Tuesday, January 22, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 6

சொல்வன்மை
மக்களின் மனதில் என்றுமே எதிர்மறையான செயல்களின் மீதே நாட்டம் அதிகரித்து காணப்படுகிறது உதாரனமாக ஒருவனை அதைப் பார்க்காதே இதைப்பார்க்காதேஎன்று சொன்னால் அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். எதை மூடிவைத்தாலும் அதனுள் என்ன இருக்கும் என்று பார்க்கத்தோன்றும் அது சிறிய செயலாக எளிமையாக இருக்கும்போது அதன்மீது நாட்டம் அனைவருக்குமே எளிதில்வருகிறது.
புகை பிடிக்காதே அது உடல் நலத்துக்கு கேடு என்று சொல்வதுகூட ஒருவகை விளம்பரம்போலத்தான் புகைபிடித்தால் என்னதான் ஆகும் எத்தனையோபேர் புகைக்கிறார்களே கேடு பெரிய அளவு என்றால் யாரும் செய்யமாட்டார்களே என்று நினைக்கிறார்கள்.

உதாரனத்திற்க்கு நான் எடுத்த சர்வேயில் வெளிப்படையாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும் தந்தை அவருக்கு பிறந்த பிள்ளைகள் 90% த்தினர் புகைப்பழக்கம் இல்லாமல் இருக்கின்றனர் ஏனெனில் அவர்களுடய தந்தையோ,தாயோ மகன் வெளியில் போகும் போது தப்புத்தண்டா பன்னாதே பீடி சிகரெட் பிடிக்காதே என்று அறிவுறுத்துவதில்லை. ஏனெனில் அந்த தகுதியை அவர்கள் இழந்துவிட்டு இருக்கிறார்கள் தாய் அல்லது தந்தை மீது வெறுப்பு உள்ளவருக்கு அவர்கள் கூறும் எதற்கும் எதிர்வினையாகவே செயலாற்றவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

ஒரு ஆசிரியர் மீது ஒரு மாணவனுக்கு கோபம் வந்தால் அந்த ஆசிரியரை கண்டாலே பிடிக்காமல் போய்விடுகிறது அவர்களுக்கு அந்த ஆசிரியர் நடத்தும் பாடத்தின் மீதும் வெறுப்பு வந்துவிடுகிறது அவர்கூறும் அறிவுறைகள்மீதும் வெறுப்பு ஏற்ப்பட்டுவிடுகிறது. அதனால் அந்த மாணவன் அந்த ஆசிரியர் மீது உள்ள வெறுப்பின் காரணமாக அந்த குறிப்பிட்ட பாடத்தின் மீது அக்கறையின்றியும் படிக்காமலும் விட்டு விடுகிறான். அந்த மாணவனுக்கு என்னதான் சிறப்பான தங்கப்பதக்கம் பெற்ற ஆசிரியரிடம் தனி வகுப்புக்கு அனுப்பினாலும் அதில் முன்னேற்றம் அடைவது கடினமே.

எப்போதும் மாணவர்களை அடித்துக்கொண்டும் சதா திட்டிக்கொண்டும் அறிவுறுத்திக்கொண்டும் இருக்கும் ஆசிரியரின் மாணவர்கள் அந்த பாடத்தில் ஆர்வம் குன்றியே காணப்படுவார்கள் தேர்வு விழுக்காடும் குறைந்தும் இருக்கும். ஆசிரியர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்றால் நாம் இந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் நம்மை இவர்கள் கடவுள்போல் பாவிக்கவேண்டும் இந்தமாணவர்களுக்கெல்லாம் எதுவும் தெறியாது நாம்தாம் இவர்களுக்கு அறிவு வளர்ச்சியை ஏற்படுத்துகிறோம். ஆகையால் நாம் இந்த மாணவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்ற எண்ணம் ஏற்ப்பட்டுவிடுகிறது இந்த எண்ணத்தை மாணவர்கள் மீது வெளிப்படுத்துகிறார் அல்லது திணிக்க முயல்கின்றனர்.

இப்போது பள்ளியிலே பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் உயர்வு தாழ்வு ஏற்பட்டுவிடுகிறது அதுவும் பள்ளியிலே அனைத்து மாணவர்களின் நடுவே தனக்கு உறவினர்களின், நன்பர்களின், அல்லது பணக்காரன் பதவியில் இருப்போர் மகன்,மகள் மீது மட்டுமே நலம் விசாரிப்புச் செய்கிறார்கள் இவைகளெல்லாம் மாணவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறது அவர்களின் கல்வித்திறன் குறைவினையும் ஏற்படுத்துகிறது. அதிகப்படியான மாணவர்கள் ஆசிரியரைச் சாதாரண மனிதர்களைக்காட்டிலும் பய உணர்ச்சியுடனேப் பார்க்கின்றனர்.
குழந்தைகளை எடுதுக்கொள்வோம் விளையாடும் குழந்தையைப்பார்த்து விளையாடாதே போய் உக்கார்ந்து படி என்று கூறினோமானால் (அந்த குழந்தை பருவத்தில் நிறைய கற்க ஆசைப்படுகிறது புதிது புதிதாக ஏதோ மனம் தேட ஆசைப்படுகிறது அந்த குழந்தை விளையாட்டுக்களின் மீது புதிது புதிதாக ஏதோ பார்க்கிறது அனுபவிக்கிறது அப்போது இந்த புத்தகமெல்லாம் புத்தகத்தின் பக்கங்கள் எல்லாம் ஒரே காகிதமாகத்தான் தெறிகிறது அதை அப்படித்தான்பார்க்கிறது இந்தக்காகிதத்தையே நீண்ட நேரம் பார்த்துப் பார்த்து சலித்துவிடுகிறது. அந்தக் குழந்தைக்கு அப்போது எழுத்துக்கள் ஒரு சிக்கலான வடிவமாகவும் நினைவில் கொள்ளமுடியாத வடிவமாகவும் தெறிகிறது. அப்போது படங்களையும் வண்ண ஓவியங்களையும் பார்க்க அதன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்படுகிறது புத்தகத்தை வாங்கி கொடுத்த புதிதில் அனைத்து பக்கங்களையும் ஆர்வமுடன் புரட்டிப் புரட்டிப் பார்க்கும். அந்தப் பருவத்தில் விளையாட்டு,இயர்க்கை,புதியபொருட்கள் ஆகியவற்றை விட அந்த புத்தகத்தில் உள்ள காகிதங்கள் அந்த வயதில் எதையும் போதிப்பதில்லை நாம் தான் புத்தகங்கள் குழந்தைகளுக்கு போதிப்பதாக எழுத்தையும் அதன் பயனையும் அறிந்த நாம் நினைக்கிறோம்) அதர்க்கு பிடித்தவைகளின் மீதெல்லாம் நாம் தடைபோட்டு நாம் கல்வியைத் தினிப்பதனால் அந்தக் குழந்தை படிப்பதை ஒரு தண்டனையாகத்தான் நினைக்கிறது.
இப்போது அலுவலகங்கள் பணியிடங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வோம் இங்குதான் மிகவும் மோசமான வேறுபட்டமனநிலைகள் குடியிருக்கும் வீடாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தன்பதவி அதர்க்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் தன்மையைச் சோதிக்க நினைக்கிறார்கள் ஒருவருக்கொருவர் சலைக்காமல் செயல்படுத்துகிறார்கள் மேல்மட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் மீதுபிரயோகிக்கிறான் ஒரே தகுதியில் இருப்பவர்கள்கூட தங்களில்யார் அதிகபலசாலி என்றும் நான் இல்லாமல் அவன் ஒன்றும் கிழிக்க முடியாது என்றெல்லாம் ஒரு அரசியல் நடந்து கொண்டே இருக்கும்.

இப்படி இருக்கும்போது அந்த அதிகாரத்திற்காக வேண்டுமானால் கீழ்படிந்துபோவார்களே தவிர அவர்கள் மனதிற்குள் ஒரு பெரிய எதிர்ப்பு வளர்ந்து கொண்டே இருக்கும் இவன்சொன்னா நாம்சரியாக செய்யனமாக்கும் என்று நினைத்துக்கொள்வார்கள் உதாரனத்திற்க்கு மேளாலர் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர் இல்லாத நேரங்களிளெல்லாம் நல்லா கும்மி அடித்துவிட்டு மேளாலர் வரும்போதுமட்டும் பவ்யமாக வேலை பார்ப்பதுபோல் பாவனை செய்வார்கள். இந்த அதிகார அந்தஸ்த்தில் இருப்பவர்கள் தங்கள் மேல் அழுத்தப்படுள்ள மன உளைச்சலை பனியாளர்கள்மீது வடிப்பதால் பனியாளர்களின் இயல்பான திறன் பாதிக்கப்படுகிறது.
மிகக்கொடியச் செயல் ஒன்று இருக்கிறது அதுதான் பதில்இல்லாத அல்லது பதில்அளிக்க இயலாத கேல்விகளை தெறிந்தேக் கேட்டு சங்கடத்திற்க்கு உள்ளாக்குவது அல்லது நாலுபேர் இருக்கும் போது கேட்டு அவமதித்து தன் அந்தஸ்த்தை உயர்த்திக் காட்டுவது. இது உடனே பகையாக மாறக்கூடிய ஒன்று, இவன் பட்ட சங்கடங்களை அவமானத்தைவிட இரண்டு மடங்கேனும் தன்னை அவமதித்தவனுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உக்கிரமாக வெளிப்படுகிறது. இது அந்த அலுவலகத்தையோ அல்லது வியாபாரத்தையோ உடனே பாதிக்கும் முறிக்கும் ஒரு பெரிய தன்மான செயலாக உருவெடுதுவிடும்.
உதாரணத்திற்குச் சிலவார்த்தைகள் அது முடிந்தசெயலுக்கு இருக்கும் பாதிப்பே அதிகம்யாரைக்கேட்டு உள்ளேவந்தாய், யாரைக்கேட்டுப் பயன்படுத்தினாய், யாரைகேட்டு கொடுத்தாய், நீ யாரு இதெல்லாம் செய்வதர்க்கு, இதைப்பற்றி உனக்கு என்னதெறியும், (கிடைக்காத உடைந்த பாழான சென்றுவிட்ட பொருட்க்களை) என்ன செய்வயோ ஏதுசெய்வாயோ தெறியாது இப்போதே எனக்கு அது வேண்டும், உணக்கு என்ன அருகதை இருக்கிறது இப்படிப்பட்ட வார்த்தைகள்தான் வேகமாக செயல் படக்கூடிய,மருந்துக்கு கட்டுப்படாத விஷமாக மனிதனின் மனதில் மாறிவிடுகிறது. சாலமன் பாப்பையா சாயலில் சொல்லவேண்டுமென்றால் "விடுங்கய்யா நானா அவனான்னு ஒரு கை பார்த்துடுரேன் என்வேலையே போனாலும்சரி என் சொத்தே அழிந்தாலும் சரி அவன ஒரு கைபார்க்காம விடமாட்டேன்'' இவைகள் எல்லாம் சொல்வன்மையின் மீதான வெளிப்பாடாக மாறி பதவி,வயது,இனம்,பால்,சொல்லும்நபர் ஆகியவற்றை பொருத்து உணர்வு வெளிப்படுதலின் அளவு மாறுபட்டிருக்கும்.

No comments:

Post a Comment