தொலைவு, மாணவர்களின் பொருளாதார வருமை, தன் உணவுக்கே தான் வேலைசெய்து அந்தவருவாயில் உண்டு படிக்கவேண்டிய நிலைமை, வீடுகளில் மின்வசதி இல்லாமை, தனக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்திசெய்ய யாரும் இல்லாமை சரியான நேரத்தில் நோட்டுப் புத்தகங்கள் வாங்கக்கூட வசதியின்னை போன்ற அனுகூலம் அற்ற சுழல். ஒரு நர்ப்புற மாணவன், ஒரு கிராமப்புறமாணவன், ஒரு உயர்சாதி மாணவன் என்ற மூவருக்குமான வளரும் சூழல் வெவ்வேறாய் இருக்கின்றன அனுபவங்களும் அப்படியேதான் இருக்கின்றன. கற்பிக்கும் ஆசிரியர் கிராமப்புர மனிதராக இருந்தால் அவருடைய கற்பிக்கும் திறனால் கிராமப்புறமணவர்களே அதிகம் பயன் பெறுவர் எப்படி எனில் அவர் கூறும் எடுத்துக்காட்டுகள் (மேற்கோள்கள்) கிராமப்புறமாணவனுக்கு புரியும் விதமாக இருக்கும், அதே போல்தான் நகர்ப்புற ஆசிரியர் கற்பிக்கும் திறனால் பயனடைவது நகர்புற மாணவர்களே. உயர் சாதி ஆசிரியரிடம் கற்றல் உயர்சாதிமாணவனுக்கு எளிதாக இருக்கும்.

அடித்தட்டு வர்கத்தில் வசிக்கும் மாணவர்களின் கல்வி அறிவினை வளரவிடாமல் அவனை மட்டம் தட்டுவதிலேயே அரசியல்வாதிகளும் உயர்சாதி வர்கமும் ஒரே குறியாய் இருக்கின்றன. படிக்கமுடியாதவனுக்குத்தான் படிப்பதற்காக உதவித்தொகைத் தேவைப்படுகிறது. நன்றாகப் படிப்பவனுக்குத்தான் உதவித்தொகை என்றால் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.

Thursday, January 31, 2008

கடவுள் அற்புதமானவர்.

கடவுள் மிகமேன்மையான ஆற்றலையும் அறிவையும் பண்புகளையும் பெற்றிருக்கிறார். ஆனால் அவர் மனிதர்களின் குணங்களைப் பெற்றிருக்கவில்லை மிகவும் அற்புதமான குணங்களைப் பெற்றிருக்கிறார் அவர் யாரிடம் இருந்தும் எதையும் எதிர்ப்பார்ப்பது இல்லை அனைத்துமே அவருடையது. அற்பர்களாகிய மனிதர்கள்தான் ஒவ்வொருவரும் தன்குணத்தையே கடவுளின் குணமாக கருதுகின்றனர். கடவுளின் எண்ணங்களும் குறிக்கோள்களும் உயர்ந்தவை ஆதலினால் அவரின் செயல்கள் உயர்ந்தவற்றை நோக்கியே சிறப்பித்துக்கொண்டிருக்கின்றன. கடவுள் மனிதனின் வடிவமும் அல்ல அவருக்கு இந்த சாதாரண அற்பவடிவில் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.

அண்ட சராசரங்களுக்கும் அதிபதியான கடவுள் இந்த சின்னஞ்சிறிய கோளமான பூமியின் மீதுமட்டும் கவனம் செலுத்தவும் இந்த அற்பர்களை ஆளுமைசெய்யவும் கடவுள் ஒன்றும் அவ்வளவு கீழ்த்தரமானவர் அல்ல. மனிதர்களின் மொழி கடவுளுக்கு புரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை மற்ற விலங்கினங்களின் மொழி எப்படி நமக்கு விளங்காமல் போகிறதோ நாம் அதன்மீது கவனம் செலுத்தாமல் அலட்சியம் செய்கிறோமோ அப்படியே மனிதர்களையும் கடவுள் அனைத்து நிகழ்வுகளையும் கண்கானிக்கவேண்டிய அவசியம் இல்லை. சுதந்திரம் அற்று கட்டிவைத்திருக்கும் மாட்டைப்பார்த்து நமக்கு அதன் சுதந்திரத்தைப் பற்றிய எண்ணமே இல்லாதபோது நம்முடைய ஒவ்வொரு சிறுதேவைகளையும் இன்பங்களையும் கடவுள்தான் தீர்மானிக்கிறார் என்று நினைப்பது எவ்வளவு பெறிய முட்டாள்தனம்.

கடவுள் சோதிக்கிறாராம் ஒரே அலுவலகத்தில் வேலைபார்க்கும் கடைநிலை ஊழியர்களைக்கூட மனிதர்களாகப் பார்க்கமுடியாத மேலாளர்கள் இருக்கும்போது அற்பத்தனமான உங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து அவரது அரிவை வளர்த்துக்கொள்ள அவறென்ன அரிவற்றவரா என்ன எல்லாம் தெறிந்தவர் அனைத்தையும் அறிந்தவர். மனிதன்தான் கடவுளுக்கு தன்னைப்போலவே உருவம் கற்பித்துக்கொண்டு தன்னைபோல் குணங்களை அவருக்கும் இருப்பதாக பாவித்துக்கொண்டு அவரைப்புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறான் போற்றிபுகழ்ந்துகொண்டிருக்கிறான். அவரை ஒரு ஒரு உருவத்தினுள் அடைத்துப் பார்க்கமுடியாத அரூபமானவர் அவர் ஒன்றும் மனிதரைப்போல் தற்புகழ்ச்சிகாரரும் அல்ல. பக்தர்கள் என்றுகூறிக்கொண்டு இவர்கள் செய்யும் நேர்த்திக்கடன் என்ற செயலைக்கண்டால் பூமியில் இவ்வளவு பைத்தியக்காரர்களா என்று நினைத்துக்கொள்வார்.

கடவுள் அனைத்தையும் நொடிப்பொழுதில் சாதிக்கும் ஆற்றல் மிக்கவர் அப்படி இருக்கும்போது அவதாரங்களை எடுத்து இந்த அற்பர்களுக்கு எதையும் கற்பிக்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. பசு ஈன்ற கன்று அரைமனி நேரத்தில் எப்படி தானாகத்தேடி பசிக்கு பால் குடிப்பதர்க்கான அறிவைக் கன்றுக்குப் புகட்டினாரோ அப்படியே அவசியத்தேவைகளை மனிதர்களுக்கும் இயற்கையிலேயே புகுத்திவிட்டு தானியக்கம் அடையச்செய்துவிட்டு அவர் அடுத்தவேலையை கவனிக்கச் சென்றுவிட்டார். தன்னைவிட கீழானவன் என்னதான் புகழ்ந்தாலும் அந்த புகழ்ச்சி ஏற்புடையதாகாது ஒருவேலை கடவுள் மனிதர்களை கவனித்துக்கொண்டே இருந்தாலும் மனிதர்களின் நச்சரிப்பினால் அவருக்கு எரிச்சல்தான் வரும்.

நம் மக்கள் கடவுளிடம் பிச்சைக்கேட்டு கடவுளுக்கே பிச்சைபோடுகிறார்கள். கடவுளுக்கு யாரும் எதுவும் கொடுக்கத்தேவை இல்லை அனைத்துமே அவருடையதுதான் நாம் யார் அவருக்கே பிச்சை போட. நமக்குத்தேவையான அனைத்தையும் கடவுள் உலகம்முழுவதிலும் வாரி இறைத்துச்சென்றுள்ளார் நாம் அவர் இறைத்ததைத்தான் தேடவேண்டிமோ ஒழிய இறைத்தவனை( இறைவனை ) தேடுகிறோம்.

"இறைந்துகிடப்பதைத்தேடுங்கள் இறைவனைத்தேடாதீர்கள்".

நாம் பயனுற வேண்டும் நமக்காக சில ஆலோசனைகளும் வேண்டும்.

"திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது"
இது எப்படி சரியான கூற்றாய் இருக்கமுடியும். அனைவருக்கும் நன்கு பரிட்சயமான ஒருவர் அல்லது மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற ஒருவர் எதைக் கூறினாலும் நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். நாம் சற்று சிந்தித்தாகவேண்டும் திருடன் எப்போது திருந்துவது திருடு எப்போது ஒழிவது மக்களுக்காக கருத்து சொல்கிறேன் என்று தீர்வைக்கூறாமல் குழப்பிவிடுகிறார்கள். ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் முடிவு என்று ஒன்று இருக்கும் பிரச்சனை என்றால் நிச்சயம் அதர்க்கான தீர்வு ஒன்று இருந்தே தீரும்.

நாம் இப்போதாவது இதர்க்கான ஒரு தீர்வைக்கான முயல்வோம் எனக்குத்தெரிந்த ஒர்தீர்வு வாய்ப்புக்கள் இல்லாமல் செய்வதுஒன்றே சரியான தீர்வாக இருக்கமுடியும். திருடன் திருடுவதர்க்கான வாய்ப்புகளில் முதல் வாய்ப்பாக இருப்பது நம்மிடம் இருப்பதை அனைவருக்கும் தெரியும்படி வைத்திருப்பது அல்லது விளம்பரப்படுத்துவது. அடுத்து அவன் திருடிய பொருளை விற்க்கும் சந்தையை தடை செய்யவேண்டும் உதாரணத்திற்கு அடகு கடைகள் திருட்டு பொருட்களுக்கு எந்தவித அடையாளச்சான்றும் இல்லாமல் வாங்கிக்கொள்வது. வருவாயைத்தெரிவிக்காமல் செலவு செய்யும் வாய்ப்புகளை இல்லாமல் செய்யவேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களை அடுத்தவருக்கு தேவை இருக்கும் போது பதுக்கி வைத்திருப்பது.

சாதாரண மக்களுக்கும் வருவாய்க்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவேண்டும் அவர்களுக்கான வழிகாட்டுதலையும் கொடுக்கவேண்டும். அனைவரும் விலைகுறைவாக கிடைக்கிறது என்று திருட்டுப்பொருட்களையோ அல்லது வரிஏய்ப்பு செய்தோ வாங்காதீர்கள் அவை சுற்றிவளைத்து நம்மையே பாதிக்கும் நமது உடமைகள் களவுபோகவும் ஏதோ ஒருவகையில் நாமே காரணமாகிவிடுவோம். பகட்டாக இருப்பதை தவிர்க்கவேண்டும் அது அடுத்தவர்கண்ணை உறுத்தும் அதைப்பெற இயலாதவர்கள் மாற்றுவழியாக திருட நினைப்பர். அனைத்துப் பொருட்களையும் சரியான பாதுகாப்பை உருதிசெய்யவேண்டும் அடுத்தவர் இல்லாமையை நம் வல்லமையினால் எள்ளி நகைக்கப்பதும் பணத்தின் அளவுகளால் மக்களை மதிப்பிடுவதும் மதிப்பளிப்பதும் இதர்க்காண காரணங்களாக இருக்கும்.

Thursday, January 24, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 9

அரசாங்க வேலை பற்றிய வெளிப்பாடு

மக்கள் அரசாங்க உத்தியோகம் கிடைக்கவேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள் எதற்காக அவர்களுக்கு அரசாங்க வேலை தேவை. முதலில் நிரந்தரமான வேலை அடுத்து பென்ஷன் குறைந்த வேலைப்பளு தேவையான அளவுக்கு மேல் விடுப்புகள். நமது மக்களிடத்தில் ஒரு சொல் வழக்கு இருக்கிறது " கழுதை மேய்த்தாலும் கவர்ன்மென்ட் கழுதை மேய்க்கவேண்டும் " வேண்டுமானால் ஒரு சோதனை செய்து பார்க்கலாம் அரசாங்கம் ஒரு 100 கழுதை வாங்கி விட்டு ஆளெடுப்பு நடத்திப் எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்க்கலாம். கட்டாயம் நிறைய பேர் போட்டி போட்டுக்கொண்டே வருவார்கள் என்றே நினைக்கிறேன் இதர்க்கும் லஞ்சம் போட்டி போடலாம். இவ்வளவு நன்மைகள் உத்திரவாதத்துடன் கிடைக்கிறது என்றால் தனக்கு வேலையின் மீது எவ்வளவு அக்கரை இருக்கவேண்டும் ஆனால் இல்லை காரணம் ஒன்றுமே செய்யாத ஆசாமிகள்.

அரசு உத்தியோகம் கிடைத்தவுடன் அவன் யாருக்கு பனிசெய்ய வேண்டும் அவனுக்கு முதலாளி யார்? இங்கு தான் அந்த முரன் ஆரம்பமாகிறது. அரசாங்க வேலை செய்பவனுக்கு சம்பளம்(பணம்) கொடுப்பது யார்? அரசாங்கம். அப்படியானால் அரசாங்கத்திற்க்கு பணம் கொடுப்பது யார்? மக்கள். அப்படி யானால் அரசு உத்தியோகம் பார்ப்பவனுக்கு முதலாலி யார்? மக்கள் தானே. அப்படியானால் யார் யாருக்கு மரியாதை அளிக்கவேண்டும் கட்டுப்படவேண்டும்? அரசு ஊழியன் மக்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் மக்கள் சொல்வதை கேட்க்கவேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன நிலைமையே தலை கீழ் முதலாளி பனிபுரியும் பனியாளனுக்கு கீழ்ப்படியவேண்டுமாம் இது எப்பேர் பட்டமுரன்பாடு இது தானே இன்றைய நிகழ்வாக இருக்கிறது. இந்த பதிவு என்ன சுற்றிவளைத்துப்போகிறது என்று பார்க்கிரீர்களா இந்த இடத்தில் நேருக்கு நேர் பார்த்தால் எதுவும் தெறியாது ஏதோஒன்று கண்ணை மறைக்கும் எனவே தான் மேலே இத்தனை வினாக்கள் விடைகள்.

இப்போது நம் மக்கள் யாவரும் அரசு வேலைகிடைத்தால் அது ஒரு வேலை என்றெல்லாம் நினைப்பதில்லை வேலை என்று அரசாங்கம் பெயர் வைத்திருப்பதால் தான் வேலை என்றாவது கூறுகிறார்கள். அது என்னவோ கடவுள் கொடுத்த வரமாக நினைக்கிறார்கள் மாதா மாதம் வங்கி கணக்கை துரந்து பணம் கொட்டுகிற வரம். அரசாங்கம் என்பதும் ஒரு கடவுள் போலவே நினைக்கிறார்கள். வித விதமாக பிரார்த்தனை செய்தால் வரம் கூட்டிகொடுக்கப்படுகிறது இல்லை இல்லை வரம் கூடுதல் பலம் பெருகிறது அந்த விதவிதமான் பிரார்த்தனைகள் தான் போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் இவையெல்லாம். கடவுள் வரம் பெற்றவர்கள் ஆகையாள் இவர்களெல்லாம் ஒரு மினி கடவுளர்களாகிவிட்டதாக என்னிக் கொள்கிறார்கள்.

பொதுமக்கள் வழியில் பார்த்தால் உடனே அவருக்கு வணங்கவேண்டும் (வணக்கம் சொல்லவேண்டும்) டீ கடையிலும் டிபன் கடையிலும் பார்த்தால் உடனே அபிசேகம் ஆரதனை செய்யவேண்டும் ( அதாவது அவற்றை எல்லாம் வாங்கி கொடுக்கவேண்டும்). அலுவலகத்தில் பார்த்தால் காணிக்கை வழங்கவேண்டும் (லஞ்சம் கொடுக்கவேண்டும்). இப்படி எல்லாம் செய்தால்தான் பொதுமக்களான பக்த்தர்களுக்கு அவர்களுடைய வேலை நடைபெற ( வேண்டுதல் நிறைவேற) ஆசி வழங்கப்படும். இன்றைய அரசாங்க உத்தியோகத்தின் நிலை இப்படிதானே உள்ளது இவையெல்லாம் எப்படி வந்தது 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து யார் அரசு பனிகளில் இருந்தார்களோ அவர்களால் தான் இந்த நிலைமை இருந்து வந்திருக்கிறது. இப்போது யார் காரணம் என்று புரிந்திருக்கும்.

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 8

அராசாங்கம் பற்றிய மக்களின் மனநிலை.

மக்கள் எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு அரசே காரனம் என்றும் மேலும் அரசேப் பொருப்பேர்க்கவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். சாலையோரத்தில் குடியிருப்பவன் முதல் பெரியப் பணக்காரர்கள் வறை இதைத்தான் சொல்லுகிறார்கள். குடிக்கின்ற தண்ணீர் முதல் புதைக்கின்ற இடுகாடு வரை எதற்கெடுத்தாலும் பிரச்சனைகள் இந்த அரசின் ஆட்சியில் இதுசரியில்லை அதுசரியில்லை முழுசுதந்திரமில்லை பாதுகாப்பில்லை என்கிறார்கள். முதலில் முழு சுதந்திரம் என்றால் என்ன முழுபாதுகாப்பு என்றால் என்ன என்று யாரும் சிந்தித்து பார்க்கும் மனநிலையில் இல்லை.

ஒருவனுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டுமானால் அவனை அரசு எந்த விதத்திலும் கட்டுப்படுத்தகூடாது அப்படியானால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செயாமலும் இருக்கலாம் அது அவன் விருப்பமாக இருக்கும். கொலை செய்தாலும் திருடினாலும் அடித்தாலும் ஏனென்று யாரும் கேட்க்கமுடியாத நிலைதான் முழுசுதந்திரம்.
அடுத்து முழு பாதுகாப்பு ஒருவனுக்கு வழங்கவேண்டுமானால் அவன் முற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் குடிக்கும் தண்ணீர் முதல் படுக்கும் படுக்கைவரை என்ன தேவையானாலும் எதை செய்யவேண்டுமானாலும் அரசின் வழிகாட்டுதலில் இருந்து ஒரு இழையும் பிசகாமல் இருக்கவேண்டும் அப்போதுதான் முழு பாதுகாப்புக் கிடைக்கும். இப்போது இவையிரண்டும் நாணயத்தின் இருப்பக்கங்களைப் போன்றவை ஏதாவது ஒரு பக்கத்தைத்தான் பார்க்கமுடியும் இரண்டையும் ஒருசேரப்பார்ப்பது இயலாத காரியம். சிலர் கேட்கலாம் கண்ணாடியில் பார்க்கலாம் என்று கண்ணாடியில் தோன்றுவது மாயபிம்பம்தானே அப்படியானால் நீங்களும் அவ்வாழ்க்கையை கணவினில் மட்டுமே அனுபவிக்கமுடியும் உண்மையில் அல்ல.

இப்போது நமக்கு எதுதேவை சுதந்திரமா இல்லை பாதுகாப்பா ஒருவேலை இரண்டும் தேவை எனில் 50% சுதந்திரம் 50% பாதுகாப்பு என வைத்துக்கொள்வோமா. அப்படியெனில் நாணயத்தை செங்குத்தாக வைத்துப்பார்ப்பதை போன்றுதான் இருக்கும் நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லை சுதந்திரமாக இருக்கிறோம என்று நமக்கேத் தெரியாது அதனை புரிந்துகொள்ளவே சிக்கலாக இருக்கும். இந்த நாணயம் லேசாக ஒருபுறம் சாய்ந்திருந்தாலும் ஒருப்பக்கம் தெரியும் மறுப்பக்கம் தெரியாது இதனை அவரவர் முடிவுக்கே விட்டுவிட்டாலும் எது எத்தனைசதம் வேண்டும் என்று நினைக்கிறார்கள் எனப்பார்ப்போம். உணக்கு துப்பாக்கி வைத்திருக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு உணதுபாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும் என்றால் வடிவேல் சொல்வதுபோல் " இது சின்ன பிள்ளத்தனமா இல்ல இருக்கு ".

இப்போது நம்மிடமுள்ள முரண்பாடுகளைப் பார்ப்போம் ஒருவன் மற்றொருவனை அடித்தால் அடிவாங்கியவன் பாதுகாப்பாக இருக்கிறானா இல்லையா. சரி அடிவாங்கியவன் பாதுகாப்பாக இல்லை என்று கூறினால் ஒரு தாய் அல்லது தந்தை தன் குழந்தையை அடித்தால் அது பாதுகாப்பா இல்லையா என்றால் ஆமென்பர். இது தான் அந்த பெரிய முரண்பாடு நான் பெற்றக்குழந்தை அதற்கு அனைத்து செலவினங்களையும் சலுகைகளையும் அளிக்கும் நான் அந்தக் குழந்தையை அடிக்க உரிமையுண்டு என்றால். உங்களைப் பாதுகாத்து உங்களுக்குத் தேவையான வற்றையெல்லாம் கொடுக்கும் அரசு உங்களை அலைகழிக்கடித்தால் நீங்கள் என்னசொல்வீர்கள் அரசு என்னை அடிமையாக நடத்துகிறது என்றுதானே. அப்படி இருக்கையில் உங்கள்குழந்தையை மட்டும் நீங்கள் அடிமையாக நடத்துகிறீர்கள் என்றுதானே அர்த்தம் நீங்கள் அடிக்கும்போது குழந்தைகளுக்கு என்ன சுகமாகவா இருக்கும். இது என் சுதந்திரம் என்றால் குழந்தைகளின் சுதந்திரம் என்ன ஆணது அந்தக் குழந்தை எந்த உடை உடுத்தவேண்டும் என்னப்படிக்கவேண்டும் என்னச்சாப்பிடவேண்டும் யாரைத் திருமணம் செய்துக்கொள்வது என்பதுவரை உங்களுக்கு பிடித்தவற்றையே பிள்ளைகள் மீது தினித்தால் அந்த இளம் பிஞ்சுகளின் கணவு அடியோடு பழாய்போய்விடுகிறது. அவர்களுக்கு உலகத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்று அவர்களுக்கு எதையும் தெரிந்துகொள்ளவிடாமலே செய்துவிடுகிறார்கள்.

இப்படி செய்வதெல்லாம் செய்து விட்டு அரசாங்கம் சரியில்லை என்பது நாமும் அரசாங்கத்தின் ஒரு அங்கம் தானே நாம் சரியாக இருக்கிறோமா இல்லை. தாங்கள் விருப்பப்பட்ட படிப்புகளை அரசினர் கல்லூரிகளில் சீட் இல்லை என்றாலும் தனியார் கல்லூரிகளில் சேர்த்து படிக்கவைத்துவிட்டு அந்த படிப்பிற்க்கு தகுதியான வேலைவாய்ப்பினை அரசு ஏற்ப்படுத்தி தரவேண்டுமாம். இந்து இடுக்கு பொறம்போகு போன்ற வசதியற்ற இடங்களில் வீடுகளை கட்டிக்கொண்டு அரசு சரியான வசதி செய்து தரவில்லை குடி நீர் வசதியில்லை சாக்கடை வசதி இல்லை என்று சொல்வது முடியாது என்றாலும் லஞ்சம் கொடுத்தாவது அதை சாதித்துவிடுவது என்னே சாதனை. எல்லாரும் நகரங்களை நோக்கி குடியேறிவிட்டு நெறிசல் பற்றாகுறை மாசு பட்டுவிட்டது என்று அரசினை கடிந்து கொல்வதில் அர்த்தம் என்ன இருக்கிறது.

சாலை நெறிசல் கட்டிடங்களை அகற்றி சாலையை அகலப்படுத்தவும் மக்கள் விடமாட்டார்கள் எத்தனைபேர் ரோட்டில் அடிபட்டு செத்தாலும் பரவாயில்லை நடுரோட்டில் இருக்கும் கோவில்களை அகற்றகூடாது மசூதிகளை அகற்றகூடாது என்றால் ஓட்டுவாங்கியதற்க்காக அமைச்சர்களின் தலைமீதா வாகணத்தை ஓட்டுவது அரசு என்றால் அலாவுதீனின் அடிமை பூதம் என்று நினைக்கிறார்கள் கேட்டதெல்லாம் கொடுக்க. நீங்கள் கேட்ப்பதெல்லாம் வெளிநாட்டில் இருந்து பெறவேண்டுமானால் நமது நாட்டை உலகவங்கியில் அடகுவைத்துதான் பெறமுடியும் அதற்கு ஈடாக உலகவங்கியும் சேர்ந்து நமது நாட்டை ஆட்ச்சி செய்கிறது நமக்குதேவயானவற்றை நாமே செய்துகொண்டால் நமக்கேன் இந்த பிரச்சனை.