Monday, December 24, 2007

சிறை பெண்கள்

பெண்களே உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிகொள்ளுங்கள் தாங்களே சிறைக்குள் சென்று அடைந்துகொள்ளாதீர்கள் சுதந்திரப் பறவைகளாக தனித்து பறக்க கற்றுக்கொள்ளுங்கள். நான் பெண்ணீயம் பேசவோ ஆணீயம் பேசவோ இங்கு பதிவெழுதவில்லை மனிதனேயம் பேச விரும்புகிறேன். பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று புலம்கிறீர்கள் ஆண்கள் ஏதாவது சொன்னால் பெண் சுதந்திரத்தை பற்றிய கவலை எல்லாம் பெண்களுக்குத்தான் இருக்கும் என்றும். அப்படி பெண்ணீயம் பேசும் ஆண்கள் எல்லாம் தீவிர வாதிகள் போலியாக பேசுகிறார்கள் அவர்கள் யோக்கியதை எல்லாம் வெளி வேஷம் என்றெல்லாம் சொல்லிவிடுவார்கள்.

எனக்கு ஒரு கேள்வி எழுகிறது அதற்கான விடை எனக்கு இதுவரைத் தெறியவில்லை இந்தியா சுதந்திரம் பெறும் போது ஆண்களுக்கு மட்டும் என்று கேட்டு தனியாக சுதந்திரம் வாங்கிக்கொண்டார்களோ என்னவோ தெறியவில்லை. நான் சுதந்திரம் வாங்கும்போது பிறக்கவில்லை அதனால் எனக்கு சரியாக தெரியவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் "எப்பொருள் யார்யார்வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு" என்று வள்ளுவரே கூறி இருக்கிறார்.

பெண்கள் எதையெல்லாம் சுதந்திரமாகக் கருதுகிறார்கள் யார் யாரிடம் இருந்து என்ன என்ன சுதந்திரம் வேண்டும் என்ன என்ன உரிமை வேண்டும் என்று ஒரு பட்டியல் இட்டுக்கூறினால் நாமும் அதை கொடுக்க அல்லது வாங்கி கொடுக்க முயற்சிக்கலாம். எதுக்கு இப்படி தொண்டை வலிக்க பெண்ணுரிமை பெண் சுதந்திரம் என்று கத்திக்கொண்டு இருக்கவேண்டும். தப்பா நினைக்காதிங்க இவன் யாரு இதெல்லாம் கேக்க வந்துட்டான் என்று குறைந்த பட்சம் எனக்கு வரும் என் மனைவிக்காவது அந்த சுதந்திரத்தை என்னால் வழங்க முடியுமா என்று பாக்கலாம்.

எதுக்கு இவங்க எப்போதும் சுதந்திரம் சுதந்திரம் என்று போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். பேசாமல் அவங்கக் கேக்குறத மொத்தமா கொடுத்துட்டா இந்த ஒரு பிரச்சினை ஒழிந்துவிடும். அடுத்து நம்ம செய்யவேண்டிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வேலைகள் எவ்வளவோ இருக்கு அத போய் பாக்கலாம். இவங்களுக்காக எவ்வளவோ கொடுத்துட்டோம் ஆப்டரால் செலவே இல்லாத சுதந்திரம் இத கொடுக்க மாட்டோமா.


தனி கூடு ஒன்று வேண்டும் பெண் குருவிக்கு அது
விரும்பினால் அணுமதி வேண்டும் ஆண் குருவிக்கு!
பொருள் ஈட்ட வேண்டும் பெண் குருவிக்கு அதை
காத்திடவும் பலம் வேண்டும் பெண் குருவிக்கு!

-புரட்சி தமிழன்.

3 comments:

  1. ரெம்ப நல்லாவே எழுதுறீங்க...

    ஆனால் வெளியிடும் முன் கொஞ்சம் ஃப்ரூப் பார்த்து வெளியிடலாமே?(தவறாக நினைத்துக் கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்...)
    :)))

    //அதர்க்கான// அதற்கான
    //தெறியவில்லை // தெரியவில்லை
    //கேட்ப்பிணும் //கேட்பினும்
    //தொண்ட வளிக்க//தொண்ட(டை) வலிக்க
    //மணைவிக்காவது //மனைவிக்காவது

    :))

    ReplyDelete
  2. மன்னிக்கவும் நான் நேரடியாக உள்ளீடு ஈ கலப்பை மூலம் செய்வதால் இந்த பிரச்சினை இனிமேல் ஒருமுறை சோதித்து வெளியிடுகிறேன்
    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. :))
    நீண்ட நாட்களுக்குப் பின் தமிழில் எழுதும்(தட்டச்சும்) போது இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்... போகப் போகச் சரியாகி விடும்....
    :))

    ReplyDelete