Monday, January 7, 2008

டேய் என் அக்காவை யாரும் லவ்பன்னாதிங்கடா நான் சொல்லுரவன் மட்டும்தான் அவகூட

நம் நாட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் குற்றவாளிகளா? ஆண்களால் பெண்களுக்கு ஆபத்தா! இப்படி எல்லாம் சொல்வதற்க்கு நமக்கு வெட்ககேடாய் இருக்கிறது. பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவதால் மட்டும்தான் ஆண்கள் பெண்களை யூடீசிங் செய்கிறார்களா அதற்க்குக் காரணம் உடை அல்ல அவர்களின் மனது பலவீனமாக இருப்பதுதான். கவர்ச்சி என்றால் அடுத்தவரைக் கவர்ந்து இழுப்பது என்றுதானே அர்த்தம் யாரைக் கவரவேண்டுமோ அவர்களை மட்டும் கவருங்களேன் ஏன் அனைவரையும் கவரவேண்டும். வீட்டுக்கு வெள்ளை அடிக்காதீர்கள் வெள்ளையடித்தால் சும்மா இருப்பவன் திருடனாகிவிடுவான் வந்து அனைத்தையும் திருடிக்கொண்டு சென்றுவிடுவான் என்கிறார்கள் வெள்ளையடிக்கச் சுவரே இல்லாதவன் கொள்ளையடிக்கத்தான் செய்வான்.

மனிதனுக்கு ஆறு அறிவு இருப்பதால் அவன் இயந்திரம் ஆகிவிடமுடியுமா அவனுக்கு உணர்ச்சிகள் ஏதும் கிடையாதா இதெற்கெல்லாம் காரணம் சமூகமும் அரசும்தான். அவன்கூட பேசாத இவன்கூட சுத்தாத என்று கட்டுப்படுத்தும் குடும்பமும் லாட்ஜ் ஹோட்டல் என்று ரெய்டு செய்யும் கலாச்சார காவல்துறையும்தான். மழைபெய்து அந்த மழைநீரானது தன் தடம் வழியே பள்ளம் எங்கிருக்கிறதோ அங்கு சென்றுகொண்டுதான் இருக்கும் அதனை தடுத்து அணைகட்டினால்தான் ஆபத்து. நீரின் அளவு உயர்ந்து கொண்டே இருக்கும்போது கரைகள் எங்கு பலவீனமாக இருக்கிறதோ அங்கு உடைப்பெடுக்கதான் செய்யும். அதன் ஆபத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள இரண்டு வழிகள்தான் உண்டு ஒன்று அணையின் நீரைத் தடத்தின் வழியே திறந்துவிடவேண்டும் அல்லது கரையினை பலப்படுத்தவேண்டும்.

வெளி நாடுகளில் எல்லாம் இப்படியா நடக்கிறது என்று கூருகிறவர்கள் சற்று ஆழ்ந்து யோசிக்கவேண்டும் இந்தியாவைவிட அரபு நாடுகளில் மிகக்கொடுமையான வன்புணர்வுகள் நடக்கத்தான் செய்கிறது. அங்கு பெண்கள் கவர்ச்சியான ஆடையெல்லாம் அனிந்து செல்வதில்லை சட்டங்களும் கடுமையாகத்தான் இருக்கிறது மேலும் இந்தியா அளவிற்க்கு பெண்களுக்கு சுதந்திரமும் இல்லை இருப்பினும் ஏன் அப்படி நடக்கிறது. எந்த அளவுக்கு காமத்தை கட்டுபடுத்த முயர்ச்சிக்கிறோமோ அந்த அளவுக்கு அது கட்டுடைந்து செல்ல முயர்ச்சிக்கும். குற்றங்களின் எண்ணிக்கையை விகிதாச்சார அடிப்படையில் அடுத்த நாட்டுடன் ஒப்பீடுசெய்பவர்கள் அந்த நாட்டு மக்கள்தொகையையும் நிலப்பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். நம் நாட்டிலே முத்தின கத்தரிக்காய் விலைபோவதில்லை வெளி நாட்டில் வத்தல்போட்டாவது விற்றுவிடுவார்கள்.

பசியோடு இருப்பவனுக்கு அருகில் ஒருவன் பால்பாய்சம் சாப்பிட்டுவிட்டு புளியாப்பம் விட்டால் பசித்திருப்பவனின் மனனிலையைக் கொஞ்சம் யோசித்துப்பார்க்கவேண்டும். விபரீதத்தைப் பற்றி சிந்திப்பவன் பொருமையாக இருப்பான் சிந்திக்காதவன் அல்லது துனிந்தவன் எடுத்துபருகத்தான் செய்வான். அழகாய் இருக்கும் பெண்களைப்பார்த்து ஆண்களின் மனதில் சலணம் ஏற்ப்படாமல் இருக்குமானால் இன்று சினிமாவில் இத்தனை அழகான நடிகைகளுக்கும் கவர்ச்சி நடிகைகளுக்கும் என்ன வேலை இருக்கிறது. வெளியே வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் எனக்கு நிர்வாணப்படம் பார்த்தாலும் எந்த உணர்ச்சியும் ஏற்ப்படாது நான் ராமனின் அவதார ஆண்மகன் என்று. இந்த கலாச்சாரம் கசுமாலம் எல்லாம் பசிக்கும் போது ஒருபிடி சோத்துக்குக்கூட வழிசெய்யாது யாரோ ஒருசிலர் மட்டும் அதவச்சி நல்லா சாப்பிடலாம். பசிதீர்ந்த புலி மான் அருகிலே இருந்தாலும் அடிப்பதில்லை "புலிக்கு மான் பலியாவதில்லை புலியின் பசிக்குத்தான் மான் இரையாகிறது".

7 comments:

 1. //அழகாய் இருக்கும் பெண்களைப்பார்த்து ஆண்களின் மனதில் சலணம் ஏற்ப்படாமல் இருக்குமானால் இன்று சினிமாவில் இத்தனை அழகான நடிகைகளுக்கும் கவர்ச்சி நடிகைகளுக்கும் என்ன வேலை இருக்கிறது.//

  நச் கேள்வி!!

  ReplyDelete
 2. தாங்கள் சொல்ல வந்த கருத்து தான் என்ன? தலைப்பிற்க்கும் பதிவுக்கும் உள்ள தொடர்பை தோராயமாக ஊகிக்க முடிந்தாலும் தெளிவாக விளங்கவில்லை.

  பெண்கள் கவர்ச்சியாக ஆடை அணிவது தவறில்லை என்று கூறுகின்றீறா?

  ஆண்கள் எல்லாம் காமத்திற்காக அலைபவன் என்கின்றீறா?

  ReplyDelete
 3. ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் ஏற்ப்படும் ஈர்ப்பை குடும்பம் ஜாதி மதம் பதவி பணம் போன்ற காரணங்களால் கட்டுப்படுத்தி வைப்பதுதான். விபசாரத்தின் விலை அதிகமாக இருப்பதும் அதற்க்கான சரியான பாதுகாப்பு சமூகத்திடம் கிடைக்காத்தும்தான் காரணம். ஒரு பெண் ஒரு ஆண் நண்பனுடன் வீட்டுக்கு வந்தாலும் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

  ஒருவனுக்கு தேவை இருக்கும்போது மட்டும்தான் கவர்ச்சி ஒரு முகவரியாக அவனுக்கு அந்தக்கணம் தோன்றுகிறது. அவனுடைய தேவை ஏற்க்கணவே பூர்த்தியாகி இருந்தால் ஆடையே இல்லாமல் வந்தாலும் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை.

  ReplyDelete
 4. கருப்பன் அவர்களுக்கு நான் சொல்வது என்னவெனில் ஒருவன் தன் சாதியில் ஒரு ஆணைபார்த்து திருமணம் செய்துவைப்பது என்பதை நேரடியாக சொன்னால் " டேய் என் அக்காவை யாரும் லவ்பண்ணாதிங்கடா நான் சொல்லுறவன் மட்டும்தான் அவக்கூட படுக்கணும்னு சொல்வதற்க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்றுதான்.

  தஞ்சாவூரான் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. http://tamilnenjam.4shared.com


  new topics encountered...

  திண்டுக்கல் ஐ. லியோனியின் நகைச்சுவைப் பட்டிமன்றங்கள்.சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்களின் ஒலிக்கோப்புகள் எம்பி3 டைப்பில்

  60 ஆண்டு கால சுதந்திரத்தில் நாம் அடைந்தது சாதனையா? சோதனையா?

  75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றில் நாம் கண்டது சோதனையா? சாதனையா?

  சினிமா பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா? பெருமைப்படுத்துகிறதா?

  சினிமாவானது சமூகத்தைச் சீர்படுத்துகிறதா? சீரழிக்கிறதா?

  கிராமமா? நகரமா? எது சிறந்தது?

  கூட்டுக் குடித்தனமா? தனிக்குடித்தனமா?

  குடும்பத்தின் மகிழ்ச்சிக்குக் காரணம் மகளா? மகனா?

  நகைச்சுவையின் நோக்கம் சிரிக்கவைப்பதா? சிந்திக்க வைப்பதா?

  எந்த மகளிரணி சந்தோசமான வாழ்வு வாழ்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்னர் சுதந்திரத்துக்கு பின்னர் ?

  பணமா? குணமா?

  பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா?

  பழைய பாடலா? புதிய பாடலா?

  சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சி கண்டோமா? வீழ்ச்சி கண்டோமா?

  தமிழின் வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு - திரையுலகமா? பொதுமக்களா?

  உறவுகளால் நெருக்கடியா? நிம்மதியா?

  யார் சிறந்தவர்கள் - உழைப்பாளிகளா? படிப்பாளிகளா?

  வீட்டுச்சூழலா? நாட்டுச்சூழலா? எது காரணம் - இளைஞர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு

  டவுன்லோடு செய்து கேட்டு மகிழுங்கள்.

  http://tamilnenjam.4shared.com  /*
  புரட்சி தமிழன் said...
  எத்தனை நாளைக்குத்தான் லியோனி இந்த பழைய தலைப்புகளையே வச்சி காலந்தல்லுவார் புதுசா எதாவது தலைபுல வரமாட்டாரா

  December 15, 2007 2:21 AM
  */

  ReplyDelete