Tuesday, January 22, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 5

மக்களிடத்தில் கல்வியும் வேலையும்.

இப்போதெல்லாம் நம் மக்களுக்கு கல்வி என்பதற்கு பொருள் ஆங்கிலத்தையும் தமிழையும் பார்த்து படிக்க எழுத தெரிந்தால் போதும் அடுத்து பாடபுத்தகத்தில் உள்ளதை அப்படியே தேர்வின் போது விடைத்தாளில் காப்பி செய்து அதிக மதிப்பெண்களை பெற்று கட் ஆப் மார்க்கில் பி.இ அல்லது எம்.பி.பி.எஸ் சேரவேண்டும். அங்கும் 4 ஆண்டோ இல்லை 6 ஆண்டோ ஓட்டிவிட்டு ஏதாவது ஒரு நிறுவனத்திலோ மருத்துவமனையிலோ வேலைக்கு அமர்ந்துவிட்டால் அத்துடன் கை நிறைய சம்பளம் வாங்கவேண்டும் இவ்வளவுதான். யார் எக்கேடு கெட்டால் என்ன எவன் செத்தால் நமக்கென்ன நம்ம வேலைபாக்குற நிறுவனம் லாபத்தில் இயங்கினால் என்ன நஷ்டத்தில் இயங்கினால் என்ன இப்படிதான் எல்லாரும் நினைக்கிறார்கள்.
நமது மக்களுக்கு தேவை பட்டம் அதை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் அரசு கல்லூரி இல்லை என்றால் தனியார்கல்லூரி காசுகொடுத்தால் சீட்டு கொடுக்கபோகிறார்கள். அடுத்து வாய் நிறைய ஆங்கிலம் பேசினால் முடிந்துவிட்டது அவ்வளவுதான் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை மற்றபடி இவர்களுக்கு படித்ததைப்பற்றியெல்லாம் இப்போது கேட்டுப்பாருங்கள் ஒன்றும் தெரியாது அதெல்லாம் தேர்வு நேர்முகத்தேர்வோடு சரி பிறகுவந்து வேலைதெரிஞ்சவனிடத்திலும் அவனுக்கு கீழ்வேலை பாற்கும் பணியாளர்களிடத்தும் நச்சரிக்கவேண்டியது. அதிலும் இப்போது உள்ள எம்.பி.ஏ இந்த படிப்பினை படித்தவர்கள் அந்த நிறுவனத்தின் உற்பத்திபற்றி ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் கீழே வேலைபார்ப்பவர்களிடமும் உழைப்பவர்களின் ரத்தங்களை சுரண்டுவதும் எப்படி என்று படித்துவிட்டு வருகிறார்கள் ஐந்து பணியாளர்கள் வாங்கும் ஊதியத்தினை இந்த ஒரே நபர் வாங்குகிறார் இவர்களுடைய நோக்கம் எல்லாம் இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கு அவ்வளவுதான்மற்றவர்கள் பற்றி எல்லாம் கவலை இல்லை ஒருவர் செய்யும் வேலையை மேலாண்மை செய்வதற்கும் நிர்வாகம் செய்வதற்கும் எத்தனை பேர் அந்த கணக்குகளை மட்டும் பார்த்தாலே தெரியும்.

நம் மக்கள் பாடத்தினை படிப்பது இதற்கு மட்டும் தான் யாருக்காவது அறிவியலில் படித்த ஓம் விதியும் ஆர்க்கிமிடீஸ் விதியும் கார்னாட் இயந்திரமும் தெரியும் நினைத்துப்பாருங்கள். நாம் அன்றாடவாழ்வில் பயன்படுத்தும் ஒவ்வொன்றும் எந்ததத்துவத்தில் செயலாற்றுகிறது என்று யாராவது நினைத்துப்பார்க்கிறார்களா இல்லை எவனோ வெளி நாட்டுக்காரன் கண்டுபிடித்தான் அவ்வளவுதான். யாரும் சிரமப்பட்டு வேர்வை சிந்தத் தேவையில்லை கொஞ்சம் உருப்படியாவாவது படிச்சதுக்கு சிந்திக்கலாம் இல்லையா. நிர்வாகம் செய்வதற்கு இவன் எதற்கு படித்துவிட்டு வரவேண்டும்நாட்டாமைகூடத்தான் நல்லா நிர்வாகம் பண்றாரு அவரு என்ன எம்.பி.ஏ வா படிச்சிட்டு வந்தாரு.


சிறிது காலத்திற்குமுன் எம்.எல்.எம் என்று கூறுவார்கள் மல்டிலெவல் மார்கெட்டிங் இது என்ன, ஊரில் உள்ள அனைவரையும் கூட்டி ஒருவர் பணத்தை ஒருவருக்கு கொடுத்து ஒருவன் அனைவர் பணத்திலும் பங்கு பெற்றுக்கொண்டு தெருத்தெருவாய் அலைந்து ஆள்பிடிப்பது. அப்போது என்ன கூறினார்கள் இதுதான் உலகிலேயே நிலைத்து நிற்க்ககூடிய வியாபாரமுறை இதைவைத்துதான் உலகமெல்லாம் பிற்க்காலத்தில் இயங்கப்போகிறது என்று கூறினார்கள். என்னையும் இரண்டு மூன்று மீட்டிங்குக்கு கூட்டி சென்றார்கள் நான் சொன்னேன் இதில் அடிப்படை சரியில்லை எனக்கு இது சரிப்பட்டுவராது விட்டுவிடுங்கள் என்று கூறினேன். மற்றவருக்கும் பரிந்துரைத்தேன் யாரும் செவி மடுத்ததாக தெரிய வில்லை என்ன ஆனது ஆம்வே என்ற நிறுவனம் எங்கள் தயாரிப்புகள் எம்.எல்.எம் மூலம் மட்டுமே கிடைக்கும் ஒரு போதும் பொதுச்சந்தை செய்யமாட்டோம் என்றது அந்த அமெரிக்க நிறுவனம் என்ன ஆனது இன்று தொ.கா. யிலே விளம்பரப்படுத்தி கடைகளில் விற்ப்பனை செய்கிறார்கள் அவர்களை நம்பி தெருத்தெருவாய் அலைந்தவன் கதியெல்லாம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.

No comments:

Post a Comment